3/22/2009

யாவரும் நலம்

ரொம்ப நாளைக்கப்புறம் தியேட்டரில் சென்று படம் பார்த்தேன். எங்களூர் வேலனில் வெற்றிகரமாக 25-ஆம் நாளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது இப்படம். பால்கனியில் ஹவுஸ்ஃபுல், கீழே ஸ்டால் விஷயம் தெரியாது. அதுவே பெரிய அதிசயம்தான். ஏனெனில் வேலன் தியேட்டர் பால்கனி சாதாரணமாக காலியாகத்தான் இருக்கும். அதுவும் இம்மாதிரியான ஆவிகள் படமென்றால் பயமாகவும் இருக்கும்.

ஒரு புது அப்பார்ட்மெண்டில் குடிபுகுந்த ஒரு கூட்டுக் குடும்பத்தின் அனுபவம் என்பதை விட அதில் உள்ள ஒருவரின் அனுபவம் என்று கூறுவதே சாலப் பொருந்தும். அந்த ஒருவர்தான் மாதவன், ஒரு கட்டுமானப் பணி பொறியாளர். அவருக்கு மட்டும் லிஃப்ட் வேலை செய்வதில்லை, அவரை வைத்து எடுக்கும் புகைப்படங்கள் கோணவாயன் கொட்டாவி விட்டது போல மாறுகின்றன. முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் வீட்டில் மட்டும் “யாவரும் நலம்” என்னும் சீரியல் ஒளிபரப்பாகிறது. அதே சீரியல் வேறு இடங்களில் முற்றிலும் மாறுபடுகிறது. இவர்கள் வீட்டின் டிவியில் வரும் சீரியலில் மட்டும் இவர்கள் வாழ்க்கை சம்பந்தமான நிகழ்ச்சிகளே நடக்கின்றன. அதையெல்லாம் நான் வர்ணிப்பதைவிட படத்தை நீங்களே பார்த்து கொள்ளல் நலம்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் தில்லியில் இருந்தபோது படித்த ஒரு ஜெர்மானிய மொழி நாவல் நினைவுக்கு வந்தது. அதிலும் வீட்டில் இருக்கும் டிவியில் வரும் நிகழ்ச்சிகள் விசித்திரமாக இருக்கும். அதாகப்பட்டது, ஒரு கலவரக்காட்சி நியூஸில் காண்பிக்கப்பட்டால் அதில் பங்கு பெறுபவர்கள் டிவி பிரேமில் மட்டும் இல்லாது, அறைக்குள்ளும் வருவார்கள். பார்வையாளரின் நாற்காலிக்கு பக்கத்தில் கீழே ஒருவன் படுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பான். ஆனால் அதெல்லாம் வெறும் இமேஜ்கள்தான். நிகழ்ச்சி சேனலை மாற்றினால், சம்பந்தப்பட்ட இமேஜ்கள் மறைந்து, புது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் இப்போது அறைக்குள் தென்படுவார்கள்.

இப்படம் சென்னையில் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் பி மற்றும் சி மையங்களில் அவ்வளவாக வெற்றி பெறாது என்பதுதான் என் எண்ணம். அதை உறுதி செய்து கொள்ள லக்கிலுக்குக்கு ஃபோன் செய்தால் மனிதர் ஒரு மீட்டிங்கில் இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பினார். அப்படியானால் கேபிள் சங்கரின் தொலைபேசி எண்ணைத் தருமாறு கேட்டேன், அவரும் தந்தார்.

கேபிள் சங்கரிடம் இது சம்பந்தமாக கேள்வி கேட்டதற்கு அவர் இப்போபோதெல்லாம் ஏ செண்டரே மிகவும் விரிவடைந்து வருகிறது என்றார். முன்னெல்லாம் கிண்டியுடன் சென்னை முடிவடையும், ஆனால் இப்போதெல்லாம் மதுராந்தகம் வரை சென்னையின் ஆளுமை நீடிக்கிறது என்றார். ஆகவே ஏ செண்டரில் பெறுகின்ற வெற்றியே படத்துக்கு லாபமான வசூல் தந்து விட்டது என்றும், இனிமேல் வரப்போவது எல்லாம் மேலும் அதிக லாபமே என்றும் கூறினர்.

இது ஏதோ ஆங்கிலப் படத்தை சுட்டது போல இருக்கிறதே எனக் கேட்க, அவர் அப்படியில்லை என்றும், இப்படத்தை ஆங்கிலத்தில் எடுக்க இப்படத்தின் டைரக்டரிடமிருந்து ரைட்ஸ் வாங்கியிருக்கிறார்கள் என்ற புதிய தகவலையும் தந்தார். மற்றப்படி உலகிலேயே மொத்தம் 7 கதைக்கருக்களே உள்ளன என பொதுவாகக் கூறப்படுவதையும் அவரும் கூறினார். உண்மைதான்.

படம் எனக்கு மிகவும் பிடித்தது. எல்லோருமே ஒரு முறை பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

குப்பன்.யாஹூ said...

நீங்க நந்கநல்லுரா, சொல்லவே இல்லை.(வடிவேலு பேச்சு தொனியில் வாசிக்கவும்)

நல்ல விமர்சனம் , நன்றிகள்.

குப்பன்_யாஹூ

பட்டாம்பூச்சி said...

//கோணவாயன் கொட்டாவி விட்டது போல//

நல்ல உவமை போங்கள் :).

R.Gopi said...

//படம் எனக்கு மிகவும் பிடித்தது. எல்லோருமே ஒரு முறை பார்க்கலாம்.//

********************

"தல" நல்லா கீதுன்னு சொல்லி ஆச்சு இல்ல. ... அப்பாலிக்கா அப்பீலே இல்ல. மேட்டர் ஓவர்.

இன்னிக்கி "நைட் சோ"க்கு 5 டிக்கிட் போட்டு அனுப்பு "தல". நங்கநல்லூர் வேலன் ஒகே.

நாங்க எல்லாம், பேயோடவே பாண்டி ஆடுனவுங்கப்பு.......

நாங்களும் பயப்படாம தகிரியமா ஒங்க ஏரியாக்கு வரோம், படம் பாக்கறோம்.........

வேந்தன் said...

//எல்லோருமே ஒரு முறை பார்க்கலாம்//
உண்மைதான் படம் பார்க்க கூடியதாகவும் இருக்கு...

Anonymous said...

EngE Brahamanan ?? Some answers in today's context in Outlook recent issue cover stories and articles.
Key Brahmin players/strategists in every political party.

Can you post translation of these articles ? it will be nice.

thanks.
chandrashekar
.................
.................
what are Brahmins doing in political parties? Let me make it even more dramatic: what are they doing in non-Brahmin, Dalit or Dalit-led parties? If these questions sound startling, it is because of a particular, idealised image of the Brahmin, who is supposed to keep out of temporal politics and devote himself to spiritual pursuits. The Brahmin's engagement in politics requires the dissolution of this supposedly sacred image. Therefore, the presence of Brahmins in politics could be taken to mean that the very definition of Brahmin has undergone a 'progressive' change. It is hence necessary to define afresh who these Brahmins are and to ask what is their location in the power hierarchy of these parties.
..........
..........
while Sonia Gandhi’s official political secretary, Ahmed Patel, is indisputably the party’s second-most powerful person, playing a critical role in making key appointments in party and government, it is Union external affairs minister Pranab Mukherjee who is called in to tackle any crisis in the government
......... But no one disputes the fact that he’s the Congress’s Chanakya for all seasons.
.........
Then there’s the other Brahmin, Jairam Ramesh, who wrote a newspaper column in the 1990s under the name of—you guessed it right—Kautilya, Chanakya’s other name. Over the years, he has been an economic advisor to several state governments, apart from briefly working in the PMO of that most canny of Brahmins, P.V. Narasimha Rao, and being part of the Congress’s election think-tank in 2004
..................
..................

http://www.outlookindia.com/full.asp?fodname=20090330&fname=Cover+Story&sid=1

Some Excerpts:

The current Lok Sabha may have 50 Brahmin MPs, 9.17 per cent of the strength of the house, but it is down from 19.91 per cent in 1984. Only four of the UPA’s 30 cabinet ministers and
just three CMs—West Bengal’s Buddhadeb Bhattacharya, Uttarakhand’s B.C. Khanduri and Delhi’s Sheila Dikshit (by marriage)—are Brahmins.

..........
..........
But even though Brahmins are no longer as visible on the political landscape, a closer look at our parties, across the political spectrum, throws up an interesting insight. Most of the country’s political strategists and backroom boys—those running the country’s political war rooms, advising party leaders, drawing up electoral battle plans, negotiating tricky alliances, crunching numbers or just working on slogans and spin—are from among the ‘twice-born’.
..........
..........
Of course, these tacticians do not conform to a single pattern. Some, like BSP MP Satish Chandra Mishra or BJD MP Pyarimohan Mohapatra, are almost the alter egos of their party bosses, UP chief minister Mayawati and Orissa CM Naveen Patnaik. Others, such as BJP general secretary Arun Jaitley, have political ambitions of their own, the tactician’s role just a stepping stone. Those like former Union minister of state for power and commerce Jairam Ramesh are just backroom boys, useful to the leadership, no more. Yet others, like CPI(M) politburo member Sitaram Yechury, perform a key function in the party, their importance lying in the role they play rather than proximity to a single leader. Of course, heavyweights like NCP’s Sharad Pawar or RJD’s Laloo Prasad Yadav are "political" master strategists themselves. They consult a variety of sources—Brahmins in spirit, if not by birth
..........
.......... (About CHO)
http://www.outlookindia.com/full.asp?fodname=20090330&fname=Cover+Story&sid=9


http://www.outlookindia.com/full.asp?fodname=20090330&fname=Cover+Story&sid=2

http://www.outlookindia.com/full.asp?fodname=20090330&fname=Cover+Story&sid=3

http://www.outlookindia.com/full.asp?fodname=20090330&fname=Cover+Story&sid=4

http://www.outlookindia.com/full.asp?fodname=20090330&fname=Cover+Story&sid=5

http://www.outlookindia.com/full.asp?fodname=20090330&fname=Cover+Story&sid=6

http://www.outlookindia.com/full.asp?fodname=20090330&fname=Cover+Story&sid=7

http://www.outlookindia.com/full.asp?fodname=20090330&fname=Cover+Story&sid=10

http://www.outlookindia.com/full.asp?fodname=20090330&fname=Cover+Story&sid=11

http://www.outlookindia.com/full.asp?fodname=20090330&fname=Cover+Story&sid=12

http://www.outlookindia.com/full.asp?fodname=20090330&fname=Cover+Story&sid=13

Anonymous said...

கேள்விகள்:

கேள்வி பதில் பதிவுகள் ஒரு வருடம் தொட்டதற்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் முயற்சி.

எம்.கண்ணன்

1. நேர்காணல், செவ்வி, பேட்டி - எது சரி ? எது நன்றாக உள்ளது ?

2. தமிழ் சேட்டிலைட் தொலைக்காட்சிகளின் ஆரம்ப காலத்தில் மணீலாவிலிருந்தெல்லாம் சூடாக அரசியல் பேட்டி எடுத்து பரபரப்பு ஏற்படுத்திய (வாழப்பாடியார் பேட்டி ஞாபகமிருக்கிறதா ?) ரபி பெர்நாட் இப்போது ஜெயாடிவியில் ஊசிப்போன பேட்டிகளை எடுத்து வருவது எதனால் ? (ஜெயா டிவி ஞாயிறு இரவு 10மணி)

3. சன் டிவி வீரபாண்டியன் பேட்டிகள் (சன் செய்திகள் - சனி இரவு 9 மணி) ஒரு காலத்தில் விறுவிறுப்பாக இருந்தன. ஆனால் அதுவும் இப்ப்போது நமுத்துப் போய் உள்ளது எதனால் ?

4. முன்பெல்லாம் விகடன், குமுதத்தில் வட இந்திய (மற்ற மாநில) முக்கிய அரசியல் தலைவர்களின் பேட்டியும் அடிக்கடி வரும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பாலும் தமிழக தலைகளுடனெயே குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறார்களே ஏன் ?

5. பத்திரிக்கைகாரர்களை சந்திக்காத ஒரே பிரதமர் மன்மோகன் தானோ ? சோனியாவும் பேட்டிகள் ஏதும் (சமீபத்தில்) கொடுப்பதில்லையே ஏன் ?

6. தமிழ்நாட்டில் கலைஞர், ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ் போன்ற தினசரி மாத்தி மாத்தி அறிக்கை விடும் அரசியல் வேறெந்த மாநிலத்திலும் நடப்பது போல் தெரியவில்லையே ?

7. ஜெயமோகன் தென் திருப்பேரை கோயில் சென்றது பற்றி எழுதியுள்ளாரே ? படித்தீரா ?

8. ஞாநியை ஏன் எந்த டிவி சானலும் பேட்டி எடுக்க உபயோகிக்கவில்லை ? நன்றாக பேட்டி எடுப்பாரே ? (மாலன் சன் நியூசில் இருந்தவரை எடுத்த அரசியல் பேட்டிகள் வெறும் வழவழ கொழகொழ பேட்டிகள்)

9. தமிழ் அரசியல் மற்றும் பத்திரிக்கை அரங்கில் யார் எடுத்த பேட்டிகள் உங்களுக்கு பிடிக்கும் ? சிறந்த பேட்டி எடுப்பவர் ? பேட்டி எடுக்கப்பட்டவர் ?

10. ஆங்கிலத்தில் கரண் தாபர் (cnn-ibn) எடுக்கும் கார சார பேட்டிகள், NDTVயில் ஷேகர் குப்தா எடுக்கும் 'Walk the Talk' பேட்டிகள் போல் தமிழில் எந்த சானலிலும் நல்ல அரசியல் பேட்டியாளர்களோ, பேட்டி நிகழ்ச்சிகளோ வருவதில்லையே ஏன் ? (ஆட்டோ பயம் தான் காரணமா ?)

Muruganandan M.K. said...

ஆலோசனைக்கு நன்றி. பார்க்க இருக்கிறேன்.

வால்பையன் said...

எங்கே பிராமனன் சீரியல் கூட நிறைய வீடுகளில் தெரிவதில்லையாம்!
என்னான்னு பார்த்துகோங்க!

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
அதுதான் நான் ஒவ்வொரு எபிசோடுக்கும் சுட்டி தருகிறேனே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது