இது பற்றிய எனது முந்தைய பதிவு
ராஜநாயகம் அவர்களது பதிவு
என்றென்றும் அன்புடன் பாலாவின் பதிவு
ரவி சீனிவாஸ் அவர்களது பதிவு
வக்கீல்கள் நடந்து கொண்டது போன்று வேறு யாராவது நடந்திருந்தால் இன்னேரத்துக்கு கம்பி எண்ண வேண்டியிருந்திருக்கும்.
இன்று ஸ்ரீகிருஷ்ணா சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனிடம் இடைக்கால அறிக்கை தந்திருக்கிறார். இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தபோது கிருஷ்ணா அறிக்கைக்கு வக்கீல்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து இந்த அறிக்கையை பரிசீலிக்கப் போவது இல்லை என்றும், ஏற்கனவே சென்னை அக்கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு இருப்பதால், அவர்களே இந்த விசாரணையை தொடருமாறு உத்திரவிடப் போவதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்ததாக டெல்லி சென்றிருந்த வக்கீல்கள் தெரிவித்தனர். தான் இந்த விசாரணையைத் தொடர முடியாது என்றும் ஸ்ரீகிருஷ்ணா அறிவித்து விட்டார் (நன்றி மாலைமுரசு).
சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற கலவரத்துக்கு வக்கீல்களும், போலீசாரும்தான் பொறுப்பு என இடைக்கல அறிக்கையில் ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகிறார் (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் டோண்டு ராகவன்):
“முதல் பார்வையில் எனக்குப் படுவது என்னவென்றால், சென்னை உயர் நீதி மன்றம் இந்த விஷயத்தில் ரொம்ப மென்மையாக நடந்து கொண்டதே ஆகும். தவறான சமிக்ஞைகள் வக்கீல்களுக்கு தரப்பட்டன. அதனால் தாங்கள் கோர்ட் கட்டிடத்துள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்ததாகத் தோன்றுகிறது. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய வக்கீல்களே அதெல்லாம் செய்யாது ரவுடிகள், காலிகள் போன்று நடந்து கொண்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கதே. கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த விஷயங்கள் தாங்கள் நீதிமன்ற அதிகாரிகள் ஆனதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என வக்கீல்கள் நினைப்பது போல தோற்றத்தைத் தருகின்றன. இவ்விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆக்டிங் தலைமை நீதிபதி மற்றும் நிர்வாகத்தின் மென்மையான அணுகுமுறை தவறான சமிக்ஞையை அனுப்பி வக்கீல்கள் சட்டத்தை மீறச் செய்துள்ளது. அதே சமயம் அரசியல் தளத்தில் இலங்கை விவகாரம், சாதிப் பிரச்சினைகள் ஆகியவையும் நிலைமையை மேலும் சீர்குலைத்தன என்பதிலும் சந்தேகம் இல்லை. முதலிலேயே வக்கீல்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அதாகப்பட்டது, அவர்கள் அரசியல் கருத்துகள் ஏதாக இருப்பினும், அதையெல்லாம் கோர்ட்டுக்குள் கொண்டு வரலாகாது.”
ஐஏஎஸ் அதிகாரிகள் ஸ்டேட்மெண்ட் பாலா அவர்கள் பதிவிலிருந்து:
சென்னை ஐகோர்ட்டு சம்பவம் ஒரு சில வக்கீல்களின் வன்முறையால்தான் உருவானது என்று ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களின் விவரம் வருமாறு:-
அனைவரும் சமம்
சென்னை ஐகோர்ட்டில் நடந்த வன்முறை சம்பவத்தில் காவல்துறையினர் மீது ஊடகங்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருவது எங்களுக்கு வேதனையளிக்கிறது. இந்த விஷயத்தில், நீதிக்கான அடிப்படை கோட்பாடுகளுக்கும், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்ற நியதிக்கும் ஆபத்து வந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
ஒரு சில வக்கீல்களின் வன்முறையால்தான் ஐகோர்ட்டில் மோதல் சம்பவம் நடந்துள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட வக்கீல்களை போலீசார் சட்டப்படி கைது செய்ய வந்தபோது சில வக்கீல்கள் எதிர்த்தனர். மேலும் அவர்கள், போலீசார் தங்களது கடமையை செய்யவிடாமல் தடுத்தனர்.
தரக்குறைவான பேச்சு
கடந்த 19-ந் தேதி அன்று பிற்பகல் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களும், வக்கீல்கள் என்ற போர்வையில் சிலரும் சட்டவிரோதமாக கூடி போலீசாரை தரக்குறைவாக பேசியதுடன் அவர்கள் மீது செங்கல், கற்களை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.
வக்கீல்கள் சட்டவிரோதமாக கூடி இதுபோன்ற வன்முறையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டுள்ளனர். போலீசார் கண் எதிரே வன்முறைக் கும்பல் ஐகோர்ட்டு வளாகத்தில் இருந்த போலீஸ் நிலையத்தை தீ வைத்துக் கொளுத்தியுள்ளது. இந்த கும்பலால் ஏராளமான போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் படுகாயமடைந்தனர். பெண் போலீசார் மானபங்கம் செய்யப்பட்டார்கள். ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள பொதுச்சொத்துகள் போலீசாரின் நடவடிக்கையால் சேதமடையவில்லை. மாறாக வக்கீல்களின் வன்முறை செயல்களால்தான் பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டன என்பதற்கு தேவையான போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளன.
அத்துமீறலை ஆதரிக்கவில்லை
கோர்ட்டு வளாகத்திற்குள் போலீசார் செல்லக்கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்படவில்லை. அதற்கு மாறாக, சட்டத்தை நிலை நிறுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும், பொதுசொத்துகள் சேதப்படுத்தப்படுவதை தடுக்கவும் தேவைப்பட்டால் கோர்ட்டு வளாகத்திற்கு போலீசார் செல்லலாம் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அதற்காக போலீசார் அத்துமீறியிருந்தால் அதனையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. இதில் போலீசாரின் நடவடிக்கையை மட்டுமே ஒருதலைப்பட்சமாக பெரிதுபடுத்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டை மதிக்கவில்லை
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட வக்கீல்கள் மட்டும் சுதந்திரமாக பேசியும், பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்கிறார்கள். இதனால் ஒருதலைப்பட்சமான செய்திகள் மட்டும் ஊடகங்களில் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், போலீசார் இதுபோல சுதந்திரமாக போராட்டம் நடத்தி தங்களது தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறுவதற்கு நன்னடத்தை விதிகளில் இடமில்லை.
இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி போலீஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வக்கீல்கள் இன்னமும் பணிக்குத் திரும்பவில்லை.
சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் கோர்ட்டுகளைப் போலவே, ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் பணியாற்றுகிறார்கள். எனவே, ஐகோர்ட்டு சம்பவத்தில் இருதரப்பினருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்ட வக்கீல்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபட்ட போலீசார் காப்பாற்றப்பட வேண்டும். இந்த சம்பவத்தில், போலீசார் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த சட்ட உதவியும், போதுமான நிதியும் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
ஒப்புதல்
இந்த தீர்மான நகலில், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பி.ராம்மோகன் ராவ், எஸ்.ராமசுந்தரம், டி.வி.சோமநாதன், டி.என்.ராமநாதன், பி.சிவசங்கரன், எஸ்.தங்கசுவாமி உள்பட ஏராளமானோர் கையெழுத்துப் போட்டுள்ளனர். மேலும், பி.அமுதா, ராகேஷ் காக்கர், கே.ராமலிங்கம், எம்.எஸ்.சண்முகம் உள்பட பல்வேறு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் சங்கத்தின் தீர்மானங்களுக்கு இ-மெயில் மூலம் ஒப்புதல் அளித்துள்ளனர். .
நன்றி: தினத்தந்தி
வக்கீல்கள் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை புறக்கணிப்பது ஆச்சரியமே இல்லை.
மறுபடியும் கூறுவேன்:
அராஜகம் செய்த போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை தேவை. ஆனால் அதே சமயம் போக்கிரித்தனமாக செயல்பட்ட வக்கீல்கள் யார் யார் என்று தெரியும் நிலையில் அவர்களது சன்னதுகள் பிடுங்கப்பட வேண்டும். இம்மாதிரியான ரௌடிகள் வழக்கறிஞர் தொழிலுக்கே அகௌரவம் விளைவிக்கிறவர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
14 hours ago
10 comments:
Animal Farm என்ற நாவலில் ஜார்ஜ் ஓர்வெல் சொல்வது போல "All pigs are equal; some pigs are more equal than others" இது தான் சட்டத்தின் முன் அனைவரும் சமமென்று சொல்லிக் கொள்வதன் உண்மையான அர்த்தம் என்றாகி விட்டது.
கலைஞர் எப்போதோ சொன்னது போல காவல் துறையின் ஈரல் அழுகி விட்டது என்பது உண்மையே. நடப்பதை எல்லாம் பார்க்கும் போது சட்டம் படித்தவர்களின் "எல்லாமே" அழுகிப் புரையோடி விட்டது போலத் தோன்றுகிறது.
ஐ ஏ எஸ் கூட்டமும் இதில் விதி விலக்கு அல்ல.
//ஆனால் அவரது அறிக்கை பரிசீலிக்கப்படாது என சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது. இதற்கிடையே விசாரணையைத் தொடர முடியாது என ஸ்ரீகிருஷ்ணா திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
//
என்னையா அக்கிரமம்? பூனைக்கு யார் மணி கட்டுறது கேஸா?
பேசாம வாதாட வக்கீலுங்களே தேவை இல்லைன்னு அறிவிச்சுடலாம்.
பல கேஸுங்க சீக்கிரம் பைசலாகிவிடும்.
Why has the supreme court declined to act on the interim report from Srikrishna? DOes anyone know?
நீங்கள் கொடுத்துள்ள நண்பர்களின் ப்ளாக் லிங்குடன் சுரேஷ் கண்ணனின் பதிவையும் இணைத்து கொள்ளுங்கள்.
அதுவும் பல தகவல்கள் சொல்லுது.
அன்புள்ள ஐயா!
இங்கே இரு தரப்பில், யார் தவறு செய்தார்கள் என்று ஆராய்வது தேவையற்ற ஒன்று என்றே நினைக்கிறேன். ஏனென்றால், யார் தவறு செய்திருந்தாலும், கட்டுப்பாட்டை தவறக் கூடாத பொறுப்பு போலீசாருக்கே அதிகம் உண்டு. வக்கீல்கள் சங்கம் நம் நாட்டில் உள்ள பல சாதி சங்கங்கள், அரசியல் கட்சிகள் போன்ற ஒரு தனியார் கூட்டமைப்பு. அவர்கள் தவறு செய்வது அல்லது வன்முறையில் ஈடுபடுவது என்பது குற்றம்தான் என்றாலும், நம் நாட்டின் ஜனநாயக நடைமுறைப் படி அது நமெக்கெல்லாம் பழகிப் போனது.
அதே சமயம் வழக்கறிஞர்கள் அத்து மீறுகிறார்கள் என்று நியாயம் கற்பித்துக் கொண்டு அவர்களை திட்டமிட்டு தாக்கும் வேலையில் போலீஸார் ஈடுபட்டால் அது நாட்டின் ஜனநாயகத்திற்கே ஆபத்தானது என்று நான் கருதுகிறேன். ஏற்கனவே என்கௌண்டேர் என்ற பெயரில் இவர்கள் கட்டபஞ்சாயத்து செய்வதாக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்டு வரும் வேளையில் இந்த நிகழ்வுக்கு பொதுமக்களிடம் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், வருங்காலத்தில் நியாயம் கற்பிக்கிறோம் என்ற பெயரில் ஊரையே நாசம் செய்து விடுவார்கள்.
ஊழல் அரசியல்வாதிகளை ஒழித்துக் கட்டுகிறோம் மற்றும் இஸ்லாத்தை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், பாகிஸ்தானின் மிதவாத அரசியல்வாதிகளை காலி செய்து உள்ளே நிலவியாபாரம் பண்ணும் பாகிஸ்தான் ராணுவத்தின் கதையை இங்கே நினைவு கூறுவது அவசியம் என்று நினைக்கிறேன்.
இந்திய அரசியல் சட்டப் படி மக்களுக்கு நியாயம் வழங்கும் உரிமை கொண்டது நீதி மன்றங்கள் மட்டுமே. பெரும்பான்மையான இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கங்களுக்குக் கூட அந்த அதிகாரம் வழங்கப் பட வில்லை. அப்படி இருக்கும் போது, நீதி மன்றங்கள் நீதி வழங்க வில்லை அல்லது தாமதமாக வழங்குகின்றன, வழக்கறிஞர்களிடம் மென்மையாக நடந்து கொண்டிருக்கிறன என்றெல்லாம் கூறி கொண்டு ஆயுதமற்ற மக்களை ஆயுதங்களின் துணை கொண்டு கண்மூடித்தனமாக திட்டமிட்டு தாக்கும் அதிகாரத்தை மக்கள் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் போலீஸார் எடுத்துக் கொண்டதை நாம் ஒரு போதும் நியாயப் படுத்த முடியாது. ஏற்கனவே சொன்னபடி, இந்த விஷயத்தில் தவறு செய்த வழக்கறிஞர்கள் கூட தண்டிக்கப் படவேண்டியவர்கள்தான் என்றாலும், தவறு செய்த போலீசாருக்கும் கடுமையான தண்டனை வழங்கப் பட வேண்டும். அந்த தண்டனை, இனி வரும் காலங்களில் அரசு சீருடையின் துணை கொண்டு தவறு செய்ய துணிவோருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
நன்றி
//இங்கே இரு தரப்பில், யார் தவறு செய்தார்கள் என்று ஆராய்வது தேவையற்ற ஒன்று என்றே நினைக்கிறேன்.//
ஒரு அசந்தர்ப்பமான விஷயம் நடந்தால், அது ஏன் நடந்தது என்பதை அறிவது அவசியமே.
//ஏனென்றால், யார் தவறு செய்திருந்தாலும், கட்டுப்பாட்டை தவறக் கூடாத பொறுப்பு போலீசாருக்கே அதிகம் உண்டு.//
ஆக வக்கீல்களுக்கு பொறுப்பு இல்லை. அவிழ்த்துவிட்டக் காளைகள் அவர்கள் அப்படித்தானே?
//வக்கீல்கள் சங்கம் நம் நாட்டில் உள்ள பல சாதி சங்கங்கள், அரசியல் கட்சிகள் போன்ற ஒரு தனியார் கூட்டமைப்பு. அவர்கள் தவறு செய்வது அல்லது வன்முறையில் ஈடுபடுவது என்பது குற்றம்தான் என்றாலும், நம் நாட்டின் ஜனநாயக நடைமுறைப் படி அது நமக்கெல்லாம் பழகிப் போனது.//
நல்ல வாதம்தேன். திருஷ்டி சுத்தித்தான் போட வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///அராஜகம் செய்த போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை தேவை. ஆனால் அதே சமயம் போக்கிரித்தனமாக செயல்பட்ட வக்கீல்கள்....///// ஸ்வாமி...ஸ்ரீகிருஷ்ணா என்னத்தையாவது சொல்லிட்டுப் போகட்டும் ஓய்.. நீர் சொல்றது உதைக்கறதே... அதாங்காணும்.. உம்ம ஜட்ஜ்மெண்டோட ஆப்பரேடிவி போர்ஷன மேல குடுத்திருக்கிறேன்..பாரும்... அதென்ன அராஜம் செய்யத போலீசு... அவாளுக்கு அடைமொழியே தரல... ஆனா இந்த வககீலுக்கு போக்கிரி பட்டம் தாராளமா தானம் பண்றேளே...முதல்ல புரியல... ஏன்னு யோஜன பண்ணா... வக்கீலுக்கும் இன உணர்வு... உமக்கும் இன உணர்வுன்னு.. தானிக்கு தீனின்னு சரியா போறத பாத்தேளா.... அவாள அடிச்சா இவாளுக்கு கோபம் வர்றது...
vakkilgal mattumthan rowdigala? appadinna police?
சட்டப்பார்வை என்ற வலைப்பூவில் வந்த ஒரு தலைபட்சமான பதிவுக்கான எனது பின்னூட்டத்தின் நகல் இதோ: பார்க்க: http://sattaparvai.blogspot.com/2009/03/blog-post_19.html
அப்படீன்னா சுப்பிரமணியம் சுவாமி மேலே முட்டையை எறிஞ்ச வக்கீல்கள் (அதுவும் நீதியரசர் முன்னாலேயே) மட்டும் ரொம்ப அப்பாவிகளா? மேலும் வக்கீல்கள் கூடத்தான் கல்லெறிஞ்சாங்க. அது பத்தி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையே சொல்லியதே. அதையெல்லாம் ஒப்புக்கு கூட உங்கள் பதிவில் குறிக்காமல் உங்கள் பாரபட்சத்தனத்தைத்தானே காட்டுகிறீர்கள்?
சில போலீஸ் அதிகாரிங்களை சஸ்பெண்ட் செஞாங்க ஆனால் முதலில் குற்றத்தில் ஈடுபட்ட வக்கீல்களும் கண்டுணரப்பட்டு அவர்களில் சிலரது சன்னதையாவது தற்காலிகமாகவாவது பிடுங்குவதுதானே நியாயம்.
எப்படியும் உங்கள் சமநிலை நோக்கு சந்தேகத்துக்குரியது. சுப்பிரமணிய ஸ்வாமி பார்ப்பனர் என்பதாலேயே நிங்கள் ஒரு வெளை அந்த முட்டையடிப்பை ஆதரிக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது. ஏனெனில் அச்சம்பவம் பற்றி பதிவு ஒன்றும் நீங்கள் போட்டதாகத் தெரியவில்லை.
ஒரு வேளை நீங்கள் இப்பின்னூட்டத்தையே அழித்தாலும் அழிக்கலாம். ஆகவே அதன் நகலை எனது இது சம்பந்தப்பட்ட பதிவிலும் பின்னூட்டமாகப் போடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2009/03/blog-post_06.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
I think as Mistake was commenced by some Advocates & It was finished by some polices. Wrongdoer in bothsides to be find out and to be punished. Above all, conduct rules or guidelines to be framed for the both parties hereafter should not do such thing.
--A PUBLIC MAN
Post a Comment