3/25/2009

பலே ஆடிட்டர், நன்றாகவே அடிச்சு ஆடிட்டார்!

இன்றைய (25.03.2009) ஹிந்து பத்திரிகை முதல் பக்கத்தில் வந்த செய்தி என் கவனத்தைக் கவர்ந்தது.

ஏ.ஜி. ஆஃபீசில் சீனியர் ஆடிட்டராக வேலை பார்க்கும் ஆண்ட்ரூ ராஜகுமார் என்னும் நபர் HCL பொது மேலாளர் பிரசாத் என்பவரது பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய சொகுசுக் காரை திருடி மாட்டிக் கொண்டுள்ளார்.

ஷோ ரூமில் டெலிவரி எடுக்கும்போதே காரின் கீ மிஸ்ஸிங். பொறுப்பற்ற ஷோ ரூம்காரர்கள் அவருக்கு ஒரு டூப்ளிகேட் தந்து சமாளித்துள்ளனர். அந்தக் கார்தான் திருட்டு போயிற்று.

திருடிய நபரின் போட்டோவையும் ஹிந்துவில் போட்டுள்ளனர்.

இனி என்ன நடக்கும்? திருடனின் வேலை பறிபோகும், ஜெயில் களி சாப்பாடு. இதெல்லாம் அந்தாளுக்கு தேவையா?

ஆனால் சில முக்கியக் கேள்விகள் பாக்கியுள்ளன.

காரில் கீ இல்லையென்றவுடன் அந்தக் காரை பிரசாத் அவர்கள் டெலிவரி எடுக்க மறுத்திருக்க வேண்டும். ஷோ ரூம்காரர்கள் செய்ததோ பொறுப்பற்றத்தனத்தின் உச்சக்கட்டம். எச்.சி.எல். பார்க்கிங்கில் திருடன் போலி ஐடி கார்டுடன் எப்படி வரமுடிந்தது? எச்.சி. எல்லின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவ்வளவுதானா? பொது மேலாளரின் காருக்கான பார்க்கிங் குறிப்பிட்ட இடத்தில்தான் இருக்கும். அங்கிருந்து முன்பின் தெரியாத ஒருவர் அக்காரை ஓட்டிச் செல்ல முடிந்தது என்றால் கார் பார்க்கிங் ஊழியர் என்ன செய்து கொண்டிருந்தார்?

நல்ல வேளையாக கேமராக்கள் செயலில் இருந்ததால் காரை ட்ரேஸ் செய்ய முடிந்தது.

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

Rajaraman said...

நமது நாட்டில் நடக்கும் பல திருட்டுக்களுக்கு வழி வகை ஏற்படுத்தி தருவதே திருடு கொடுப்பவர்கள்தானே. இதில் நமது நாட்டு அரசியல் வியாதிகள் அடிக்கும் திருடும் சேர்த்திதான்.

ACE !! said...

//பொது மேலாளரின் காருக்கான பார்க்கிங் குறிப்பிட்ட இடத்தில்தான் இருக்கும்.//

பொது மேலாளருக்கு தனி பார்க்கிங் வசதி கிடையாது. அனைவருக்கும் கார் பார்க்கிங் வசதி பொதுவானது (VP-க்கு மட்டுமே தனி இடம் உண்டு).

//எச்.சி.எல். பார்க்கிங்கில் திருடன் போலி ஐடி கார்டுடன் எப்படி வரமுடிந்தது//

கார் பார்க்கிங்கிற்கு செல்வதற்கு ID கார்டை காண்பித்தால் போதும், electronic access கிடையாது.. இதனை மாற்றி அங்கேயும் electronic access கொண்டு வரவேண்டும் போலிருக்கிறதே..

dondu(#11168674346665545885) said...

//கார் பார்க்கிங்கிற்கு செல்வதற்கு ID கார்டை காண்பித்தால் போதும், electronic access கிடையாது.. இதனை மாற்றி அங்கேயும் electronic access கொண்டு வரவேண்டும் போலிருக்கிறதே.//
அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ACE !! said...

இந்த அலுவலகம், tidel park, chennai one மாதிரி ஒரு கட்டிடத்தில் அமைந்திருந்தால், அங்கு HCL-ஐ தவிர பல அலுவலகங்கள் இயங்கும், மற்றும் அனைவருக்கும் பொதுவான பாதுகாப்பு ஆட்கள் இருப்பார்கள். அதனால், எந்த ஒரு அலுவலகத்தின் ID கார்ட் இருந்தாலும், ஒருவர் உள்ளே நுழையலாம்.

ACE !! said...

தான் காரை அலுவலகத்தில் வைத்திருந்தால் (எண்ணையும் மாற்றாமல்) பிடிபடுவோம் என்ற எண்ணமே இல்லயா இல்லை நம் போலீஸ் மீது அவ்வளவு நம்பிக்கையா தெரியவில்லை..

என்ன ஆனாலும் பாதுகாப்பு சரியில்லை என்பது தான் சரி. :(

dondu(#11168674346665545885) said...

@ACE
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இவ்வளவு முட்டாளாகவா இருப்பான் திருடன்?

அப்படீன்னும் சொல்ல முடியாதபடி இந்தக் கதையைப் பாருங்க. http://www.breathfreshair.org/foolishthieves.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

R.Gopi said...

"ஆட்டை" போட்ட ஆடிட்டர். நல்ல டைட்டிலா இருக்கு, வச்சுடலாம் .....

இப்போ அரசியல்ல நடக்குற குதிரை பேரம் பாத்து, இவருக்கும் அவங்கள போல "ஆட்டை" போடறது ஞாபகம் வந்ததோ என்னவோ??

("ஆட்டை ஆடிட்டர்" ஏதாவது தொகுதில போட்டி போடறாரா??)

Sethu Raman said...

கேள்விகள்:

1. அறிமுக இளைஞர் அரசியல்வாதிக்கு, அறிவு,அனுபவம், அடக்கம், பண்பு, பணம் மிக மிகத் தேவை! இவைகளில் முதல் நான்கும் மருந்துக்குக்கூட வருண் காந்தியிடம் இல்லை போல் இருக்கிறதே?
தேறுவாரா?

2. நாட்டில் பொதுத் தேர்தல் 2009ல் நடக்கும் என்று தெரிந்தும் கூட ஐ.பி.எல். போட்டிகளுக்கு நாள்
குறிப்பிட்டார்கள்.. இவர்களுக்கு நாட்டில் அக்கரை இருந்தால் இந்த சமயம் பார்த்து, போட்டிகளை
வெளி நாட்டில் வைத்து தேர்தலைப் புறக்கணிக்கலாமா?

3. தமிழ் நாட்டில் கொலை, கொள்ளைகள் நிகழாத நாட்களே
கிடையாது என்ற மாதிரி நாளுக்கொரு சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது.. இன்று பார்த்தீர்களா, நல்ல படிப்பும், ஏ.ஜி. ர்யாலயத்தில் வேலை செய்பவரும் காரைத் திருடியகப்பட்டுக் கொண்டதை - இல்லாதவன் தான் திருடுகிறான் என்றால்,இவரது திருட்டு எதில்
சேர்த்தி?

Anonymous said...

அட ஆமாண்ணா.. புதுக்காரப் போய் பட்டபகல்ல திருடறான்னா, இவனுக்கு மனநில சரியில்லையோ என்னவோ..
ஒங்கள மாதிரி ரொம்பப் படிச்சவா இந்த மாதிரி அக்கரமத்த உடனே பதிவு பண்ணி அம்பலப் படுத்தணும்...ஆனா
இன்னொரு சேதி வந்திருந்ததே.. அத பாக்கலயா...? அதாண்ணா... 21.3.09 விடுதலை முதல் பக்கதில
கூட நீயூசா போட்டிருந்தா... ஓகோ... நீங்க படிக்கற பேப்ர்ல வர்ல போலருக்கு.. சாரிண்ணா..
அந்தச் சேதி என்னன்னா.... சிதம்பரம் நடராஜா கோவில்ல கவர்மெண்ட் எடுத்துண்டப்பறம்,
இந்த அரசு அதிகாரிகள் கோவில் உண்டியில தெறந்து கணக்குப் பாத்தாளாம்...
ரூவா நோட்ல சில மகானுபாவன்கள் நெய்யையும் எண்ணையையும் போட்டு நாசம் பண்ணிப்டாளாம்...
ரூவா நோட்டெல்லாம் ஒண்ணொடு ஒண்ணு ஒட்டிண்டு... போறும்.. வீபூதியப் போட்டு பிரிச்சாளாம்....
ஆண்டவனுக்கே அடுக்குமா.. பாருங்கோ கலி என்னமா பாடு படுத்தறான்... இந்த
அக்கரமத்தக்கூட நீங்க ப்ளாக்கா போட்ருக்கலாம்... ஏனோ போடல... அதுவும் ஓரு
வகையில.. அதென்ன ஓரு வகை ரெண்டு வகை... எல்லா வகையிலும் திருட்டுதான் பகல் கொள்ளதான்..
அதுவும் சாமிக்கே என்னமா நாமத்தப் போடுறா....... யாரா இருக்கும்.. விஜாரிச்சுப்
ஒரு ப்ளாக் போடறேளா... பெரிய மனசு பண்ணி...

- அம்பீஸ்வரன்

அக்னி பார்வை said...

என்ன த்த சொல்ல கோடி கோடிய திருடரவன் மாட்டுறான ?

Anonymous said...

//அட ஆமாண்ணா.. புதுக்காரப் போய் பட்டபகல்ல திருடறான்னா,

blah blah ..


பெரிய மனசு பண்ணி...

- அம்பீஸ்வரன் //

This comment is not from Senthazhal Ravi

வால்பையன் said...

//தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்களா?//

தூக்கத்திலிருந்து எப்போது எழுவீர்கள்?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது