சுமார் 20 கேள்விகள் அல்லது ஒரு வாரத்துக்கு ஒரு முறை (வழக்கம்போல வியாழன் விடியற்காலை 5 மணிக்கு), எது முதலில் வருகிறதோ, அப்போது டோண்டு பதில்களை வெளியிடலாம் என நினைக்கிறேன். இப்போது நேரடியாகவே கேள்விகளுக்குச் செல்வோம்.
LK
கேள்வி-1. ராசா பதவி விலகத் தேவை இல்லை என்று சிதம்பரம் கூறி இருக்கிறார். மேலும் நேற்றைய செய்திப்படி பதவி பறி போகும் நிலை இன்று அவ்வாறு இல்லை என்று ஒரு தகவல். இடையில் முதல்வர் குடும்ப உறுப்பினர் சோனியாவிடம் பேசியதாக ஒரு செய்தி.
CAG ரிப்போர்ட் படி ஒருத்தர் பதவி விலகத் தேவை இல்லை. அந்த ரிப்போர்ட் மதிப்பற்றது என்று சொன்னால் அப்படிப்பட்ட துறை எதற்கு? இதில் உங்கள் கருத்து என்ன
பதில்: இதில் வெறுமனே இரட்டைப் பரிமாணத்தில் பார்க்கலாகாது. முப்பரிமாணம், தேவைப்பட்டால் அதற்கு மேலும் எண்ணிக்கையில் அதிகமான பரிமாணங்களில் (கணிதவியலில் அம்மாதிரி பரிமாணங்கள் சாத்தியமே). அரசியலில் எந்த ரிப்போர்ட் எப்போது உபயோகத்துக்கு வரும் என யார் சொல்ல முடியும்? பின்னால் ராசா பாதுகாப்பு வளையத்திலிருந்து விலகினால் அவரை பின்னோக்கி இழுக்க அவை பயன்படுத்தப்படும்.
இதற்கு முன்னுதாரணம் எனப் பார்த்தால் 1972- வாக்கில் எம்.ஜி.ஆர். அப்போதைய திமுக அரசை எதிர்த்து புகார்களை கவர்னரிடம் தர அவை கிடப்பில் அச்சமயத்துக்கு போடப்பட்டன. ஆனால் 1976-ல் திமுக மந்திரிசபை டிஸ்மிஸ் ஆனதும் தூசு தட்டி எடுக்கப்பட்டன. சர்காரியா கமிஷன் உருவாயிற்று.
பின்சேர்க்கை: இக்கேள்வி வந்த உடனேயே பதிலை எழுதி வைத்து விட்டேன். அப்போது ராஜா பதவியிலிருந்து இன்னும் விலகவில்லை. ஆனால் இப்போதைய நிலை வேறு. ராஜாவை ஒரு சாமானியன் வீழ்த்தி விட்டார்.
மதுரை சரவணன்
கேள்வி-2: மேற்கண்ட கேள்வியின் தொடர்சியாக அப்படி ராசா பதவி விலகினால் அ.தி.மு.க காங்கிரஸ் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உண்டா...?
பதில்: அது ராசாவின் பிரயோசனத்தைப் பொருத்துள்ளது. ராசா மட்டுமே சம்பாதித்திருப்பார் என நம்புவதற்கில்லை. பலருக்கு பங்குகளும் சென்றிருக்கும். காங்கிரசும் இதில் அப்பாவி அல்ல. எல்லாமே கூட்டுக் களவாணிகள்தான்.
ஆனால் ஒன்று அப்படி அதனால் திமுகவுடன் பிரிவு வந்தால் காங்கிரசுக்கு அதிமுகாவை விட்டால் வேறு போக்கிடம் தமிழகத்தில் இல்லை.
முதல் கேள்வியின் பின் சேர்க்கைதான் இங்கும்.
ரிஷபன்Meena
கேள்வி-3: என் வீட்டில் இது போல நடந்து, அப்போ குற்றவாளியை போலீஸ் என்கவுண்டர் செய்தாலும் அதை எதிர்பேன் என்று உதார்விடுபவர்கள், பின்னூட்டத்தில் ஒருவர் சங்கடமான கேள்வி கேட்டால் அவரைக் கடித்துக் குதறிவிடுவது ஏன்?
பதில்: இதை ஒரு சிறு உதாரணத்துடனேயே விளக்குகிறேனே.
ஒரு கம்யூனிஸ்டை கேட்ட கேள்விகளும் அவனது பதில்களும்:
கே. எல்லாவற்றையும் பங்கு போடணும்கறயே, உன்னிடம் இரண்டு வீடுகள் இருந்தால் ஒரு வீட்டை சமூகத்துக்கென தருவாயா?
ப: தருவேன்.
கே: இரண்டு கார்கள் இருந்தால்?
ப: தருவேன்.
கே: இரண்டு மாடுகள் இருந்தால்?
ப: கண்டிப்பாக தருவேன்.
கே: இரண்டு சொக்காய்கள் இருந்தால்?
ப: தர மாட்டேன்.
கே: ஏன்?
ப: ஏன்னாக்க என்னிடம் நிஜமாகவே இரண்டு சட்டைகள் இருக்கே.
புரியுதா?
பார்வையாளன்
கேள்வி-4: ஆங்கில மொழியைப் பள்ளியிலிலிருந்தே படிக்கிறோம்.. பல கோச்சிங் வகுப்புகளுக்கும் சென்று அந்த மொழி அறிவை வளர்க்கிறோம். இது போன்ற வசதிகள் இல்லாமல், ஜெர்மன் ஃபிரென்ச் போன்ற மொழிகளை, குறுகிய கால பயிற்சியில் மட்டும் கற்க முடியுமா?
அப்படியே கற்றாலும், ஆங்கிலத்தில் கிடைக்கும் நிபுணத்துவம் அதில் கிடைக்குமா?
பதில்: என்ன அப்படி கேட்டு விட்டீர்கள்? அதுவும் என்னிடமேயா?
ஜெர்மனுக்கு மேக்ஸ் ம்யுல்லர் பவன், பிரெஞ்சுக்கு அல்லியான்ஸ் பிரான்ஸேஸ் ஆகிய நிறுவனங்கள் இருக்கும்போது அந்த மொழிகளை அமோகமாகக் கற்கவியலுமே.
நானாவது ஜெர்மனில் எனது இந்த நிலைக்கு வர இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன். அதையே மேக்ஸ் ம்யுல்லர் பவன் பூனாவில் ஓராண்டிலேயே பெற முடியுமே. என்ன, அங்கேயே இருந்து ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டும். டே ஸ்காலராக பூனாவில் வசித்த வண்ணம் படிக்க முடிந்தாலும், ஹாஸ்டலில் தங்குவதே உத்தமம்.
இரு மொழி மையங்களிலுமே அந்தந்த மொழி மிக நூதனமான முறையில் கற்பிக்கப்படுகிறதே. இது பற்றி நான் இட்டப் பதிவை பாருங்களேன். எனது சொந்த அனுபவங்களை (இன்றும் நினைவு கூர்ந்தால் அவை இன்பமே அளிக்கின்றன) குறிப்பிட்டுள்ளேன்.
கேள்வி-5: பல போராளிகள், நல்லவர்கள், அப்பாவிகள் கொல்லப்படும்போது அதை கண்டு கொள்ளாத அறிவு ஜீவிகள், சமூக விரோதிகள் கொல்லப்படும்போது அதீதமாக உணர்ச்சி வசப்படுவதற்கான உளவியல் காரணங்கள் என்ன ?
பதில்: விவிலியத்தில் வரும் பிராடிகல் சன் கதையில் தந்தை பாவங்கள் செய்த மகனையே அதிகம் ஆதரிக்கிறார். நல்ல மகனை அவ்வளவாகக் கண்டுக் கொள்வதில்லை. அதற்கு அவர் கூறும் காரணங்கள் என்னவோ வலுவானவையே.
ஆனால் அந்த தகப்பனின் ரேஞ்சுக்கு இந்த அறிவுசீவிகள் தங்களைக் கற்பனை செய்து கொள்கின்றனர் என்றுதான் எனக்குப் படுகிறது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை.
எனக்கென்னவோ கவுண்டமணி ஒரு படத்தில் பம்ப் ரிப்பேர் செய்யும் தன் மேல் பெயிண்ட் டப்பாவை போட்டு சட்டையை சிவப்பாக்கிய செந்திலை கிணற்றில் தள்ளிவிட்டு “ஒரு சொட்டை நாய் செத்துப் போச்சு டோய்” எனக் கத்துவதே அதிகப் பாந்தமாக இருக்கிறது. பை தி வே, படத்தின் பெயரை யாராவது சொல்லுங்கப்பூ!
கேள்வி-6: எந்திரனில் ரஜினியின் நெகடிவ் கேரகர்தான் அதிகம் ரசிக்கப்பட்டது.. இப்படி நெகடிவ் கேரக்டர்களை ரசிக்கும் மனோபாவம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானதா, அல்லது உலகம் முழுதும் இப்படித்தானா?
அறிவு ஜீவிகள் என தம்மை கருதிகொள்ளுவோர் இதே சினிமா மனோபாவத்தில்தானே இருக்கிறார்கள்..
பதில்: நல்லவர்கள் பலசமயங்களில் போர் அடிப்பார்கள். யுதிஷ்டிரரை பலருக்கு பிடிக்காது, ஆனால் துரியனைப் புகழவார்கள். அது அப்படித்தான், தமிழர்களுக்கு மட்டுமே உரித்தான குணம் இல்லை.
கேள்வி-7: இலங்கையில் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டபோது ஏற்படாத அதிர்ச்சி , பாலியல் போராளி திரு. மோகன்ராஜ் கொல்லப்பட்டபோது ஏற்பட்டதற்கு தமிழர்களின் நெகடிவ் வொர்ஷிப் தான் காரணம் என நினைக்கிறேன்.. (அவருக்கு சட்டப்படி தூக்கு தண்டனை விதிதாலும், நம் மக்கள் உணர்ச்சியில் கொந்தளித்து இருப்பார்கள்) இந்த நெகடிவ் வொர்ஷிப் பற்றி உங்கள் கருத்து?
பதில்: மோகன்ராஜ் விஷயத்தில் கோவை மக்கள் பட்டாசுகள் கொளுத்தி கொண்டாடினார்கள் இந்தச் சாவை என்றுதானே படித்தேன்.
கேள்வி-8: 1. சாதாரண நிலையில் இருக்கும்போது பொதுஜனத்தோடு இணைந்து இருக்கும் நாம், சற்று வசதி வந்ததும், மக்களுக்கு அப்பாற்பட்ட அறிவு ஜீவிகளாக நம்மை நினைத்து கொள்ள ஆரம்பிப்பது ஏன்?
பதில்: இதில் பல நீரோட்டங்கள் உள்ளன. உயர்ந்த நிலைக்கு சென்ற பலர் தங்கள் பழையவாழ்க்கையை ஓர் அவமானமாகவே நோக்குகின்றனர். ஆகவே அதை நினைவுபடுத்தும் சாதாரண மக்களை மறக்கின்றனர்.
கேள்வி-9: ழ என்ற எழுத்து தமிழின் சிறப்பு எழுத்து என்பது போல, நீங்கள் அறிந்த மொழிகளின் தனிப்பட்ட எழுத்து அல்லது தனிப்பட்ட தன்மை என்ன?
பதில்: உச்சரிக்கும் எல்லா சொற்களுக்கும் எழுத்துவடிவம் இருந்தால், எழுதியதை உச்சரிப்பது எளிது. ஆனால் ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெறுமனே 26 எழுத்துக்கள் உள்ளன. ஆகவே அம்மொழிச் சொற்களை சரியாக உச்சரிக்க பல காலம் பயிற்சி தேவைப்படுகிறது. அந்த வகையில் தமிழில் ழ இருக்கிறது. ஆங்கிலத்தில் அதற்கு la அல்லது za இருக்கிறது. ஆனால், தேவநாகரியில் இருக்கும் ga, gha, ka & kha போல தமிழில் இல்லையே. வெறும் க தானே இருக்கிறது? Gopal என்பதை தமிழில் கோபால் என எழுதி, Kobal என்று கூப்பிடுபவர்களும் உண்டு.
கேள்வி-10: கடவுள் இருக்கிறார் என சிலர் நம்புகிறார்கள்.. இல்லையென சிலர் நம்புகிறார்கள்...
கடவுளைப்பற்றி எந்த கருத்தும் இல்லாமல் இருக்க மனிதனால் ஏன் முடியவில்லை?
பதில்: எப்படிப்பட்ட நாத்திகனும் ஓர் தினம் கடவுளை நம்ப முற்படுவான், அல்லது கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என தசாவதாரக் கமல் போலவும் பேசுவான்.
அதே போல ஊரறிந்த ஆத்திகனும் ஒரு நாள் சாமியாவது பூதமாவது என்றுக் கூட கூறியதும் நடந்துள்ளது. எல்லாம் அவன் செயல்.
அருண் குமார்
கேள்வி-11: 1. +2 க்கு ஒரு வருடம் நீடிப்பு என்று சொன்னால் எப்படி சொல்லாம்? ஒரே கண்டிசன் +3 ன்னு சொல்ல கூடாது...
பதில்: இதில் என்னக் குழப்பம்? அப்போதும் பிளஸ் 2-தான். ஏனெனில், பிளஸ் 2-ல் பெயில் ஆகிவிட்டால், கம்பார்ட்மெண்டாகவோ, அல்லது முழுசாகவோ மீண்டும் பரீட்சை எழுத வேண்டியிருக்கும் அல்லவா? அதுவும் பிளஸ் 2-தானே, ஓராண்டுக்கு மேலும் நீட்டிக்கப்படுகிறதே?
கேள்வி-12: ஏன் newton third lawக்கு அப்புறம் வேறு எந்த lawவும் வரவில்லை..நியூட்டன் போடா ஜாட்டான் என்று சொல்லிவிட்டாரா?
பதில்: அப்படியெல்லாம் சொல்ல அவர் என்ன டோண்டு ராகவன் மாதிரி ப்ரொஃபஷனலா, ஃபீஸ் வாங்கிக் கொண்டு மட்டும் விதிகளைக் கண்டுபிடிக்க?:)
மேலும், மூன்று விதிகளிலேயே தாவு தீர்ந்து, பல ஆண்டுகள் பிடித்திருக்குமாக இருந்திருக்கும். அதிலும் இந்த விதிகளை முன்முடிவாகக் கொண்டு அவர் செயலாற்றவில்லை. அவரது ஆண்டுக்கணக்கான ஆராய்ச்சிகளில் கண்டறிந்ததை தொகுத்தே அவை வந்தவை.
நியூட்டனின் நான்காவது விதி புவியீர்ப்புவிசை சம்பந்தமானது என்று கூறுகின்றனர். ஆனால் அதற்கு எண் தரப்படவில்லை என்றும் அறிகிறேன்.
ஆனால், சமீபத்தில், நியூட்டன் மூன்று விதிகளுக்கு அப்பால் நான்கு என்ன, அதற்கு மேலும் விதிகளைக் கண்டுகொண்டதாக ஆராய்ச்சியாளர்களில் ஒரு கோஷ்டி சொல்லித் திரிகிறது. ஏதோ ஒரு காரணத்தால் அது ஆவணங்களிலிருந்து நீக்கப்பட்டது என்றும் பலர் கூறுகின்றனர். அதை அப்புறம் பார்ப்போம். முதலில் நியூட்டனின் நான்காவது விதி என்னவாக இருக்கும்? பல கிண்டலான விடைகள் உண்டு.
அவற்றில் ஒரு விடை (being implied):
ஏதாவது தவறாக நடக்க வேண்டும் என்றால் அது நடந்தே தீரும். (ஆனால் இதை Fetridge's law என்றல்லவா கூறுவார்கள்)? இதற்கான வீடியோ இங்கே உள்ளது.
ஒரு தருணத்தில் அயல்கிரகவாசிகள் அதை நீக்கின என ஒரு குழுவினரும், அரசே அதை செய்தது என இன்னொரு குழுவும் கூறுகிறது. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இதை நம்புவர்களும் உண்டு. ஏன் அரசு அவ்வாறு செய்ய வேண்டும் என்றால், அதற்கான காரணம் இன்னும் அபத்தமாக உள்ளது.
சதுரங்க ஆட்டத்துகான இணைய பக்கங்கள் ஒத்துக் கொள்ளாத இன்னொரு விடை என்னவென்றால், செஸ் ஆடுபவர் கோபமாக இருந்தால் எதிராளியின் காய்களை வெட்டுவதற்கான மூவ்ஸ்களை ஆராய்ந்து தேர்வு செய்த பின்னால், ஆக்சுவலாக வெட்டும்போது காய்களை அதிக வேகத்தில் நகர்த்துவார்கள் என்றும் கூறப்ப்படுகிறது.
இன்னும் ஒரு வெர்ஷன்: "Loose motion cannot be done in slow moton".
நான் ஓரிடத்தில் படித்தது, இதையும் நியூட்டனின் நான்காவது விதிக்கு உதாரணமாகத் தந்தார்கள்: “மிக வேகமாகச் செல்லும் ஒரு பெண் வழியில் நிலைக்கண்ணாடி ஏதும் வந்தால் நிச்சயம் நின்று பார்த்து லிப்ஸ்டிக்கை சரிசெய்து விட்டுத்தான் மேலே நகர்வார்”.
கேள்வி-13: Krishnakumar
In reading all the replies of Shri.Raja to Honurable PM Manmohan singhji, Raja always refers FCFS ie First come first serve as First Cum First Serve. Who cummed on whom? Or is he trying to make Manmohan rememeber something that cum-med before?
பதில்: நீங்கள் கேட்டதைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது. சட்டென வெரிஃபை செய்து பார்த்ததில் First Cum First Serve என்னும் சொலவடை நியூஸ் ரிப்போர்டுகளில்தான் அதிகம் வந்திருக்கிறது. அதை ராஜா எங்கும் எழுத்து ரூபத்தில் தரவில்லை என்றுதான் நினைக்கிறேன். அப்படி அவரே தந்திருந்தால் அதற்கான சுட்டியை யாராவது தாருங்கள் அப்பூ.
இதற்கு காரணங்களாக நான் கருதுவது பின்வருமாறு, அதாவது அவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை ஒன்றாக இயங்கலாம்.
1. எழுதியது யாராக இருந்தாலும் அவர்களுக்கு Cum என்பதற்கான கெட்ட வார்த்தை அர்த்தம் தெரிந்திருக்காது.
2. ஆனால் சிலருக்கு அது தெரிந்தும் இருக்கலாம்.
3. ஒரு வேளை அந்த கண்ணறாவியும் எங்காவது ஏதேனும் ஒரு காண்டக்ஸ்டில் நிகழ்ந்தும் தொலைத்திருக்கலாம். அது மட்டும் உண்மையானால் அது ரொம்பவும் காஸ்ட்லி Cum! :))))))
ஒரு சிறு டைவர்ஷன்: CPWD-ல் நான் இருந்தபோது நடந்தது.
ஒப்பந்தக்காரருக்கான பில்கள் அனுப்பும்போது கவரிங் லெட்டர் என்பதன் வாசகங்கள் ஒரு டெம்பிளேட் போல மனதில் அமைந்து விட்டன. உதாரணத்துக்கு:
Please find herewith in triplicate, the cc3 and final bill for the work of .... (cc --> contractor current) என்று வாசகம் ஆரம்பிக்கும். பிறகு என்னென்ன இணைத்துள்ளோம் என்றெல்லாம் எழுதி அனுப்ப வேண்டும்.
இதிலும் ஒரு குறும்பு செய்தேன். அதாவது, மேலே கூறிய வாசகத்தை இவ்வாறு மாற்றினேன்: Please find herewith in triplicane, the cc3 and final bill for the work of .... என்று மாற்றினேன். அவ்வாறு பல பில்கள் சென்றிருக்கின்றன. ஒரு தடவை கூட என்னை ஏண்டா பாவி இப்படியெல்லாம் படுத்துகிறாய் என்று யாரும் கேட்கவில்லை.
பிறகு பல ஆண்டுகள் கழித்து சம்பந்தப்பட்ட க்ளெர்க்கிடம் இதை கேட்க, அவர் கூறினார், "சார் எனக்கு இது முதலிலேயே கண்ணில் பட்டது, ஆனால் ராகவன் சார் தப்பாக எழுத மாட்டார், ஆகவே எனக்குத்தான் தெரியவில்லை என விட்டு விட்டேன்" என்று கூற. நான் கொஞ்சம் ஃபீலிங்ஸாகி விட்டேன்.
அது ஒரு தமாஷ் காலம்.
Gopi Ramamoorthy
கேள்வி - 14: Paul Gauguin என்ற ஓவியரைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். இதில் Gauguin என்ற வார்த்தைக்குத் தமிழ் transliteration கொடுங்கள். மிக்க நன்றி.
பீஸ் எல்லாம் கிடையாது! Paul Gauguin பற்றி எழுதும் பதிவில் உங்களுக்குப் பெரிய கிரெடிட் உண்டு (தம்பிடி பிரயோஜனம் கிடையாது அதனால் உங்களுக்கு என்ற போதிலும்!)
பதில்: Eugène Henri Paul Gauguin என்பவர் பெயரை தமிழில் எழுத வேண்டுமானால், யூஜேன் ஆன்ரி போல் கோகங் என்று எழுத வேண்டும். அதுவும் யூஜேன் மற்றும் கோகங் என்பவை முற்றிலும் சரியான உச்சரிப்பு இல்லைதான், இருப்பினும் இவற்றை விட்டால் வேறு வழி இல்லை. ஆகவே ஒரே ஒரு முறை மட்டும் தமிழ் எழுத்துக்களில் பெயரை தந்து விட்டு மீதி இடங்களில் மரியாதையாக Eugène Henri Paul Gauguin என்று குறிப்பிடுவதே பத்திரமானது. உங்கள் பதிவு எழுதி பப்ளிஷ் ஆனதும் சுட்டியை அனுப்பவும்.
மீண்டும் பிறகு சந்திப்போமா, கேள்விகள் வந்தால்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
முக்கிய அறிவிப்பு: வாடிக்கையாளர் இடத்துக்கு துபாஷி வேலையாக செய்வதால் காலை 0545 முதல் மாலை 7 மணி வரை கணினி அருகில் வரமாட்டேன். ஆகவே பின்னூட்டங்கள் மட்டுறுத்துவது தாமதமாகும்.
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
10 hours ago
27 comments:
// ஒரு கம்யூனிஸ்டை கேட்ட கேள்விகளும் அவனது பதில்களும் //
யாருங்க அந்த கம்யூனிஸ்ட்.... Link, screenshot ஏதாவது வச்சிருக்கீங்களா... ஆதாரம் இல்லாம நீங்களா அவர் ஒரு கம்யூனிஸ்ட், நாத்திகவாதின்னு எப்படி முடிவு பண்ணிக்கலாம்... சர்தாரை வச்சி காமெடி பண்ணுவாங்களே அவனுங்க கிட்ட இருந்து ஒரு ஜோக்கை திருடிட்டு வந்து கம்யூனிஸ்ட் அதுஇதுன்னு கதை விட்டுட்டு இருக்கீங்க...
// எல்லாம் அவன் செயல். //
யாரு சார் அது...?
கேள்வி எண் 4, 9, 12 ஆகியவை பயனுள்ளதாக அமைந்திருந்தது.... நன்றி...
நன்றி
நீங்கள் குறிப்பிட்ட கவுண்டமணி ஜோக் இடம்பெற்ற படம் சேரன் பாண்டியன்
மிக்க நன்றி ராகவன் சார். நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன்!
கேள்வி-8: 1. சாதாரண நிலையில் இருக்கும்போது பொதுஜனத்தோடு இணைந்து இருக்கும் நாம், சற்று வசதி வந்ததும், மக்களுக்கு அப்பாற்பட்ட அறிவு ஜீவிகளாக நம்மை நினைத்து கொள்ள ஆரம்பிப்பது ஏன்?
பதில்: இதில் பல நீரோட்டங்கள் உள்ளன. உயர்ந்த நிலைக்கு சென்ற பலர் தங்கள் பழையவாழ்க்கையை ஓர் அவமானமாகவே நோக்குகின்றனர். ஆகவே அதை நினைவுபடுத்தும் சாதாரண மக்களை மறக்கின்றனர். //
Is it a coincidence? Only last week, I came across an occasion where the above-stated incident did really happen! But why people presently in higher places tend to behave like this?
Dondu sir,
Please refer to the following link for the letters which Raja sent to PM. You can cum(pun intended) and see there.
http://www.scribd.com/doc/42822758/Manmohan-Singh-s-Letters-to-A-Raja-2G-Scam
1. ஃபிரான்சில் குற்றங்களே நடப்பதில்லை என் சாரு நிவேதிதா சொல்வது உண்மையா?
2 ஃபிரெஞ்ச்- ஜெர்மனி , ஒப்பிடுக... (மொழி வளத்தில் , கலாச்சாரத்தில்)
jgopikrishnan.blogspot.com
Sir, naamellaam, yen oru iyakkam - mr.gopikku padma vibhushan vaangi thara aarambikka koodaadhu?
//
1. ஃபிரான்சில் குற்றங்களே நடப்பதில்லை என் சாரு நிவேதிதா சொல்வது உண்மையா?
//
சாருத்தனமான (லூசுத்தனமான) பேச்சு. உலகில் குற்றங்கள் நடக்காத நாடு உடோபியா மட்டுமே. அதுவும் கம்யூனிஸ்ட் உடோபியா.
பல மொழிகளை அறிந்தவர் என்ற முறையில் அவற்றுடன் ஒப்பிட்டு இதற்கு பதிலளிக்கவும்..
தமிழிலின் வளர்ச்சிக்கு அதன் எழுத்துக்களை குறைத்தால் நல்லதா.. அதிகரித்தால் நல்லதா? அல்லது இப்போது சரியாகத்தான் இருக்கிறதா!
அதாவது , இப்போது தமிழில் தேவைக்கு அதிகமான எழுத்துக்கள் ( உதாரனமாக “ங்” ஙி,ஙு,ஙூ ஙீ ஞீ ஞி போன்றவை தேவை இல்லை .. ஐ போன்றவையும் தேவையில்லை அய் என எழுதலாம் ) இருக்கிறதா.. அல்லது தேவையை விட குறைவான எழுத்துகள் இருக்கிறதா ( ga, fa, kha , போன்றவற்றுக்கு எழுத்துக்கள் இல்லை ) அல்லது போதுமான எழுத்துக்கள் இருக்கிறதா ?
http://www.outlookindia.com/article.aspx?268082
Did you go through the conversation tape between Radia and Raja ,Kanimozhi, Ratan tata etc.?
The tapes reveal how Dayanidhi is protraying himself in Delhi calling Karunanidhi as senilie.
All these are showcasing a modern "ponniyan selvan" with lots and lots of palace intrigues.
Europe - ஈரோப் Egypt-ஈஜிப்ட் France-ப்ரான்ஸ் palastine-பாலஸ்டீன் Africa-ஆப்ரிக்கா China-சைனா என்று எழுதாமல் ஏன் ஐரோப்பா, எகிப்து, பிரான்சு, பாலஸ்தீனம், ஆப்பிரிக்கா, சீனா என்று தமிழிலில் எழுதுகிறார்கள். பெயர்ச்சொல்லை அப்படியே தானே தமிழ் எழுத்துக்களில் எழுதவேண்டும் எதற்காக இப்படி குழப்படி செய்கிறோம்.
அதென்ன இஸ்ரவேலர்கள் நீங்கள் இப்படி குறிப்பிடுவது அவர்களுக்கு தெரிந்தால் என்ன செய்வார்கள் ?
ஏதேனும் வலுவான காரணமிருக்கிறதா எனக்கு தெரியாது.
ரிஷபன்Meena said...
// //Europe - ஈரோப் Egypt-ஈஜிப்ட் France-ப்ரான்ஸ் palastine-பாலஸ்டீன் Africa-ஆப்ரிக்கா China-சைனா என்று எழுதாமல் ஏன் ஐரோப்பா, எகிப்து, பிரான்சு, பாலஸ்தீனம், ஆப்பிரிக்கா, சீனா என்று தமிழிலில் எழுதுகிறார்கள். பெயர்ச்சொல்லை அப்படியே தானே தமிழ் எழுத்துக்களில் எழுதவேண்டும் எதற்காக இப்படி குழப்படி செய்கிறோம்.// //
ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை மற்றொரு மொழியின் அடிப்படை அமைப்புக்கேற்ப மாற்றிக்கொள்வது இயல்பானதுதான்.
தமிழ் என்பதை மற்ற மொழிகளில் Thamizh என்று எழுதவில்லை, Tamil என்றுதான் எழுதுகிறார்கள். அதுபோலத்தான் இங்லீஷை - ஆங்கிலம் என்றும் ஹிந்தியை - இந்தி என்றும் தமிழில் எழுதுகிறோம்.
இராமாயணத்தை மொழிபெயர்த்த கம்பர் லக்ஷ்மனனை - இலக்குவன் என்றும், விபீஷணனை - வீடணன் என்றும்தான் அழைத்தார்.
எனவே, இதில் குழப்படி எதுவும் இல்லை.
டோண்டு சார், கீழ்கண்ட தளத்தில் இருக்கும் பேட்டியை தமிழ்ப்படுத்திப் போட முடியுமா? அல்லது இது பற்றிய தங்கள் கருத்துக்களை ஒரு பதிவாக வெளியிட வேண்டுகிறேன். இந்திய வேதங்கள் எப்படி வெள்ளையர்களால் திரித்துக் கூறப்பட்டு பிரிவினைவாதத்திற்கு பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பது பலருக்குப் புரியப் பயன்படும்.
http://haindavakeralam.com/HKPage.aspx?PageID=11325&SKIN=B
//But Brahmins or Pundits would not encourage any foreigner to learn Sanskrit and read religious book?
A: Who told you this? It is wrong. The story was told by William Jones. But is not based on facts. It was never sacred. Learning Sanskrit was a difficult task Brahmins had the privilege of servicing others by reciting Sanskrit texts to them. Whether they understood it or not was a different issue. This was inherited from one generation to other. They knew Sanskrit but how did the British learnt it. Christian mind created stories around fragments of information. Their stories are reflection of their minds. It was not the translation of Bhagvat Gita but what they sold it as Bhagvat Gita. Then Europeans who never came to India but learnt Sanskrit alphabets and saw Bhagvat Gita and recognised its alphabets. They could possibly recognise words but they did not understand it. So they would collect more book and apply their Christian mind and say that this is not logical so it has to be this or that. In this process, they were also trying to compile a dictionary.//
இந்தியாவின் ஸ்டார் பத்திரிக்கையாளர் பர்கா தத் பற்றி உங்கள் கருத்து ?
#Barkhagate என்று டுவிட்டரில் தேடவும். இரண்டு நாளாக இந்தியாவில் இடைவிடாமல் டுவீட்டப்படும் buzz word இது தான்.
http://www.dnaindia.com/blogs/post.php?postid=318
இந்த வலைப்பக்கத்தையும் பார்க்கவும்.
வஜ்ரா said...
// //இந்தியாவின் ஸ்டார் பத்திரிக்கையாளர் பர்கா தத் பற்றி உங்கள் கருத்து ?// //
பர்கா தத் லட்சணத்தை
இங்கே கண்ணால் படிக்கலாம்:
http://openthemagazine.com/article/nation/open-s-response-to-ndtv
இங்கே காதால் கேட்கலாம்:
http://www.outlookindia.com/article.aspx?268068
அருளுக்கு ஒரு கேள்வி.
காங்கிரஸுடன் பா.ம.க கூட்டணி வைத்திருந்தால் மந்திரி பதவிக்கு பர்கா தத்துடன் அன்புமணி பேசியிருப்பாரா ?
நன்றி திரு.அருள்.
அறிவுஜீவிகள் அந்தஸ்து எப்போ எப்படி ஒருவருக்கு கிடைக்கிறது ?
உங்களுடைய அறிவுஜீவிகள் லிஸ்டில் பர்க்காதத் எல்லாம் வருவார்களா?
@வஜ்ரா
hypothetical question
//காங்கிரஸுடன் பா.ம.க கூட்டணி வைத்திருந்தால் மந்திரி பதவிக்கு பர்கா தத்துடன் அன்புமணி பேசியிருப்பாரா ?// மொத வாட்டி எம் பி யா இருந்தப்ப மட்டும் பேசாமலா பதவி வாங்கியிருப்பாங்க? எல்லா ஃப்ராடுகளும் ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதான். குழந்தைங்களுக்கான 'வேக்ஸின்' சொட்டு மருந்து தயாரிக்கிற அரசாங்க நிறுவனங்கள் மூன்றையும் வேலை நடக்க விடாமல் மூடச்செய்து அதே சொட்டு மருந்தை தனியாரிடம் இருந்து விலைக்கு வாங்கி கமிஷன் அடிச்சி பெரிய ஊழல் செஞ்சி அதனால் தமிழகத்திலேயே சொட்டு மருந்து கொடுத்ததால செத்துப் போன பல குழந்தைகளின் செய்திகள் வெளிவர காரணமாயிருந்த மருத்துவர் குடும்ப ஊழல் மட்டும் ஏனோ பெரிதாக வெளியே வரவில்லை. 1.76 லட்சம் கோடிக்கு கம்பேர் பண்ணினா அது பெரிய விஷயம் இல்லைன்னு விட்டுட்டாங்களோ என்னமோ! வடிகட்டின திருடர்களாக மருத்துவர் ஐயாக்களும் குட்டி ஐயாக்களும் இருப்பதால் தானே ராசாவின் ஊழலைப் பற்றி வாயே திறக்காமல் பொட்டிப் பாம்பாய் அடங்கி கிடக்கிறார்கள். வாய்திறந்து விட்டால் அடுத்த வாட்டி கொள்ளையடிக்க கூட்டு சேத்துக்க மாட்டாங்கங்கற பயம் தான். எல்லாம் மானங்கெட்ட திருடனுங்க.
@hayyram
நீங்கள் கற்பனையான கட்டுக்கதைகளின் அடிப்படையில் பேசுகிறீர்கள்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள தடுப்புமருந்து சிக்கல் - உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை செயல்படுத்த முயன்றதால் ஏற்பட்டது. பன்னாட்டளவிலான உடன்படிக்கைகள் செயல்படுத்தப்படும் போது அதனால் சில சிக்கல்கள் ஏற்படுவது தவிற்க முடியாதது. இதற்கும் பாமக'வுக்கும் தொடர்பு இல்லை.
ராசா தொடர்பான நிகழ்வில் பாமக'வின் கருத்து என்ன? என்பது குறித்து பாமக தொண்டர்கள் மட்டுமே கட்சியை கேள்வி கேட்க முடியும். அப்படி தொண்டர்கள் கேட்டால், கட்சி விளக்கம் தரும்.
ஒரு கட்சிக்கு தொடர்பில்லாத நிகழ்வு குறித்து அந்தக் கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லாத நீங்கள் கேள்வி கேட்க முடியாது. அந்த தகுதி உங்களுக்கு இல்லை.
ஜெர்மன் பிரதமர் angela merkel அவர்களின் பெயரை தமிழில் எப்படி உச்சரிக்க வேண்டும்?
//ஒரு கட்சிக்கு தொடர்பில்லாத நிகழ்வு குறித்து அந்தக் கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லாத நீங்கள் கேள்வி கேட்க முடியாது.அந்த தகுதி உங்களுக்கு இல்லை// கட்சிக்குத் தொடர்பில்லாதவர்களின் ஓட்டு மட்டும் வேண்டுமாம்! அப்துல் கலாமிடம் கேள்வி கேட்க கொஞ்சமேனும் தகுதி வேண்டும். அயோக்கியர்களிடம் கேள்வி யாருக்கும் தகுதி தேவையில்லை.
Did you read the "kilu kilu" matter
about Raja and kani in Radia-Ratan Tata conversation? (It was "kilu kilupu atleat for me)
hayyram said...
// //கட்சிக்குத் தொடர்பில்லாதவர்களின் ஓட்டு மட்டும் வேண்டுமாம்! அப்துல் கலாமிடம் கேள்வி கேட்க கொஞ்சமேனும் தகுதி வேண்டும்.// //
உங்களுடைய வாக்கு, உங்களது கொள்கையை பின்பற்றுவோர் வாக்கு - பாமக'வுக்கு தேவையில்லை. நீங்களெல்லாம் பாமக'வுக்கு வாக்களிப்பவர்கள் அல்லது வாக்களிக்கப்போகிறவர்கள் என்று நம்புகிற அளவுக்கு நாங்கள் மூடநம்பிக்கையில் உழலவில்லை.
பாமக'வுக்கு யார் வாக்களிப்பார்கள் என்பது நன்றாகத்தெரிந்து, அந்த மக்களின் நலனை முன்னிறுத்தும் கட்சியாகவே அது இயங்கிவருகிறது.
மற்றபடி, அப்துல் கலாம் எத்தகைய "அறிவாளி" என்பது அவரை நேரில் அறிந்தவர்களுக்குத் தெரியும். பார்ப்பனக்கூட்டம் உயர்த்திப்பிடிக்கும் சோளக்கொல்லை பொம்மை அவர். அழிவு அறிவியலை தூக்கிப்பிடிக்கும் அமைதியின் எதிரி அவர்.
அவரை நாங்கள், அப்துல் M. கலாம் என்றுதான் அழைக்கிறோம். எனவே, அப்துல் M. கலாமிடம் கேள்வி கேட்க உங்களுக்கு தகுதி இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
1 qwerty , dvorak என ஆங்கிலத்தில் தட்டச்சு ப்லகை ஸ்டாண்டர்டாக உள்ளன . மற்ற மொழிகளில் இப்படி ஸ்டாண்டர்டைஸ் செய்து இருக்கிறார்களா..
2. எல்லா கட்சிகளும் கூட்டணி மாறத்தான் செய்கின்றன.. ஆனால் பா. ம.க மட்டும் அதிகமாக கிண்டல் செய்யப்படுவது ஏன் ?
Post a Comment