11/25/2010

டோண்டு பதில்கள் 25.11.2010

பார்வையாளன்
கேள்வி-1: ஃபிரான்சில் குற்றங்களே நடப்பதில்லை என் சாரு நிவேதிதா சொல்வது உண்மையா?
பதில்: அப்பட்டமான உளறல். குற்றங்கள் எங்குதான் நடக்கவில்லை? பிரெஞ்சு குற்றவியல் சட்டத்தில் பட்டியலிடப்படும் குற்றங்கள் வேறு எந்த நாட்டின் குற்றச் சட்டத்துக்கும் சளைத்தவை அல்ல.

இவ்வளவு நாட்கள் பிரஞ்சு தொடர்பு இருந்தும் அம்மொழியை கற்க இயலாதவரின் புரிதல்தான் இதெல்லாம் என விட்டுவிட வேண்டியதுதான். சரியான காமெடி பீஸ் அவர்.

கேள்வி-2: ஃபிரெஞ்ச்- ஜெர்மனி , ஒப்பிடுக... (மொழி வளத்தில் , கலாச்சாரத்தில்)
பதில்: நீங்கள் குறிப்பிட்ட இரு விஷயங்களிலும் அவை ஒவ்வொன்றுமே தம் மட்டில் சிறப்பானவை.

கேள்வி-3: பல மொழிகளை அறிந்தவர் என்ற முறையில் அவற்றுடன் ஒப்பிட்டு இதற்கு பதிலளிக்கவும்.
தமிழின் வளர்ச்சிக்கு அதன் எழுத்துக்களை குறைத்தால் நல்லதா.. அதிகரித்தால் நல்லதா? அல்லது இப்போது சரியாகத்தான் இருக்கிறதா!
அதாவது , இப்போது தமிழில் தேவைக்கு அதிகமான எழுத்துக்கள் (உதாரணமாக “ங்” ஙி,ஙு,ஙூ ஙீ ஞீ ஞி போன்றவை தேவை இல்லை .. ஐ போன்றவையும் தேவையில்லை அய் என எழுதலாம் ) இருக்கிறதா.. அல்லது தேவையை விட குறைவான எழுத்துகள் இருக்கிறதா (ga, fa, kha , போன்றவற்றுக்கு எழுத்துக்கள் இல்லை) அல்லது போதுமான எழுத்துக்கள் இருக்கிறதா?

பதில்: ஙே-யின் தேவையை ராஜேந்திர குமார் அறிந்திருந்தார் (ஙே என விழித்தான்). ஐ-க்கும் ஐ-க்கும் மாத்திரை வேறுபாடு உச்சரிப்பில் வரும். அதே போலத்தான் ஔ-வும் (அவ்வ்வ்வ்). ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்னும்போது ங் வேண்டும்தானே. ஙப்போல் வளையென்றும் எழுதுவார்கள். மற்றப்படி ஙி,ஙு,ஙூ ஙீ ஞீ ஞிஆகியவை தேவையில்லைதான். ஆனால் இருப்பதை ஏன் எடுக்க வேண்டும்?

ga, fa, kha , போன்றவற்றுக்கு எழுத்துக்கள் இல்லைதான். ஆனால் உச்சரிப்பில் தேவை. ஆகவே அவை வரட்டுமே.

கேள்வி-4: சத்திய மூர்த்தி குறித்து கலைஞர் சொன்ன தகவல் உண்மையா? காமராஜரின் குருவான சத்தியமூர்த்தி பற்றிய இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும்?
பதில்: பதில்: சத்தியமூர்த்தி அம்மாதிரி பேசி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் அவருக்கு அம்மாதிரி பதிலடி கொடுத்தது பற்றியும் நான் ஏற்கனவேயே பல இடங்களில் படித்துள்ளேன்.

நிகழ்காலத்தில் பின்னோக்கிப் பார்க்கும்போது பல விஷயங்கள் இப்படித்தான் விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும். அவ்ற்றில் இதுவும் ஒன்று.

அக்கால கட்டங்களில் குழந்தை திருமணங்களை தடுத்து சாரதா சட்டம் வந்த போதும் அவ்வாறே எதிர்ப்புகள் எழுந்தன. அதற்கும் முன்னால் சதி தடுப்பு சட்டத்துக்கும்தான் எதிர்ப்பு வந்தது.

சமூக ரீதியாக எந்த மாற்றம் வந்தாலும் இவ்வாறு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அவற்றையெல்லாம் மீறித்தான் மாற்றங்கள் வரவேண்டும்.

இது ஒரு உலகளாவிய உண்மை. இயற்பியலில் இனெர்ஷியா என்று கூறுவார்கள். அதே போலத்தன் இதுவும்.

சத்தியமூர்த்தி மற்றப்படி அப்பழுக்கர்றவர். இம்மாதிரி நடந்து கொண்டது அவரது அக்கால சமூக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே புத்திசாலிகளாக காங்கிரசார் இருந்தால் இதற்கு ரியேக்ட் செய்யாமல் இருப்பதே நலம்.

கேள்வி-5: தொடர்புடைய இன்னொரு கேள்வி. காமராஜரின் தலைவரையே கலைஞர் இப்படி தைரியமாக விமர்சிக்கிறார் என்றால், இனியும் காங்கிரசுக்கு பணிந்து போக தேவையில்லை... தேர்தலை தனித்து நின்றும் சந்திக்கலாம் என்ற நிலைக்கு அவர் வந்து விட்டதாக கருதலாமா ?
பதில்: கண்டிப்பாக இல்லை. இருப்பினும் காங்கிரசே இவரைக் கழற்றிவிட்டால் என்ன செய்வது என்பதற்கான முன்சாக்கிரதையாகவேனும் இதை எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

கேள்வி-6: qwerty , dvorak என ஆங்கிலத்தில் தட்டச்சு ப்லகை ஸ்டாண்டர்டாக உள்ளன . மற்ற மொழிகளில் இப்படி ஸ்டாண்டர்டைஸ் செய்து இருக்கிறார்களா..
பதில்: கண்டிப்பாக உண்டு. முதலில் qwerty என்பது ஜெர்மன் தட்டச்சுப் பலகையில் qwertz என்று இருக்கும். தமிழில் யளனகபக என்று வரும். மீதி மொழிகளிலும் இருக்குமாகத்தான் இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் உதாரணங்கள் தர என்னால் இயலாது.

கேள்வி-7: எல்லா கட்சிகளும் கூட்டணி மாறத்தான் செய்கின்றன.. ஆனால் பா. ம.க மட்டும் அதிகமாக கிண்டல் செய்யப்படுவது ஏன்?
பதில்: அது அவர்களது அளவுக்கு மீறிய அலட்டலால் வருகிறது. யாரையும் அவர்கள் இதற்காக குறை கூற இயலாது.

கேள்வி-8: ஜெர்மன் பிரதமர் angela merkel அவர்களின் பெயரை தமிழில் எப்படி உச்சரிக்க வேண்டும்?
பதில்: ஆங்கெலா மெற்கெல்

ரிஷபன்Meena
கேள்வி-9: Europe - ஈரோப் Egypt-ஈஜிப்ட் France-ப்ரான்ஸ் palastine-பாலஸ்டீன் Africa-ஆப்ரிக்கா China-சைனா என்று எழுதாமல் ஏன் ஐரோப்பா, எகிப்து, பிரான்சு, பாலஸ்தீனம், ஆப்பிரிக்கா, சீனா என்று தமிழில் எழுதுகிறார்கள். பெயர்ச்சொல்லை அப்படியே தானே தமிழ் எழுத்துக்களில் எழுதவேண்டும் எதற்காக இப்படி குழப்படி செய்கிறோம்.
அதென்ன இஸ்ரவேலர்கள் நீங்கள் இப்படி குறிப்பிடுவது அவர்களுக்கு தெரிந்தால் என்ன செய்வார்கள்?
ஏதேனும் வலுவான காரணமிருக்கிறதா எனக்கு தெரியாது.

பதில்: அப்படியானால் ஜெர்மனை டாய்ட்ச் என்றும் பிரெஞ்சை ஃப்ரான்ஸே என்றும்தான் கூற வேண்டும். நடக்கிற காரியமா? மேலும் எகிப்தை அரேபியர்கள் மிஷ்ர என குறிப்பிடுகிறார்கள். நாம் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்ததால் அவ்வாறு நினைக்கிறோம். சீனாவின் தலைநகர் பீக்கிங் என்றுதான் நான் பள்ளியில் படித்துள்ளேன். ஆனால் இப்போதோ சீன அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் பெய்ஜிங் என்கிறோம்.

ஆக, ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை மற்றொரு மொழியின் அடிப்படை அமைப்புக்கேற்ப மாற்றிக்கொள்வது இயல்பானதுதான்.

தமிழ் என்பதை மற்ற மொழிகளில் Thamizh என்று எழுதவில்லை, Tamil என்றுதான் எழுதுகிறார்கள். அதுபோலத்தான் இங்லீஷை - ஆங்கிலம் என்றும் ஹிந்தியை - இந்தி என்றும் தமிழில் எழுதுகிறோம்.

இராமாயணத்தை மொழிபெயர்த்த கம்பர் லக்ஷ்மணனை - இலக்குவன் என்றும், விபீஷணனை - வீடணன் என்றும்தான் அழைத்தார்.

எனவே, இதில் குழப்படி எதுவும் இல்லை (நன்றி அருள்).


வஜ்ரா
கேள்வி-10: இந்தியாவின் ஸ்டார் பத்திரிக்கையாளர் பர்கா தத் பற்றி உங்கள் கருத்து?
பதில்: ஒட்டுமொத்த குஜராத்தையே எடுபட்ட பயல்களின் மாநிலம் என அவதூறாகப் பேசும் அப்பெண்மணி திட்டப்படும் அளவுக்குக் கூட லாயக்கில்லாதவர் அவர்.


hayyram
கேள்வி-11 தமிழ் சினிமாவில் பிராமணக் காட்சிப்படுத்தல் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன? தொடர்புடைய சில சுட்டிகள்:
http://www.jeyamohan.in/?p=9352
http://www.jeyamohan.in/?p=7499
http://hayyram.blogspot.com/2009/05/blog-post_5138.html

பதில்: உங்களுடன் முழுக்கவும் ஒத்துப் போகிறேன் என்பதை முதற்கண் கூறிவிடுகிறேன். எனது தரப்பிலிருந்தும் ஒரு உதாரணம் தருவேன்.

ஒரு பதிவர் சந்திப்புக்கு கோலங்கள் சீரியலுடன் தொடர்பு கொண்ட பாஸ்கர் சக்தி வந்திருந்தார். அவரிடம் கோலங்கள் பற்றி நான் சில கேள்விகள் இட்டேன். போன ஆண்டு மே மாதமே முடிந்திருக்க வேண்டியது இன்னும் இழுக்கப்படுவதற்கு அதற்கு பல முறை தரப்பட்ட எக்ஸ்டென்ஷன்கள்தான் காரணம் என அவர் தெரிவித்தார். மிக நல்ல தொழில்நுட்ப முறையில் சீரியல் எடுக்கப்படுதால் அது பலராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. ஆகவே அதன் இயக்குனரின் சமூகப் பொறுப்பு மிகவும் அதிகமாகிறது எனக் கூறிய நான் திருச்செல்வனிடம் ஒரு லைவ் டி.வி. ஷோவில் நான் கேட்ட கேள்வி பற்றியும் கூறினேன்.

அவரை அச்சமயம் கேட்க நினைத்து, கேட்காமல் விட்ட கேள்வியை இப்போது பாஸ்கர் சக்தியிடம் கேட்டேன். அதாவது எந்த கேரக்டர்களுக்குமே சாதியை கூறாது விட்டுவிட்டு, கங்கா என்னும் நெகடிவ் பாத்திரத்தை மட்டும் ஐயங்கார் பெண் என குறிப்பிட வேண்டியதன் அவசியம் என்ன என்பதுதான் அது.

அதில் என்ன இழிவான விஷயம் கூறப்பட்டது என கேட்க, அந்த ஐயங்கார் குடும்பத்தின் மாப்பிள்ளை தன் மனைவியையே கூட்டிக் கொடுப்பதாகவெல்லாம் சீன் வைக்கப்பட்டதை கோபத்துடனேயே நான் குறிப்பிட்டேன். பல எபிசோடுகள் இக்குடும்பத்தினர் செய்வதாகக் கூறப்படும் எதிர்மறை காட்சிகள் வந்தன.

அதே சமயம் அபி குடும்பத்துக்கு சூனியம் வைப்பது, காசு வெட்டிப் போடுவது போன்ற உத்தமமான காரியங்கள் செய்த பாஸ்கரின் அன்னை, கொலை கொலையாய் முந்திரிக்காய் என செயல்பட்ட பாஸ்கர் ஆகியோரின் சாதி பற்றி பேச்சில்லை. ஆகவே கதை ஓட்டத்துக்கு சற்றும் தேவைப்படாத சாதி விஷயத்தை ஒரு க்ரூப்புக்கு மட்டும் ஐயங்கார் என அடையாளம் ஏன் காண்பிக்க வேண்டும் என கேட்டு, அக்கேள்வியை திருச்செல்வத்துக்கு பாஸ் செய்யும்படி கேட்டு கொண்டேன். பாஸ்கர் சக்தியும் அவ்வாறே செய்வதாகக் கூறினார்.

என் கருத்து என்னவென்றால் இம்மாதிரி பார்ப்பன சாதியை சீண்டும்படி கதை வைத்து சினிமா, டி.வி. சீரியல்கள் ஆகியவற்றை இயக்குபவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். அத்தவறை செய்பவரே பார்ப்பனராகவும் இருந்தால் அவருக்கு இரட்டிப்பு அளவில் செருப்படி தரவேண்டும்.

உத்தம புத்திரன் படம் சம்பந்தப்பட்ட சண்டையில் கொங்கு வேளாளர்கள் செய்ததுதான் சரி. அப்போதுதான் சற்றே யோசிக்க ஆரம்பிப்பார்கள். நான்கைந்து முறை அவ்வாறு நடந்தாலே போதும், எதற்கு வம்பு என விட்டுவிடுவார்கள்.

இந்த விஷயத்தில் பல பார்ப்பன பதிவர்கள் bending backwards என்னும் ரீதியில் அம்மாதிரி செய்பவர்களுக்கு சப்பைக்கட்டு கட்டி தங்களை முற்போக்கு பதிவர் எனக்காட்டிக் கொண்டு, எடுபட்ட பயல்களாகச் செயல்படும் இணைய தாசில்தார்களிடம் நல்ல பெயரை வாங்க முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு தண்டனை அவ்வப்போது அதே எடுபட்ட ஜாட்டான்களிடமிருந்தே கிடைத்து விடுகிறது. இருப்பினும் வலிக்காதது போல நடிக்கின்றனர்.

I have got nothing but contempt for them.

கேள்விகள் ஏதேனும் இருந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

24 comments:

Philosophy Prabhakaran said...

பின்னூட்டங்களுக்கு பதில் தாராத ஒருவரிடம் பின்னூட்டம் இடாமலே இருக்கலாம் என்று கருதுகிறேன்... நன்றி...

எல் கே said...

யுனிகோட் பிரச்சனை பற்றி உங்கள் கருத்து

dondu(#11168674346665545885) said...

@பிலாசஃபி பிரபாகரன்
நீங்கள் என்ன பின்னூட்டம் போட்டீர்கள் என புரியவில்லையே?

@எல்.கே.
அடுத்த பதில்கள் வரைவில் உங்கள் கேள்வி சேர்க்கப்பட்டுவிட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

// //ga, fa, kha , போன்றவற்றுக்கு எழுத்துக்கள் இல்லைதான். ஆனால் உச்சரிப்பில் தேவை. ஆகவே அவை வரட்டுமே// //

ga, fa, kha போன்றவற்றுக்கு தமிழில் எழுத்துக்கள் தேவை இல்லை.

"கிரந்தம் பற்றிய சில அடிப்படை உண்மைகள்"

http://muelangovan.blogspot.com/2010/11/blog-post_11.html

MV SEETARAMAN said...

//ஆகவே புத்திசாலிகளாக காங்கிரசார் இருந்தால் இதற்கு ரியேக்ட் செய்யாமல் இருப்பதே நலம்.//

காங்கிரசார் எப்போது தமிழ்நாட்டில் நல்லதுக்கு ரியேக்ட் செய்யப்ப்போகிறாற்கள் ?

vignaani said...

//எல்லா கட்சிகளும் கூட்டணி மாறத்தான் செய்கின்றன.. ஆனால் பா. ம.க மட்டும் அதிகமாக கிண்டல் செய்யப்படுவது ஏன்?
பதில்: அது அவர்களது அளவுக்கு மீறிய அலட்டலால் வருகிறது. யாரையும் அவர்கள் இதற்காக குறை கூற இயலாது.//
All answers are good; this is the best among them.

vijayan said...

தீரர் சத்தியமூர்த்தி நாட்டின் விடுதலை வேள்வியில் தன்னையே அர்பணித்தவர்.அவருடைய தியாகங்களை பற்றிகருணாநிதி எப்போவாவது பேசியிருக்கிறாரா.

hayyram said...

//அந்த ஐயங்கார் குடும்பத்தின் மாப்பிள்ளை தன் மனைவியையே கூட்டிக் கொடுப்பதாகவெல்லாம் சீன் வைக்கப்பட்டதை கோபத்துடனேயே நான் குறிப்பிட்டேன்.// இவ்வாறு பிராமணர்களை காட்சிப்படுத்துவது பிராமனர்கள் பற்றிய மிகவும் கொச்சையான ஆழ்மன வக்கிரம் தான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்த வக்கிர புத்தியை வெளிப்படுத்துகிறார்கள். பிராமணப் பெண்களை எப்படியாவது பெண்டாட வேண்டும் என்கிற பொறுக்கித்தனமான கற்பழிப்பு புத்தி என்றே இதனை எடுத்துக் கொள்ள முடியும். தமிழ் சினிமாவில் கதாநாயகியரை எல்லாம் பிராமண கதாபாத்திரமாகவே காட்டுவதும் இப்படிப்பட்ட வக்கிர புத்தியின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன். மேலும் ஒரு இனத்தை அடியோடு அழிக்க வேண்டுமெனில் அந்த இனப்பெண்களின் கருப்பைகளைப் கைப்பற்ற வேண்டும் என்பது இன அழிப்பு யுக்தி. தமிழகத்தைப் பொறுத்தவரை பிராமண இனத்தை அடியோடு அழிக்க அந்த இனப்பெண்களின் ஆழ்மனதில் வேறு ஜாதிக்காரன் தான் உனது ஹீரோ என்பதை நிலை நிறுத்திவிட்டால் - அப்பெண்களின் கருப்பைகளை கைப்பற்றி விட்டால் இனி அடுத்த சந்ததி அந்த இனத்திற்கு துளிர்க்க வாய்ப்பே இல்லை என்னும் மிகப்பெரிய திட்டமிடலும் வக்கிரமான அழிப்பு குணமும் இதன் பின்னால் ஆழமாக இருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இது வெறும் கற்பனை காட்சிப்படுத்தல் தானே என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அருவெறுக்கத்தக்க இன துவேஷமும் ஆழமான இன அழிப்புச் செயல்களும் கங்கனம் கட்டி நடத்தப்படுகிறது என்று சாதாரன பிராமணனுக்குத் தெரியாது. தங்களை முற்போக்கு பிராமணனாக காட்டிக் கொள்பவனுக்கு இது புரியாது. பிராமணர் அல்லாதவர்களுக்கு அப்படி ஒன்று நடப்பதாகவே உணர முடியாது. இந்த ராஜபக்ஷே தனமான வக்ர புத்தியை வெளிப்படுத்த எதிர்த்துக் கேட்க பிராமணர்களே முன்வருவதில்லை. பின்னர் அவர்களுக்கு உதவ யார் வருவார்???

hayyram said...

//இந்த விஷயத்தில் பல பார்ப்பன பதிவர்கள் bending backwards என்னும் ரீதியில் அம்மாதிரி செய்பவர்களுக்கு சப்பைக்கட்டு கட்டி தங்களை முற்போக்கு பதிவர் எனக்காட்டிக் கொண்டு, எடுபட்ட பயல்களாகச் செயல்படும் இணைய தாசில்தார்களிடம் நல்ல பெயரை வாங்க முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு தண்டனை அவ்வப்போது அதே எடுபட்ட ஜாட்டான்களிடமிருந்தே கிடைத்து விடுகிறது. இருப்பினும் வலிக்காதது போல நடிக்கின்றனர்.// மிகச்சரியாகச் சொன்னீர்கள். கூடவே பழகிவிட்டு நேரம் கிடைக்கும் போது முதுகில் குத்திவிடும் துரோகிகளிடம் முற்போக்குவாதி போல நடித்தால் மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடவா போகிறார்கள். அதைத்தான் சொல்வார்கள் - "பட்டால் தான் தெரியும் பாப்பானுக்கு" என்று. பட்டுத் தெரிவதற்குள் இனம் அழிந்து விடும். ஹிட்லரிடம் பட்டவர்கள் தெரிந்து கொண்டார்கள் அவன் மோசமென்று. ஆனால் அதற்குள் அந்த இனமே அழிவிற்குள்ளானது. ஜெர்மெனியில் யூதர்கள் கொஞ்சமேனும் எஞ்சியிருப்பார்கள். தமிழகத்தில் பிராமணன் மிஞ்சியிருப்பானா?? கடைசி பிராமணனின் கவுன்ட் டவுன் துவங்குவதற்குள் கொஞ்சமேனும் சந்ததியினரைக் காப்பாற்றிக் கொள்ள பிராமணர்கள் கண் விழிக்கட்டும்.

dondu(#11168674346665545885) said...

@hayyram
அவ்வளவு மோசமாகவெல்லாம் ஆகாது கவலை வேண்டாம். தமிழக எல்லையைத் தாண்டினாலே பார்ப்பன வெறுப்பு மறையும். இங்கே இருக்கும் கிணற்றுத் தவளைகளுக்கெல்லாம் பயப்படத் தேவையில்லை.

அதே சமயம் ஆ ஊன்னாக்க பாப்பான்னாக்க என்னடா ஜாட்டான் என நான் மட்டும்தாம் கேட்டேன் என நினைத்தேன். நீங்களும் வருவது குறித்து மகிழ்ச்சி.

எதிரிகளை முறியடிப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

// //எதிரிகளை முறியடிப்போம்.// //

Good Joke

pichaikaaran said...

நீங்கள் குறிப்பிட்ட இரு விஷயங்களிலும் அவை ஒவ்வொன்றுமே தம் மட்டில் சிறப்பானவை.

நான் கவனித்த வரை, தொழில் நுட்ப நூல்கள் ஜெர்மன் மொழியில் அதிகமாகவும்,கலை சார்ந்தவை பிரஞ்ச் மொழியில் அதிகமாகவும் இருப்பதாக தோன்றியது..

dondu(#11168674346665545885) said...

@பார்வையாளன்
இல்லை, அது வெளியில் இருப்பவர்களது புரிதல். ஐரோப்பிய மொழிகள் இந்த விஷயத்தில் ஒரே நிலையில் இருப்பவை.

எனக்கு தெரிந்த ஜெர்மன், ஃபிரெஞ்சு மற்றும் இத்தாலியனிலிருந்து என்னிடம் மொழிபெயர்ப்புக்காக வந்தவற்றை வைத்து நான் அதைக் கூறுவேன்.

என்ன, ஆங்கிலத்தில் எல்லாவற்றையும் விட அதிகம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

pichaikaaran said...

தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஸ, ஷ, ஹ போன்றவற்றை ஏன் சிலர் எதிர்க்கிறார்கள்.. இந்த எழுத்துக்கள் இல்லாமல் போவது ஆங்கில கலப்புக்கு வழி வகுக்கும் என நினைக்கிறேன்..

உதாரணமாக..

பசு(s) மோதி பசு சாவு..

(j)சார்(j)ச் புச்(sh) மீது சூ(sh) வீச்சு
என எழுத ஆரம்பித்து விடுவார்கள் என அஞ்சுகிறேன்..

இது பற்றி உங்கள் கருத்து என்ன ?

அருள் said...

பார்வையாளன் said...

// //பசு(ச்) மோதி பசு சாவு..

(ஜ்)சார்(ஜ்)ச் புச்(ஷ்) மீது சூ(ஷ்) வீச்சு
என எழுத ஆரம்பித்து விடுவார்கள் என அஞ்சுகிறேன்..

இது பற்றி உங்கள் கருத்து என்ன ?// //

போட்டுத்தாக்காதீங்க...! இதெல்லாம் உங்கள் திசைதிருப்பல்தான்.

பசு மோதி பசு சாவு = பேருந்து மோதி பசு சாவு.

"பஸ்" என்பதற்கு இணையான "பேருந்து" என்கிற தமிழ்ச் சொல் வழக்கத்தில் உள்ளது.

சார்ச் புச் மீது சூ வீச்சு = சார்சு புசு மீது காலணி வீச்சு.

ஜார்ஜ் புஷ் என்பது ஒரு பெயர்ச்சொல். ஆங்கிலத்தில் "விழுப்புரம்" என்பதை "வில்லுப்புரம்" என்பது போல, "ஜார்ஜ் புஷ்" என்பதை "சார்சு புசு" என்று சொல்வதால் ஒன்றும் குடி மூழ்கி போய்விடாது.

வஜ்ரா said...

சார்சு புசு வை "ஜார்ஜ் புஷ்" என்று எழுதுவதால் யார் குடி முழுகிப்போனதோ !

அருளிடம் கேட்டால் கிரந்த எழுத்துக்கள் எல்லாம் பார்ப்பான சதி என்றே சொல்லப்போகிறார். கேட்பது no use.

டோண்டு அவர்கள்,

"கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களா ?"

என்பதற்கு ஒரு சிரிய விளக்க பதில் போட்டால் (அடுத்த கேள்வி பதில் பகுதியில்) நன்றாக இருக்கும் தான்.

ஆனால், நீங்கள் என்ன சொன்னாலும் கடைசியில் நீங்கள் பார்ப்பானர் அதனால் தான் அப்படிச் சொல்கிறீர்கள் என்று சொல்லுவதற்காகவே நிறைய பேர் இருக்கிறார்கள்.

pichaikaaran said...

"ஜார்ஜ் புஷ்" என்பதை "சார்சு புசு" என்று சொல்வதால் ஒன்றும் குடி மூழ்கி போய்விடாது "

குடி முழுகி போய் விடாதுதான்.. ஆனால் தமிழில் சில வார்த்தைகளை சரியாக சொல்ல முடியாது என்ற நிலை வந்தால் அது தமிழுக்கு பின்னடைவாக ஆகி விடாதா?

பல மொழியினர் சேர்ந்து வாழும் இடங்களில் , தமிழை படித்து மட்டும் ஒருவர் பெயரை தெரிந்து கொண்ட ஒருவன், சார்சு புசு மோசமான ஆள், என் சீரியசாக பேசினால், மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா ?

KANTHANAAR said...

டோண்டு அவர்களே... எனது உறவினர் பாரீஸ் சென்று திரும்பினார்.. அவர் கூறுவது பாரீஸ் நகரத்தில் பல இடங்களில் 0% crime rate உள்ளதாகக் கூறினார்... ஒட்டு மொத்த பிரான்ஸ் பற்றித் தெரியாது... சற்று சரிபார்த்துக் கூறவும்...

அருள் said...

வஜ்ரா said...

// //சார்சு புசு வை "ஜார்ஜ் புஷ்" என்று எழுதுவதால் யார் குடி முழுகிப்போனதோ !// //

ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகள் காலத்தால் பின் வந்தவை. அத்தகைய மொழிகளால் தனித்து இயங்க முடியாது. பிறமொழி சொற்களை இத்தகைய மொழிகள் அப்படியே உள்வாங்கும் தேவை உள்ளது.

மலாய், ஆப்பிரிக்க மொழிகள் போன்றவற்றுக்கு எழுத்து வடிவம்கூட இல்லை. எனவே, அத்தகைய மொழிகளுக்கு ரோமன் எழுத்து வடிவங்கள் தேவைப்படுகின்றன.

இதுபோன்ற தடை எதுவும் தமிழுக்கு இல்லை. கிரந்த எழுத்துக்கள் ஒன்றைக்கூட சேர்க்காமல் தமிழில் எதையும் எழுத, பேச முடியும்.

பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் கிரந்த எழுத்துக்கள் இல்லாமல் படைக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் 1330 குறளையும் கிரந்த எழுத்துக்கள் இல்லாமல்தான் எழுதியுள்ளார்.

பிள்ளை இல்லாதவர்கள்தான் தத்தெடுக்க வேண்டும். தமிழுக்கு அந்த நிலைமை இல்லை.

---

[""இன்று கிரந்தத்தைத் தமிழில் கலக்க ஒப்பினால் இன்றைய தொலைக்காட்சி,திரைப்படங்களால் தமிழர் வாழ்வில் கலந்துவரும் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை எழுதும் எழுத்துகளையும் தமிழில் கலந்து எழுத எதிர்காலத்தில் மக்கள் முயற்சி செய்வார்கள். இன்றும் இந்த நிலையை ஓரிரு விளம்பரப் பலகைககளில் காணமுடிகின்றது. பண்பலை வானொலிகளில் வலிய ஆங்கிலத்திணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றையெல்லாம் எடுத்துக்காட்டாகக் கூறி ஆங்கிலத்தைத் தமிழில் கலக்க இயலுமா?""]

http://muelangovan.blogspot.com/2010/11/blog-post_12.html

எல் கே said...

ஆனாலும், ஒரு சில எழுத்துக்களை சேர்ப்பது மொழியை அழித்துவிடும் என்று சொல்வது செம காமெடி அருள்.

dondu(#11168674346665545885) said...

@LK
ஐந்தாம் வகுப்பு கூட தாண்டாத கன்னடியரை தமிழ்த்தந்தை என்றெல்லாம் பிதற்றுவார்கள்.

அவரோ தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என திருவாய் மலர்ந்தருள்வார்.

அதையும், கூடவே தமிழனுக்கு தலைவனாகும் தகுதி கிடையாது என்று அவர் கூறியதையும் தாசானுதாசனாய் ஏற்றுக்கொள்ளும் வெட்கம் கெட்டவர்கள் வேறு என்ன சொல்லுவார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

periyar said...

டோண்டு,
தமிழ்த் தந்தை கன்னடர் என்றால்,தமிழ்த் தாய் #1 கன்னடம்,தமிழ்த் தாய் #2 தெலுங்கு(கொல்டி) என்றாகிறதல்லவா?

ஆக திராவிட தமிழ் குஞ்சுகள் கன்னட/கொல்டி தமிழ்த் தாய்கள் போட்டுத் தள்ளிய குட்டிகளா?என்ன கொடுமை இது?,

வஜ்ரா said...

//
டோண்டு அவர்களே... எனது உறவினர் பாரீஸ் சென்று திரும்பினார்.. அவர் கூறுவது பாரீஸ் நகரத்தில் பல இடங்களில் 0% crime rate உள்ளதாகக் கூறினார்... ஒட்டு மொத்த பிரான்ஸ் பற்றித் தெரியாது... சற்று சரிபார்த்துக் கூறவும்...
//

எனது உறவினரெல்லாம் பாரீஸ் போகவில்லை. நானே போய் பார்த்தேன். நான் போயிருந்த ஒரு வாரத்தில் சராசரியாக நாளைக்கு ஒரு பிக் பாக்கெட், அல்லது bag snatching பார்த்திருக்கிறேன்.

பாரீஸ் போலீஸ் எல்லாம் சுத்த வேஸ்ட். திருடனைப் பிடித்தால் நாலு தட்டு தட்டமாட்டார்கள். அவனுடன் கதைப்பேசிக்கொண்டிருப்பார்கள். கேட்டால் ஹூமன் ரைட்ஸ் வயலேஷன் ஆகும் ஆகவே அடிக்கக்கூடாது என்று வியாக்கியானம் வேற.

பாரீஸில் குற்றங்கள் இல்லை என்பவர்கள் பாரீசுக்கு தங்கள் சொந்தச் செலவில் சென்ற சில சராசரி மனிதர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு ஏன், பாரீஸிலேயே கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்கள் (பாண்டிச்சேரி, இலங்கை) வாழ்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவரையாவது கேட்டுக்கொள்ளுங்கள்.

பாரீஸில் பாக்கெட்டை, கைப்பையை எவ்வளவு பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர்கள் அரை மணிநேரம் கிளாஸ்கூட எடுப்பார்கள்.

pichaikaaran said...

"நான் போயிருந்த ஒரு வாரத்தில் சராசரியாக நாளைக்கு ஒரு பிக் பாக்கெட், அல்லது bag snatching பார்த்திருக்கிறேன்."

தகவலுக்கு நன்றி..

அங்கு குற்றங்களே நடப்பதில்லை என்றும், எனவே அங்கு செய்திதாளில் எழுத விஷயம் இல்லாமல் அவர்கள் திணறுவதாகவும் சாரு எழுதி இருந்தார்,,’

விஷயத்தை தெளிவு படுத்திக்கொள்ள , விபரம் தெரிந்தவர்கள் வரும் இந்த இடத்தில் கேள்வியை போட்டு வைத்தேன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது