எனது முதல் பதிவு வந்தது 07.11.2004-ல். இன்று வருவது 1152-வது பதிவு. போன ஆண்டு இது சம்பந்தமாக பதிவு இட்டபோது அது 894-வது பதிவு. ஆக கடந்த ஓராண்டில் 258 பதிவுகள். Not bad!!
ஐந்தாம் ஆண்டு முடிவில் வந்த பதிவின் வரிகளையே இங்கும் இற்றைப்படுத்துகிறேன்.
சாதித்தது என்னவென பார்த்தால் அளவற்ற தன்னம்பிக்கை, தாய் மொழியில் எழுதும் போதை, பல நண்பர்கள், எனக்காக உழைத்த முக்கிய விரோதி மற்றும் அவனது அல்லக்கைகள் என கூறிக்கொண்டே போகலாம்.
அதிலும் முக்கியமாக என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை எனக்கு அறிமுகப்படுத்தியதும் இந்தப் பதிவுலகுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் என்று கூறினால் அது மிகையாகாது.
கடந்த ஆறு ஆண்டுகளாக எனது செயல்பாட்டை ஊக்குவித்த தமிழ்மணத்துக்கும் இங்கே நன்றி தெரிவிக்கிறேன். அது பற்றி நான் எழுதிய இப்பதிவிலிருந்து சில வரிகள் இதோ.
பிறகு என்னென்ன திரட்டிகள் வந்தாலும் தமிழ் மணம் ஒரு தனியிடத்தை எனது மனதில் பிடித்துள்ளது. அதுவே நான் இங்கு இன்னும் விடாப்பிடியாக இருப்பதற்கு காரணம். அதற்காக தமிழ்மணம் அப்படியே ஒரு மேம்பாடும் பெறாமல் அப்படியே நின்று விடவில்லையே. எவ்வளவு புது வசதிகள் வந்துள்ளன? தமிழைத் தவிர வேறு எந்த மொழிப் பதிவுகளுக்கும் இம்மாதிரி ஏற்பாடு இல்லை என்று அடித்துக் கூறுவேன். எனக்கு ஆறு மொழிகள் தெரியும் என்பதையும் சைக்கிள் கேப்பில் கூறிவைக்கிறேன். அது பற்றிய விவரங்கள் இங்கே, ஹி ஹி ஹி.
இன்னொரு உண்மையையும் கூறுவேன். மொழிபெயர்ப்பு எனது உயிர். அதற்கு துணை போகும் எல்லாமே எனக்கு பிடிக்கும். அவற்றை உபயோகித்து கொள்ள தயங்க மாட்டேன். அந்த வரிசையில் தமிழ்மணத்துக்கு முக்கிய இடம் உண்டு. அதை உபயோகித்து பல பதிவுகள் பார்த்தேன், பின்னூட்டங்கள் இட்டேன், பதிவுகள் போட்டேன். எனது தமிழ் மேம்பட்டு வருகிறது. தமிழில் தட்டச்சு அனாயாசமாக வந்தது. அதற்கென காத்திருந்தது போலவே ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகள் வர ஆரம்பித்தன. தற்சமயம் என்னுடைய மொத்தம் இரண்டு வெளி நாட்டு வாடிக்கையாளர்களுமே எனது தமிழ் மொழிபெயர்ப்பு மூலமாகத்தான் வந்துள்ளனர். தாய்மொழியில் எழுதும் சுகத்தை அனுபவிக்கிறேன். வேற்று மொழியிலிருந்து தாய் மொழிக்குத்தான் மொழிபெயர்க்க வேண்டும் என்ற வாதத்தின் பலத்தை நேரடியாக உணர்கிறேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் என்ற கோஷத்தை உண்மையாக உணர்ந்து வைக்க முடிகிறது. எல்லாம் இருக்கும் இடத்திலேயே நடப்பதால் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்றெல்லாம் பதிவு போட முடிகிறது.
பல மொழிபெயர்ப்பு வேலைகள் வருகின்றன என்பதும் உண்மைதானே. அவற்றில் பல நான் தமிழ்மணத்தில் செயலுடன் இருப்பதால்தான். இன்னொன்றையும் கூறவேண்டும். தமிழ் மணம் என்னை மிக நல்லபடியாகவே நடத்தி வந்திருக்கிறது. வளர்ந்த குழந்தையாக செயல்பட்டு (நன்றி மா.சிவகுமார் அவர்களே, பை தி வே அவரும் எனது வாடிக்கையாளர்தான் என்பதையும் சந்தடிசாக்கில் கூறிவிடுகிறேன்) பல சர்ச்சைகளை உருவாக்கி, படுத்தின/படுத்தும் டோண்டு ராகவனை இன்னும் தமிழ்மணம் சகித்துக் கொண்டிருப்பதே என்னை பிறந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு கிடைக்கக் கூடிய பாதுகாப்பு உணர்ச்சியை அளிக்கிறது.
தனிப்பட்ட முறையில் நான் நன்றி தெரிவிப்பது நண்பர் என்றென்றும் அன்புடன் பாலாவுக்குத்தான். அவர்தான் எனது பதிவுலக பிரவேசத்துக்கு தூண்டுகோல்.
அடுத்து வரும் ஆண்டுகளையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
திருவல்லிக்கேணி கடற்கரையில் அலைகளில் கால்களை நனைத்தபடி நிற்கையில் முந்தைய தினம் தண்ணீருக்குள் இருந்த மணல் அமைப்பு அடுத்த நாள் இல்லை என்பதை என் கால்கள் உணரும். நேற்று வெகு தூரத்துக்கு ஆழமின்றி இருந்ததால் அதிக தூரம் உள்ளே செல்ல முடிந்தது என்ற நிலைக்கு நேர்மாறாக இன்று கரை ஆரம்பத்திலிருந்தே கிட்டத்தட்ட செங்குத்தாக ஆழம் அதிகரிக்கும். இது எப்போதுமே நிற்காத செயல்பாடுதான். இதையே வாழ்க்கையில் வரும் பல மாற்றங்களுக்கு உதாரணமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அதேபோல இப்பதிவுலகிலும் பலப்பல புதிய நட்புகள், சில பழைய நட்புகள் உறைந்த நிலையில் (ரொம்ப தொடர்பெல்லாம் இல்லை), புதிதாகச் சில மனவேறுபாடுகள்/மன இணக்கங்கள் ஆகியவை விடாமல் தொடர்கின்றன. எந்தப் பதிவு எம்மாதிரியான நிலைக்கு கொண்டு செல்லும் என ஊகிக்க முடிவதில்லை. இதைத்தான் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் எனக் கூறுகிறார்கள் போலும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
10 hours ago
26 comments:
பதிவுலகில் ஆறு ஆண்டுகள் !!!! வாழ்த்துக்கள்
மென்மேலும் பல ஆண்டுகள் பதிவுலகில் கலக்க வாழ்த்துகள் டோண்டு!!!
ஒ! என்னை விட நீங்க அஞ்சு வருஷம் பெரியவரோ.. பதிவுலகத்துல.. ஒக்கே. ஒக்கே..
நா சின்னவன்.. வாழ்த்த வயசில்லை.. வணங்கி மகிழ்கிறேன்.
Best wishes, Dondu!
பதிவுலகில் 6 ஆண்டுகள்....
வாழ்த்துக்கள் டோண்டு சார்....
Congrats!
வாழ்த்துக்கள் சார்.
congrats. keep it up.
பதிவுலகில் 6 ஆண்டுகள்....
வாழ்த்துக்கள் டோண்டு சார்..
warm greetings for ur achievements
thorattum ungal vilayattugal.
//கடந்த ஓராண்டில் 258 பதிவுகள்.//
ஆறு ஆண்டுகளுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து எழுதும் இதே வேகத்திற்கு சிறப்பு வாழ்த்துகள் ........
வாழ்த்துக்கள் சார்.
வாழ்த்துக்கள். இதோ மாதிரி இன்னும் பலப்பல இடது/இஸ்லாமிய அடிவருடிகளை (கருத்து மூலம்) அடித்துத் துவம்சம் செய்துகொண்டே இருங்கள்.
அப்போ பதிவுலகை சனியன் புடிச்சு ஆறு ஆண்டுகள் ஆகுதுன்னு சொல்லு..................:-(
/////// வாழ்த்துக்கள். இதோ மாதிரி இன்னும் பலப்பல இடது/இஸ்லாமிய அடிவருடிகளை (கருத்து மூலம்) அடித்துத் துவம்சம் செய்துகொண்டே இருங்கள். ////////////////
@ வஜ்ரா
இதுக்கு பேரு தான் ஜாதி / மத திமிர் ....,
யாருப்பா இதற்கும் எதிர்மறை ஒட்டு போட்டது
//Gokulakrishnan said...
அப்போ பதிவுலகை சனியன் புடிச்சு ஆறு ஆண்டுகள் ஆகுதுன்னு சொல்லு..................:-(//
******
யப்பா... கோகுலகிருஷ்ணா....
ஏன்யா, ஒனக்கு இந்த கொலவெறி கோவம் டோண்டு மேல....!!?
//யாருப்பா இதற்கும் எதிர்மறை ஒட்டு போட்டது//
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில், ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்ந்தவர் பெயரையுடையவராக இருப்பார்.
இங்கும் ஒளிந்துதானே வந்துள்ளார்? :)
அன்புடன்,
டோண்டு ராகவன்
//"விளையாட்டுப் போல ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன டோண்டு ராகவன் பதிவுலகுக்கு வந்து!"//
சீரியஸ் போல எத்தனை ஆண்டுகளோ?
Any way, 6 ஆண்டுகள் பல எதிர்வினையாட்டங்களை விளையாட்டுப் போல கடந்த சாதனைக்குப் பாராட்டுக்கள். (நான் கடந்த இரு மாதங்களாகத் தான் தமிழ் பதிவங்களை வாசிக்கிறேன்.) இஸ்ரேலோடு சேர்த்து இன்னபிற விஷயங்களில் நீங்கள் என் கருத்தோடு ஒத்துப் போகிறீர்கள். அது மகிழ்ச்சி தருகிறது. தர்க்க சாஸ்திரம் குறித்து மேலும் நீங்கள் எழுதலாம் என்பது என் கருத்து. வாழிய நலம்.
@பதிவுலக "மாமேதை" பணங்காட்டு நரி
இந்தப்பெயரில் இருக்கும் திமிரைவிடவா எனக்கு திமிர் இருந்துவிடப்போகிறது ?
ஜாதித்திமிர் பற்றி ஜாதிவெறி 'நரி'களிடம் பேசுவதில் பிரயோசனம் இல்லை.
எனக்கு மதத்திமிர் உள்ளதா என்றால்...ஆம், உள்ளது என்பேன். என் மதம், இந்துமதம். அது உலகில் உள்ள எந்த மதத்துக்கும் குறைவானது அல்ல. அதில் எனக்கு பெருமை அதிகம் தான்.
இதைச் சொல்ல எந்த நாய், நரி, மசுராண்டிக்கும் நான் பயப்படத் தேவையில்லை.
best wishes
//// இந்தப்பெயரில் இருக்கும் திமிரைவிடவா எனக்கு திமிர் இருந்துவிடப்போகிறது ? /////
இந்த பேரு எதுக்கு வைச்சேன் தெரியுமா ...,அறிவாளி போல கண்ட அடாசுகளை எழுதும் ஒரு சில பதிவர்களை கலாய்கத்தான் ...,
//// ஜாதித்திமிர் பற்றி ஜாதிவெறி 'நரி'களிடம் பேசுவதில் பிரயோசனம் இல்லை///
இதுக்கு பேரு தான் விளக்கெண்ணை தனமா யோசிச்சி உங்களுக்கு கொமட்டி கிட்டு வந்து அப்புறம் அதையே வாந்தி எடுத்துட்டு ..,அதையே திரும்ப திங்கறது ...,
//////// எனக்கு மதத்திமிர் உள்ளதா என்றால்...ஆம், உள்ளது என்பேன். என் மதம், இந்துமதம். அது உலகில் உள்ள எந்த மதத்துக்கும் குறைவானது அல்ல. அதில் எனக்கு பெருமை அதிகம் தான். ////
உன் பெருமைய போய் ஒரு சாக்கடையில போடு ...,
/////அது உலகில் உள்ள எந்த மதத்துக்கும் குறைவானது அல்ல//////
வஜ்ரா இப்போ என்ன சொல்ல வரே ....,
////// இதைச் சொல்ல எந்த நாய், நரி, மசுராண்டிக்கும் நான் பயப்படத் தேவையில்லை ////
அது தான் வாந்தி எடுத்து வச்சிருக்கியே ...,இதை சொல்ல நான் எந்த மசுராண்டிக்கும் நான் பயப்படத் தேவையில்லை
யோவ் பட்டா பட்டி ...,
நான் கம்யூனிஸ்ட் ஆம் யா ........,ஹா ஹா ஹா ஹா
//
அப்போ பதிவுலகை சனியன் புடிச்சு ஆறு ஆண்டுகள் ஆகுதுன்னு சொல்லு..................:-(
//
சீக்கு புடிச்ச பதிவுலகத்துல ஆறு வருசமா மருந்து கொடுத்துட்டு இருக்கார் என்று கூட சொல்லலாம்.
இந்த பட்டா பட்டி, நாடா ஜட்டி, பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி... எல்லாம் சமீபத்தில் ஐயர் வெச்சு தாலிகட்டிய பகுத்தறிவுவாதி மற்றும் அந்த பகுத்தறிவுவாதியின் வால்ரா ச்சீ ஜால்ரா கோஷ்டி போல் தெரிகிறது.
உடம்பில் உள்ள ஒன்பது ஓட்டைகளில் ஆப்பு வைத்தும் அவிங்களுக்கு லூஸ் மோஷன் நிக்கவேயில்லை. பயங்கரமான பகுத்தறிவு இன்ஃபெக்ஷன் ஆயிப்போயிருச்சு.
சிக்ஸர் அடித்துள்ளீர்கள். இன்னமும் மென்மேலும் சிக்ஸர் அடிக்க வாழ்த்துக்கள்.
Post a Comment