வினவின் இப்பதிவை முதலில் பாருங்கள்.
ஜெயமோகனின் சிறுகதை மீதான விமர்சனம்: இட்லருக்கும் இரங்க வேண்டுமோ?
சுபமங்களா எனும் பத்திரிகையின் ஏப்ரல் 1991 இதழில் ஜெயமோகன் என்பவர் எழுதிய ஒரு சிறுகதை வெளியாகியிருக்கிறது. அதன் சுருக்கம் வருமாறு:
பல்கலைக்கழக விஞ்ஞான கருத்தரங்கில் நுழைய முனைந்த ஒரு வயதான நம்பூதிரியை நெட்டித் தள்ளுகிறான் வாயிற்காவலன். தடுமாறிக் கீழே விழுந்தபோதிலும் ஏதும் நடவாதது போல எழுந்து நடந்த அந்த நம்பூதிரியின் கம்பீரத்தில் மனதைப் பறிகொடுத்து அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார் ஜெயமோகன்.
விஞ்ஞானிகள் எனப்படுவோர் தன்னையும் தன் தத்துவத்தையும் உதாசீனம் செய்வதாகவும், அதற்குக் காரணம் அவர்களுக்கெல்லாம் மூளை இல்லை என்றும், பரிசுத்தமான ஆரிய மூளையை மனிதகுலம் இழந்து வருவதுதான் இதற்கெல்லாம் அடிப்படை என்றும் கூறுகிறார் நம்பூதிரி. இந்த உண்மையை உணர்ந்து இனக்கலப்பை எதிர்த்த இட்லரைக் கொன்று விட்டார்களே என்று வருத்தப்படுகிறார். பிறகு தனது தத்துவத்தை விளக்குகிறார்.
“பிரபஞ்ச செயல்கள் அனைத்துமே குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. அந்தக் கால இடைவெளியானது மாறாதது… இதை நமது முன்னோர்கள் ‘ஏகம்’ என்றும் ‘பிரணவம்’ என்றும் அழைத்தனர். காலப் பெருவெளியில் நமது பிரக்ஞை மட்டும் சுழன்று சுழன்று வருகிறது. பழைய ஞாபகங்கள் நம் அடிமனதில் தேங்கியுள்ளன. தியானத்தால் அதை மீட்க முடியும். நீட்சேக்கு நிகழ்ந்ததும் அதுதான்.”
இந்தச் சுழற்சித் தத்துவம் தவறு என்று ஐன்ஸ்டீனை ஆதாரம் காட்டி நம்பூதிரியிடம் வாதாடுகிறார் ஜெயமோகன். “பிரம்ம சங்கியாவை (சுழற்சித் தத்துவத்தை) தவறு என்று சொல்ல நீ யாரடா? உன் ஐன்ஸ்டீன் என் மயிருக்குச் சமம். பார்க்கிறேன் அதையும்” என்று சவால் விட்டுவிட்டுப் போகிறார் நம்பூதிரி. ஒரே மாதத்தில் ஐன்ஸ்டீனைப் படித்து முடித்துவிட்டு மீண்டும் வருகிறார். ஐன்ஸ்டீனின் தத்துவமும் சுழற்சித் தத்துவமும் ஒன்றுதான் என்றும் ஐன்ஸ்டீனும் ஆரிய இனத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்றும் விளக்குகிறார்.
எரிச்சலடைந்த ஜெயமோகன் அணுக் கொள்கையை விளக்கி மீண்டும் நம்பூதிரியை மறுக்கிறார். ஒரே மாதத்தில் அதையும் முடித்துவிட்டு வந்து அதுவும் சுழற்சித் தத்துவத்தில் அடங்குவதாக மகிழ்ச்சியுடன் விளக்குகிறார் நம்பூதிரி. ஆத்திரம் கொண்ட ஜெயமோகன் அவரை நெட்டித் தள்ளித் திட்டி அனுப்புகிறார்.
இதன்பிறகுதான் துவங்குகிறது ஜெயமோகனின் உள்மனப் போராட்டம். “என் தந்தைக்கு நிகரான வயோதிகரைப் புரட்டித் தள்ளியிருக்கிறேன். ஒரு வகையில் கபடு சூதற்ற குழந்தை அவர். மாபெரும் அறிவாளி… நான் ஏன் அவரிடம் இரக்கமே காட்டவில்லை? ஒரு சிறு திசை திரும்பல் மூலம் என்னுடைய லட்சியங்கள் கோட்பாடுகள் அனைத்தும் பைத்தியக்காரத்தனமாக ஆகிவிடலாம் என்ற அச்சம்தான் காரணமோ?” என்று அலைபாய்கிறார். பிறகு நீண்ட நாட்களுக்குப் பின் மருந்தும் மலமும் நாறும் ஆஸ்பத்திரியல் கிழிந்த பாயில் கிடக்கும் நம்பூதிரியைக் கண்டு இரங்குகிறார். அவரது தத்துவம் சரியானதென்று நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும் தான் அவரது சீடனாகிவிட்டதாகவும் பொய்சொல்லி அவரைத் தேற்ற முனைகிறார். ஆனால், எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லாத நம்பூதிரி தன் வாழ்வே வீணாகிவிட்டதாகப் பிரலாபிக்கிறார்.
பழமைக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சக்திகளையெல்லாம் தார்மீக ரீதியாக வலுவிழக்கச் செய்து கோழைகளாக்குகிறது இந்தச் சிறுகதை. வேறெந்தப் பத்திரிகையிலும் இச்சிறுகதை வெளியாகியிருந்தால் கதை வேறு. கோமல் சாமிநாதன் குறிவைக்கும் ‘அறிவு ஜீவி’ வாசகர்களைக் கொஞ்சநஞ்சம் மிச்சமிருக்கும் நம்பிக்கையையும் கைவிட்டு ‘சுழற்சி’த் தத்துவத்தில் சிக்கவைக்கும் பொறிதான் இக்கதை.
நீட்சேயும், சங்கரனும் ஒருபுறமும் ஐன்ஸ்டீனும், மார்க்ஸிசமும் ஒருபுறமுமாக நின்று தத்துவ விவாதம் நடத்தியிருந்தால், அல்லது ஜெயமோகனும் நம்பூதிரியும் தத்துவ விவாதம் மட்டும் நடத்தியிருந்தால், ‘தத்துவத்தின் மதியீனம்’ என்று நம்பூதிரியின் கோட்பாட்டை வாசகர்கள் புறந்தள்ளி விட முடியும்.
ஆனால், அந்தத் தத்துவத்தைத் தாங்கி வருபவர் ஒரு வயதான நம்பூதிரியாக இருக்கும்போது, இடைவிடாது முயன்ற நம்பூதிரியின் வீழ்ச்சிக்காக ஜெயமோகனுடன் சேர்ந்து வாசகரும் அனுதாபப்படுவதைத் தவிர வேறுவழி?
ஆனால், ஜெயமோகன் அவர்களே… தத்துவம் என்பது சூத்திரங்களாகவும் கோட்பாடுகளாகவும் நின்று வானவெளியில் மோதிக் கொண்டதாக ஏதாவது வரலாறு இருக்கிறதா? எதிரியின் தத்துவம் தூக்கி வளர்த்த தாயாக, ஆளாக்கிய தந்தையாக, ஒரே தட்டில் அமர்ந்துண்ட நண்பனாக, அறிவொளி தந்த ஆசிரியராக அல்லது நெஞ்சில் நிறைந்த காதலியாகத்தானே வந்திருக்கின்றது? வந்து கொண்டுமிருக்கின்றது? பல சந்தர்ப்பங்களில் கிழிந்த பாயில் கிடக்கும் நம்பூதிரியை விட அவல நிலையில் கிடந்தும் இவர்கள் தம் போராட்டத்தை நிறுத்துவதில்லையே. சொல்லப்போனால், நம்பூதிரி அளவுக்கு அறிவாற்றலும் இல்லாத இவர்களின் வாழ்க்கை அவலத்தின் வலிமை இன்னமும் கூடுதலாயிற்றே!
என்ன செய்வது? ஹிட்லரின் அவலத்திற்காகக் கண்ணீர் சிந்துவோமா? நம்பூதிரி ஹிட்லர் இல்லை என்பதுதானே ஜெயமோகனின் வலிமை? தனக்குத்தானே தீ வைத்துக் கொள்ளும் ‘இது நம்ம ஆளு’ பார்ப்பனத் தந்தைக்காகவும், மண்டல் எதிர்ப்பு ராஜீவ் கோஸ்வாமிக்காகவும் கண்ணீர் சிந்தச் சொல்கிறார் ஜெயமோகன். பிழைத்து எழுந்த ராஜீவ் கோஸ்வாமியின் பேட்டியை ஜெயமோகன் படித்துப் பார்க்கட்டும். ஒருவேளை நம்பூதிரி பிழைத்து எழுந்தாலும் நடக்கக் கூடியது அதுதானே!
தாக்குதலில் குரூரம், பின்வாங்குதலில் நயவஞ்சகம், தோல்வியில் அவலம் இவைதானே நிரந்தரமாக ஆளும் வர்க்கங்கள் கையாளும் உத்திகள்!
தத்துவம் என்ற மட்டத்தில் மட்டும் செயல்பட்டு வாழ்வில் வர்க்கம் கடந்த மனிதாபிமானியாக யாராவது இருந்ததாகத் தகவல் உண்டா ஆதிசங்கரன் உட்பட? தனது தத்துவத்திற்கே நேர்மையற்று, “பிரபஞ்சமே மாயை, ஆனால், எனது சோறும் துணியும் மட்டும் வியவகாரிக சத்யம்” (வியவகாரிக சத்யம்: நடைமுறை உண்மை) என்று தொந்தியைத் தடவிய கூட்டத்தின் வாரிசு தானே ஜெயமோகனின் நம்பூதிரியும்?
பல்கலைக்கழக வாயிற்காவலனோ, ஜெயமோகனோ தள்ளியவுடனே சரிந்துவிடவில்லை நம்பூதிரி. தோற்றுத் தோற்று, வயது முதிர்ந்து, உடல் தளர்ந்த பின்னர்தான் படுக்கையில் விழுந்தார். ஆனால், ஜெயமோகனோ படுக்கையில் விழுந்த நம்பூதிரியைப் பார்த்த மாத்திரத்திலேயே விழுந்து விட்டார்; வாசகர்களையும் காலை இடறிவிடுகிறார்.
ஆனால், நம்பூதிரியும் அவரது சுழற்சித் தத்துவமும் படுக்கையில் விழுந்துவிடவில்லை; எல்லா தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இப்போது டோண்டு ராகவன்.
வினவு குறிப்பிட்ட கதையை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இருந்தால் என்ன, வினவு கதை சுருக்கத்தை திரிதல் இன்றி தந்திருப்பார் என்ற நம்பிக்கையில் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.
இப்போது அதே கதையை சற்றே மீள் நோக்கு செய்வோம், ஒரே ஒரு மாறுதலுடன். அதாவது ஹிட்லருக்கு பதில் ஸ்டாலின் என வைத்துக் கொள்வோமே.
பல்கலைக்கழக விஞ்ஞான கருத்தரங்கில் நுழைய முனைந்த ஒரு வயதான நம்பூதிரியை நெட்டித் தள்ளுகிறான் வாயிற்காவலன். தடுமாறிக் கீழே விழுந்தபோதிலும் ஏதும் நடவாதது போல எழுந்து நடந்த அந்த நம்பூதிரியின் கம்பீரத்தில் மனதைப் பறிகொடுத்து அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார் ஜெயமோகன்.
விஞ்ஞானிகள் எனப்படுவோர் தன்னையும் தன் தத்துவத்தையும் உதாசீனம் செய்வதாகவும், அதற்குக் காரணம் அவர்களுக்கெல்லாம் மூளை இல்லை என்றும், பரிசுத்தமான பொதுவுடைமை மூளையை மனிதகுலம் இழந்து வருவதுதான் இதற்கெல்லாம் அடிப்படை என்றும் கூறுகிறார் நம்பூதிரி. இந்த உண்மையை உணர்ந்து இனக்கலப்பை எதிர்த்த இட்லரைக் கொன்று விட்டார்களே என்று வருத்தப்படுகிறார். பிறகு தனது தத்துவத்தை விளக்குகிறார்.
“பிரபஞ்ச செயல்கள் அனைத்துமே குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. அந்தக் கால இடைவெளியானது மாறாதது… இதை நமது முன்னோர்கள் ‘ஏகம்’ என்றும் ‘பிரணவம்’ என்றும் அழைத்தனர். காலப் பெருவெளியில் நமது பிரக்ஞை மட்டும் சுழன்று சுழன்று வருகிறது. பழைய ஞாபகங்கள் நம் அடிமனதில் தேங்கியுள்ளன. தியானத்தால் அதை மீட்க முடியும். நீட்சேக்கு நிகழ்ந்ததும் அதுதான்.”
இந்தச் சுழற்சித் தத்துவம் தவறு என்று ஐன்ஸ்டீனை ஆதாரம் காட்டி நம்பூதிரியிடம் வாதாடுகிறார் ஜெயமோகன். “பிரம்ம சங்கியாவை (சுழற்சித் தத்துவத்தை) தவறு என்று சொல்ல நீ யாரடா? உன் ஐன்ஸ்டீன் என் மயிருக்குச் சமம். பார்க்கிறேன் அதையும்” என்று சவால் விட்டுவிட்டுப் போகிறார் நம்பூதிரி. ஒரே மாதத்தில் ஐன்ஸ்டீனைப் படித்து முடித்துவிட்டு மீண்டும் வருகிறார். ஐன்ஸ்டீனின் தத்துவமும் சுழற்சித் தத்துவமும் ஒன்றுதான் என்றும் ஐன்ஸ்டீனும் கம்யூனிஸ்டே என்றுதான் இருக்க வேண்டும் என்றும் விளக்குகிறார்.
எரிச்சலடைந்த ஜெயமோகன் அணுக் கொள்கையை விளக்கி மீண்டும் நம்பூதிரியை மறுக்கிறார். ஒரே மாதத்தில் அதையும் முடித்துவிட்டு வந்து அதுவும் சுழற்சித் தத்துவத்தில் அடங்குவதாக மகிழ்ச்சியுடன் விளக்குகிறார் நம்பூதிரி. ஆத்திரம் கொண்ட ஜெயமோகன் அவரை நெட்டித் தள்ளித் திட்டி அனுப்புகிறார்.
இதன்பிறகுதான் துவங்குகிறது ஜெயமோகனின் உள்மனப் போராட்டம். “என் தந்தைக்கு நிகரான வயோதிகரைப் புரட்டித் தள்ளியிருக்கிறேன். ஒரு வகையில் கபடு சூதற்ற குழந்தை அவர். மாபெரும் அறிவாளி… நான் ஏன் அவரிடம் இரக்கமே காட்டவில்லை? ஒரு சிறு திசை திரும்பல் மூலம் என்னுடைய லட்சியங்கள் கோட்பாடுகள் அனைத்தும் பைத்தியக்காரத்தனமாக ஆகிவிடலாம் என்ற அச்சம்தான் காரணமோ?” என்று அலைபாய்கிறார். பிறகு நீண்ட நாட்களுக்குப் பின் மருந்தும் மலமும் நாறும் ஆஸ்பத்திரியல் கிழிந்த பாயில் கிடக்கும் நம்பூதிரியைக் கண்டு இரங்குகிறார். அவரது தத்துவம் சரியானதென்று நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும் தான் அவரது சீடனாகிவிட்டதாகவும் பொய்சொல்லி அவரைத் தேற்ற முனைகிறார். ஆனால், எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லாத நம்பூதிரி தன் வாழ்வே வீணாகிவிட்டதாகப் பிரலாபிக்கிறார்.
கம்யூனிச கொடுமைக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சக்திகளையெல்லாம் தார்மீக ரீதியாக வலுவிழக்கச் செய்து கோழைகளாக்குகிறது இந்தச் சிறுகதை. வேறெந்தப் பத்திரிகையிலும் இச்சிறுகதை வெளியாகியிருந்தால் கதை வேறு. கோமல் சாமிநாதன் குறிவைக்கும் ‘அறிவு ஜீவி’ வாசகர்களைக் கொஞ்சநஞ்சம் மிச்சமிருக்கும் நம்பிக்கையையும் கைவிட்டு ‘சுழற்சி’த் தத்துவத்தில் சிக்கவைக்கும் பொறிதான் இக்கதை.
அவ்வளவுதான் விஷயம். ஜெயமோகன் எதிரியாக வாதம் புரிந்தவருக்காக தனிப்பட்ட முறையில் அனுதாபப்படுகிறார். அதுவும் இக்கதையே கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது. அதை நோண்டி எடுத்துத்தான் வினவு ஜெயமோகன் ஹிட்லருக்கு ஆதரவானவர் என தனது கட்சியை நிறுவ முயலணுமா? பாவம் வினவு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
_______________________________
தீராநதி நேர்காணல்- 2006
-
எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை.
இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய
ஒரு படை...
8 hours ago
17 comments:
உளறும்போதெல்லாம் வினவை விட்டுவிட்டு, உருப்படியாக எழுதும்போது அதனை உளறல் என்பதற்கு, உள்ளுக்குள் இருக்கும் உங்களது பூணூல் பாசம்தானே காரணம் !
ஜெயமோகன் காலத்தால் தோற்கடிக்கப்பட்ட எதிர்வாதிக்காக பரிதாபப்படுவது அவரது மனித் நேயத்தையே காட்டுகிறது. அவ்வளவுதான்.
அதைப் போய் ஹிட்லர் பாசம் எனக்கூறும் வினவு ஒன்று உளறுகிறார் அல்லது அவர் ஓர் மன நோயாளி. சாய்ஸை உங்களிடமே விடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன் Said...
// //ஜெயமோகன் காலத்தால் தோற்கடிக்கப்பட்ட எதிர்வாதிக்காக பரிதாபப்படுவது அவரது மனித் நேயத்தையே காட்டுகிறது. அவ்வளவுதான். // //
அடக்கடவுளே மனிதாபிமானத்தைப்பற்றி பேசுவது டோண்டு சாரா?
என்ன செய்வது? மனிதன் என்பவன் கூட பார்ப்பானாகத்தானே இருக்க வேண்டும். (பூணூல் போட அனுமதி இல்லாத சூத்திரர்கள் மனிதர்களே அல்ல என்பதுதானே உங்கள் கூட்டத்தின் தத்துவம்).
ஹிட்லர், ஜெயமோகன், டோண்டு சார் - எல்லோர் மனசும் ஒரே மாதிரியாக சிந்திப்பது தெரிந்ததுதான்.
@அருள்
இஸ்ரவேலர்களின் ஜன்மவிரோதியான ஹிட்லர் டோண்டு ராகவனுக்கும் விரோதி என்பதை லோகமே அறியுமே. உங்களுக்குத் தெரியாதா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன் Said...
// //இஸ்ரவேலர்களின் ஜன்மவிரோதியான ஹிட்லர் டோண்டு ராகவனுக்கும் விரோதி என்பதை லோகமே அறியுமே. உங்களுக்குத் தெரியாதா?// //
"ஹிட்லர், ஜெயமோகன், டோண்டு சார் - எல்லோர் மனசும் ஒரே மாதிரியாக சிந்திப்பது தெரிந்ததுதான்" என்று நான் இனவெறி சிந்தனையைக் குறிப்பிட்டேன்.
ஹிட்லருக்கு யூதர்கள் மீது இனவெறி, இஸ்ரவேலர்களுக்கு பாலஸ்தீனர்கள் மீது இனவெறி, ஜெயமோகன் + டோண்டு சாருக்கு தமிழ்நாட்டு சூத்திரர்கள் மீது இனவெறி,
// ஹிட்லர், ஜெயமோகன், டோண்டு சார் - எல்லோர் மனசும் ஒரே மாதிரியாக சிந்திப்பது தெரிந்ததுதான்//
எந்த விதமான புரிதல்களும் இல்லாத திரு அருள் போன்றவர்களின் பின்னூட்டத்தை போடுவது வேண்டாத வேலை. உண்மையான தர்கங்களுக்கும் அறிவு சார்ந்த விளக்கங்களுக்கும் மதிப்பளிக்காத, புரியாத, வன்மத்துடன், வெறியுடன், வாய்மை சற்றும் இல்லாது விவாதிக்கும் இவரைப்போன்ற கட் அண்ட் பேஸ்டு மற்றும் நவீன வெறுப்பாளர்களுக்கு தேவைபடுவது ஒரு மேடை மட்டுமே. அதை இங்கே அனுமதிப்பது நாஜிகளும் ஒரு கட்சியை சார்ந்தவர்கள்தானே என்று நினைத்த அவர்களை வெறுப்பை கக்க அனுமதித்து பின்னர் அவர்களாலேயே அழிந்த ஜனநாயக ஊடகங்களைபோல ஆகிவிடக்கூடாது!
ஆனால் ஒரே நல்ல விடயம், இந்த விடம் கக்கிகளுக்கு தமிழர்கள் மத்தியில் இடம் இல்லாதது மட்டுமே. ஒரு ஓரத்தில் அதுவும் தன் சொந்த ஜாதியின் வெறித்தன ஆட்டத்திற்கு சாமரம் வீசிவிட்டு, அதையும் மறைத்து, சமத்துவம் பேசுகிறேன் என்று புளுகும் இவர்களுக்கு ஒரு மேடை அமைப்பது, நெல்லை அழிக்கும் எலிகளுக்கு மனித உணவு பராமரிப்பின் முக்கியத்துவத்தை பேச வாய்ப்பு கொடுப்பதை போன்றதுதான்!
ஞாயமாக, நாணயமாக, சார்பில்லாமல், எல்லா மத, எல்லா தெய்வ, எல்லா ஜாதி மற்றும் சடங்கு எதிர்ப்பு செய்யும் சிலர் இந்த வலை தளத்தில் பேசுவதற்கும், இவரைபோன்ற முகமூடி அணிந்த ஜாதி வெறியர்கள் பேசுவதற்கும் வித்தியாசங்கள் பல பல.!
(நாசிகளின் வெறுப்பு பதிப்புகளை மற்றும் அவர்கள் கையாண்ட யூத வெறுப்பு மற்றும் துவேஷ பிரச்சாரங்களை மிக சுவாரசியமாக
படித்துக்கொண்டிருக்கிறேன். ஒன்று புரிகிறது. திரு அருள் போன்றவர்கள் இப்பொழுது தோன்றவில்லை. இவர்களின் ஆணிவேர் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே உதித்துவிட்டது. அந்த துவேஷ எழுத்துக்களை பற்றி இன்னும் எழுதுகிறேன்)
//ஹிட்லருக்கு யூதர்கள் மீது இனவெறி, இஸ்ரவேலர்களுக்கு பாலஸ்தீனர்கள் மீது இனவெறி, //
வன்னியர்களுக்கு தலித்துகளின் மேல் இனவெறி! அதை மறைக்க திரு அருள் போன்றவர்கள் ஊதி விடுவதோ பார்பனர்களின் மேல் இனவெறி!
//(பூணூல் போட அனுமதி இல்லாத சூத்திரர்கள் மனிதர்களே அல்ல என்பதுதானே உங்கள் கூட்டத்தின் தத்துவம்).// அருளு, பார்ப்பன துவேஷமும் ஜாதி வெறியும் கண்ணை மறைப்பதால் உங்கள் இஷ்டத்திற்கு ஏதாவது உளராதீர்கள். ஒரு இனத்தை அடியோடு அழிக்க் நினைப்பவர் ஹிட்லர் என்றால் தமிழகத்தில் பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று நாள் தோறும் பார்ப்பனர்கெதிரான விஷ விதைகளை விதைத்து அடுத்த பத்திருபது வருடத்தில் பார்ப்பனர்களுக்கெதிராக மிகப்பெரிய இன வன்முறை நடக்க அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் நீங்களும் உங்கள் பார்ப்பன எதிர்ப்பு கூட்டமும் ஹிட்லர்கள் தானே!
சமீபத்தில் அந்த கதையை வாசித்தவன் என்ற வகையில் சொல்கிறேன்.
அந்த கதையில் வினவு கொடுக்கும் விளக்கம் எனக்கு உடன்பாடில்லை.
அவர் சொல்ல விளைந்தது அந்த ஆத்மா நிம்மதியாக உயிர் விடட்டும் என்றே.
இந்த ஒரு விசயத்தில் வினவு பதிவு அவ்வளவு சரியாக இல்லை என்பது என் கருத்து
"NO" அய்யா... எங்கேயோ போயிட்டீங்க.
உங்க ஞானம் எனக்கு பிடிபடாது. விட்டுடுங்கோ!
//
உங்க ஞானம் எனக்கு பிடிபடாது. விட்டுடுங்கோ!
//
திராவிடத்துக்கும் நாஜிசத்துக்கும் வேறுபாடு பூகோளத்தில் மட்டும் தான்.
இந்த ஞானத்தை தெரிந்தும் தெரியாமல் இருப்பது போல காட்டுவதில் தான் அவருக்கு இலாபம் உள்ளது. ஆகவே அந்த ஞானம் அவருக்கு பிடிபடவில்லையாம்.
2G Spectrum Scam of Rs. 1.77 Trillion - Is it "the Mother of All Scams" or "The Biggest Scam in the History of Mankind"?
உளறினால் தான் வினவு.
தெளிவாகப் பேசிவிட்டால் அது இனத்துரோகம், கம்யூனிஸத் துரோகம்.
வீட்டில் வேலைவெட்டி இல்லாதவர்கள், வீட்டில் தண்ணி தெளித்துவிடப்பட்டவர்கள், பி.ஏ ஆங்கிலத்தை 5 ஆண்டுகளாக அரியர்ஸ் வைத்து இன்னும் முடிக்காதவர்கள், சரக்கு அடிக்கச் சில்லரை தேற்றுவதற்காக ஒரு மாங்கா மடையனை எதிர்ப்பார்த்து டீ க்கடையில் உட்கார்ந்திருக்கும் கலக்டர் உத்யோகஸ்தர்கள் என்று தமிழ்நாட்டில் எங்கும் வியாபித்திருக்கும் வெட்டிப்பயல்கள் அனைவரும் சேர்ந்து கூடாரம் அமைத்தால் அதன் பெயர் வினவு தளம் தான்.
இவர்கள் தன் வீட்டில் நடக்கும் ஜாதி ஏற்றத்தாழ்வைக்கூட தட்டிக் கேட்க முடியாத தண்டச் சோறுகள். இவர்கள் வாயைத் திறந்தாலே உளறல் என்று மட்டுமே அர்த்தம்.
// ஹிட்லருக்கு யூதர்கள் மீது இனவெறி, இஸ்ரவேலர்களுக்கு பாலஸ்தீனர்கள் மீது இனவெறி, ஜெயமோகன் + டோண்டு சாருக்கு தமிழ்நாட்டு சூத்திரர்கள் மீது இனவெறி, //
சூத்திரர்கள் மட்டுமில்லை - பிராமணத்தை எதிர்க்கும் எவர் மீதும் இனவெறி தான்...
////(பூணூல் போட அனுமதி இல்லாத சூத்திரர்கள் மனிதர்களே அல்ல என்பதுதானே உங்கள் கூட்டத்தின் தத்துவம்).// அருளு, பார்ப்பன துவேஷமும் ஜாதி வெறியும் கண்ணை மறைப்பதால் உங்கள் இஷ்டத்திற்கு ஏதாவது உளராதீர்கள். ஒரு இனத்தை அடியோடு அழிக்க் நினைப்பவர் ஹிட்லர் என்றால் தமிழகத்தில் பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று நாள் தோறும் பார்ப்பனர்கெதிரான விஷ விதைகளை விதைத்து அடுத்த பத்திருபது வருடத்தில் பார்ப்பனர்களுக்கெதிராக மிகப்பெரிய இன வன்முறை நடக்க அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் நீங்களும் உங்கள் பார்ப்பன எதிர்ப்பு கூட்டமும் ஹிட்லர்கள் தானே!/// அருளு, இதுக்கு பதில் சொல்லலியே!
//
// ஹிட்லருக்கு யூதர்கள் மீது இனவெறி, இஸ்ரவேலர்களுக்கு பாலஸ்தீனர்கள் மீது இனவெறி, ஜெயமோகன் + டோண்டு சாருக்கு தமிழ்நாட்டு சூத்திரர்கள் மீது இனவெறி, //
சூத்திரர்கள் மட்டுமில்லை - பிராமணத்தை எதிர்க்கும் எவர் மீதும் இனவெறி தான்...
//
இந்த வர்மாவுக்கு ஷர்மா, குப்தா, தாஸ் மீது காண்டு போலிருக்கிறது.
அருளுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தவேண்டியிருக்கு. சூத்திரர்கள் என்றால் யார் ? வன்னியர்கள் சூத்திரர்கள் என்றால் அவர் வீட்டிலேயே அவருக்கு அடி விழும்.
சும்மா, அரசியல் ஸ்டண்டுக்காக எஸ்.சி/எஸ்.டி க்களை கூட்டு சேர்த்துக்கொள்ளும் வன்னியர் ஜாதித் தலைவர்களை நம்புபவர்கள் என்றைக்குமே ஜாதிவெறி பற்றிப் பேச அருகதையில்லாதவர்கள் என்பது என் கருத்து.
Post a Comment