எனது சொந்தத் தொழிலா அல்லது சம்பளத்துக்கு வேலையா என்னும் பதிவில் நான் இவ்வாறெல்லாம் குறிப்பிட்டிருந்தேன்.
ஒரு சராசரி இந்தியக் குடிமகன் மாத சம்பள வேலையைத்தான் முதலில் விரும்புகிறான் என்பது நான் அறிந்தவரையில் நிலை. அதிலும் அரசு வேலை என்றால் டபுள் ஓக்கே. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. முதலில் மின்வாரியத்தில் இளம் பொறியாளர் வேலைக்குத்தான் மனு போட்டேன். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது. அந்த வேலை கிடைக்கவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு போட்டிருந்தால் கிடைத்திருக்கக்கூடும். ஆனால் அப்போது என் அதிர்ஷ்டம் நான் கடைசி ஆண்டு பரீட்சையில் கம்பார்ட்மெண்ட் வாங்கினேன். நிஜமாகவே எனது நல்வினைப்பயனே அது. இல்லாவிடில் ஜெர்மன் படித்திருக்க மாட்டேன். பின்னால் பிரெஞ்சு மற்றும் இத்தாலியன் படித்திருக்க மாட்டேன். ஆனால் இப்பதிவு அதைப் பற்றி இல்லை.
நான் சொல்ல வந்தது என்னவென்றால், எனது டிஃபால்ட் விருப்பம் சம்பளத்துடன் கூடிய வேலைக்குத்தான். அதில் 23 ஆண்டுகள் கழித்த பிறகே இப்போதைய சொந்த தொழிலுக்கு வந்தேன்.
நான் மேலே கூறியது சம்பளத்துக்கு வேலை செய்வோம் என்னும் நிலையை வைத்திருப்பவர்கள் பற்றி. அவர்கள் இப்போதைக்கு ஒரு ஓரமாக நிறுத்தி வைப்போம், தேவைப்பட்டால் திரும்ப அழைத்துக் கொள்வோம்.
அவுட்சோர்சிங் என்று எதை குறிப்பிடுகிறார்கள்? இந்த அவுட் சோர்சிங் எப்போது தேவைப்படுகிறது?
சில நிறுவனங்கள் தனது எல்லா வேலைகளையும் தனது சொந்த வேலைக்காரர்களையே வைத்துச் செய்யும். உதாரணத்துக்கு தமிழக மின்வாரியம் சப் ஸ்டேஷன்களை உருவாக்க என்றே தனி டிவிஷன் வைத்திருக்கிறது . மின்மாற்றிகளை நிறுவவும் தனி செக்ஷன்கள் உள்ளன. மராமத்து வேலைகளுக்கெனவும் அதன் சொந்த எலெக்ட்ரீஷியன்கள், வைர்மென், உதவியாளர்கள், ஃபோர்மன், பொறியாளர்கள் என் பெரிய குழுவே உள்ளது. ஆனால் அம்மாதிரியான அமைப்புகள் குறைவுதான். இங்கு கூட மஸ்டர் ரோல் வைத்து அவ்வப்போது வெளி ஆட்களை சில குறிப்பிட்ட காலத்துக்கு எடுக்கிறார்கள். அதில் கிளம்பும் ஊழல்கள் வேறு விஷயம், அவை இப்போதைக்கு பதிவின் பொருள் அல்ல.
ஆனால் அவுட்சோர்சிங் செய்வதுதான் இப்போது அதிகம் நடக்கிறது. அது சரி அவுட்சோர்சிங் என்றால் என்ன? அதை விளக்கு என முரளி மனோகர் கேட்பதால் அதை முதலில் விளக்குகிறேன், ஒரு உதாரணத்துடன்.
மா ஃப்வா (Ma Foi) என்று ஒரு நிறுவனம் இருக்கிறது. அதன் முக்கிய வேலை வேலைக்கான நேர்காணல்களை நடத்துவதே. இது என்ன கூத்து என்றால், அது அப்படித்தான். இப்போதெல்லாம் பல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான வேலையாளிகளை தாங்களே நேர்காணல் செய்வதில்லை, அதை மா ஃப்வா போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறார்கள். தங்களது தேவைகள் என்ன என்பதை அவர்கள் துல்லியமாக பட்டியல்ட வேண்டும், அல்லது மா ஃப்வாவே தனது படிவங்களை அவர்கள் முழுமையாக நிரப்பச் செய்வதிலிருந்து கண்டு கொள்கிறது. ஆக, பெரிய தலைவலி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மிச்சம், அதே சமயம் மா ஃப்வாவுக்கும் செம துட்டு. எல்லோருக்கும் சந்தோஷம்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தொழில் செய்யும் மருத்துவர்கள் தமது நோயாளிகளை பரிசோதிக்கும்போது தாங்கள் கண்டறிந்தவர்றை ஒலிப்பேழையில் ரெகார்ட் செய்து, அதை ஆடியோ கோப்பாக்கி இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட் சோர்சிங் செய்கிறார்கள். கடிகார நேர வேறுபாடுகளால் அங்கு மாலை 8 மணி என்றால் இங்கு காலையாகியிருக்கும் (உத்தேசமாக கூறுகிறேன்). அங்கு அவர்கள் ரெஸ்ட் எடுத்து கொள்ள இங்கு நம்மவர்கள் வேலை ஆரம்பிக்கிறது. ஆடியோ கோப்புகளை கேட்டு அதில் சொன்னவற்றை இங்கு எழுத்தில் ஏற்றுகிறார்கள். அங்கு மீண்டும் மருத்துவர்கள் வேலைக்கு வரும்போது முந்தைய நாளின் நிகழ்வுகள் நன்கு பதிவாகியிருக்கும், அவர்கள் மேலே தங்கள் வேலையை கவனிக்கலாம். இதுதான் மெடிகல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன், அம்புடுத்தேன்.
இன்னும் சில வேலைகளுக்கு மேல் நாட்டவர் வேலை நேரத்தின்போது நாமும் வேலை செய்ய வேண்டியிருக்கும், முக்கிய உதாரணம் கால் செண்டர்கள். ஆகவே மாலைக்கு மேல் வேலை ஆரம்பித்து, விடியற்காலை வரை வேலை செய்பவர்கள் இங்கு பெருகி விட்டார்கள். அமெரிக்க நிறுவனங்கள் விற்பனைக்கு பிந்தைய சேவை விசாரணைகளுக்காக இந்த கால் செண்டர்களை பயன் படுத்துவது அவற்றின் பல பயன்களில் ஒன்று. இது ஏன் என்றால், மேல் நாட்டினரது தொழிலாளர்களது சம்பளம் ஆகியவற்றைக் கொடுத்து வேலை வாங்குவதை விட, இவ்வாறு அவுட்சோர்சிங் செய்வது மிகவும் மலிவானது என்ற நிஜமே காரணம்.
இப்போது வந்து ஒபாமா அவுட்சோர்சிங்கை எடுத்து விடுவாரா என்றால், என்னைப் பொருத்தவரை அது அவ்வளவு சுலபம் இல்லை என்றுதான் கூறுவேன்.
அது சரி, அவுட்சோர்சிங் என்பது புது விஷயமா என்றால் அதுவும் இல்லைதான். சில லட்சம் பிரிட்டானியர்கள் கோடிக்கணக்கான மக்களை உலகெங்கிலும் எவ்வாறு தம் வசம் வைத்திருந்தனர் என்பதற்கு காரணமே அவுட்சோர்சிங்தான். முக்கிய பொறுப்புகளில் தாங்கள் இருந்து கொண்டு தமக்குக் கீழ் உள்ளூர் மக்களை பல நிலையில் வேலைகெடுத்து காலனி ஆதிக்கத்தை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நடத்தினார்கள். அவ்வாறு அவர்களிடம் வேலைக்கு சேர்ந்தவர்களது பொருளாதார நிலையும் சராசரிக்கும் அதிகமாகவே இருந்த்து என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
[செய்யவே கூடாத அவுட்சோர்சிங் என்னவென்று பார்த்தால் நிறுவனங்களுக்கு தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு வெளியிலிருந்து வரும் நிபுணர்கள் நிறுவனத்தின் எல்லா இடங்களுக்கும் சென்று, அவதானித்து பிறகே முத்திரை இடவேண்டும். ஆனால் நடப்பது என்னவென்றால், அவர்கள் நிறுவனத்தின் உயரதிகாரிகளுடன் முக்கிய டிஸ்கஷன் செய்து (லஞ்சப்பணம் எவ்வளவு), அவதானிக்கும் வேலையை செய்யவே செய்யாது, முத்திரை இடும் வேலையை கூட அந்த நிறுவனத்தின் பியூனிடம் விடும் அவுட்சோர்சிங்கைத்தான் நான் குறிப்பிடுகிறேன்].
அவுட்சோர்சிங் மிகவும் முன்னதாகவே வந்த துறைகளில் முக்கியமானது மொழிபெயர்ப்புத் துறை. நான் வேலை தேடிய எழுபதுகளில் முழுநேர மொழிபெயர்பாளார்களது விண்ணப்பங்களைக் கோரி பல விளம்பரங்கள் தனியார் துறையிலும் பொதுத் துறைகளிலும் வந்துள்ளன. ஆனால் இப்போது அவற்றை பார்ப்பது அபூர்வம். ஏனெனில் முழு நேர மொழிபெயர்ப்பாளர் என்பது தேவையற்ற செலவு என்பதை கண்டு கொண்டனர். மொழிபெயர்ப்பு எப்போதுமே தேவைப்படும் எனக்கூற முடியாது. ஆகவே அதற்காக ஒரு முழுநேர ஊழியரை ஏன் நியமிக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய சிந்தனை.
தேவையான போது ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக் கொண்டோமா பணம் கொடுத்தோமா அத்துடன் அப்போதைக்கு அவரை மறந்தாமோ என்ற நிலைதான் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. மொழிபெயர்ப்பாளருக்கும் அது ஓக்கேதான். இவ்வாறு பல வாடிக்கையாளர்களுக்காக வேலை செய்வதால் வேலை சவால்கள் நிறைந்து சுவாரசியமாக உள்ளது என்பது என் போன்றவர்களுக்கு போனஸ். கூடவே வேலை நேரத்தில் சுதந்திரம். பகலில் தூங்கினால் ஏண்டா பாவி என்று கேட்க ஆள் இல்லை (துபாஷியாக போகும் தருணங்களைத் தவிர்த்து). மகள், மெட்டி ஒலி, முந்தானை முடிச்சு, நாதஸ்வரம் ஆகிய சீரியல்களை பார்த்துக் கொண்டு, விளம்பர இடைவெளியில் மட்டும் வேலை செய்தாலும் வேலை கொடுத்தவனுக்கு அது தெரியவா போகிறது? அவனது வேலை அவனுக்கு டெட்லைனுக்குள் போனால் போதாதா, அதையும் நாங்கள் மார்ஜின் எல்லாம் தாராளமாகக் கொடுத்துத்தான் ஃபிக்ஸ் செய்வோமில்ல.
ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால், என் வீட்டம்மா நான் என்னமோ கணினி கேம்ஸ் விளையாடுகிறேன் என திட்டவட்டமாக நம்புகிறார் போல (ஆமாவா என நான் அவரை இதுவரை கேட்கவில்லை, ஆமாம் என்றால் முகத்தை எங்கு போய் வைத்துக் கொள்வதாம்)? ஆகவே அடிக்கடி கணினியில் மும்முரமாக இருக்கும் என்னை கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றை வாங்கி வருமாறு அனுப்பி விடுகிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
10 hours ago
10 comments:
Dondu Sir, Happy Deepavali to you and your family.
நன்றி கிருஷ்ணன். உங்களுக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முதல் முறையாக உங்கள் பதிவுக்கு வருகிறேன். என் போன்ற இளையவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இங்கே இருக்கிறது. பொறுமையாக வாசிகக் வேண்டும்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
அடிக்கடி கணினியில் மும்முரமாக இருக்கும் என்னை கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றை வாங்கி வருமாறு அனுப்பி விடுகிறார்.//
:))
நல்ல பல தகவல்கள்.
good
post.mamikku thozhil ragasiam theriyatha.carry on with ur thiruvilayattugal.
deepavali vazhthukkal for u and ur family
பதிவுலகில் கூட அவுட் சோர்சிங் கொண்டு வரலாம்.
பிசியாக இருக்கும் பதிவர்கள் என்னிடம் ஆர்டர் (SLA) கொடுத்தால் நான் அவர்கள் சார்பில் /பெயரில் பின்னூட்டம் இட்டு தருகிறேன்.
WE PROCESS YOU PROFIT
Vanakkam Dondu sir,
have a doubt; nowadays lot of autmoate translation software available in market, so still manual translations are hot and effective in market? I am aware that mistakes are very much possible software translation, but just checking.
Otherwise, happy Deepavali.
Essex Siva
@Essex Siva
மஷின் ட்ரான்ஸ்லேஷன் பற்றி நான் இட்ட இந்த ஆங்கிலப் பதிவு உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் என நினைக்கிறேன், பார்க்க: http://raghtransint.blogspot.com/2009/08/fun-with-machine-translation-party.html
அதில் சுட்டப்பட்டுள்ள ப்ரோஸ் ஃபாரம் சர்ச்சையையும் பார்த்து விடுங்களேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//http://raghtransint.blogspot.com/2009/08/fun-with-machine-translation-party.html//
நல்ல காமடி
டோண்டு சார்,
நீங்கள் காட்டிய சுட்டியை பார்த்தேன்...சரிதான்...ஆனால் எதிர்காலத்தில்...போக போக பார்ப்போம்...
உங்களின் ஒரு மறுபதிவு ஜெயமொகன் website-ல் பார்த்தேன் ஒப்பீடு - ஜப்பான் அணுகுண்டு, யூத படுகொலைகள்.
ஜெயமொகனின் பார்வை, அவர் சொன்னது பொல, கீழை தேசத்து, முதல் பார்வை...இங்கிலாது வந்த புதிதில், BBC programme - History channel பார்க்கும் போது எனக்குக்கூட அப்படித்தான் முதலில் பட்டது.
அப்புறம்தான் இந்த ஓப்பீடே தவறு என்று புரிந்தது...ஜப்பானியர்கள் Germany, Italy போன்று சரணடய போவதில்லை என்று அமரிக்கர்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது...
கண்டிப்பாய் அதிக உயிர் சேதமில்லாமல், வெற்றி கிடைக்க போவதில்லை என...
மேலும், யூதர்கள், அந்த சமயத்தில் (பெரும்பாலும்) just sheeps in slaugher house ஜப்பானியர்களோ அப்படி இல்லை...in fact, உலகில் முதல் தற்கொலை படை, ஜப்பானிய விமானப்படைதான்...நிறைய சொல்லிக்கொண்டே பொகலாம்...
தவிர, உங்களின் யூதபாசம் bit intriguing!
நீங்கள் BBCயின் Nazis- A warning from History, Auschwitz - The Nazis & The final solution....பார்த்திருக்கிறிர்களா?
Austiwitz கண்டிப்பாய் ஓரு தடவை போய் பார்த்துவிட்டு வர வேண்டும்..
(எழுத்து பிழை இருப்பின் மன்னிக்கவும், அடுத்த தடவை திருத்திக்கொள்கிறென்!)
Essex சிவா.
Post a Comment