கிட்டத்தட்ட எல்லா பதிவர்களும் இது பற்றி பதிவு போட்டு விட்டபடியாலும், எனக்கும் இது சம்பந்தமாக சொல்ல வேண்டிய விஷயங்கள் இருப்பதாலும் நானும் இந்த விஷயத்துக்காக ஒரு பதிவு போட்டு விடுகிறேன்.
முதலிலேயே ஒன்றை தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் இந்த திருமணமின்றி சேர்ந்து வாழும் கான்சப்டை ஒத்துக் கொள்ளவில்லை. ஏன் ஒத்துக் கொள்ளவில்லை என்பதற்குத்தான் கீழே வரும் வரிகளை தருகிறேன்.
என்னதான் நாம் வாய்கிழிய பென்ணியம் எனப் பேசினால் நமது இந்திய சமூகத்தின் செட்டிங்ஸ் ஆண்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன. ஆகவே சேர்ந்து வாழலாம், மன வேற்றுமை வந்தால் நண்பர்களாக் பாதிப்பு ஏதும் இன்றி பிரிந்து விடலாம் என்பதெல்லாம் கேட்க நன்றாகத்தான் உள்ளன. ஆனால் நடைமுறையில்? பாதிப்பு ஆணுக்கு அதிகம் இல்லை. சம்ப்ந்தப்பட்ட பெண்ணுக்குத்தான் அதிகம். அம்மாதிரி சேர்ந்து வாழும் ஜோடிகளுக்கு வரும் எதிர்ப்பு சுற்றிலும் உள்ள மனிதர்களால் அந்த ஜோடியில் உள்ள பெண்ணுக்கு எதிராகத்தான் காட்டப்படுகிறது.
இன்னும் ஒரு விஷயம் உடற்கூறு. ஆண் கர்ப்பம் அடைவதில்லை, பெண் கருவுறுகிறாள். இரண்டு மூன்று பிரசவங்களுக்கு பிறகு அவள் உடற்கட்டு குலைகிறது. ஆகவே அவளுடன் சேர்ந்து வாழும் ஆணுக்கு அவள் மேல் ஈர்ப்பு குறைந்தால், பேசாமல் கழண்டு கொள்ள முடிகிறது. இதுவே சட்டபூர்வமான திருமணமாக இருந்தால் பெண்ணுக்கு எல்லா சட்டப் பாதுகாப்புகளும் உண்டு. ஆகவே கனம் இல்லாத விஷயங்களுக்கெல்லாம் சட்டபூர்வமான திருமண பந்தம் உடைக்கப்படுவதில்லை.
சேர்ந்து வாழும் ஜோடியில், பெண்ணுக்கு ஏற்படும் மேலே குறிப்பிட்ட பலவீனங்களால் காலப்போக்கில் அவள் எங்கே ஆண் தன்னை விட்டு பிரிந்து விடுவானோ என்னும் பயத்திலேயே அவன் எள் என்பதற்குள் என்ணையாக நிற்கும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதில் இருக்கும் விதிவிலக்குகளில் பார்த்தால் ஒன்று அப்பெண் மிகுந்த புத்திசாலியாக இருந்து தன் பலவீனங்களை மறைத்து நடிக்க வேண்டும், அல்லது ஆணுக்கும் சில உடல்நலக்குறைவு ஏதேனும் வந்திருக்கலாம், அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட காரணங்களாக இருக்கலாம்.
நான் கூற வந்ததே சேர்ந்து வாழ்வதில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம், அவற்றால் பென்ணுக்குத்தான் பாதிப்பு அதிகம் என்பதுதான். அவை எல்லாம் முதலில் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அவற்றை கவனத்தில் கொள்வதே புத்திசாலித்தனம்.
சேர்ந்து வாழ்வது, பிரிவது, அந்த உறவில் பெற்ற குழந்தைகளை பங்கிடுவது, பிறகு வேறு துணையை நாடுவது ஆகிய விஷயங்கள் இந்தியாவில் இன்னும் சகஜமாக வரவில்லை. அவ்வளவுதான். ஆகையால், பெண்ணே! ஜாக்கிரதையாக இரு. இப்போதைக்கு திருமணம் இன்றி சேர்ந்து வாழ ஒத்துக் கொள்ளாதே. பாதிப்பு உனக்குத்தான் அதிகம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சைவ சித்தாந்த அறிமுக வகுப்புகள்
-
சைவசித்தாந்த அறிமுக வகுப்புகளை நடத்த தகுதியான ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது
வணக்கத்திற்குரிய சாந்திகுமார அடிகளைப் பற்றி அறிந்துகொண்டோம். சைவசித்தாந்தம்
ஒரு ...
1 hour ago
37 comments:
இதுதான் நாங்களும் சொன்னோம் சார். என்ன அவங்க என்ன பாணியில் பேசினார்களோ அதே பாணியில் பதில் உரைத்தோம் அதுதான் பிரச்சனை ஆச்சு
------
//இரண்டு மூன்று பிரசவங்களுக்கு பிறகு அவள் உடற்கட்டு குலைகிறது. ஆகவே அவளுடன் சேர்ந்து வாழும் ஆணுக்கு அவள் மேல் ஈர்ப்பு குறைந்தால், பேசாமல் கழண்டு கொள்ள முடிகிறது//
இப்ப திருமணத்தில் க்ழண்டு கொள்கிறவன் ?..
பணத்தை வைத்து நிம்மதியா இருக்கிறாளா?...சமூகத்தில்?..
-----------
இதுவே சட்டபூர்வமான திருமணமாக இருந்தால் பெண்ணுக்கு எல்லா சட்டப் பாதுகாப்புகளும் உண்டு. //
அதிக பட்சம் என்ன பாதுகாப்பு கொடுக்கும்.?
ஜீவனாம்சம்.?
குழந்தைக்கு இனிஷியல்?..
இவை இரண்டும் அவளுக்கு தேவை இல்லாவிட்டால்.?..
இதை வைத்து மட்டும்தானே அவளை சமூகம் பயமுறுத்தியது?..
பிள்ளை பெற்றதால் ஈர்ப்பு குறைந்து போறவன் போகட்டும்..
பிள்ளையை அவளே வளர்த்து அந்த பேரின்பத்தை , பெருமையை அவள அடையட்டும்..
அதற்கு மட்டும் துணை இருப்போம்..
தனித்து வாழ முடியும் என்ற துணிவை அவளுக்கு சமூகம் என்ற நாம் அளிக்க முன் வருவோம்..
அப்புரம் பாருங்க இந்த ஈர்ப்பு , கீர்ப்புலாம் காணாம போய்விடும்,..
நாம மாறாம இன்னும் பெண்ணை பயங்காட்டி வைக்காமல் இருப்போம் அதே பேருதவி...
கல்வி கற்று , சம்பாதித்து தனித்து துணிவா நிற்க பழக்கிடுவோம்...
@பயணமும் எண்ணங்களும்
நீங்கள் கூறுவது போராட்டம். எல்லா பெண்களுக்குமே அதில் நாட்டம் இருக்கும் என எண்ண முடியாது. அதைச் செய்வதற்கென்றே பல பெண்கள் உள்ளனர். எனது பதிவு அவர்களுக்காக அல்ல. ஒரு சராசரி பெண்ணுக்குத்தான்.
சமூக கண்டனத்தை தாங்க முடியாதவள் அவள். அவளைப் போன்றவர்கள் பிரச்சினையின் ஆழம் புரியாது மற்றவர்கள் கொம்புசீவி விடுவதற்கு ஏற்ப நடந்து, தேக்வையற்ற பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக அவள் செயல்பட வேண்டியதின் அவசியத்தையே விளக்கினேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு சராசரி பெண்ணுக்குத்தான். //
இதிலேயே அத்தனையும் அடங்குது சார்..
லிவிங்-டுகெதர் மட்டுமல்ல , காதலிப்பதே ஒரு சராசரி பொண்ணுக்கு ஒத்து வராது ..
ஆக அத்தகைய பெண்ணுக்கு நீங்க சொல்வது சரியே..
ஆனால் ,
இன்று நான் சொல்லும் பெண் பற்றிய கதை போட்டுள்ளேன் இங்கே..
ஆக லிவிங்-டுகெதர் சமூகத்தில் அடைபட முடியாத ஆனா உறவுகளை , அன்பை , அடுத்தவர் சுதந்திரத்தை மதிக்கும் பெண்..
http://punnagaithesam.blogspot.com/2010/11/blog-post_30.html
( இறுதிவரை லிவிங்-டுகெதர் - சிறுகதை..)
@பயணமும் எண்ணங்களும்
உங்கள் அப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் கீழே. பார்க்க: http://punnagaithesam.blogspot.com/2010/11/blog-post_30.html
ரொம்பவும் ஐடியலைஸ் செய்யப்படும் கற்பனைப் பெண்ணின் கற்பனைக் கதை. ஆனால் இவளிடமும் சராசரி சமூகப் புரிதல்தான் உள்ளது.
1. ஆணும் பெண்ணும் பெற்ற குழந்தைக்கு தாயே எல்லாம் செய்ய வேண்டும் எனச் சொல்லும் சமூகத்தின் கோட்பாட்டுக்கு இணங்க இவள் தன் பையனை தூக்கி வருகிறாள்.
2. ஏன் ஆணிடமே விட்டிருக்கலாமே?
3. அப்படியும் ஆண் தனது பங்கைத் தர முயற்சிக்கும்போது பையன் சார்பில் மறுக்க இவளுக்கு யார் உரிமை தந்தது?
4. பிற்காலத்தில் இவளும் இறந்து போக, தந்தையிடமும் ஒன்றும் பெற முடியாமல் போகும் நிலை வந்தால் (//" அதுக்கில்ல ஷான்.. நாளைக்கே எனக்கு இன்னொரு குழந்தை வந்தப்புறம் நான் செய்ய முடியுமோ இல்லையோ.?"//) அக்குழந்தையே இவளை சபிக்குமே.
5. தான் மட்டுமே தியாகம் செய்வது தனது ஆண் துணை ஒன்றுமே செய்யக் கூடாது என நினைப்பதும் ரிவர்ஸ் சுயநலமே. அதற்குக் காரணமே தாய்க்குத்தான் அதிகப் பொறுப்பு எனக் கூறியதை ஷாந்தினி சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பதுதான்.
6. இப்போதைக்கு எல்லாமே நன்றாக இருந்தாலும் தான் எப்போதுமே சாஸ்வதம் இல்லை என்பதை ஷாந்தினி நினைக்க மறுப்பது டூ மச். அந்த மனநிலையில் இருப்பவர்கள் இன்ஷூர் எல்லாம் செய்து கொள்ள மாட்டார்களா என்ன?
ஆக, நீங்கள் கூறும் சினேரியோ ஐடியலைஸ்ட் கற்பனையே. அதுவும் ஷாந்தினி செய்வது அராஜகம். ஆணுக்கு குற்ற உணர்ச்சியையே அதிகரிக்கும் அது. அந்த வகையில் அவள் குற்றவாளியே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி டோண்டு சார்..
உங்க கேள்விக்கு என் பதிலும் அங்கே என் பதிவிலேயே போட்டுள்ளேன்.
இங்கே போட்டால் நீண்டு விடுமே என..
விரும்பினால் இங்கேயும் போடலாம்.. பலர் அறிந்துகொள்ள...
@பயணமும் என்ணங்களும்
நானும் அங்கே இட்ட எனது பதில் இங்கேயும்.
//ராணுவத்திலுள்ள நம் சகோதரர் பிள்ளைகளை தாய்மார் விரும்பி வளர்ப்பதுண்டுதானே?.. சுமையல்லவே?..//
அந்த சகோதரர் செத்தால் ஆட்டமேட்டிக்காக அவரது சொத்து அவரது பிள்ளைக்கு வரும்.
உயில் எழுதாமல் ஒருவன் செத்தால் அவனது சட்டபூர்வமான மனைவிக்கும் வாரிசுக்கும்தான் அவனது சொத்து போகும்.
//நிச்சயம் சபிக்க மாட்டான்.. மற்றவருக்கும் செய்யக்கூடிய அளவில் வளர்க்கப்படும் குழந்தை...//
அவனுக்கு பிற்காலத்தில் கொம்புசீவிவிட பலர் வருவார்கள். அது யதார்த்தம். எது எப்படியானாலும் ஆண் விரும்பித் தருவதை அப்பையன் சார்பில் மறுப்பது அராஜகம், அதீத கற்பனையே.
அது சரி, இதுவே கற்பனைக் கதைதானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அந்த சகோதரர் செத்தால் ஆட்டமேட்டிக்காக அவரது சொத்து அவரது பிள்ளைக்கு வரும்.
உயில் எழுதாமல் ஒருவன் செத்தால் அவனது சட்டபூர்வமான மனைவிக்கும் வாரிசுக்கும்தான் அவனது சொத்து போகும்.//
மிக சரி..
//அவனுக்கு பிற்காலத்தில் கொம்புசீவிவிட பலர் வருவார்கள். அது யதார்த்தம்.//
இந்த கொம்பு சீவிகளான சமூகத்தைத்தான் தவிர்க்கணும்..
எல்லா வாழ்க்கையும் சட்ட திட்டத்தினால் மகிழ்ச்சியாக வாழ்வதில்லை.. நம் மனமும் தான் காரணம்..
கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதுதான் சட்டத்தின் உதவியை நாடுவது...
அதுக்கு முன் இந்த கொம்பு சீவிகளை பற்றி சொல்லி வளர்ப்போம் குழந்தைகளை..
//ஆண் விரும்பித் தருவதை அப்பையன் சார்பில் மறுப்பது அராஜகம், அதீத கற்பனையே.//
சார் ஒரு தகப்பன் , தன் பிள்ளைக்கு பணம் தருவது மட்டும்தான் கடமையா பொறுப்பா?.. அதைவிட மேன்மையானது தகப்பனின் அன்பும் வழிகாட்டுதலும்...
அதை செய்ய தவறவில்லை இந்த தகப்பன்..
நம்மூர் திருமணத்தில்தான் , அப்பன் செத்தாலும் பரவாயில்ல , சொத்து பிள்ளைக்கு வந்திடணும்னு ம்,
அன்ணன் எப்ப சாவன் , திண்ணை எப்ப காலியாகும் என்ற எண்ணமும்..
இதை மாற்றுவோம் நல்ல குழந்தை வளர்ப்பின் மூலம்..
//சார் ஒரு தகப்பன் , தன் பிள்ளைக்கு பணம் தருவது மட்டும்தான் கடமையா பொறுப்பா?.. அதைவிட மேன்மையானது தகப்பனின் அன்பும் வழிகாட்டுதலும்...//
இக்கதையில் அந்த ஆண் பணம் கொடுப்பது தான் பிள்ளை மேல் அன்பு செலுத்துவதிலிருந்து விடுதலை பெறுவதற்கா? இல்லையே?
எல்லாமே எப்போதுமே நல்லபடியாகவே நடக்கும் என நினைத்து தானாக வருவதையெல்லாம் விலக்கி வாழ்வது புத்திசாலித்தனமா?
முகம்மது கூறுகிறார், அல்லாவை நம்பு, கூடவே ஒட்டகத்தைக் கட்டி வைக்கும் கயிற்றின் முடிச்சையும் சரி பார்க்கவும் என்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முகம்மது கூறுகிறார், அல்லாவை நம்பு, கூடவே ஒட்டகத்தைக் கட்டி வைக்கும் கயிற்றின் முடிச்சையும் சரி பார்க்கவும் என்று.//
கண்டிப்பா சார்.
நாம் குழந்தைகளை ஒரு தலைமைப்பண்போடு வளர்க்கணும்..
மற்றவர்ரிடமிருந்து எதிர்பார்ப்பது போல வளர்க்காமல்..
நாங்க அப்படித்தான் வளர்ந்தோம் சார்..
We started our life from Zero..
& we expect our children to enjoy working/fighting with life same way...
அது ஒரு இன்பம்தான்...
பெற்றோர் சேர்த்து வெச்சிருக்காங்கனு வாழும் போது நம் திறமை பலவற்றை இழந்துவிடும் வாய்ப்புண்டு...
அதைவிட அவர்கள் கல்வி , அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னம்பிக்கையோடு வளர்க்கணும்...என்பது என் கருத்து..
அதிலும் பெண் குழந்தைன்னா இன்னும் அதிக துணிவோடு..:)
//We started our life from Zero..//
இதை நீங்கள் விரும்பி செய்ததா அல்லது உங்களது சூழ்நிலை அதை உங்கள் மேல் திணித்ததா?
//& we expect our children to enjoy working/fighting with life same way...//
அதாவது இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளக்கூடாது, பிள்ளைக்கு சொத்து சேர்த்து வைக்கக் கூடாது. ஆனால் இவையெல்லாம் மனித இயற்கைக்கு புறம்பானவை ஆயிற்றே. சோவியத் யூனியனிலும் இதைத்தான் சொன்னார்கள், அதாவது தனிமனித சொத்துக்கலை அனுமதிக்கவில்லை. ஆனால் என்ன ஆயிற்று? அந்த நாடே உலகவரைபடத்திலிருந்து மறைந்ததே.
மறுபடியும் கூறுவேன், உங்கள் கற்பனை அழகாக உள்ளது. ஆனால் உண்மையாக இருக்க வாய்ப்பு மிகவும் கம்மி.
சீரியல்களில் வரும் அசட்டு தியாகங்களே நினைவுக்கு வருகின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//We started our life from Zero..//
இதை நீங்கள் விரும்பி செய்ததா அல்லது உங்களது சூழ்நிலை அதை உங்கள் மேல் திணித்ததா?//
நாங்கள் விரும்பியது..
(மீதி பதில் வெளியே செல்கிறேன் பின் வந்து..)
இதில் இன்னொரு விஷயமும் இருக்கு. ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ தனக்கு இந்த துணை தேவை தேவை இல்லை என்று முடிவு செய்ய உரிமை இருக்கு. ஆனால் அந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சட்ட ரீதியான சமூக ரீதியான பாதுகாப்பு அவசியமில்லை என்ற முடிவை இவர்களே எடுத்து விடும் உரிமை இவர்களுக்கு இல்லை என்பது என் கருத்து. அந்த வகையில் இந்த சேர்ந்து வாழ்தல் முறை சரியில்லை.
உறவுகளை மாற்றிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும் போது, ஒருவர் உறவை இயல்பாக முறித்துக் கொள்ள இன்னொருவர் தொடர நினைக்கும் போது அது பெரும் சிக்கலில் கொண்டு விடும். இப்போ அமெரிக்கா போன்ற நாடுகளில் talk shows பார்த்தால் அதில் பெண்கள் தனது குழந்தைகளுக்கு தந்தையை நிரூபிக்க திண்டாடுவதை காணலாம்.
சட்ட ரீதியான மற்றும் சமூக ரீதியான பாதுகாப்பை எதிர்காலத்துக்கு அதாவது குழந்தைகளுக்கு கொடுக்க முடியாத உறவுகள் குழந்தைகளுக்கு செய்யும் மிகப் பெரிய அநீதி.
இப்போ பிரபல உதாரணம் பிரபு தேவா நயன்தார ரமலத். ரமலத் உடனான தன திருமணம் முறையாக பதியப் படவில்லை அதனால் அது திருமணமே இல்லை என்று சொல்லி அந்த பெண்ணையும் கேவலப் படுத்தி இறந்து போன மூத்த மகன் மற்றும் இருக்கும் இரு குழந்தைகளையும் கேவலப் படுத்தி இருக்கிறார் பிரபு தேவா.
இப்படி ஒரு சூழலை ரமலத் அந்த உறவின் ஆரம்பத்திலோ அல்லது இந்த சிக்கல் தொடங்குவதற்கு முன்னோ நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.
@விருட்சம்
அதைத்தான் பயணமும் எண்ணங்களும் பதிவரிடம் நானும் கூறினேன். அவர் தந்தது ஒரு ஐடியலைஸ்டு கற்பனைக் கதை. அதில் உள்ள சம்ன்பாடு ஒரு சிறு அசைவிலும் விழுந்து விடும். ஆகவே அதை சேர்ந்து வாழ்தலுக்கு காரணமாக வைத்துக் கொல்ளலாகாது என்றுதான் நானும் கூறுகிறேன்.
பல சீரியல்களில் ஒரு பாத்திரம் தேவையின்றி தியாகம் செய்வதாக பார்த்தால் எனக்கு அந்தப் பாத்திரத்தின் மீதுதான் கோபம் வரும். அந்த சுயதுன்புறுத்தலில் இன்பம் பெறுபவரை எக்ஸ்ப்ளாயிட் செய்பவர்கள் மீது கூட பிறகுதான் கோபம் வரும்.
ஆனால் இம்மாதிரித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற மனப்பான்மை பார்வையாளரிடம் அறிவுறுத்தப்பட்டால் அவர்களில் சிலர் அவ்வாறே செய்து சந்தியில் நிற்கும் நிலை நேரிடும்.
வேறு ஒரு தருணத்தில் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு சந்தியில் நின்ற ஒருவனை நான் அறிவேன். அவன் பேங்க் ஒன்றில் அதிகாரி. அவனது நண்பன் ஜே.கே. எனப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் விசிறி. ஜேகே எங்கோ எப்போதோ எந்த சூழ்நிலையிலோ எழுதியதை வைத்து இவனிடம் அந்த நண்பன் தீவிரமாகப் பேசியிருக்கிறான். வாழ்க்கை எல்லாம் மாயை, பேங்க் உத்தியோகத்தால் எல்லாம் ஆத்மா உயர்வடையாது என்று வடை கடித்து கொண்டே டீயை உறிஞ்சி கொண்டு பேசியிருக்கிறான். அவனுக்கு ஏதேனும் இம்மாதிரி பிதற்றுவதே வேலை.
இந்த அசடுக்கு அது தெரியாது பேங்க் வேலையை உதறிவிட்டு நிஜமாகவே சந்தியில் நின்றது. பிறகு சேது ரேஞ்சுக்கு புலம்பி ஒரு மழை நிறைந்த பகலில் நடுத்தெருவில் உயிரை விட்டது.
போதனை செய்தவன் அவன் பாட்டுக்கு அமெரிக்கா போய் புரொஃபசராக இன்னமும் கொடி கட்டிப் பறக்கிறான்.
இந்த வரிகளை தட்டச்சு செய்யும் போது என் கோபம் அடக்க முடியாது வருகிறது, போதனை செய்தவன் மேல் அல்ல, அந்த அசட்டு மனிதன் மேல்தான் என் கோபம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இதை சொன்னால், அவைகள் யாருடன் வாழ்வது என்பது தனி மனித உரிமை என்கிறார்கள். அவர்களுது உரிமையை மட்டுமே பார்க்கிறார்கள். அடுத்து அந்த குழந்தை நிலை பற்றி கேட்டால், சரியான விளக்கம் இல்லை. பயணங்களும் எண்ணங்களும் ஓரளவு நிதானமாக பதில் அளித்துள்ளார். ஆனால் இந்தப் பிரச்சனையில் பலர் பொதுவில் எப்படி எழுத வேண்டும் என்று தெரியாமலே எழுதியுள்ளனர். அவர்களுக்கு ஆமாம் சாமி போட்டு ஒரு கூட்டம்
@எல்கே
என்ன செய்வது, பிரபுதேவாவுடன் சேர்ந்து வாழ்ந்த ரமலத்தின் குழந்தைகளுக்கு நேர்ந்த கதிதான் ரிபீட் ஆகும், இடைவிடாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆம். நீங்க சொல்லுவது சரியே.
பயணங்களும் எண்ணங்களும் அந்த கதையில் பெண்ணை இயல்பான தியாகியாகவும் மட்டும் அல்ல அதுக்கும் மேலே சித்தரிப்பது தெரிகிறது (அதாவது குழந்தையை மட்டும் அல்ல அவன் அம்மாவைக் கூட இவளே பார்த்துக் கொள்வாளாம் ), அந்த ஆணை ஒரு குற்ற உணர்வுடன் தடுமாறுபவனாகவும், தடுமாற்றம் எல்லாம் வேண்டாம் go ahead என்று அந்த பெண் சொல்லுவதாகவும் காட்டுவதே தியாகிப் பட்டதை பெண்கள் மேல் சுமத்தவே முயலுவதையும், இங்கே ஆணின் அடுத்த வாழ்கை குறித்த கவலையும் அக்கறையும் திருமண அல்லது உறவு முறிந்த பின்னும் பெண் தொடர வேண்டும் என்று நினைப்பதும், ஆண் பொருளாதார ரீதியான அக்கறை மட்டுமே தன் முன்னாள் பந்தத்தின் மேல் செலுத்தி விட்டாலே அது அதிகபட்ச அக்கறையாக கொள்ளப் படுவதையும் காண முடிகிறது.
திருமண பந்தத்தையே சுலபமாக முறிக்க தயாரான ஆணை இன்னொரு பெண் நம்பி சேர்ந்து வாழ தயாராக வேண்டும் என்ற அவனது நிச்சயமற்ற தன்மையும் தெரிகிறது. அதாவது அவனுக்கே அவன் மேல் நம்பிக்கை இல்லாத காரணத்தால் அவன் சேர்ந்து வாழ்தலை முன் வைப்பதாக சொல்லுகிறான். அந்த முடிவையும் இங்கே அவனே எடுக்கிறான். இந்த அசட்டு தியாகி குழந்தை பெற்றுக் கொண்டு வா. உன் அம்மாவிடம் அப்புறம் சொல்லிக் கொள்ளலாம் என்கிறது. இங்கே மூன்று பெண்களை (அம்மா, முன்னாள் மனைவி, இந்நாள் காதலி ) மற்றும் இரண்டு குழந்தைகளை (பிறந்த, பிறக்கப் போகும் ) இவனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இவன் அட்ஜஸ்ட் செய்ய நேரடியாக கூட அல்லாமல் அவர்களது நல்ல குணத்தின் வாயிலாக அவர்களயே செய்ய வைக்கிறான்.
பெண்கள் சேர்ந்து வாழ்தலை எப்படி பார்க்கிறார்களோ? ஆனால் ஆண்கள் அதை தன் சுயநலத்துக்கு வசதியாக துணை போகும் விஷயமாகவே பார்ப்பதாக நினைக்க வைக்கிறது
டோண்டு சார் ,
இங்கே என் இலங்கை தோழி ஒருவர் கணவனை விவாகரத்து செய்துவிட்டு இன்னும் நட்பாக தொடர்கிறார்.. இருவரும் டென்னிஸ் ஒன்றாக விளையாடுவர்..
அதே போல சேவை செய்வதிலும் ..
இதை ஏன் தியாகமா நினைக்கணும்?..
பிடிக்கலை பிரிகிறார்கள்..
ஒரு வேளை மனைவிக்கு தாம்ப்யத்தில் ஈடுபாடு இலலையென்று வைப்போம்..
அவர் விட்டுக்கொடுப்பதில் என்ன தவறு..
யாரும் கட்டாயப்படுத்தலையே..
நாம தான் , கலாச்சாரம் பண்பாடு என்ற பெயரில் , புருசன் அடிச்சாலும் குடிச்சாலும் வாய பொத்தி புள்ள வளர்த்து மானத்தை காப்பாத்திக்கோ என ஆயுள் கைதியாக்கி வைக்கிறோம்..
( சரி அடுத்த கதை எழுதுறேன் நம் திருமண முறை வைத்தே :) )
பயணங்களும் எண்ணங்களும் ஓரளவு நிதானமாக பதில் அளித்துள்ளார்.//
நன்றி எல்கே..
கருத்துகள் தான் எனக்கு முக்கியம்..
//We started our life from Zero..//
இதை நீங்கள் விரும்பி செய்ததா அல்லது உங்களது சூழ்நிலை அதை உங்கள் மேல் திணித்ததா?
விரும்பி ஏற்றது..
கல்வி , கடின உழைப்பு மட்டுமே கையில்..
//& we expect our children to enjoy working/fighting with life same way...//
அதாவது இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளக்கூடாது, பிள்ளைக்கு சொத்து சேர்த்து வைக்கக் கூடாது. ஆனால் இவையெல்லாம் மனித இயற்கைக்கு புறம்பானவை ஆயிற்றே. //
சார் நீச்சல் கத்துக்கிற வரை டீயூப் வைக்கக்கூடாதா?..
//சோவியத் யூனியனிலும் இதைத்தான் சொன்னார்கள், அதாவது தனிமனித சொத்துக்கலை அனுமதிக்கவில்லை. ஆனால் என்ன ஆயிற்று? அந்த நாடே உலகவரைபடத்திலிருந்து மறைந்ததே.//
அது சட்டம் போட்டு சொன்னதாக இருக்கும்..
நான் சொல்வது மனமாற ஏற்படவேண்டிய மனமாற்றம் .
//மறுபடியும் கூறுவேன், உங்கள் கற்பனை அழகாக உள்ளது. ஆனால் உண்மையாக இருக்க வாய்ப்பு மிகவும் கம்மி.//
அழகா இருக்குல்ல.. அது போதும் சார்.. அவார்ட் கிடைத்த மாதிரி இருக்கு..:)
அப்ப இந்த அழகான சமாச்சாரத்தை பரவ செய்வதில் என்ன தப்பு ?.
யாராவது ஆரம்பிக்கணுமே..நல்ல விஷயங்களை..
//பெண்ணே! ஜாக்கிரதையாக இரு. இப்போதைக்கு திருமணம் இன்றி சேர்ந்து வாழ ஒத்துக் கொள்ளாதே. பாதிப்பு உனக்குத்தான் அதிகம்.//
இந்த புத்திமதிக்கு, இந்திய பெண்ணுலகம் உங்களை நிச்சயம் தலை வணங்கவேண்டும்... என்ன வாய்கிழிய பேசினாலும் ..தட்டச்சு தேய தட்டினாலும் ..இந்தியாவை பொறுத்த வரை பெண்குலத்தை பாதுகாப்பது திருமணம் எனும் சமுக பாதுகாப்புதான்..விதிவிலக்காக கோடியில் ஒன்றாக நடக்கும் திருமண சங்கடங்களுக்காக அமைப்பையே மாற்றச்சொல்வது முட்டாள்த்தனம்...
//அழகா இருக்குல்ல.. அது போதும் சார்.. அவார்ட் கிடைத்த மாதிரி இருக்கு..:)
அப்ப இந்த அழகான சமாச்சாரத்தை பரவ செய்வதில் என்ன தப்பு ?.
யாராவது ஆரம்பிக்கணுமே..நல்ல விஷயங்களை..//
அதைத்தான் செஞ்சுட்டாங்களே, ஏற்கனவேயே இளங்கோவடிகள் என்னும் நபர், சிலப்பதிகாரத்தில் கன்ணகியை வைத்து.
சமகாலத்தில் கோலங்கள் அபி, மெட்டி ஒலி சரோ, கஸ்தூரி ஆகியோர் எல்லாம் யாராம்.
நீங்கள் பரப்ப நினைக்கும் “அழகான விஷயம்” ரொம்ப அபாயகரமானது, அதைப் பார்த்து தனது நடவடிக்கைகளை அமைக்கப் போகும் அசடுகளுக்கு.
பென்ணே மனமொப்பினால் சதியை அலவ் செய்யலாம் என ஒரு மடாதிபதி கூறுவதை எப்படி ஒத்துக் கொள்ள முடியாதோ அதே மாதிரித்தான் இங்கும்.
என் மேல் நம்பிக்கை இல்லையா என காதலியை கேட்டு, அவள் திருமணத்துக்கு முன்னரே இணங்க பிறகு அவன் தன் வழியே போகும் எத்தனை கதைகள் வந்து விட்டன? தயவு செய்து இதையெல்லாம் க்ளோரிஃபை செய்து கொள்ளாதீர்கள் எனக்கேட்டுக் கொள்கிறேன்.
//ஒரு வேளை மனைவிக்கு தாம்ப்யத்தில் ஈடுபாடு இலலையென்று வைப்போம்..
அவர் விட்டுக்கொடுப்பதில் என்ன தவறு.//
அதே கன்சிடரேஷன் கணவன் தாம்பத்தியத்துக்கு லாயக்கில்லையானாலும் விட்டுக் கொடுக்கலாம், அதாவது வெளியில் தெரியாமல் கல்யாணத்தைக் கலைக்காமல் என கதை எழுதினால் ஒத்துக் கொள்வார்களா? (இதற்கும் முன்னுதாரணம் உண்டு. குந்தி மாத்ரி இருவரும் பெறும் பஞ்ச பாண்டவர்கள் பாண்டு மூலமாக வரவில்லை).
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆகையால், பெண்ணே! ஜாக்கிரதையாக இரு. இப்போதைக்கு திருமணம் இன்றி சேர்ந்து வாழ ஒத்துக் கொள்ளாதே. பாதிப்பு உனக்குத்தான் அதிகம்.//
பெண் = புடவை , ஆண்= முள்ளு, என்வே " பெண்ணே! ஜாக்கிரதையாக இரு".
இராமனுக்கே தலை சுட்றுகிறது
//மறுபடியும் கூறுவேன், உங்கள் கற்பனை அழகாக உள்ளது. ஆனால் உண்மையாக இருக்க வாய்ப்பு மிகவும் கம்மி.
சீரியல்களில் வரும் அசட்டு தியாகங்களே நினைவுக்கு வருகின்றன.//
டோண்டு ராகவன் சார் கூறும் எதார்ததை நாம் யாவரும் நன்றாக உணரவேண்டும். ஆண், பெண் இருபாலரும் சமூகதின் இரட்டை மாடுகள் பூட்டிய வண்டி,, ஒன்று சேர ஓடினால்தான் வாழ்க்கை பயணம் கடைசிவரை ஓடும்-- நிதானமாக, சுவயாக, வாழயடி வாழயடியாக !! தனிமனித சுதன்திரமுக்கு எல்லை யார் வரயறுப்பது? எனவெ, நம் பெரியோர்கள், ஆசார்யர்கள், leaders of very high repute like Swami Vivekananda, Sri Aurobindo. சொற்படி நடப்போம்.
( Swami Vivekananda, Sri Aurobindo. உதாரணம் based on on their world reach & high attainment, there are always leaders are available at every community, that is how a suitable culture evolves in different areas)
ஆகவே ஆண்+பெண்சேர்ந்து வாழ்தல் , பிறிதல் என்பது வெரும் பிதட்றல்
தியாகம் பற்றி விருட்சம் அவர்கள் சொன்னார்கள்..
தமிழ்நாட்டில் எந்த பெண் தியாகம் செய்யவில்லை ?..
என்ன வெளியில் தெரிவதில்லை . அவ்வளவே..
இங்கே கதை நாயகி , தியாகம் செய்யவுமில்லை, அதை தியாகமாக நினைக்கவுமில்லை..
இல்லையென்றால் நன்றி சொல்வாளா அவன் அன்னையை இவளோடு விடுவதற்கு..
அவள் அதை சுமையாகவோ , பொறுப்பகவோ நினைக்கவில்லை , மாறாக அந்த அன்பை பெற குடுத்து வைத்திருப்பதாகவே எண்ணுகிறாள்..
தன் மனைவி வேறொருவனை மணக்காமல் தான் மட்டும் மறுமணம் செய்வதை கில்டியாக நினைக்கும் நல்ல மனிதன்.. ஆனால் அவளுக்கு தேவையில்லை.. தேவையென்றால் செய்துகொள்ளவும் முடியும்..
திருமணம் என்ற பேரில் நம் நாட்டு பெண்கள் தான் அதிக தியாகம் செய்கின்றனர்..
குடும்ப அமைப்பு என்பது "அரசு ஆட்சிக்கு மாற்றானது. அரசின் எதிரி" . எனவே குடும்பம் என்கிற அமைப்பு ஒழிய வேண்டும் என்பது கம்முனி சித்தாந்தம்.
எனவே திருமண முறையை ஒழித்து விட்டால் குடும்ப அமைப்பு மேலை நாடுகள் போல் தானாகவே அழியும்.!!
On what foundation is the present family, the bourgeois family, based? On capital, on private gain. In its completely developed form, this family exists only among the bourgeoisie. But this state of things finds its complement in the practical absence of the family among the proletarians, and in public prostitution.
The bourgeois family will vanish as a matter of course when its complement vanishes, and both will vanish with the vanishing of capital.
Do you charge us with wanting to stop the exploitation of children by their parents? To this crime we plead guilty.
THE COMMUNIST MANIFESTO
http://www.marxists.org/archive/marx/works/1848/communist-manifesto/ch02.htm
உங்கள் பதிலில் இருந்து தெளிவாகத் தெரிகிறது நீங்கள் தியாகங்களை பெண்களின் இயல்பான விஷயமாக சித்தரிக்க விரும்புவது அது அதன் அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும் என்று விரும்புவதும்.
இங்கே உங்கள் கதையின் கதா நாயகி கணவனோடு ஆன உறவை சுமுகமாக பிரிய ஏற்றுக் கொண்டு அந்த உறவின் மூலம் பெற்ற குழந்தையை அவனது தாயையும் சேர்த்து ஏற்றுக் கொண்டு, அவளுக்கு ஒரு துணை தேவை இல்லை என்ற முடிவுக்கும் வந்து அதோடு நில்லாமல் அவனுக்கு ஒரு துணையை தானே தேடும் முயற்சியிலும் ஈடுபட்டு, அவன் காதல் தெரிந்து குதூகலித்து, அது திருமணம் இல்லை சேர்ந்து வாழ்தல் என்று தெரிந்ததும் அதற்காக கொஞ்சமும் அந்த பெண் (இவள் பார்த்திராத அந்தப் பெண் பின்னால் இந்த உறவு முறிந்தால் இயல்பாக ஏற்கும் பக்குவம் உள்ளவளா என்பது இவளுக்கு தெரிய வாய்ப்பில்லை ) பற்றி யோசிக்காமல், போதாதற்கு குழந்தை பெற்றுக் கொண்டு வா, உன் அம்மா ஏற்றுக் கொள்வாள் இல்லை நான் ஏற்க வைக்கிறேன் என்று , அப்பப்பா, இதெல்லாம் தியாகம் இல்லை சுமை இல்லை விரும்ப்பி ஏற்கிறாள் என்று வேறு சப்பை கட்டு. இதில் அவன் அம்மாவை அவளோடு வைத்துக் கொள்ள அவன் அனுமதித்ததுக்கு நன்றி வேறு சொல்கிறாளாம். அவன் நன்றி சொல்லணுமா, அவளா?
நான் கூறியது மாதிரியே அவனது கொஞ்சம் கில்டி பீலிங்க்ஸ் மட்டுமே அவன் நல்லவன் என்பதன் அடையாளமாக நீங்கள் சித்தரிக்க விரும்புகிறீர்கள்.
தனக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்த உடன் கணவனுக்கு தானே முன்னின்று திருமணம் நடத்தி வைத்து தன் மொத்த வாழ்வையும் தன் சொத்துக்களையும் அவனின் புது குடும்பத்துக்கு கொடுத்து எல்லாம் இழந்து தியாகிப் பட்டம் கட்டி நிற்கும் பெண்களை நிஜ வாழ்விலும் அது மாதிரி கதைகளை திரையிலும் நிறைய பார்த்து இருக்கிறோம்.
இது அதில் இருந்து கொஞ்சம் நீட்சி அவ்வளவே. இன்னும் சில ஆண்டுகள் கழித்து நீங்கள் எழுதினால் அது கணவனை தலையில் கூடையில் தூக்கி சென்ற நளாயினி கதையின் நவீன மயக் கதையாக இருக்கும்
//
இன்னும் சில ஆண்டுகள் கழித்து நீங்கள் எழுதினால் அது கணவனை தலையில் கூடையில் தூக்கி சென்ற நளாயினி கதையின் நவீன மயக் கதையாக இருக்கும்
//
நீங்கள் சொல்வது மிகவும் சுவாரசியமான விஷயம்.
வெள்ளையனைப் பார்த்து தானும் அப்படி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு தரிகேட்டுப்போகும் சிலர் அவர்கள் செயலுக்கு சப்பைக்கட்டு கட்டவே இந்த சேர்ந்து வாழ்தல் என்றெல்லாம் புளுகுகிறார்கள் என்று நினைக்கிக்றேன்.
இவர்களிடம் பெண்ணடிமையை எப்படி ஒழிப்பது என்று ஒரு ஐடியாவும் இல்லை. வெள்ளைக்காரன் வாழ்வது போல் வாழ வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான் உண்டு. அதனால் தான் இவர்கள் சொல்லும் கதையும் கேனைத்தனமாய் இருக்கிறது. இந்தியக் கலாச்சாரம் என்பது தான் பெண்ணடிமைக் கலாச்சாரம் என்றெல்லாம் சொல்வதும் இந்த குரூப்பு தான். half baked dimwits.
LK said...
இதுதான் நாங்களும் சொன்னோம் சார். என்ன அவங்க என்ன பாணியில் பேசினார்களோ அதே பாணியில் பதில் உரைத்தோம் அதுதான் பிரச்சனை ஆச்சு
//
எப்படி விபச்சாரி /விபச்சாரம் என்று உறைப்பதை வழிமொழிந்தா? கண்டிப்பாக பெண்களுக்குத்தான் பாதிப்பு எல்லாவற்றையும் விபச்சாரம் விபச்சாரி என்று பேசுபவர்கள் இருக்கும் வரை அதை வழிமொழிய ஒரு ஆமாம் சாமி கூட்டம் இருக்கும் வரைக்கும்.
லிவிங் டுகெதரை தனி மனித விருப்பம் அதில் தலையிட முடியாது என்பது ஆபாசாம் என்றால் அதனை எதிர்த்து பதில் சொல்லிய பதிவுகள் எல்லாம் இங்குள்ளது வேண்டியவர்கள் தேடிப்படித்துக்கொள்ளட்டும்.
பதிவர் டோண்டுவின் கருத்தோடு ஒத்துப்போகிறேன், இன்றைய நிலை அதுதான், அதில் உள்ள அபாயங்களை எடுத்துச்சொல்வது பிரச்சாரம்/வழிமுறை இருக்கிறது. அது எத்தனை பேரிடம் இருந்தது என்று தாங்களே தெரிந்துகொள்ளுங்கள்.
வஜ்ரா said...
//
இன்னும் சில ஆண்டுகள் கழித்து நீங்கள் எழுதினால் அது கணவனை தலையில் கூடையில் தூக்கி சென்ற நளாயினி கதையின் நவீன மயக் கதையாக இருக்கும்
//
நீங்கள் சொல்வது மிகவும் சுவாரசியமான விஷயம்.
வெள்ளையனைப் பார்த்து தானும் அப்படி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு தரிகேட்டுப்போகும் சிலர் அவர்கள் செயலுக்கு சப்பைக்கட்டு கட்டவே இந்த சேர்ந்து வாழ்தல் என்றெல்லாம் புளுகுகிறார்கள் என்று நினைக்கிக்றேன்.
இவர்களிடம் பெண்ணடிமையை எப்படி ஒழிப்பது என்று ஒரு ஐடியாவும் இல்லை. வெள்ளைக்காரன் வாழ்வது போல் வாழ வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான் உண்டு. அதனால் தான் இவர்கள் சொல்லும் கதையும் கேனைத்தனமாய் இருக்கிறது. இந்தியக் கலாச்சாரம் என்பது தான் பெண்ணடிமைக் கலாச்சாரம் என்றெல்லாம் சொல்வதும் இந்த குரூப்பு தான். half baked dimwits.//
முதலில் இது சம்பந்தமான பதிவுகளையெல்லாம் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள். டோண்டுவின் இந்த பதிவு மட்டும் பத்தாது.
இந்தியக் கலாச்சாரம் என்பது தான் பெண்ணடிமைக் கலாச்சாரம் என்றெல்லாம் சொல்வதும் இந்த குரூப்பு தான்.//
இந்தியக்கலாச்சாரம் மாறிக்கொண்டே இருப்பதால் பெண்ணடிமைத்தனம் குறைந்துகொண்டே வருகிறது. பதினெட்டு வயதில் பதினைந்தே நாளில் கணவனை பறிகொடுத்த என் உறவினர் பெண்ணுக்கு மறுமணம் செய்ததை தூற்றியது இந்த சமுதாயம்தான்.
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த விஷயம். இங்கு டோண்டு குறிப்பிடும் முக்கியமான விவரம்,
ஒரு வேளை அப்படி சேர்ந்து வாழ்பவர்கள் பிரிந்து விட்டால்,
அவரது கருத்துப்படி, 1. பெண்ணுக்கு பாதிப்பு அதிகம், 2. குழந்தை எதுவும் இருந்தால் அதன் வளர்ப்பு ஒரு பிரச்சனை.
இங்கே நம்ம கவனிக்க வேண்டியது என்னவெனில், இங்ஙனம் சேர்ந்து வாழ முடிவு எடுக்கும் ஜோடி பொதுவாக இருவரும்
economically independent ஆகவும், இருவரும் தனித்தனியாக வாழ்ந்தால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை
பிறர் உதவியின்றி வாழ முடியும் எனும் ரீதியில் உள்ளவர்கள்தான். எங்கேயாவது வேலைக்குப் போகாத,
street smart ஆக இல்லாத பெண் இம்மாதிரி ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதைக் காண முடியுமா. அப்பறம் பிள்ளை வளர்ப்பு.
இப்பதான் அம்மா இனிஷியல் வச்சிக்கலாம்னு அரசாங்கமே சொல்லியாச்சே. ஒரு economically independent பெண் தனியாக
பிள்ளை வளர்க்க முடியாதா. அப்பறம் ஏன் சம்பந்தம் இல்லாத ஆட்கள் இதில் மூக்கை நுழைக்க வேண்டும்.
சமுதாய மாற்றம் ஒவ்வொரு கால கட்டத்திலும் தவிர்க்க இயலாதது. வெள்ளைக்காரனின் வ்சதி வேணும்.
அவன் பழக்கம் வேணாம்னால் அது முடியாது. இரண்டும் சேர்ந்த combined package தான் கிடைக்கும். வேறு வழியில்லை.
பல தவறான புரிதல் இருக்கு..
நிதானமா பேசணும்
thARumARu said...
இங்கே நம்ம கவனிக்க வேண்டியது என்னவெனில், இங்ஙனம் சேர்ந்து வாழ முடிவு எடுக்கும் ஜோடி பொதுவாக இருவரும்
economically independent ஆகவும், இருவரும் தனித்தனியாக வாழ்ந்தால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை
பிறர் உதவியின்றி வாழ முடியும் எனும் ரீதியில் உள்ளவர்கள்தான். எங்கேயாவது வேலைக்குப் போகாத,
street smart ஆக இல்லாத பெண் இம்மாதிரி ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதைக் காண முடியுமா. அப்பறம் பிள்ளை வளர்ப்பு.
இப்பதான் அம்மா இனிஷியல் வச்சிக்கலாம்னு அரசாங்கமே சொல்லியாச்சே. ஒரு economically independent பெண் தனியாக
பிள்ளை வளர்க்க முடியாதா. அப்பறம் ஏன் சம்பந்தம் இல்லாத ஆட்கள் இதில் மூக்கை நுழைக்க வேண்டும்.
சமுதாய மாற்றம் ஒவ்வொரு கால கட்டத்திலும் தவிர்க்க இயலாதது. வெள்ளைக்காரனின் வ்சதி வேணும்.
அவன் பழக்கம் வேணாம்னால் அது முடியாது. இரண்டும் சேர்ந்த combined package தான் கிடைக்கும். வேறு வழியில்லை.//
Beautifully explained Sir.
@குடுகுடுப்பை
மாற்று கருத்து சொன்னவர்களை முதலில் தரக்குறைவாக பேசியது யார் ? என்னவோ அவருக்கு மட்டும்தான் பேசத் தெரியும் என்று பேசி கொண்டு போனால் அதுதான் விளைவு.
அம்மா intial என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம் தான். MS எந்த அரசாங்க அங்கிகாரமும் இல்லாமல் தன் தாயின் இனிஷியலை வைத்துக் கொண்டார்.
ஆனால் நீங்கள் முன் வைக்கும் விஷயம் முன் காலத்து தாய் வழி சமுதாயத்தின் நவீன பாணி மட்டுமே. சேந்து வாழ்தலில் இருக்கும் அதிகப் பட்ச ஆணிய சலுகளைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ மட்டுமே முன்வைக்கிறீர்கள்.
சுயமாக இருக்க முடிந்த பெண்களை அவர்களது பலத்தையே ஆண்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் மட்டுமே
Post a Comment