முதலில் தினமலரில் வந்துள்ள செய்தியை தடித்த சாய்வெழுத்துக்களில் பார்த்து விடுவோம். பிறகு வருவான் டோண்டு ராகவன், வழக்கம்போல.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தால், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளான மத்திய அமைச்சர் ராஜா, நீண்ட இழுபறிக்குப் பின், தன் பதவியை நேற்றிரவு ராஜினாமா செய்தார். பார்லிமென்ட் இன்று கூடவுள்ள நிலையில், மத்திய அரசுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படுவதை தடுக்கவும், மத்திய அரசுடன் சுமுகமான உறவு நீடிக்கவும் கருணாநிதி இந்த முடிவை எடுத்தார்.கருணாநிதியின் உத்தரவையடுத்து, நேற்றிரவு டில்லி சென்ற அமைச்சர் ராஜா, பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
"2ஜி ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ராஜா மீது, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் குற்றம் சாட்டியது. கடந்த வாரம் பார்லிமென்டில் இப்பிரச்னை கிளப்பிய பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், பார்லி., கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.அதேநேரத்தில், "இந்த விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஆதரவு அளிக்க தயார்' என, அ.தி.முக., பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்ததும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், மத்திய அமைச்சர் ராஜா, தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். "எனக்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் பின்பற்றிய நடைமுறையத்தான், நானும் பின்பற்றினேன். எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை' என, திட்டவட்டமாக கூறினார். தி.மு.க., மேலிடமும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது. இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டத் தொடர் இன்று மீண்டும் கூடவுள்ள நிலையில், "அமைச்சர் ராஜாவை பதவி நீக்கம் செய்யாதவரை, கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனுமதிக்க மாட்டோம்' என, பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் தெரிவித்தன. பா.ஜ., -மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இதில் தீவிரமாக இருந்தன.
மேலும், "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே நடந்த விசாரணையின்போது சி.பி.ஐ.,யின் நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட் கண்டித்தது. இதனால், இன்றைய விசாரணையிலும், மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் கடுமையான கருத்துக்களை தெரிவிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் டி.எஸ்.மாத்தூரும், அமைச்சர் ராஜாவுக்கு எதிராக நேற்று புகார்களை தெரிவித்தார். அது மத்திய அரசுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதனால், பிரச்னைகளை சமாளிப்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் நேற்று தீவிரம் காட்டியது. ராஜா விவகாரம் குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் டில்லியில் அவசர ஆலோசனை நடத்தினர். பின்னர் தி.மு.க.,விடமும் அவசர ஆலோசனை நடத்தினர்.
சென்னையில் முதல்வர் கருணாநிதியை நேற்று இருமுறை சந்தித்த அமைச்சர் ராஜா, மாலையில் டில்லி சென்றார். சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர், "வழக்கமாக தலைவரை சந்திப்பது போலத்தான் இன்றைய சந்திப்பு நடந்தது. நான் ராஜினாமா செய்யத் தேவையில்லை' என்று கூறிவிட்டு புறப்பட்டார். உடனிருந்த முன்னாள் அமைச்சர் டி. ஆர்.பாலு, "பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்.அதே சமயம், டில்லிக்கு தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்பப்பட்ட அமைச்சர் துரைமுருகன், திடீரென சென்னை திரும்ப மேலிடம் உத்தரவிட்டது. தி.மு.க.,வில் முக்கிய முடிவை எடுக்கும் உயர்மட்டக்குழு நேற்று மாலை வரை கூடவில்லை என்றாலும், அரசியல் பரபரப்பு நீடித்தது. டில்லி சென்ற ராஜா, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க அவரது இல்லம் சென்றார். அவர் பிரதமர் வீட்டிற்கு செல்கிறார் என்றதுமே டில்லியில் பரபரப்பு கூடியது. அவர் ராஜினாமா செய்யப்போகிறார் என்று செய்தி வெளியானது. பல தரப்பிலும் எதிர்பார்த்தபடி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராஜா கூறுகையில்,""எனது கட்சி தலைவர் கருணாநிதி ஆலோசனையின் பேரில் பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளேன். என் மீது குற்றம் இல்லை என்பதை, பார்லிமென்ட்டிலும், நீதிமன்றத்திலும் நிருபிப்பேன் என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். பார்லிமென்ட்டில் எதிர்க்கட்சிகள் கிளப்பும் கேள்விகளுக்கு தக்க பதிலளிப்பேன். எனது பதவிக்காலத்தில் தொலை தொடர்புத் துறை மிகுந்த மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது' என்றார்.
ராஜாவின் ராஜினமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர், தொலைதொடர்பு துறை இலாகாவை தன் வசமே வைத்துக்கொண்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராஜா ராஜினாமாவை தொடர்பாக தி.மு.க., தலைமை கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "" பார்லிமென்ட்டின் ஜனநாயக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவும், நாட்டு மக்களுக்கு தேவையான பிரச்னைகள் விவாதித்து முடிவெடுக்கப்பட வழிவகுத்திடும் வகையில், ராஜா அமைசசர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென்று தி.மு.க., முடிவெடுத்து அவருக்கு அறிவுறுத்தியுள்ளது,'' என, தெரிவிக்கப்பட்டது.
ராஜாவின் ராஜினாமாவை அடுத்து, கடந்த இரண்டு நாட்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. ராஜா ராஜினாமா செய்துவிட்டாலும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து, பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணை தேவை என்ற கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: தினமலர்
இதைவிடக் குறைந்த லெவலில் குற்றம் சாட்டப்பட்ட மந்திரிகள் பதவியிழந்திருக்க, ராசா மட்டும் இத்தனை நாட்கள் தாக்குப் பிடித்திருப்பது என்பது அதனுள்ளேயே ஒரு தனி ரிகார்ட் என்றுதான் கூற வேண்டும். ராசா தலித் ஆகவேதான் அவருக்கு எதிராக இத்தனை சதி என்றெல்லாம் கருணாநிதி பிரலாபித்ததெல்லாம் வீணாகப் போயினவா? அல்லது இது வெறும் டேமேஜை லிமிட் செய்யும் நடவடிக்கையா?
பத்திரிகையாளர்களை சந்திக்கும் ராசா தான் பதவி விலகியது தனது தலைவர் டாக்டர் கலைஞரின் அட்வைஸ் பேரிலேயே என்பதை பலமுறை அழுத்திச் சொன்னது ப்ரூட்டஸ் நெம்பவுமே நியாயஸ்தர் என்ற ஆண்டனி சொன்ன ரேஞ்சுக்கு சென்றது.
மேலும் பி.ஜே.பி அரசு ஃபாலோ செய்ததைத்தான் தானும் செய்ததாகக் கூறுகிறார். நடுவில் பல ஆண்டுகள் கடந்த நிலையில் சூழ்நிலைகள் அப்படியே இருக்குமா என்பதைக் கூட வேண்டுமென்றே காணாமல் இருந்துதான் இவர் செயல்பட்டுள்ளார் என்பதுதான் நிஜமாகிறது.
ஆடிட்டர் ஜெனெரல் குறிப்பிட்ட வருவாய் இழப்பான 1,75,000 கோடி ரூபாய் வெறும் பேப்பர் இழப்புத்தான் என கூறப்பட்டாலும், அதை அலட்சியம் செய்யலாகாது என்பதே நிஜம். அத்தனையையும் ராசாவா அடித்துக் கொண்டு போனார் எனக் கேள்வி கேட்பதே அவசியமற்றது. ஏனெனில் அது உண்மையில்லை. ராசா வெறும் முன்னால் வைக்கப்பட்ட சதுரங்கக் காய் மட்டுமே. அவர் பின்னால் இருக்கும் கும்பல்களின் ரேஞ்சே தனி. அது எல்லோருக்கும் தெரியும். அவர் ஒரு பனிப்பாறையின் வெளியே தெரியும் சிறு முனையே. எல்லோருக்கும் பங்கு சென்றிருக்கும் ஆகவேதான் ராசா இத்தனை நாள் குப்பை கொட்ட முடிந்தது.
இங்கு மோதி அவர்களை நான் இழுக்கிறேன். துக்ளக் 2008 மீட்டிங்கில் அவர் அளித்த ஒரு தகவல் சுவாரசியமானது. அவர் என்ன சொன்னாரென்றால், “அரசு மனம் வைத்தால் வருவாயையும் பெருக்க இயலும் என்றார். ஆனால் அது லஞ்சத்தை ஒழித்தால்தான் முடியும் என்றார். உதாரணத்துக்கு மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம் எனக் கூறினார் (எவ்வளவு காலக்கட்டம் என்பதை சரியாக கேட்க இயலவில்லை லௌட்ஸ்பீக்கர் சதி செய்தது). ஆனால் மிகவும் அதிகம் அது, சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான் நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போதுதான் இதை ஊர்ஜிதம் செய்ய சம்பந்தட்டப்பட்ட வீடியோவை மீண்டும் பார்த்தேன். அதில் நான்காண்டுகாலம் எனக்குறிப்பிட்டுள்ளனர். ஆகா ஆண்டுக்கு 50 கோடிக்கு மேல், அதுவும் ஒரே ஒரு செக்போஸ்டில். நீங்களே அந்த வீடியோவை இங்கே பாருங்களேன்.
மோடிக்கு முந்தைய மந்திரி சபைகள் வருவாய் இழப்பைத்தானே செய்தன எனக்கூறி அவருமா அவ்வாறு செய்தார்? ஜோதிக்ராம் திட்டம் நடக்காது என பழைய முன்னுதாரணக்களைக் கூறி அவருக்கு அட்வைஸ் செய்தவர்கள் அனேகம், அவர்களில் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் குஜராத் மந்திரிகளும் அடங்குவர். ஆனால் என்ன அக்கிரமம், மனிதர் கேட்கவில்லையே. அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி எல்லோர் முகத்திலும் கரியைப் பூசிவிட்டாரே. ஆகவேதான் அவருக்கு எதிர்ப்பு அதிகமோ?
ஆக, வருவாய் இழப்பு என்பது வெறும் பேப்பர் எண்ணிக்கை அல்ல. அதற்கு யதார்த்தமும் உண்டு. ஆகவே ராசா அதை எடுத்துச் சென்றாரா என்றெல்லாம் கேள்வி கேட்பது அபத்தத்திலும் அபத்தம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
10 hours ago
39 comments:
அப்படியே, ஊழலில் உச்சத்திலிருக்கும் மாநிலம் பி.ஜே.பி ஆளும் கர்நாடக மாநிலம்தான் என்பதையும் குறிப்பிட்டு - அதற்கு மோடி கூறும் ஆலோசனைகளையும் எடுத்து விட்டிருந்தா ஜோரா இருந்திருக்கும்!
கர்நாடகா பற்றி இங்கே பேச்சு இல்லை. மேலும் எனது ஆதரவு மோடிக்கு மட்டுமே, அவரது சாதனைக்காக. அது குறித்து பேசினால் நலம்.
அப்படியானால், கர்நாடகாவில் காங்கிரஸ் ஊழலற்ற ஆட்சி தந்தது என்பதா உங்கள் வாதம்?
நல்லவற்றை கடைபிடிக்காதவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் கண்டனத்துக்குரியவர்களே. இதில் கர்நாடக பிஜேபி மட்டும் எவ்வாறு விலக்கு பெறும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராசா வெறும் முன்னால் வைக்கப்பட்ட சதுரங்கக் காய் மட்டுமே. அவர் பின்னால் இருக்கும் கும்பல்களின் ரேஞ்சே தனி. அது எல்லோருக்கும் தெரியும். அவர் ஒரு பனிப்பாறையின் வெளியே தெரியும் சிறு முனையே. எல்லோருக்கும் பங்கு சென்றிருக்கும் ஆகவேதன் ராசா இத்தனை நாள் குப்பை கொட்ட முடிந்தது.
கையை குடுங்க.
Ah, Is raja just the tip of the ice berg?Then who is the main body of the iceberg?Yellow Towel or Italy or both?
good post.soodaga topikkai koduthu vitteergale..let raja take rest in house,ie.parliment,in peace.
@ராதாகிருஷ்ணன்
என்னாச்சு இந்த மோடி எதிர்ப்பாளர்களுக்கு? வரிந்து கட்டிக் கொண்டு வரவில்லை அவரைத் திட்ட?
மோடியின் உண்மையான உயர் மதிப்பு இப்போ அவர்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கலாமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
1960 களில் சென்னை மாநகராட்சியை கைப்பற்றி குப்பை லாரி வாங்குவதில் ஊழல் செய்து ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டனர் தம்பிகள்.அப்படி இருந்தும் பூணூலை பிடித்துக்கொண்டு அவர்களுக்கு ஒட்டு போடுங்கள் என்றார் ஆச்சாரியார்.அதன் பலனை இன்றுவரைக்கும் நாம் அனுபவிக்கிறோம்.
@விஜயன்
1967க்குப் பிறகு 43 ஆண்டுகள் கடந்து நாம் 2010-ல் இருக்கிறோம்.
அக்காலகட்டத்தில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமே. அதைத்தான் ஆச்சாரியார் செய்தார்.
பிறகு நமக்கெல்லாம் எங்கே போச்சு புத்தி?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//என்னாச்சு இந்த மோடி எதிர்ப்பாளர்களுக்கு? வரிந்து கட்டிக் கொண்டு வரவில்லை அவரைத் திட்ட?//
The reason is you have removed "anonymous" option while commenting.
//மோடியின் உண்மையான உயர் மதிப்பு இப்போ அவர்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கலாமா?//
Don't over-estimate their wisdom. Can you straighten a dog's tail?
vijayan said...
// //அப்படி இருந்தும் பூணூலை பிடித்துக்கொண்டு அவர்களுக்கு ஒட்டு போடுங்கள் என்றார் ஆச்சாரியார்.// //
ஹா... ஹா...
அப்படி இல்லை'ன்னா (அதாவது பூணூல் காரர்கள் ஓட்டுப்போடாமலிருந்தால்) தி.மு.க தோற்றுப்போயிருக்குமோ!
ஞாநியின் இந்த வார (17/11/2010) ஓ பக்கங்கள் கட்டுரையில்
இந்த மாதிரி கழிவுகளை கடலில் விடுவது சரியானதா என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, இந்தியாவில் வேறெங்காவது அப்படி செய்கிறார்களா என்று பார்ப்போம். குஜராத்தில் கடந்த பதினோரு வருடங்களாக அப்படிச் செய்கிறார்கள்.
தென் குஜராத்தில் சர்காம் நகரத்தில் குஜராத் ஆரசின் ரசாயனத் தொழிற்பேட்டை இருக்கிறது. அங்கிருந்து கழிவுகள் 14 கிலோமீட்டர் தூரத்துக்கு இரண்டடி விட்டமுள்ள குழாய் வழியே கடலுக்கு எடுத்துச் சென்று கொட்டப்படுகிறது. தினசரி 12 மில்லியன் லிட்டர் கழிவு.வழியில் தட்காம்,சரோண்டா, நர்கோல், மரோலி ஆகிய கிராமங்கள் இருக்கின்றன.
நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய் வழி நெடுக ஆங்காங்கே ஒழுகுகிறது. அதனால் நிலத்தடி நீர் மாசாகி நான்கு கிராமங்களிலும் விவசாயமும் குடி நீரும் பாதிக்கப்பட்டுவிட்டது. அடி பம்ப்பில் தண்ணீர் சிவப்பாக வருகிறது. அரிசியையும் பருப்பையும் அந்தத் தண்ணீரில் வேகவைப்பது மிகக் கடினம். தண்ணீரிலேயே ரசாயன வாடை வருகிறது. தட்காம் கிராமக் கடற்கரையில் கழிவுகள் குழாயில் வந்து விழும் இடத்தருகே கொஞ்ச நேரம் நின்றாலே குமட்டலும் மூச்சுத் திணறலும் ஏற்படுவதாகப் பத்திரிகையாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நான்கு கிராமங்களிலும் மக்கள் தொகையில் 60 சத விகிதம் பேர் தோல் நோய்கள், நுரையீரல் பிரச்சினை, ஜீரணக் கோளாறுகளுடன் அவதிப்படுகிறார்கள் என்று அந்த வட்டார மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடலில் மீன் வளம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வாப்பி தொழிற்பேட்டையின்கழிவுகளால் டாமன் டையூ கடற்பகுதி மீவளம் 65 சதவிகிதம் குறைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தட்காம் கடற்பகுதியும் அருகிலேயே உள்ளது. மீன்வளம் பாதிக்கப்பட்டுவிட்டதால் வருடத்தில் நான்கு மாதங்களில் மட்டுமே மீன் கிடைக்கிறது.
குஜராத் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. பல இடங்களில் குழாயைத்தாங்கியிருக்கவேண்டிய சிமென்ட் உடைந்துவிட்டது. கடலுக்குள் செல்லும் குழாயே முழுத்தொலைவும் செல்லாமல் பாதியில் உடைந்து, அதன் ஃபில்டர்கள் பழுதாகிவிட்டன.
இத்தனை சீர்கேடுகளைப் பற்றியும் வாரியம் பொருட்படுத்தவில்லை, எனவே தட்காமில் உள்ள ஒரு குடியிருப்போர் சங்கமும் நான்கு கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்களும் குஜராத் உயர் நீதி மன்றத்தில் சென்ற வருடம் வழக்கு தொடுத்தனர். கழிவுகள் குழாய் வழியே அனுப்பப்படும் விதத்தைக் கண்காணிக்க அதற்கென அமைக்கப்பட்ட நிறுவனம் தவறிவிட்டதாக அதன் வக்கீல் கோர்ட்டிலேயே ஒப்புக் கொண்டார்.
விதிகளின்படி கழிவின் அளவு கடல்நீரில் எந்த விகிதத்தில் இருக்க வேண்டுமென்றால், ஒரு மீன் அதில் 90 நாட்கள் வரை உயிர் வாழ முடியவேண்டும். தட்காம் கழிவை சோதனைக்கு அனுப்பியதில் ஒரு மீன் அதில் ஒரு மணி நேரம் கூட உயிருடன் இருக்க முடியாது என்பது தெரியவந்தது. கடலுக்குள் செல்லும் குழாய் இரண்டு கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டும், நிலத்தில் குழாய் ஆறடி கீழே புதைக்கப்படவேண்டும் என்ற விதிகளும் பின்பற்றப்படவில்லை. கடலுக்குள் செல்லும் குழாய் உடைந்து 6 வருடங்களாகிவிட்டன. இப்போது புதுக் குழாயை தினசரி 24 மில்லியன் லிட்டர் கழிவு கொண்டு செல்ல வசதியாக அமைக்கலாமா என்று அதிகாரிகள் யோசித்துவருகிறார்கள்.
குஜராத்தில் நடக்கும் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஊழல் இல்லை, திறமையான நிர்வாகம் நடக்கிறது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. மோடியின் மதவாதக் கொள்கைகளை விமர்சிக்கிறவர்கள் கூட சமயங்களில் அங்கே ஊழல் குறைவு என்று சொல்கிறார்கள்.
டோண்டு ராகவன் Said...
// //என்னாச்சு இந்த மோடி எதிர்ப்பாளர்களுக்கு? வரிந்து கட்டிக் கொண்டு வரவில்லை அவரைத் திட்ட? மோடியின் உண்மையான உயர் மதிப்பு இப்போ அவர்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கலாமா?//
எதிர்க்கட்சி தலைவர் ரேஞ்சுக்கு, டோண்டு சார் 'என் கேள்விக்கு என்ன பதில்' என்று கேட்பது வியப்பாக இருக்கிறது.
சரி போகட்டும்.
மோடி எதிர்ப்பாளர் என்று தனியாக யாராவது இருக்கிறார்களா? என்ன?
'இந்துத்வா' என்பது ஒரு மோசமான, அயோக்கியர்களின் தத்துவம். அதனை தூக்கிப்பிடிப்பதால் மோடியும் எதிர்க்கப்பட வேண்டியவராகிறார். கூடவே, குஜராத்தில் நடந்த கொடூரமான படுகொலைகளுக்கு தலைமை ஏற்றவர் என்பதால் - அவர் ஒரு இனஅழிப்பு (genocide) குற்றவாளியும் ஆகிறார். அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்.
மற்றபடி, குஜராத்தில், மாநில அரசுத்தலைவர் என்கிற வகையில் அவர் ஒரு சிறந்த நிர்வாகியாக, அரசியல் உறுதிமிக்க தலைவராக இயங்குகிறார் என்பதில் மாற்று கருத்து இல்லை.
இதுக்கு நடுவில் நாட்டில என்ன நடந்துகினு இருக்கின்னு தெரியாமலேயே நம்ம காமெடி பீசு தோல் குருமா இதிலையும் ஜாதிய இழுத்து விட்டு அறிக்கை விட்டிருக்கார். எங்க பொய் முட்டிகிரதுன்னே தெரியல. ச்ச்ச்சப்பா முடியல..
After losing Raja as Telecom Minister, DMK now loses the Telecom portfolio itself.
http://timesofindia.indiatimes.com/india/Kapil-Sibal-given-charge-of-Telecom-Ministry/articleshow/6930174.cms
Sonia Cong. has started asserting itself, it seems. Could Rahul Gandhi be behind all these developments?
appa arulu,poonul moodarignar was
required at that time to forge an electoral alliance.not the question of head count.mandaiyil masala vendum
intha mathiri kariangalukku.it seems u r too young to ponder over such things correctly.it was absoluyely correct that former cm bhatha vatsalam predicted that a poisonous virus was spreading in year 1967.
மோடி நல்லது செய்தால், திறமையான நிர்வாகம் செய்யும்போது மனம் திறந்து பாரட்ட வேண்டும்.
இதற்கு அவர் எந்த கட்சி, நான் எந்த கட்சி என்கிற அளவுகோலை வைத்தால் அவரைப் பாராட்ட மனம் வராது.
பொதுவாக மற்ற முதலமைச்சர்களோடு நிர்வாகத்தில் ஒப்பிடும்போது இவர் பலமடங்கு சிறந்தவர் என்பது என் கருத்து..
//
பொதுவாக மற்ற முதலமைச்சர்களோடு நிர்வாகத்தில் ஒப்பிடும்போது இவர் பலமடங்கு சிறந்தவர் என்பது என் கருத்து..
//
உருப்படியான எதிர்ப்பாளர் போல் தெரிகிறது.
அருள் இவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
அருள்,
அரசியலில் நிரந்தர எதிரி என்று யாருமே இல்லை என்பதை தேர்தலுக்குத் தேர்தல் நிரூபிக்கும் கட்சியில் இருந்துகொண்டு, "இந்துத்வா என்பது அயோக்கியர்களின் தத்துவம்" என்றெல்லாம் பேசுவது நல்லதல்ல.
பா.ம.க திடீரென்று ஒரு நாள் பா.ஜ.க வுடன் கூட்டணிவைத்தால் என்ன செய்யப்போவதாக உத்தேசம் ?
@வஜ்ரா said...
கொள்கையைப் பார்த்து யாராவது கூட்டணி வைக்கிறார்களா? என்ன?
//@வஜ்ரா said...
கொள்கையைப் பார்த்து யாராவது கூட்டணி வைக்கிறார்களா? என்ன?
// அருளு, நீங்கள் தான் உங்க ராமதாஸுக்கிட்ட சொல்லி கொள்கைக்காக கூட்டனி வைக்கச் சொல்லுங்களேன்!
மேலும் .....1998 டிசம்பர் 25 முதல் 31 வரையிலான தேதிகளில் இந்துத்துவா சக்திகள் குஜராத்தில் மிகச் சிறிய டாங்ஸ் மாவட்டத்தில் ஒன்பது தேவாலயங்களை தீக்கிரையாக்கி யுள்ளன. பதினொரு தேவாலயங்களிலிருந்து அனைத்துப் பொருள்களையும் அடித்து நொறுக்கியுள்ளன. ... இது இந்திய அரசியல் அமைப்புக் கூட்டம், நாட்டில் உள்ள அனைத்துக் குடி மக்களுக்கும் உறுதி அளித்துள்ள தனி நபர் சுதந்திரத்தின் மீதும், அடிப்படை உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாகும்...டாங்ஸ் மாவட்டத்தில் நடந்த இந்தக் கேவலமான காட்சிகளை நேரில் கண்ட நிலையில் தான் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடு செல்லுவேன்! என்று வெளிப் படையாகவே கூறினார்!
அக்கட்சியின் பிரதமரே அநாகரிகமாகக் கருதும் அளவுக்கு நடந்து கொண்ட ஒரு பாசிஸவாதியை இந்தியாவின் பிரதமராக்கத் துடிக்கிறது ஒரு குள்ள நரிக் கூட்டம் என்பதை வெகு மக்கள் வெகு எச்சரிக்கையுடன் நோக்க வேண்டும்.....குஜராத்தில் நடந்த சம் பவங்களுக்குப் பொறுப்பேற்று நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று அன்றைய பிரதமர் வாஜ்பேயி கூறியதாகவும், அதற்கு மோடியும் கோவாவில் நடக்க விருக்கும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வ தாகவும் கூறினார் என்று கூறப்பட்டுள்ளதே - இதற்கு என்ன சமாதானம்?
இதனை விட கேவலம், அடுத்த குற்றவாளி...முன்னால் இந்தியத் துணைப்பிரதமர் லால்கிஷண் அத்வானி. இவரை பொறுத்தவரையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அதற்குத் தலைமை தாங்கியவர். அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாற்றில் இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ, 153பி வகுப்புவாத வெறி உணர்வைப் பரப்புதல் 147 கலவரம் செய்தல்.....149 பொது இலக்கை எட்டுவதற்கு ஒரு குற்றவியல் காரியத்தைச் செய்தல்....505 வழிபாட்டுத்தலத்தில் வெவ்வேறு வகுப்பாரிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்துதல்......இவரெல்லாம் குற்றவாளியாக இருந்தும் ஒரு உள்துறை அமைச்சர் பதவியில் ஐந்துவருடம் முடிந்து விட்டுதானே வெளியே வந்தார்....18 ஆண்டுகள் ஓடிவிட்டபிறகும், மிகப் பெரிய குற்றத்தைச் செய்த ஒருவர் தண்டனை அளிக்கப்படாமல் ராஜநடை போட்டுத் திரிகிறார் என்றால் இந்தியாவின் நிருவாகமும், சட்டமும், நீதியும் எந்த இலட்சணத்தில் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்
மேலே நான் சொல்லி இருப்பது ஒரு பானை சோற்றில் ஒரே ஒரு சோறுதான்...இன்னும் நிறைய இருக்கு...... இது போல எல்லா அரசியல் வாதிகளும் குற்றம் புரிந்தவர்கள் இன்னும் குற்றவாளியாக இருப்பவர்கள்.....ஒரு நஷ்டத்திர்க்காக (அதுவும் இன்னும் நிருபிக்க இயலாத நஷ்டம்...approxmate calculation என்று சொல்லுவார்களே அப்படி கணித்து சொல்லப்பட்ட ஒன்று) மாண்புமிகு அ.ராசா பதவி விலகவேண்டும் என்று குரல்கொடுத்தால் ...மேலே நான் சொன்ன குற்றவாளிகள் அனைவரும் சமுக விரோதிகள் இவர்கள் அரசியலை விட்டே விலகவேண்டும்...விலகுவார்களா?
சரி அப்படி குற்றம் செய்த அரசியல்வாதிகள் பதவி விலகவேடும் என்...றால் முதலில் வருபவர் குஜராத் முதல்வர் நரேந்திர பாய் தாமொதரதாஸ் மோடி ...நவீன நீரோமன்னன் என்று உச்சநீதிமன்றம் கூறிய பிறகும்கூட கொஞ்சம் கூட கூச்சப்படவில்லை இந்த ஆசாமி..............இவர் வக்கனை எல்லோரும் அறிந்ததே....வெளிநாடுகளுக்குச் செல்ல இவர் ஆயத்தமான போது இவருக்கு விசா வழங்க மறுத்தது என்பதைக்கூட உடம்பில் ஒட்டிக் கொண்ட தூசுகளைத் தட்டி விட்டது போலத்தான் நடந்து கொண்டார். பல வழக்குகளை அதிகாரத்தைப் பயன்படுத்தி படுகுழிக்குள் தள்ளிய நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈசான் ஜாஃப்ரி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் மூலம் முதல் அமைச்சர் மோடி சட்டத்தின்வெளிச்சத்துக்கு இழுத்துக்கொண்டு வரப்பட்டுள்ளார். ...
அகமதாபாத் நகரின் முக்கிய பகுதியான குல்பர்கா சொசைட்டி என்னும் இடத்தில் தான் இந்தப்படு-கொலை நடந்தது. 69 பேர் துடிக்கத் துடிக்கப்படுகொலை செய்யப்பட்-டனர்....இந்த வழக்கில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை என்பது பயங்கரமானது....படுகொலை செய்யப்பட்ட ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரிஎன்ற பெண்மணி மட்டும் தன்னந்தனியான வீராங்கனையாக இருந்து, அதிகார மலைகளோடு மோதினார்; மோதிக் கொண்டே இருந்தார்....
கடைசியில் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். இப்பொழுது விடிவு காலம் ஏற்படும்என்ற நம்-பிக்கை ஒளிக்கீற்றுப் படர்ந்திருக்-கிறது.
ஆர்.கே. இராகவன் தலைமையில் 5பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து, முதல் அமைச்சர் மோடி, அவரது அமைச்சரவையினர் உட்பட அனைத்து அதிகாரிகளையும் விசாரிக்கும்படி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
சிறப்புப் புலனாய்வுக்குழு முன் மார்ச்சு 21 அன்று ஆஜராக வேண்டும் என்று மோடிக்கு சம்மன், அனுப்பப்பட்டது. விராதி வீரரான மோடி விசாரணைக்குச் செல்லவில்லை.
அடுத்த கட்டமாக வேறு வழியின்றி விசாரணைக்குச் சென்றார் (27.3.2010) புலனாய்வுக் குழு விசாரணை அதிகாரி மல்ஹோத்ரா தான் மோடியை விசாரித்துள்ளார்.
பகலில் 5 மணி நேரமும், இரவில் 4 மணிநேரமும் விசாரிக்கப்பட்டுள்-ளார். முதல் அமைச்சர் ஒருவரிடம் சி.பி.அய். இவ்வளவு நேரம் விசாரித்தது என்பது இதுதான் முதல் தடவை என்று சி.பி.அய். வட்டாரம் தெரிவித்-துள்ளது.
தெகல்ஹா ஊடகம் குஜராத் கலவரத்தின் பின்னணியில் முதல் அமைச்சர் நரேந்திரமோடி மிக வலுவாக இருந்தார் என்பதை வீடியோவில் பதிவு செய்து இருட்டில் இருந்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது....இந்த கேவலத்தை எல்லாம் ஏற்று கொண்டு இன்னும் பதவி கட்டிலில் உட்கார்ந்து கொண்டு திரியும் ஒருவர் உண்டு என்றால் அவர் யார்?
மேலும் .....1998 டிசம்பர் 25 முதல் 31 வரையிலான தேதிகளில் இந்துத்துவா சக்திகள் குஜராத்தில் மிகச் சிறிய டாங்ஸ் மாவட்டத்தில் ஒன்பது தேவாலயங்களை தீக்கிரையாக்கி யுள்ளன. பதினொரு தேவாலயங்களிலிருந்து அனைத்துப் பொருள்களையும் அடித்து நொறுக்கியுள்ளன. ... இது இந்திய அரசியல் அமைப்புக் கூட்டம், நாட்டில் உள்ள அனைத்துக் குடி மக்களுக்கும் உறுதி அளித்துள்ள தனி நபர் சுதந்திரத்தின் மீதும், அடிப்படை உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாகும்...டாங்ஸ் மாவட்டத்தில் நடந்த இந்தக் கேவலமான காட்சிகளை நேரில் கண்ட நிலையில் தான் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடு செல்லுவேன்! என்று வெளிப் படையாகவே கூறினார்!
அக்கட்சியின் பிரதமரே அநாகரிகமாகக் கருதும் அளவுக்கு நடந்து கொண்ட ஒரு பாசிஸவாதியை இந்தியாவின் பிரதமராக்கத் துடிக்கிறது ஒரு குள்ள நரிக் கூட்டம் என்பதை வெகு மக்கள் வெகு எச்சரிக்கையுடன் நோக்க வேண்டும்.....குஜராத்தில் நடந்த சம் பவங்களுக்குப் பொறுப்பேற்று நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று அன்றைய பிரதமர் வாஜ்பேயி கூறியதாகவும், அதற்கு மோடியும் கோவாவில் நடக்க விருக்கும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வ தாகவும் கூறினார் என்று கூறப்பட்டுள்ளதே - இதற்கு என்ன சமாதானம்?
இதனை விட கேவலம், அடுத்த குற்றவாளி...முன்னால் இந்தியத் துணைப்பிரதமர் லால்கிஷண் அத்வானி. இவரை பொறுத்தவரையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அதற்குத் தலைமை தாங்கியவர். அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாற்றில் இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ, 153பி வகுப்புவாத வெறி உணர்வைப் பரப்புதல் 147 கலவரம் செய்தல்.....149 பொது இலக்கை எட்டுவதற்கு ஒரு குற்றவியல் காரியத்தைச் செய்தல்....505 வழிபாட்டுத்தலத்தில் வெவ்வேறு வகுப்பாரிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்துதல்......இவரெல்லாம் குற்றவாளியாக இருந்தும் ஒரு உள்துறை அமைச்சர் பதவியில் ஐந்துவருடம் முடிந்து விட்டுதானே வெளியே வந்தார்....18 ஆண்டுகள் ஓடிவிட்டபிறகும், மிகப் பெரிய குற்றத்தைச் செய்த ஒருவர் தண்டனை அளிக்கப்படாமல் ராஜநடை போட்டுத் திரிகிறார் என்றால் இந்தியாவின் நிருவாகமும், சட்டமும், நீதியும் எந்த இலட்சணத்தில் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்
மேலே நான் சொல்லி இருப்பது ஒரு பானை சோற்றில் ஒரே ஒரு சோறுதான்...இன்னும் நிறைய இருக்கு...... இது போல எல்லா அரசியல் வாதிகளும் குற்றம் புரிந்தவர்கள் இன்னும் குற்றவாளியாக இருப்பவர்கள்.....ஒரு நஷ்டத்திர்க்காக (அதுவும் இன்னும் நிருபிக்க இயலாத நஷ்டம்...approxmate calculation என்று சொல்லுவார்களே அப்படி கணித்து சொல்லப்பட்ட ஒன்று) மாண்புமிகு அ.ராசா பதவி விலகவேண்டும் என்று குரல்கொடுத்தால் ...மேலே நான் சொன்ன குற்றவாளிகள் அனைவரும் சமுக விரோதிகள் இவர்கள் அரசியலை விட்டே விலகவேண்டும்...விலகுவார்களா?
//பகலில் 5 மணி நேரமும், இரவில் 4 மணிநேரமும் விசாரிக்கப்பட்டுள்ளார். முதல் அமைச்சர் ஒருவரிடம் சி.பி.அய். இவ்வளவு நேரம் விசாரித்தது என்பது இதுதான் முதல் தடவை என்று சி.பி.அய். வட்டாரம் தெரிவித்துள்ளது.
தெகல்கா ஊடகம் குஜராத் கலவரத்தின் பின்னணியில் முதல் அமைச்சர் நரேந்திரமோடி மிக வலுவாக இருந்தார் என்பதை வீடியோவில் பதிவு செய்து இருட்டில் இருந்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது....இந்த கேவலத்தை எல்லாம் ஏற்று கொண்டு இன்னும் பதவி கட்டிலில் உட்கார்ந்து கொண்டு திரியும் ஒருவர் உண்டு என்றால் அவர் யார்?//
இவ்வளவு நேரம் விசாரித்தவர்கள் அவர் நிஜமாகவே குற்றம் செய்திருந்தல் உள்ளே போடாமல் இருந்திருப்பார்களா? டெஹல்கா டேப் எடிட் செய்யப்படாத உண்மை டேப்புகளாக இருந்திருந்தால் மோடி எலெக்ஷனிலேயே நின்றிருக்க முடியாதே.
2001-ல் வந்த குஜராத் கலவரத்தை வைத்து 2002-ல் மட்டுமல்ல 2007-லும் எலெக்ஷன் பிரச்சாரங்கள் நடந்தன. தேர்தல் கமிஷனரே காங்கிரசின் ஏஜெண்ட் ரேஞ்சுக்கு செயல்பட்டு மோடியை கோமாளி என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். மக்கள் இவ்வளவு க்ளியராக மோடிக்கு ஆதரவு என்பதை உணர்ந்து, எல்லா துவாரங்களையும் மூடிக்கொண்டு போனார்.
சமீபத்திய நகராட்சித் தேர்தலில் இசுலாமியரின் ஓட்டுக்கள் இல்லாது மோடி ஜெயித்திருக்க முடியாது என்பதை அவரது பரம விரோதிகளாக ஆங்கில மீடியாவே வேறு வழியின்றி முகத்தில் வழிந்த அசட்டுக்களையை துடைத்துக் கொண்டு ஒத்துக் கொண்டது.
அது சரி 1984-ல் சீக்கியக் கொலைகளின் நாயகர்தானே ராஜீவ், அவரது இத்தாலிக்கார மனைவியைத்தானே காங்கிரசார் அன்னை என்றெல்லாம் கொண்டாடுகின்றனர்?
மதுரையில் தினகரன் ஊழியர்கள் கொலைக்கு காரணகர்த்தாவை பிடித்து விட்டார்களா போலீசார்?
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிபிஐ அழும்பு செய்ய, சுப்ரீம் கோர்ட்டிடம் உதை வாங்கியதே, அந்த அமைப்பையா சிலாகிக்கிறீர்கள்.
இவ்வளவு நீட்டி முழக்கும் நீங்கள் மோடி மேல் ஒரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டைக் கூற முடிந்ததா?
போங்க சார், ஊழல்னா என்னங்கறதை ஊழல் நாயகர்களான காங்கிரசார், திமுகவினர், அதிமுகவினரிடம் பாடம் கேட்டு வாருங்கள்.
வாயில ஏதாவது வரப்போவுது.
டோண்டு ராகவன்
/*வாயில ஏதாவது வரப்போவுது.*/
மோடிக்கு வக்களுத்து வாங்கும் நீங்கள் ஏன் இங்கு இருக்கணும்...குஜராத் பார்க்க போகவேண்டியது தானே....பாசம் பொங்குதோ?மோடி வந்தாராம்....இவரு சீன போடுறாரு..நனகனல்லூருல உட்கார்ந்துகிட்டு பிராமின்ஸ் ஒன்லின்னு போர்டு போடுற அயோக்கியர்..... நீங்க சொல்லுற மூதலிடு மற்றும் பொடலங்காய் எல்லாம் 15 வருடம் முன்னாடியே தமிழகத்து வந்துருச்சு......போங்க போயி ....எனக்கு வாயில எதாவது வந்துரபோகுது.............
/*இவ்வளவு நீட்டி முழக்கும் நீங்கள் மோடி மேல் ஒரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டைக் கூற முடிந்ததா?*/
குஜராத் நிர்வாகமே ஊழல்ல தான் போயிட்டு இருக்கு..இதுல தனி பட்ட முறையில வேற சொல்லணுமோ? பருப்பு...
@selvam
நான் எங்கு வசிக்க வேண்டும் எனச் சொல்ல நீர் யார்? நான் ஊரறிந்தவன், வெளிப்படையாக பேசுபவன். உம்மை மாதிரி ப்ரொஃபைலை மூடி முட்டாக்கு போட்டு வரவில்லை.
குஜராத அரசு ஊழல் நிறைந்தது என்றால், அதற்கான ஆதாரங்களை காங்கிரசிடம் தரவும். உமக்கு சலாமே போடுவார்கள்.
டோண்டு ராகவன்
Spectrum: Real Background
1. As Per CAG report, it’s not a Scam, it’s a revenue loss to Govt and the Value mentioned is a Paper Value and not a real accrual one.
2. Telecom Ministry followed the TRI regulatory norms (No Auction for 2G) and the same procedure followed from 1998/99 by various Telecom Ministers.
3. 2G is basic Voice feature and to be a one of basic needs for millions of people of India and it’s not like 3G which is a luxury Service and to be priced at action model.
4. For argument sake, If 2G is auctioned and given to Operators at much higher prices / market price, they’ll back charge the cost from the Users of mobile services. Think of the mobile call rates prevailed at the time of initial stages of its usage in India and compare it with existing rates. Also when compare the Mobile Tariff of India with US & UK or Other Countries, it’ll be very less.
5. Due to the low pricing of the spectrum, the real beneficiaries are Citizens of India, who uses 2G services for basic voice calls. They pay less cost for minute usage when compared to other Countries. Because of low rates, the user volume and tele-density is increased a lot.
6. Those who oppose this are those who have mindset that Middle-Class/Poor/rural/underprivileged people of India SHOULD NOT use Mobile Phones. In case the 2G Spectrum was auctioned at higher Prices, then the Mobile Cost might be 10 Rs per Minute. So the real beneficiaries are Middle-Class/Poor/rural/underprivileged people of India.
7. In Ration Shops Rice is given for 1Re, you can’t say market price for Rice is 11 Rs and hence there’s a loss of 10 Rs for each Kg and calculate the overall loss for Tones of Rice distributed thru Ration Shops (If you calculate it’ll be in lacks of Cores). Rice distribution is done thru Ration Shops for the benefit of millions of people who can’t afford to buy at market price. In the same manner, 2G Service is one of basic needs in this modern world of communication. If it’s priced at market value, then it can’t be afforded/useable by millions of people in India. How many of you ready to buy LPG Gas Cylinder, Petrol and Diesel at market price?, if you expect some form of subside from Govt for these products, it’s all so a revenue loss for Government.
8. 2G in the year 2007 was at declining stage of Product / Technology life cycle. The next generation, 3G was very much at the initial stage of discussion. No fool will invest huge money in form of auction/market price in a Near-Decline technology. They can buy only at nominal price and this was actually happened.
9. For example, If Microsoft is about to launch New Software with advanced features in next couple of months, will you buy it’s Old version at the price of New Version?. You may not even buy old version at existing price, you will be ready to buy it ONLY if some Price reduction/discount is given on the Old Version (Like, Sale Offers given for Products)
10. There might be some deviations in giving licenses to operators and it’s common in every department of Government.
What Raja did is like a clearance Sale, 2G was there since 98/99 and when Raja became Telecomm Min in 2007, found that some unutilized 2G spectrum bandwidth is available. He foreseen that 3G shall hit by 2008/2009, hence did a Stock Clarence Sale as per already existing and followed up process..
Actually Raja did a additional revenue generation, he could have just ignored the unutilized 2G Bandwidth and kept quiet. In that case this whole issue wouldn't pop-upped and few Old Big Telecom Providers shall be enjoying the tele com market with their own tariffs..
Prakash,
Your comments are totally distorting the facts and are misleading, to say the least.
//As Per CAG report, it’s not a Scam, it’s a revenue loss to Govt and the Value mentioned is a Paper Value and not a real accrual one.//
CAG report has said that had Raja & his DoT followed proper procedures and contemporary pricing, the Govt. would have earned much, much more than the paltry sums which it earned. Hence, CAG has tried to estimate the loss accrued to Govt of India by comparing with (1) what Sing Tel had quoted to pay the Govt at that time; (2) what rate the successful bidders were able to get by selling of their part of their equity stake to other 'real' telecom players; (3) what the 3G auction has fetched the Govt. of India; and (4) valaution benchmark based on both CDMA & GSM spectrum given to some other operators subsequently. So, though it is only an estimate, CAG has arrived at it it different possible ways based on events past & subsequent. However, there is no denying the fact that it is the money which has been DENIED to GoI by Raja.
//Telecom Ministry followed the TRI regulatory norms (No Auction for 2G) and the same procedure followed from 1998/99 by various Telecom Ministers.//
2001 prices were determined based on the then prevailing telecom market which was in its infancy. Back in 2001 operators were hardly able to make a dent in terms of meaningful subscriber additions and almost all of them were loss-making. It was a difficult situation and the authorities adopted a different route to incentivise mobile players. Hence a revenue share arrangement was worked out then.
in 2007, it all seemed to going well for the telecom industry. With seven million subscribers being added every month and healthy growth rates in financials, mobile players never seemed to have it so good. With robust subscriber additions and most pan-India and some regional operators becoming profitable (most of them had more than 30 per cent operating margins), there was clearly a case for putting a premium on spectrum allocation to operators. (Contd...)
(Contd...)
//2G in the year 2007 was at declining stage of Product / Technology life cycle. The next generation, 3G was very much at the initial stage of discussion. No fool will invest huge money in form of auction/market price in a Near-Decline technology. They can buy only at nominal price and this was actually happened.//
There were enough fools to buy the shares of the successful bidders of 2007. Swan Telecom (with no prior experience) got the pan-India license at Rs. 1537 cr. and sold 45% equity stake to Etisalat for Rs. 4200 cr. Unitech (construction co.) got license at Rs. 1661 cr. and sold 60% equity stake to Telenor for Rs. 6200 cr. So much for your canard.
//There might be some deviations in giving licenses to operators//
Not some. There were ONLY deviations from the established norms like First Come First Served, advancing the cut-off date with retrospective effect and giving just 45 minutes time/deadline to establish bank guarantees. These are all clearly designed to ensure only the "preferred" group of bidders alone were able to meet the adhoc criteria and benefit with low prices, which can then be sold thru equity stake sale at higher rates and then the powers that be can be taken care of thru their pre-agreed commission.
Yesterday Supreme Court has been informed that, out of the 122 licenses given, 85 were given to corporates who did not qualify for bidding on one count or the other.
Please go thru Business Line dated 16th Nov.'10 for many more interesting points on this matter.
It is clear Raja & his DoT brazenly did this 2G spectrum sale by totally disregarding the recommendation/advice of TRAI, PMO, Legal Ministry & Finance Ministry. And in their eagerness to help their favoured bidders, they have left tell-tale marks like a murderer leaves while escaping hurriedly after killing his victim.
The track record of our nation doesn't augur well for any corruption case to reach its logical end and this case also may go the same way. However, Sonia Cong. is sure to gather enough ammunition thru CBI, ED & DGIT enquiries to keep Karunanidhi & his DMK in check thru arm-twisting & silent black-mailing.
(Contd...)
//2G in the year 2007 was at declining stage of Product / Technology life cycle. The next generation, 3G was very much at the initial stage of discussion. No fool will invest huge money in form of auction/market price in a Near-Decline technology. They can buy only at nominal price and this was actually happened.//
There were enough fools to buy the shares of the successful bidders of 2007. Swan Telecom (with no prior experience) got the pan-India license at Rs. 1537 cr. and sold 45% equity stake to Etisalat for Rs. 4200 cr. Unitech (construction co.) got license at Rs. 1661 cr. and sold 60% equity stake to Telenor for Rs. 6200 cr. So much for your canard.
//There might be some deviations in giving licenses to operators//
Not some. There were ONLY deviations from the established norms like First Come First Served, advancing the cut-off date with retrospective effect and giving just 45 minutes time/deadline to establish bank guarantees. These are all clearly designed to ensure only the "preferred" group of bidders alone were able to meet the adhoc criteria and benefit with low prices, which can then be sold thru equity stake sale at higher rates and then the powers that be can be taken care of thru their pre-agreed commission. (Contd...)
(Contd...)
Yesterday Supreme Court has been informed that, out of the 122 licenses given, 85 were given to corporates who did not qualify for bidding on one count or the other.
Please go thru Business Line dated 16th Nov.'10 for many more interesting points on this matter.
It is clear Raja & his DoT brazenly did this 2G spectrum sale by totally disregarding the recommendation/advice of TRAI, PMO, Legal Ministry & Finance Ministry. And in their eagerness to help their favoured bidders, they have left tell-tale marks like a murderer leaves while escaping hurriedly after killing his victim.
The track record of our nation doesn't augur well for any corruption case to reach its logical end and this case also may go the same way. However, Sonia Cong. is sure to gather enough ammunition thru CBI, ED & DGIT enquiries to keep Karunanidhi & his DMK in check thru arm-twisting & silent black-mailing.
டோண்டு சார் - 2G அலைவரிசை ஊழல் நடப்பதை யார் எப்போது எப்படி கண்டுபிடித்தார்கள், போன்ற விவரங்கள் இந்த உரலில் உள்ளது. முடிந்தால் தமிழாக்கம் செய்து வெளியிடுங்கள் - கழக குஞ்சுகளுக்கு வயிறு எரிய உதவி செய்த திருப்தி இருக்கும்.
http://www.dailypioneer.com/296854/The-man-who-felled-a-king.html
Many have mentioned that few companies have sold the allotted spectrum at higher cost to others. It's same like buying Ration Rice and selling in Open Market for higher price.
If rice itself can be sold at 200% of its original ration price, why can't those companies sell allotted spectrum to a higher Price?
Why the media mafias not focus and investigate who is behind these companies, Why the Companies regulatory body and other such bodies not acted long back. There is no second opinion that those companies need to treat as Rice Thieves. Why they point only on Raja. He had allotted as per the policy (First Come First Serve) that’s all. Also, many says that PM and Law ministries have written & advised Telecom Min on this, But, Raja says his ministry have answered & replied to their letters. Why those Medias are NOT showing the reply, just they show letters written by PMO.
/*நான் எங்கு வசிக்க வேண்டும் எனச் சொல்ல நீர் யார்? நான் ஊரறிந்தவன், வெளிப்படையாக பேசுபவன். உம்மை மாதிரி ப்ரொஃபைலை மூடி முட்டாக்கு போட்டு வரவில்லை.*/
என்னுடைய பெயர் திருசெல்வன்.....மதுரை...இப்போது வசிப்பது காட்டன்குலத்தூர்.சென்னை போதுமா? ஏய் யாரு மூடி முட்டைக்கு போட்டு வருவது......நானும் ஊரரிந்தவன் தான்...நானும் ஏன் பெயருடன் தான் வருகிறேன்........இவரு பெரிய இவரு.....அப்புறம் ஏன் குஜராத்துல வேலைபார்க்குற மத்திய அரசு பார்ப்பான் இங்கே வந்து வீடு வாங்குறான் .....திராவிட ஆட்சிதான் ஊழல் பண்ணுது..மோடி நல்ல பண்ணுறன்...ஓடவேண்டியது தானே அங்கெ....யாரே ஏமாத்த இன்னும்? முஸ்லிம் ஊட்டு வாங்கி ஜெயுசுட்டாராம் மோடி....இருக்குரவநேஎல்லாம் கொன்ன ஒட்டு போடா எவன் இருப்பான்...அதன் அந்த தொகுதியில இருந்த அத்துண முஸ்லிமையும் கொன்னுட்டனே மோடி..அப்புறம் அங்கெ ஜெயிக்காம என்ன பண்ணுவன்........பித்தலாட்ட நாய்களா?
/*குஜராத அரசு ஊழல் நிறைந்தது என்றால், அதற்கான ஆதாரங்களை காங்கிரசிடம் தரவும். உமக்கு சலாமே போடுவார்கள்.*/
இவரு அப்படியே எல்லாம் அதரத்தொடதன் இங்கே எழுதுறாரு....பொய்,பித்தலாட்டம்,காமம் பற்றி பேசும் பாப்பார பசங்க ஆதாரம் கேக்குரத்த பாரு........
@செல்வம்
தைரியம் இருந்தா ப்ரொஃபைலை திறந்து பதிவுகள் போட்டு, பதிவர் மீட்டிங்குகளுக்கு வந்து ஊரறிந்தவனாக ஆகவும். அது வரை நீர் முட்டாக்குபோட்டவரே. இன்னும் ப்ரொஃபைல் மூடித்தானே இருக்கிறது.
டோண்டு ராகவன்
Every one quote CAG report on Spectrum, Particularly Jayalalitha even asks to arrest Raja based on CAG reports. The same JJ, when CAG pointed revenue loss of 11,000 Crores for TN government in 2004, whether she resigned or got arrested?
Instead, JJ gave a one page advertisement on all National News papers on Friday, 6th August, 2004 stating that CAG report is just a Govt audit report and argued that there was no actual loss of revenue.
Pls refer the advertisement on11th Page, Times Of India (Mumbai Edition).
http://epaper.timesofindia.com/Default/Client.asp?skin=pastissues2&enter=LowLevel&AW=1289923326765
Any Audit Authorities shall raise doubts and Queries on the subject they conduct Audit. Even raises Non-Conformities (NCs) and Observations. But they are NOT final, if sufficient proofs and justifications are given, those Audit Observations and Queries shall be closed. This is normal audit practice, in this Spectrum Case also, DoT & Telecom Ministry shall explain on what basis they allotted the Spectrum and it’s a Govt Policy decision.
Now the same JJ and others quote CAG report to target Raja, if it comes to them CAG is just a report, for others it is a Final Judgment and those should be prosecuted immediately.
//
Many have mentioned that few companies have sold the allotted spectrum at higher cost to others. It's same like buying Ration Rice and selling in Open Market for higher price.
If rice itself can be sold at 200% of its original ration price, why can't those companies sell allotted spectrum to a higher Price?
//
In any case doing so is illegal and punishable offense. It is also a form of corruption as you tend to get a certain percentage commission by selling the rationed rice to the middle men.
Nevertheless, unlike ration rice, spectrum is not a "subsidized commodity" to be given to poor people.
Mr. Prakash you should read Gopikrishnan's article from pioneer and speak.
@dondu ஆமா ஊரரின்தவர்...நீயே சொல்லிக்க வேண்டியதுதான்... ...இங்கே வந்து கமெண்ட்ஸ் போடுற எல்லோரும் ஊரறிந்து தான் போடணுமுன்ன...உன் அறியாமையை என்ன சொல்ல....இதுல என்ன ப்ளாக் எழுத வேற சொல்லுற......அப்புறம் சந்திப்பு அப்படி இப்படின்னு உளற......இதே உன்னை ஆதரித்து கமெண்ட்ஸ் போட்ட இதெல்லாம் கேட்பிய.....வலிக்குதா? வாயில வந்துடும்ன்னு அனகரீமா பதில் சொன்ன அயோக்கியர் முதலில் யாரு?நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கனை இல்ல....இதுல நான் யாருன்னு இன்னும் அட்ரஸ் எல்லாம் கொடுக்கனுமா..இந்த அயோக்கிய பார்ப்பானுக்கு.....என்ன அந்த காலத்துல இருந்து ஊற ஏமாத்தி பேனா புடிச்ச பயலுகன்ன......இப்போ எல்லோரும் படிச்சு கேள்விகேட்டு மொவரயில மொத்தினதும் வலிக்குதா?
Post a Comment