நான் சமீபத்தில் 1954 முதல் 1962 வரை திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் படித்தபோது, ஹிந்தி வகுப்புகள் ஒரு ஜோக்காகவே பார்க்கப்பட்டு வந்தன.
ஆறாம் வகுப்பிலிருந்து ஹிந்தி மற்றும் ஆங்கிலப் பாடங்கள் ஆரம்பிக்கும். அதற்கு ஈராண்டுகளுக்கு முந்தியிலுருந்தே என் அன்னை எனக்கு இரு மொழிகளையும் கற்பித்து வந்தார். ஆகவே டீச்சர் எழுத்துக்களை வேகமாக போர்டில் எழுத நான் சுலபமாக அவற்றை எழுத முடிந்தது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை என் அன்னை இலக்கணத்துடன் கற்றுத் தந்ததால் அம்மொழிக்கான தேர்வுகள் எனக்கு எப்போதுமே கஷ்டமாக இருந்ததில்லை.
ஆனால் ஹிந்தியை பொருத்தவரை இன்னொரு கூத்தும் நடந்தது. அதன் தேர்வில் பாஸ் செய்ய வேண்டியதில்லை. ஆகவே அதன் மதிப்பெண்கள் ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு செல்லும் விஷயத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதனாலேயே அவ்வகுப்புகள் தர்ம ஹிந்தி வகுப்புகள் என அன்புடன் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன.
தேர்வுகளில் ஒரு விதி கண்டிப்பாக அமுலாக்கப்பட்டது. அதாவது அரை மணி வரை ஹாலில் இருந்தாக வேண்டும். அரை மணி பெல் அடித்ததும் பேப்பரை மடித்துக் கொடுத்து விட்டு வெளியேறலாம். இதற்கு பிராக்டிகலாக ஒரு காரணம் இருந்தது. அதாவது லேட்டாக வரும் மாணவர்கள் அரை மணிக்குள் வந்தாக வேண்டும். ஆகவே வெளியே செல்லும் மாணவர்கள் உள்ளே வருபவர்களுக்கு பேப்பரை லீக் செய்யக் கூடாது என்ற எண்ணமே இந்த ஆணைக்குக் காரணம்.
சாதாரணமாக தேர்வுகளிலிருந்து அரை மணிக்கு பிறகு உடனே யாரும் செல்ல மாட்டார்கள்தான். பெரும்பான்மையினர் கடைசி நிமிடம் வரை எழுதுவார்கள் அல்லது எழுதியதை ரிவைஸ் செய்வார்கள். பல முறை கடைசி மணி அடித்ததும் “எழுதுவதை நிறுத்துங்கள்” என்ற அறிவிப்புடன் மேற்பார்வையாளர்கள் ஒவ்வொரு பெஞ்சாக சென்று பேப்பர் கலெக்ட் செய்வார்கள். அதற்கு ஒரு நிமிடம் முன்வரைக்கும் எழுதியவர்களும் உண்டு.
ஆனால் ஹிந்தி தேர்வு மட்டும் அதற்கு விதிவிலக்கு. சாதாரணமாக மாணவர்கள் தங்கள் பெயர் வகுப்பு விவரங்களை எழுதியதும் மோட்டுவளையைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருப்பார்கள். சிலர் பெரிய மனது பண்ணி வினாத்தாளையே நகல் எடுப்பார்கள். அதிலும் ஸ்பெல்லிங் பிழைகள் இருக்கும் என்பது வேறு விஷயம். ஆனால் உண்மை என்னவென்றால் அவ்வாறு நகல் எடுப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் கொடுக்கப்பட்டது.
அரை மணி நேர பெல் அடிக்கப்பட்டதுமே அவரவர் அவசரம் அவசரமாக வெளியேறுவார்கள். தாழ்வாரங்கள் மாணவர்களின் சலசலப்புகளால் நிரம்பியிருக்கும். ஐந்து நிமிடங்களுக்குள் அமைதி நிலவும். மேற்பார்வையாளர்களும் பேப்பர்களை கட்டி வைத்துவிட்டு அவற்றை உரிய இடத்தில் ஒப்படைத்து விட்டு காப்பி குடிக்க செல்வார்கள்.
இதுதான் நான் படித்தபோது ஹிந்தி தேர்வுகளில் பொதுவான நிலை. ஆனால் ஒரே ஒரு மேற்பார்வையாளர்தான் மாட்டிக் கொள்வார். அவர்தான் டோண்டு ராகவன் தேர்வு எழுதும் ஹாலில் பணி புரிபவர். எல்லோரும் வெளியே சென்று விட்ட நிலையில் நான் மட்டும் அமர்ந்து சீரியசாக எழுதிக் கொண்டிருப்பேன்.
நான் ஏழாம் வகுப்பு படித்தபோது ஒரு முறை தோசி என மாணவர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பாஷ்யம் ஐயங்கார் என்னும் ஆசிரியர்தான் அவ்வேலைக்கு நியமிக்கப் பட்டிருந்தார். அவருக்க்கு தானும் காப்பி சாப்பிடப் போக முடியவில்லையே எனக் கவலை. அதனால் எரிச்சல். “சீக்கிரம் எழுதி முடியேண்டா கடன்காரா” என்று அலுப்புடன் பலமுறை கூறிப் பார்த்து விட்டார். அதற்குள் டிகிரி காப்பியை குடித்து விட்டு காப்பி நெடி மூச்சுடன் எவரெஸ்ட் என்னும் ஆசிரியர் (ஆறடிக்கும் மேல் உயரம், பெயர் ஸ்ரீனிவாசாசார்லு) அவரிடம் வந்து “என்ன பாஷ்யம் ஸ்வாமி என்ன இன்னும் காப்பி குடிக்கவில்லையா” என வெறுப்பேர்ற, “இந்த கடன்காரன் என்னை விடமாட்டேன் என்கிறான்” என அவர் அழாக்குறையாகக் கூற, அவர் மேல் பரிதாபப்பட்டு அவரை காப்பி குடிக்க அனுப்பி விட்டு இவர் இங்கு மேற்பார்வையாளராக அமர்ந்தார்.
அதற்குள் எங்கள் ஹிந்தி ஆசிரியர் வி.ஜி. சேஷாத்ரி ஐயங்கார் நான் பரீட்சை எழுதும் கண்கொள்ளாக் காட்சியை பார்க்க வந்தார். அவர் மிகவும் கோபக்காரர், தவறு செய்தால் அடிபின்னிவிடுவார். இருப்பினும் அவர் பாடத்தில் நான் சின்சியராக எழுதுவதை அவர் மகிழ்ச்சியுடன் பார்த்தார். எனக்கும் மகிழ்ச்சிதான்.
கேள்வித்தாளில் ஒரு வினா தவறாக அச்சடிக்கப்பட்டதைக் காட்டி என் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டேன். எவெரெஸ்டின் முறை இப்போது டென்ஷன் ஆவதற்கு. அவரை சேஷாத்ரி ஐயங்கார் அனுப்பிவிட்டு ரிலாக்ஸ்டாக தானே அமர்ந்து கொண்டார்.
இந்த தர்ம ஹிந்தி கூத்து பள்ளியிறுதி வகுப்பு வரை நடந்தது. கடைசி ஆண்டு பரீட்சைகளின் போது (சமீபத்தில் 1962-ல்) தலைமை ஆசிரியர் ராஜகோபால ஐயங்கார் ப்ரேயர் ஹாலில் வைத்து ஹிந்தி பரீட்சைக்கு தவறாமல் வருமாறு மாணவர்களைக் கேட்டுக் கொண்டார். பேப்பர் காலியாகத்தான் இருக்கும், ஆனால் அதை திருத்தும் ஆசிரியருக்கு உரிய ஃபீஸ் சென்றுவிடுமே என நகைச்சுவையாகக் கூறினார்.
நான் பள்ளியில் ஹிந்தி படிக்கும்போதே தட்சிண் பாரத் ஹிந்தி பிரச்சார் சபையிலும் ஹ்ந்தி கற்றதாலும், என் அன்னையின் தயவாலும் அம்மொழியில் ஆளுமை பெற முடிந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
10 hours ago
18 comments:
//நான் சமீபத்தில் 1954 முதல் 1962 வரை//
???
@கலாநேசன்
எனது பதிவுகளுக்கு நீங்கள் புதிசா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
@டோண்டு
சார் அவர் புதுசு ...
ம்.. நல்ல கொசுவர்த்தி
//எனது பதிவுகளுக்கு நீங்கள் புதிசா?
//
doubt cleared
//எனது பதிவுகளுக்கு நீங்கள் புதிசா?
//
doubt cleared
even now hindi exams by dbhp sabha are conducted with somewhat lenience only.
small children are allowed to write upto praveen uttarardh. i dont understand how a student who is under 18 will understand jayashankar prasad's kamayani or maithili sharan gupta's saketh et al.
i still vividly remember how my hindi master struggled to avoid certain words from these poems.
now, my nephew who is only 12 yrs old has completed praveen. prachar sabha should take note of this.
now coming to the q & a section,
கேள்வி: கருணாநிதியின் வீரத்தைப் பற்றிக் கூறும் போது 'ஓடாத ரயில் முன்' தண்டவாளத்தில் படுத்தது மற்றும் குடமுருட்டி குண்டு இரண்டையும் அடிக்கடி குறிப்பிடுவார்கள். இந்த குடுமுருட்டி குண்டு விவகாரம் என்பது என்ன? விளக்கவும்.
//கலாநேசன் said...
//நான் சமீபத்தில் 1954 முதல் 1962 வரை//
???//
**********
ஹா...ஹா...ஹா....
இவர் டோண்டுவின் வலைப்பக்கத்திற்கு மிகவும் புதியவர் தான்... அதான், இந்த கேள்வி...
// இந்த குடுமுருட்டி குண்டு விவகாரம் என்பது என்ன? விளக்கவும்//
******
டோண்டு சார்... நீங்க கொசுவர்த்திய கொளுத்தினாலும் கொளுத்தினீங்க... நாராயணன் சார்... இன்னொரு கொசுவர்த்திய கொளுத்த ஐடியா கொடுக்கிறார்...
//'ஓடாத ரயில் முன்' //
புகைவண்டி வராத தண்டவாளம் என்பது சரியா???
ஒரு அரசரின் தானத்தை அவையார் கிண்டல் செய்து பாடியதை கலைஞரின் தேர்தல் வாக்குறுதிடன் ஒப்பிட்டு , சோ நகைச்சுவையுடன் எழுதினாராமே? அது என்ன மேட்டர் ? விளக்கவும்
//i dont understand how a student who is under 18 will understand jayashankar prasad's kamayani or maithili sharan gupta's saketh et al// டப்பா அடிச்சி பரீட்சை எழுதறது தானே நம்ம கல்விமுறையே. அதுல புரிஞ்சா என்ன புரியாட்டி என்ன? அதிக பட்சம் எழுத்துப் பிழை இல்லாம இருந்தாலே ஹிந்தி பாஸ். மத்ததெல்லாம் பின்னாடி புரிஞ்சிப்பாங்க. எந்திரன்ல ரோபோ டப்பா அடிச்ச மாதிரி அடிச்சி தான் இப்போ லட்சக்கனக்கான டாக்டர்ஸே வராங்க. எனக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர் சிம்டம்ஸ கேட்டுட்டு அதை கம்ப்யூட்டரில் ஒரு சாஃப்ட்வேரில் வெரிஃபை பண்ணிட்டு தான் அந்த வியாதியை உறுதி செஞ்சி அதுக்கு மருந்தும் கொடுத்தாரு. அதில இருந்து அந்த மருத்துவர் ஐயாகிட்ட நான் போகவே இல்லை. டப்பா அடிக்க முடிஞ்சா நானும் டாக்டர் தான் .
"கேள்வித்தாளில் ஒரு வினா தவறாக அச்சடிக்கப்பட்டதைக் காட்டி என் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டேன். எவெரெஸ்டின் முறை இப்போது டென்ஷன் ஆவதற்கு"
Dondu sir, ithai padithu sirithu sirithu en vayiru punnagivittathu.
சார், நல்லதொரு நினைவுகள்.. சிறுவயது முதலே, உங்களுக்கு மற்ற மொழிகளின் மீதிருந்த ஆர்வம் தெரிகிறது..
கலா நேசன் நண்பரே, பழைய வருடங்களைக் கூடா, டோண்டு சார், 'சமீபத்தில்' எண்டு குறிப்பிடுவது அவரது வழக்கம்.. அதர்க் காண காரணத்தை அவர் தெளிவாக சொல்லுவார், உங்களுக்காக.
//'ஓடாத ரயில் முன்' //
புகைவண்டி வராத தண்டவாளம் என்பது சரியா???//
lk, i think you are more correct.
Naaraayanan!
A protest can be symbolic. If you stage a protest standing on the rail tract, it is not necessary that the train should be expected at the time, or near the time.
We must see the end-result of the act only. Did the protest achieve its aim? is all that you should ask for.
If the protest is in front of a train about to move, or bound to move after some time, for e.g if Brindavan exp is to leave at 9 am and you begin your protest by 8 am, the authorities will have to act immediately. Your protest will have to be responded to. Perhaps it may succeed. Here, the agitators desire an immediate action and result. So, they choose the time and the train also. For e.g Neelu told Pothigai TV recently in the programme Thirumbi paarkkireen, that when his drama troupe (of Cho Ramasamy) booked seats in advance, and when they came to Central Station only to find that their names were missing, and the need to reach the destination was pressing, Cho told his troupe members to sit on the tract right in front of the train. The driver could not start the train at the scheduled departure time. Authroties rushed in and pacified Cho with the assurance to travel by the next train due in an hour. But Cho did not relent, and told the troup members which included Neelu, not to move from the tract. Ultimately, the authorities attached a coach to the very train, and the trope reached its destination.
Here, you see the need for the result is urgent and time-bound. It cant be postponed.
In the case of Hindi agitation, the result was not to be achieved at once. It might take months or years for the authorities to decide whether to impose Hindi or remove it from the curriculam of TN schools.
Whether MuKa staged all with a view to get popularity or not is also not the issue, because his agitation was one of the many at the time. Throughout TN, anti hindi agitation was raging. Even if he had his own selfish motive of getting popularity, it is okey because all politicians do that. If you are not popular, get it soon, by hook or crook. If not, quit politics. No one is a sinner and no one is a saint in politics.
I dont write in Dondu Raagavan blogs nowadays.I am writing this because it is a standing joke in Dondu Raagan blog posts to heckle at the agitation of Karunanithi suppressing the result achieved by his act. The success of anti Hindi agitation is still upon us. Our schools dont teach Hindu as a compulsory subject.
Who achieved it Nayaaynan? All DMK cadres, including Karunanidhi.
You can only defend your criticism saying it is not an achievement to drive Hindi out of TN. But that is a different debate.
Result is result. Its effects affected you and me -for better or for worse.
If you suppress it all, you run the risk of the criticism levelled against you by DMK and DK cadres that Tamil brahmins like you are anti-Tamil, and pro-Hindi!
@Jo Amalan Fermando
வழக்கம் போல தவறான தகவல்கள் எழுதுகிறீர்கள். கருணாநிதி ரயில் வண்டிக்கு முன் தலை வைத்து படுத்தது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது அல்ல. ஐம்பதுகளில் டால்மியாபுரம் ரயில்வே ஸ்டேஷனின் பெயரை கல்லக்குடி என மாற்ற வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது.
அது கூடத் தெரியாமல் எழுத வந்து விட்டீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Thanks for the correction.
Narayanan’s attack on MuKa is here in the post about Hindi, so I was led to believe that the ‘courage’ refers to Muka’s act during the Hindi agitation.
However, all that I wrote is applicable if Naryanan’s attack was on Muka’s ‘courage’ during the Dalmiapuram renaming.
The renaming is also not an urgent and time-bound matter. It takes months, even years, to finally rename the station. State Govt should write to the Centre; the Rly Ministry should take up with the Cabinet via a proposal for Cabinet approval. After approval, the Ministry is to move and pass a bill in Parliament.
Unless Karunanidhi presses for it with another agitation, things will move at snail’s speed only. But he won’t, because the State writing to the Rly Ministry and Rly taking up the proposal with Cabinet, is acceptance in principle.
Renaming was done finally. Today Dalmiapuram is called Kallakkudi. The objective was realized. What more do you want? Whether there was a train coming on the tract or not – how does it serve your purpose? If you heckle the act, it definitely shows you want a marwadi to rename a town or street in TN after his own or his relations.
There you run the risk of being called anti Tamil; here, you run the risk of being in alliance with Marwadis against Tamils.
Tamil Brahmins always wait for an opportunity to drive down Muka. They don’t bother whether it is Hindi agitation or renaming a station. Narayanan does not bother. His only purpose is to show Muka a coward. You are nitpicking over facts!
Tamil Brahmins spoil their own case by taking stand against Dravidian parties. You should bury your own likes and dislikes if the cause is to safeguard the honour of Tamils.
Don’t condemn anyone wholesale. Even your enemy may be correct at times; and your friend may be wrong at times.
//Renaming was done finally. Today Dalmiapuram is called Kallakkudi. The objective was realized. What more do you want? Whether there was a train coming on the tract or not – how does it serve your purpose? If you heckle the act, it definitely shows you want a marwadi to rename a town or street in TN after his own or his relations. //
இதை வைத்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தான் உயிரைப் பணயம் வைத்ததாகக் கூறி உதார் விட்ட கலைஞரை இப்படித்தான் கிண்டலடிப்பார்கள்.
மகாத்மா காந்தி நிஜமாகவே உண்ணாவிரதம் இருந்தார், உயிரையும் பணயம் வைத்து, மஞ்சத் துண்டோ காலை டிபனுக்கும் மதிய உணவுக்கிடையில் அண்ணா சமாதி அருகே ஈழத்தமிழர்களுக்காக என ஃபிலிம் காட்டி உண்ணாவிரதம் இருந்தார். இரண்டும் ஒன்றாகுமா? சிம்பாலிக் ஆக்ட்தான் எனக் கூறத்துணிவீர்களா?
மஞ்சத்துண்டே சிரிப்பார் நீங்கள் இம்மாதிரி பேசியதை அவர் கேட்டால்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment