3/19/2009

டோண்டு பதில்கள் - 19.03.2009

கமலக்கண்ணன்:
1. இப்போதைய கல்வியின் மகத்தான சாதனை என்ன?
பதில்: நிறைய பேருக்கு கல்வி தர முயற்சி செய்யப்படுகிறது. நன்கு முனைந்து படித்தால் முன்னேற முடியும் என்றளவில் வேலையும் கிடைக்கும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. அதுவே கல்வியின் ஒரு சாதனைதானே.

2. நமது நாட்டில் அதிகமாகிக் கொண்டு வருவது எது? குறைந்து வருவது எது?
பதில்: ஒரு மொக்கை பதில் (அதாவது மொக்கை என அறிந்தே தரும் பதில்) வேண்டுமா? என்னைவிட குறைந்த வயதானவர்கள் அதிகரித்து கொண்டே வருகிறார்கள், அதே சமயம் என்னை விட அதிக வயதானவர்க்ள் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

3. தற்போதைய தமிழகத்தில் யார் யாருக்கு எதில் கடும் போட்டி நிலவுகிறது?
பதில்: தத்தம் ஜாதியை தாழ்த்தப்பட்டவர் லிஸ்டில் சேர்ப்பதற்கு கடும்போட்டியே நிலவுகிறது.

4. அரசியல் கட்சிக்காரர்களுக்கு யார் கடவுள்?
பதில்: ரௌடிகள்

5. எம்.ஜிஆர் ஆட்சி போலீஸ், ஜெ ஆட்சி போலீஸ், கலைஞர் ஆட்சி போலீஸ் ஒப்பிடுக?
பதில்: எல்லாமே அப்போதைய ஆளும்கட்சிகளுக்கு சலாம் போட்டவை என்பதில் ஒற்றுமை. அப்படி யாருக்கு போட்டார்கள் என்பது ஆளும் கட்சியை பொருத்து மாறியதுதான் வேற்றுமை.


அனானி (14.03.2009 மாலை 07.51-க்கு கேட்டவர்):
1. அமெரிக்க மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன என்ன?
பதில்: ஒற்றுமை உலகிலேயே இரு பெரிய ஜனநாயக நாடுகளின் குடிமக்களாக இருப்பது. நம்மக்களிடம் ஜாதி சார்ந்த சண்டை அமெரிக்கர்களிடமோ கருப்பர் வெள்ளையர் பிரச்சினை. பணவிஷயத்திலும் வேற்றுமை. அவர்களுக்கு பணபலம் என்றால் நம்மிடம் ஆன்மீக பலம் எனச் சொல்லும் அதே நேரத்தில் அக்கரைக்கு இக்கரை பச்சையாக அவர்களில் பலர் ஆத்மாவைத் தேடி அலைய நம்மவரில் பலர் பணத்தை மட்டும் தேடி ஓடுவது ஒரு பெரிய நகைமுரணே.

2. வள்ளுவர் பெயர், காந்தி பெயர், அண்ணா பெயர், காமராஜ் பெயர் ஆகியவற்றைக் கெடுத்தது யார்?
பதில்: வள்ளுவர் பெயர் ஒன்றும் கெட்டதாகக் கூறவியலாது. மற்றவர்கள் பெயரை கெடுக்க அவரவர் கட்சி ஆட்களே போதும்.

3. ஆளும் அரசியல் வாதியோடு கைகோர்த்து அநியாயம் செய்யும் அதிகாரிக்கு என்ன என்ன கிடைக்கும்?
பதில்: பிரமோஷன்.

4. ஏழை, பணக்காரன், மிடில் கிளாஸ் ஆகியோரது நிலை இந்தியாவில் இப்போ எப்படி?
பதில்: முதலில் மிடில் கிளாஸை எடுத்து கொள்வோம். உலகமயமாக்கலுக்கு பிறகு அவர்களில் பலரது வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. டெலிவிஷன், டெலிஃபோன் ஆகிய விஷயங்கள் இல்லாத குடும்பங்கள் குறைவுதானே. செல்ஃபோன் என்பது கிட்டத்தட்ட எல்லாவித மக்களிடமும் உள்ளது. அது இனிமேலும் சொகுசுப்பொருளாகக் கருதப்பட இயலாது. எது எப்படியானாலும் சற்றே முயன்றால் முன்னேற பல வழிகள் திறந்துள்ளன.

5. அரசின் பணம் தேவையற்ற விளம்பரமாய், தண்ணீர் போல் செலவழிப்பது பற்றி?
பதில்: ரொம்ப கவலையளிக்கும் நிகழ்வுதான் இது. ஆனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலை மாறும் சாத்தியக்கூறு ஏதும் இருப்பதாகத் த்ரியவில்லை. பை தி வே தண்ணீர் தட்டுப்பாடு வரும் நிலையில் பணத்தைத் தண்ணீர் மாதிரி செலவு செய்வது என்பது சிக்கன நடவடிக்கைக்கு உதாரணமாக மாறிவிடும் சாத்தியக்கூறு உண்டு.

6. பல பத்திரிக்கைகள் பிரிக்கப்படாமலேயே பழைய பேப்பர் கடைக்கு போவது பற்றி?
பதில்: பேப்பர்கள் விஷயத்தில் ஒன்று நிச்சயம். பேப்பர் படிக்கலின் அன்றே படிக்குமின் அஃதலின் படிக்கலின் படிக்காமை நன்று. ஆக ஒரு நாள் பேப்பர் படிக்காமல் கட்டில் சேர்க்கப்பட்டு பிறகு பேப்பர் கடைக்கு போவது ஒன்றும் அபூர்வமான நிகழ்வு அல்ல.

7. இந்த ஆண்டு நல்ல மழை பொழிந்து செழிக்கும் போது பணவீக்கம் இல்லாமலே போகுமா?
பதில்: பொருளாதார முன்னேற்றத்துக்கு நல்ல மழையும் அவசியமே. ஆனால் அது மட்டும் போதாதே.

8. தமிழ் நாட்டில் உள்ள பல்கலைகழகங்களில் இன்னும் பழைய பொலிவுடன் இருப்பது எது?
பதில்: பழைய பொலிவு எனப் பார்த்தால் முதலில் பல்கலைக் கழகமும் பல ஆண்டுகளாக செயல் பட்டிருக்க வேண்டும். அப்படியிருக்கும் பல்கலைக் கழகங்கள் என்னைப் பொருத்தவரை இரண்டே இரண்டுதான், அதாவது அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகம். அவை அப்படி ஒன்றும் பழைய பொலிவுடன் இருப்பதாக எனக்குப் படவில்லையே.

9. சிரஞ்சீவி இன்னுமொரு என்டிஆரா?
பதில்: சரித்திரம் மறுபடி நிகழும். முதல் முரை அது சரித்திரம், அடுத்த முறை அது கேலிக் கூத்து.

10. நேதாஜி உயிருடன் வந்தால்?
பதில்: சாத்தியமே இல்லை.

11. சென்சார் போர்டு இருக்கா?
பதில்: இருக்கிறது. அவர்கள் சென்சார் செய்த காட்சிகள் அரசு கெஜட்டில் வரும். அதுவே சற்றே மிதமான பலான கதை விளைவைத் தரும் என்பதை அறிவீர்களா? உதாரணங்கள்: படம் ஜானி மேரா நாம் (சமீபத்தில் 1970-ல் திரையிடப்பட்டது). சென்சார் குறிப்பு கெஜட்டில் படித்தது. பத்மா கன்னா காபரேயில் குளோசப்பில் அவரது முலைக்காம்புகள் தெரியும் காட்சி நீக்கப்படுகிறது என ஒரு வரி. பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் பாண்டியராஜன் “மயிறு” எனச் சொல்லும் காட்சி நீக்கப்பட்டது. விஷயம் தெரிந்தவர்கள் சம்பந்தப்பட்ட கெஜட்டை வாங்கிப் படித்து மகிழ்ந்தனர். இப்போதும் அம்மாதிரி கெஜட் அறிக்கைகள் வருகின்றன.

12.லஞ்சம் உங்கள் பாணியில்/ஸ்டெயிலில் விளக்கவும்?
பதில்: விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதைத் தவிர்க்க இயலாதுதான். எவ்வளவு முடியுமோ தவிர்ப்பதே நலம்.

13. தமிழகம் சட்டம் ஒழுங்கு இப்போ எப்படி?
பதில்: போலீசார் பற்றாக்குறை இருக்கும் நிலையில் முக்கால்வாசிப் பேரை பந்தோபஸ்து கடமைக்கு, அதுவும் உபயோகமற்ற அரசியல்வாதிக்ளின் பாதுகாப்புக்கு பயன்படுத்துவதால் சட்டம் ஒழுங்கு சவலைக் குழந்தையாகத்தான் உள்ளது.

14. தேர்தல் முடிவு தொங்கு நிலையா?
பதில்: இப்போதிருக்கும் ட்ரெண்ட் அப்படித்தான் தோன்றுகிறது. லோக்சபா தேர்தலைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?

15. அரசியல் ஏமாளி யார்?
பதில்: வாக்காளர்களை இதில் பீட் செய்ய இயலாது.

16. காங்கிராசாரின் தனிச் சிறப்பு எது?
பதில்: எந்த மாநிலக் கட்சியிடம் ஒட்டுண்ணியாக ஒட்டிக் கொள்வது என்பதில் கைதேர்ந்தவர்கள். அதற்கு முக்கியக் காரணமே அன்னை மாதா இந்திரா காந்திதான்.

17. இன்றைய லஞ்சத்தின் அளவு எது?
பதில்: வானமே எல்லை.

18. அரசியல் கட்சிகள் உங்கள் பார்வையில்?
பதில்: குடும்ப வியாபாரங்கள்.

19. யார் அரசியல் கொத்தடிமைகள்?
பதில்: வாக்காளர்கள்.

20. இட ஒதுக்கீடு எதிர்ப்பு அடங்கி விட்டதா?
பதில்: வேலைகளில் இட ஒதுக்கீட்டை பொருத்தவரை அரசு வேலைகள் அருகிவரும் தருணத்தில் அவை இர்ரெலெவண்டாகப் போகின்றன. படிப்பும் இப்போது ரொம்ப காஸ்ட்லியாகப் போன நிலையில் இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்தாலும் படிக்கப் பணம் இன்றி பலரது வாய்ப்பு பறிக்கப்படுகிறது. எல்லோருமே களைத்துப் போனதுபோல ஒரு தோற்றம்.

21. பஞ்சாயத்துராஜ் சட்டம் இருக்கா?
பதில்: சட்டம் என்னவோ இருக்குதான். ஆனால் மேல்விவரங்கள் ஒண்ணும் தெரியாது.

22. இரண்டாவது பசுமைப்புரட்சி/வெண்மை புரட்சி வருமா?
பதில்: முதல் பசுமைப் புரட்சி முக்கியமாக ரசாயன உரங்களால் வந்தது. இப்போது அவற்றால் பலவிளை நிலங்கள் பாழாகியுள்ளன. இந்த நிலைஅயை சரிசெய்த பிறகுதான் இரண்டாம் பசுமைப்புரட்சி பற்றி பேசவியலும். இரண்டாம் வெண்மைப்புரட்சி வர இன்னொரு குரியன் வரவேண்டும்.

23. சாதிச் சங்கங்கள் இந்த தேர்தலில்?
பதில்: பேஷா பங்கெடுக்கும்.

24. அடுத்த வைகோவின் நீதி கேட்டு நடைப்பயணம் நடக்குமா?
பதில்: யாரிடம் எதற்காக எம்முறையில் அந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என்பதை அறிந்தால்தான் அது வெற்றி பெறுமா எனக் கூறவியலும். நிச்சயமாக வெற்றி பெறும் என்று தெரிந்தால்தான் அரசியல்வாதி முயற்சியை மேற்கொள்வார்.

25. சுப்பிரமணியசாமி அடுத்து என்ன செய்வார்?
பதில்: அவருக்கே அது தெரியாது என்றிருக்கும்போது நான் எப்படி அதைக் கூறுவது?

26. இந்தியா மற்ற உலக நாடுகளிடமிருந்து எதில் வித்தியாசப் படுகிறது?
பதில்: ஜனநாயகம் இந்தியா மற்றும் சில விரல் விட்டு எண்ணக்கூடிய நாடுகளில்தான் செயல்பட்டு வருகிறது என்பதே நம் நாட்டின் கிரீடத்தில் இன்னொரு மயிலிறகு.

27. அந்தக்கால அரசியலுக்கும் தற்கால அரசியலுக்கும் உள்ள வேறுபாடு?
பதில்: அதே லஞ்சலாவண்யங்கள், ஏறி வந்த ஏணியை உதைத்துச் செல்லல், நன்றி மறத்தல் ஆகிய எல்லாமுமே அப்படியேத்தான் உள்ளன, இதில் என்ன வேறுபாடு வாழ்கிறது?

28. கழகக் கட்சிகளில் எது பரவாயில்லை?
பதில்: யோசித்து, தேடிப் பார்த்து சொல்ல வேண்டிய விஷயம். இருப்பினும் தீவிரவாதத்துக்கு துணைபோகாத கட்சி என்னும் நிலையில் அதிமுக பரவாயில்லை.

29. உலகில் தொடர் நிகழ்ச்சியாய் வருவது எது?
பதில்: இந்தக் காலத்துப் பசங்க, ஹூம், எதுவும் அந்தக் காலம் போல இல்லை என்று பெரிசுகள் செய்யும் அலம்பல்கள்.

30.மனைவி அமைவதெல்லம் இறைவன் கொடுத்த வரமென்பார் அப்படியென்றால் கணவன், பிள்ளைகள், மாமனார்/மாமியார்/நாத்திமார்/சகலை/ஓரகத்தி/மருமகன்/மருமகள்/பேரன்/பேத்தி/மச்சினர் அமைவதெல்லாம்?
பதில்: அந்த வரத்துக்கு போனஸ்கள்.


ரமணி:
1. சாதாரணமாக துக்ளக்கில் விளம்பரங்கள் வருவதில்லை? என்ன காரணம்? வியாபாரிகள் எடுத்த முடிவா அல்லது சோ அவர்களது வணிகக் கொள்கையா? இப்போது சர்குலேஷன் எவ்வளவு?
பதில்: சோ அவர்களுக்கு மார்க்கெட்டிங்கில் அவ்வளவு திறமை போதாது என்றுதான் வைத்து கொள்ள வேண்டும். பல பத்திரிகைகள் தங்களது விளம்பரதாரர்களை பகைத்து கொள்ளக் கூடாது என்னும் பயத்தில் பல பிரச்சினைகளில் அடக்கி வாசிக்கின்றனர். சோ அவர்களது மனோபாவத்துக்கு அது ஏற்றதில்லை என்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். தெரியவில்லை.

2. உங்கள் பதிவுகளில் ஆதரித்து எழுதும் அவருடைய ஜெயா டி.வி. சீரியலால் துக்ளக்கின் சர்குலேஷன் கூடியுள்ளதா?
பதில்: என்ன குழந்தைத்தனமான கருத்து? ஜெயா டிவி சீரியல் வேண்டுமானால் அவரது பத்திரிகையின் சர்குலேஷனை உயர்த்தியிருக்கலாம். அதே சமயம் ஜெயா டிவிக்கும் இந்த சீரியலால் டிஆர்பி ரேட்டிங் கூடியிருக்கும் என்பதும் நிஜமே. ஆனால், அதற்காக அந்த சீரியலை நான் ஆதரித்து எழுதும் இடுகைகளையும் அதே மூச்சில் குறிப்பது ரொம்பவே ஓவர். நான் சீரியலை பற்றி எழுதுவது எனது மனத்திருப்தியைத் தவிர வேறெந்த பலனையும் எதிர்பாராது செய்வதே. இது இப்படியிருக்க, அதனால் எல்லாம் சீரியலுக்கு சப்போர்ட் என்றெல்லாம் கற்பனையாகக் கூட சொல்லிட இயலாது.

3. இப்போது துக்ளக்கின் சர்குலேஷன் என்ன?
பதில்: 2005-ல் நான் அட்டெண்ட் செய்த துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் அவர் தெரிவித்தபடி, அப்போதைய சர்குலேஷன் சுமார் 75000.

3. எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்று சோ அழகிரியிடம் பூங்குழலியின் திருமணத்தின்போது கூறியுள்ளார், ஏன்?
பதில்: எனக்கும் புரியவில்லை. ஒரு வேளை இருவருமாக சேர்ந்து மணிரத்தினத்தை வைத்து கீழே சொல்வது போல காமடி செய்திருப்பார்களா?
சோ: விடணும், விடணும்.
அழகிரி: எதை? எதை?
சோ: எல்லாத்தையுமே, எல்லாத்தையுமே.
அழகிரி: முதல்லே அவனை விடச்சொல்லு, நானும் விடறேன்.
குபீர் சிரிப்பு, ஒருவருக்கொருவர் கைகொடுத்து கொள்கின்றனர். இது எப்படி இருக்கு?

4. காங்கிரசும் அதிமுகாவும் வரும் தேர்தலில் கூட்டணி அமைக்கக் கூடுமா?
பதில்: வாய்ப்பு இல்லை என்றுதான் தோன்றுகிறது.

5. சுற்றிலும் கலைஞர் டிவி, சன் டிவி குழுமங்கள் ஆகியவற்றின் தாக்குதல்களுக்கு நடுவில் ஜெயா டிவியால் பார்வையாளர்களை ஈர்க்க இயலுமா?
பதில்:கஷ்டம்தான்.

அனானி (17.03.2009 மாலை 07.22-க்கு கேட்டவர்):
1) சரத்குமாருடன் கூட்டணி வைத்தால் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எத்தனை ஓட்டு கிடைக்கும்?
பதில்: பாவம் பாஜக. எல்லோரும் அதை வைத்து காமெடி செய்கிறார்கள்.

2) அருண் ஜெட்லியை இழப்பது பாஜகவுக்கு பெரிய இழப்புதானே?
பதில்: நல்ல நேரம் பார்த்தார்களையா சண்டைபோட.

3) மாயாவதி மற்றும் ஜெயலலிதா தயவில் அத்வானி பிரதமராவாரா?
பதில்: ஒரு முறை வாஜ்பேயி பட்டது இன்னும் மறக்கவில்லையே. ஆனால் அத்வானி இரண்டு இடிகள். ஐயோ பாவம்.


சேதுராமன்:
1. கத்ரோச்சி புகழ் அன்னை சோனியா, டாஜ் காரிடார் புகழ் அன்னை மாயாவதி, மாட்டுத் தீவனம் புகழ் அன்னை ராப்ரி தேவி, சிங்குர் புகழ் மம்தா, நர்மதா புகழ் மேதா, டான்சி புகழ் அம்மா, முன்னாள் மத்திய பிரதேச முதலமைச்சர் உமாபாரதி, சங்கமம்/ஸ்பெக்ட்ரம் புகழ் கனிமொழி -- இவ்வளவு பேருக்கு மத்தியில் அன்னை இந்தியா நிற்க முடியுமா? சோவின் பரம சிஷ்யர்ரன நீர் அவர் பாணியில் பதில் அளிக்கவும்!
பதில்: மேலே கூறியவர்கள் எல்லோருமே அன்னை மாதா தாயார் இந்திரா காந்திக்கு முன்னால் தூசுக்கு சமம். அப்படிப்பட்ட இந்திராவிடமிருந்தே அன்னை இந்தியா தப்பித்தாகி விட்டது. இன்னும் அன்னை இந்தியாவுக்கு அதே அதிர்ஷ்டம் இருக்கும் என நம்புவோமாக.

2. பத்து கோடி இளைஞர்கள் ஓட்டளிக்கும் உரிமை பெறுவார்கள் புதிதாக என்று தெரிகிறது - இது நல்லதற்கா, அல்லது பழைய குருடிதானா?
பதில்: அதே போல கணிசமான அளவில் ஓட்டர்கள் மறைந்தும் போயிருப்பார்கள் அல்லவா. மேலும் இது நல்லதா அல்லது கெட்டதா என்றேல்லாம் விவாதித்தால் ஆகும் பலன் என்ன? இந்தியா ஒரு ஜனநாயக நாடாக பரிமளிக்க இது இன்றியமையாததே. புதிதாக வந்து சேரும் ஓட்டர்கள் விழிப்புணர்வுடன் இருப்பதே நமக்கு வேண்டியது.

3. வருண் காந்தியின் கன்னிப் பேச்சு எழுப்பியிருக்கிற புயல் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: வீடியோ டேப் திரிக்கப்பட்டு, அதில் தில்லுமுல்லு நடந்துள்ளது என வருண் கூறுகிறார். தில்லி ஜும்மா மசூதியிலிருந்து தலைமை காஜி இந்தியாவை எதிர்த்து முசல்மான்களை தூண்டுவதையெல்லாம் தட்டிக் கேட்க துப்பில்லாதவர்கள் இங்கு வந்து ஆட்டம் போடுவது விந்தையாக இருக்கிறது. அதுவும் பத்து நாட்களாக இந்த டேப் இருந்திருக்கிறது. அதில் என்ன தில்லுமுல்லு ஆயிற்றோ, யாருக்குத் தெரியும்?

வெங்கி (என்னும்) பாபா:
1) சோ அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
பதில்: ஒரு பெண், ஒரு பிள்ளை என நினைக்கிறேன். மற்றப்படி ஒன்றும் தெரியாது, தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறேன்? ஆனால் ஒன்று, அவரது பேத்தி ஸ்கூலில் அசத்துகிறாள், சோவையே ஆட்டிப் படைக்கிறாள் என கர்வத்துடன் அக்குழந்தையின் தாத்தா சோவே கூறியுள்ளார்.

2) எங்கே பிராமணன் இன்னும் எவ்வளவு இருக்கிறது? ஒரு 25% முடிந்திருக்குமா?
பதில்: இன்னும் நிறையவே இருக்கிறது. 25% அளவு வருவதற்கே இன்னும் அதிக தூரம் போக வேண்டி உள்ளது. ஆனால் ஒன்று, ஏதேனும் நடந்து சீரியலை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால், நான்கே எபிசோடுகளிலும் முடிக்கவியலும். அம்மாதிரி எதுவும் ஆகாது என நம்புவோம்.

ரமணா:
a) போலீசு-லாயர் மோதல் முதல் ரவுண்டு வெற்றி யாருக்கு?
பதில்: இரண்டு போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டதால் வக்கீல்கள் குதிக்கின்றனர். அதே போல விஷமத்தை முதலில் ஆரம்பித்து வைத்த வக்கீல்களில் ரிங் லீடர்களின் சன்னதையும் பிடுங்க வேண்டும்.

b) போலீசு-அரசியல்வாதி சண்டை வந்தால் எப்படி இருக்கும்?
பதில்: சண்டையில் ஈடுபடுவது ஆளும் கட்சி அரசியல்வாதிகளா அல்லது எதிர்க்கட்சி அரசியல்வாதிகளா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அப்படியே எதிர்க்கட்சியாக இருந்தாலும் அடுத்த தேர்தலில் பதவிக்கு வரக்கூடிய நிலைமையில் உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். அதை பொருத்துத்தான் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைக் கூற இயலும்.

c) முகமுத்து, அழகிரி பக்கம் சாய்கிறார?
பதில்: முக முத்து என்பவர் வாழ்வில் தோல்வியடைந்தவர். அழகிரியின் மனநிலைக்கு அவர் ஒத்து வருவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆகவே அவர் அழகிரி பக்கம் சாய்ந்தால் என்ன, சாயாவிட்டால் என்ன?

d) பி.எஸ் .என்.எல் -கலைஞர் டீவி(தினமணிச் செய்தி)க்குகொடுக்க இருக்கும் ஒரு கோடி விளம்பரம்( உருப்படாத சீரியலுக்கு)-மத்திய அரசுத்துறையையும் கெடுத்தாச்சா?
பதில்: ஒரு விளம்பரம் என்பது அது அடைய வேண்டிய இலக்கு வாசகர்களை மிக அதிகப்பட்ச அளவில் அடைய வேண்டும். அந்த வகையில் கலைஞர் டிவியின் அந்த சீரியலுக்கு இருக்கும் டிஆர்பி ரேட்டிங் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.

e) ஆமை /அமீனா புகுந்த வீடு போல் கழகம் கைபற்றிய அரசுத்துறையின் எதிர்காலம்?
பதில்: அரசுத்துறை என்றாலே அனாவசிய செலவுகளை உள்ளடக்கியுள்ளதுதானே.

f) 3 ஜி மொபைலை பிஎஸ் என் எல் தொடங்குவதில் ஏதும் சிக்கலா?
பதில்: அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே. வணிக ரீதியாக அடுத்த மாதம் சென்னையில் வரும் என நினக்கிறேன்.

g) மாயாவதி, ஜெ,உமாபாரதி, மம்தா, சோனியா யாரால் பிரதமர் பதவி அழகு பெறும்? (பண்டிட் ஜவஹர்லால் காலம் போல்)
பதில்: மோடி அல்லது அத்வானி.

h) ஹோட்டல்கள் அரசு அறிவித்த விலைக் குறைப்புக்கு மூடு விழா நடத்தி விட்டதே? (ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி விற்கும் பொற்கால ஆட்சியிலே தரமான ஒரு இட்லி ரூ5/=)
பதில்: நான் வசிக்கும் நங்கநல்லூரில் இரண்டு இட்டிலிகள் விலை 6 ரூபாய்தான். நன்றாகவே உள்ளன. எது எப்படியாயினும் வணிக அடிப்படை ஏதுமே இல்லாத முடிவுகள் காலப்போக்கில் குப்பையில் கடாசி வீசப்படும்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

36 comments:

Anonymous said...

பதில்களுக்கு நன்றி.
3 கேள்விக்கு பதில்?

16. காங்கிராசாரின் தனிச் சிறப்பு எது?
பதில்:
22. இரண்டாவது பசுமைப்புரட்சி/வெண்மை புரட்சி வருமா?
பதில்:

24. அடுத்த வைகோவின் நீதி கேட்டு நடைப்பயணம் நடக்குமா?
பதில்:

Anonymous said...

//3. ஆளும் அரசியல் வாதியோடு கைகோர்த்து அநியாயம் செய்யும் அதிகாரிக்கு என்ன என்ன கிடைக்கும்?
பதில்: பிரமோஷன். //

அடுத்து எதிர்க் கட்சி ஆட்சிக்கு வந்தால்?

Anonymous said...

//4. அரசியல் கட்சிக்காரர்களுக்கு யார் கடவுள்?
பதில்: ரௌடிகள்//

இல்லை பணம்தான் பெரிய கடவுள்
ரவுடிகள் சிறு தெய்வங்கள்

Anonymous said...

//4. ஏழை, பணக்காரன், மிடில் கிளாஸ் ஆகியோரது நிலை இந்தியாவில் இப்போ எப்படி?
பதில்: முதலில் மிடில் கிளாஸை எடுத்து கொள்வோம். உலகமயமாக்கலுக்கு பிறகு அவர்களில் பலரது வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. டெலிவிஷன், டெலிஃபோன் ஆகிய விஷயங்கள் இல்லாத குடும்பங்கள் குறைவுதானே. செல்ஃபோன் என்பது கிட்டத்தட்ட எல்லாவித மக்களிடமும் உள்ளது. அது இனிமேலும் சொகுசுப்பொருளாகக் கருதப்பட இயலாது. எது எப்படியானாலும் சற்றே முயன்றால் முன்னேற பல வழிகள் திறந்துள்ளன.//


இவர்கள் எல்லாரையும் விட இன்றைய சொகுசு வாசிகள்
மத்திய மாநில அரசு உழியர்கள் தான்
(6 வது சம்பளக் கமிஷன் கொட்டிக் கொடுத்த பின்னர், கிம்பளத்தின் ரேட்டும் ஏறிப் போச்ச்சாம்).
குறிப்பா வக்கத்த வேல் என்று கிண்டலாக சொல்லப்பட்ட ஆசிரியர் காட்டில் இன்று பண மழை (குறிப்பாக செகெண்டுகிரெடு வாத்யார் சம்பளத்தை கேட்டு பார்க்கவும்)

பொதுத்துறை உழியருக்கு இணையான சம்பளம் கேட்டு போராடிய மத்திய அரசு உழியர்
சம்பளம் இன்று இந்தியாவிலே அதிகமாம்.
அடுத்து கலைஞர் அய்யாவும் வாரிக் கொடுத்துவிடுவார்.

இதில் கஷ்டப் படப் போவது சாதரண பொது ஜணம் தான் (வேலை வாய்ப்பும் குறைவு-வருமானமும் குறைவு ஆனால் விலைவாசி மட்டும்?)

dondu(#11168674346665545885) said...

@அனானி
எவ்வளவு கவனமாக இருந்தாலும் சில கேள்விகள் பதிலளிக்காமல் விட்டு போய்விட்டன. இப்போது பதில்களை சேர்த்து விட்டென், நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//அடுத்து எதிர்க் கட்சி ஆட்சிக்கு வந்தால்//
அப்போது அக்கட்சியினர்தானே ஆளும் அரசியல்வாதி? மேலும் பிரமோஷன்!

அன்புடன்,
டோண்டு ராகவன்

Kodees said...

///எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்று சோ அழகிரியிடம் பூங்குழலியின் திருமணத்தின்போது கூறியுள்ளார், ஏன்?
பதில்: எனக்கும் புரியவில்லை. ஒரு வேளை இருவருமாக சேர்ந்து மணிரத்தினத்தை வைத்து கீழே சொல்வது போல காமடி செய்திருப்பார்களா?
சோ: விடணும், விடணும்.
அழகிரி: எதை? எதை?
சோ: எல்லாத்தையுமே, எல்லாத்தையுமே.
அழகிரி: முதல்லே அவனை விடச்சொல்லு, நானும் விடறேன்.
குபீர் சிரிப்பு, ஒருவருக்கொருவர் கைகொடுத்து கொள்கின்றனர். இது எப்படி இருக்கு? ///

அது பொடி போடுவதைப்பற்றி, இரண்டு பேருமே பொடி போடுபவர்கள்

வஜ்ரா said...

//
1. அமெரிக்க மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன என்ன?
பதில்: ஒற்றுமை உலகிலேயே இரு பெரிய ஜனநாயக நாடுகளின் குடிமக்களாக இருப்பது. நம்மக்களிடம் ஜாதி சார்ந்த சண்டை அமெரிக்கர்களிடமோ கருப்பர் வெள்ளையர் பிரச்சினை. பணவிஷயத்திலும் வேற்றுமை. அவர்களுக்கு பணபலம் என்றால் நம்மிடம் ஆன்மீக பலம் எனச் சொல்லும் அதே நேரத்தில் அக்கரைக்கு இக்கரை பச்சையாக அவர்களில் பலர் ஆத்மாவைத் தேடி அலைய நம்மவரில் பலர் பணத்தை மட்டும் தேடி ஓடுவது ஒரு பெரிய நகைமுரணே.
//

One important difference is,

The americans most of them are citizens of their country, where as here in india we have lots of people but very less citizens of our country.

வால்பையன் said...

//இப்போதைய கல்வியின் மகத்தான சாதனை என்ன?//

லட்சக்கணக்கிலும் விற்பனையாவது!

(நாண்டுகிட்டு சாகணும் அரசியல்வாதிகள்)

வால்பையன் said...

//நமது நாட்டில் அதிகமாகிக் கொண்டு வருவது எது? குறைந்து வருவது எது?//

அதிகமாவது மக்கள்தொகை!
குறைவது விழிப்புணர்வு!

வால்பையன் said...

//தற்போதைய தமிழகத்தில் யார் யாருக்கு எதில் கடும் போட்டி நிலவுகிறது?//

அடுத்து ஆட்சிக்கு வந்து மந்திரியாகி யார் கொள்ளையடிப்பது என்பது தான் லேட்டஸ்ட் போட்டி!

வால்பையன் said...

//அரசியல் கட்சிக்காரர்களுக்கு யார் கடவுள்?
பதில்: ரௌடிகள்//

ரெளடிகள் வாய்ப்பிலை, அவர்கள் அல்லக்கைகள் மட்டுமே!

வாயளவில் மக்களும்,
காலில் விழுவதற்கும், கூளை கும்பிடு போடுவதற்கு ஆசி வழங்கும் தலைவனும் அரசியல்வாதிகளுக்கு கடவுள்.

இதில் பாருங்கள் மக்களுக்கு இந்த துதி இல்லை, ஒன்லி தலைவர்களுக்கு(எல்லா மதத்திலும் இந்த துதி உண்டு)மட்டும் தான்.

எங்கள் ஊரில் ஒரு பாட்டு போட்டார்கள்
”கலைஞரிடம் கையேந்துங்கள்
அவர் இல்லையென்று சொல்வதில்லை”

மக்களை பிச்சைகாரனாகவே மாத்தி புட்டானுங்க!

வால்பையன் said...

//வள்ளுவர் பெயர், காந்தி பெயர், அண்ணா பெயர், காமராஜ் பெயர் ஆகியவற்றைக் கெடுத்தது யார்?
பதில்: வள்ளுவர் பெயர் ஒன்றும் கெட்டதாகக் கூறவியலாது. மற்றவர்கள் பெயரை கெடுக்க அவரவர் கட்சி ஆட்களே போதும்.//

இன்னும் வருபவர்களும் கெடுப்பார்கள்!

வள்ளுவர் பெயரையும் கெடுக்கிறார்கள்!
அவர் இந்த மதத்தை சேர்ந்தவர் என்று கேவலப்படுத்துவதை விடவா?

அவர் மதத்தை முன்னிறித்தியா குறள் எழுதினார்.

வால்பையன் said...

//ஆளும் அரசியல் வாதியோடு கைகோர்த்து அநியாயம் செய்யும் அதிகாரிக்கு என்ன என்ன கிடைக்கும்?
பதில்: பிரமோஷன். //

குடும்பத்தாருக்கு காண்ட்ராக்ட்

வால்பையன் said...

//பல பத்திரிக்கைகள் பிரிக்கப்படாமலேயே பழைய பேப்பர் கடைக்கு போவது பற்றி?//

தினமணி
இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பர்கள் ரிட்டன் எடுக்கபடுவதில்லை.

வேறுவழியில்லாமல் எடைக்கு தான் அவை.

வால்பையன் said...

//இந்த ஆண்டு நல்ல மழை பொழிந்து செழிக்கும் போது பணவீக்கம் இல்லாமலே போகுமா?
பதில்: பொருளாதார முன்னேற்றத்துக்கு நல்ல மழையும் அவசியமே. ஆனால் அது மட்டும் போதாதே.//

அவ்வையார் அப்புறம் என்னாத்துக்கு ”வரப்புயர”ன்னு மட்டும் சொல்லிட்டு போனார்.

வால்பையன் said...

//சாதிச் சங்கங்கள் இந்த தேர்தலில்?
பதில்: பேஷா பங்கெடுக்கும்.//

அப்படியே செமத்தியா வாங்கி கட்டும்.

வால்பையன் said...

//அடுத்த வைகோவின் நீதி கேட்டு நடைப்பயணம் நடக்குமா?//

உடல் சர்க்கரை அளவும்
டாக்டரின் ஆலோசனையும் பொறுத்தது!

வால்பையன் said...

//சாதாரணமாக துக்ளக்கில் விளம்பரங்கள் வருவதில்லை? //

அதிர்ஷ்டபார்வை பதிவை படிப்பதில்லையா?

வால்பையன் said...

//காங்கிரசும் அதிமுகாவும் வரும் தேர்தலில் கூட்டணி அமைக்கக் கூடுமா?//

ஒருவேளை தி.மு.க கட்சி தமிழகத்தில் பெரும்பான்மை பெற முடியாமல் காங்கிரஸுக்கு அ.தி.மு.க தேவைப்பட்டால் பேரம் படிந்தால் கூடும்.

Anonymous said...

//வால்பையன் said...

//காங்கிரசும் அதிமுகாவும் வரும் தேர்தலில் கூட்டணி அமைக்கக் கூடுமா?//

ஒருவேளை தி.மு.க கட்சி தமிழகத்தில் பெரும்பான்மை பெற முடியாமல் காங்கிரஸுக்கு அ.தி.மு.க தேவைப்பட்டால் பேரம் படிந்தால் கூடும்.//


திமுக+காங்கிரஸ்+வி.காந்த் கூட்டணி 40க்கு 40 வெற்றி

அதிமுவுக்கு "0"

பின் எப்படி இது சாத்யம்

Anonymous said...

// வால்பையன் said...

//அடுத்த வைகோவின் நீதி கேட்டு நடைப்பயணம் நடக்குமா?//

உடல் சர்க்கரை அளவும்
டாக்டரின் ஆலோசனையும் பொறுத்தது!//

கழகத்தின் போர்வாளுக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்.

Anonymous said...

// வால்பையன் said...

//சாதிச் சங்கங்கள் இந்த தேர்தலில்?
பதில்: பேஷா பங்கெடுக்கும்.//

அப்படியே செமத்தியா வாங்கி கட்டும்.//

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி
இப்படி சொன்னால் எப்படி?

Anonymous said...

// வால்பையன் said...

//பல பத்திரிக்கைகள் பிரிக்கப்படாமலேயே பழைய பேப்பர் கடைக்கு போவது பற்றி?//

தினமணி
இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பர்கள் ரிட்டன் எடுக்கபடுவதில்லை.

வேறுவழியில்லாமல் எடைக்கு தான் அவை.//


ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அருமையாய் தலையங்கம் தினம்ணியில் எழுதுகிறார்.
அனைவரும் படிக்க வேண்டியது.
அது ஆங்கிலமொழிமாற்றம் செய்யப் பட்டு பிரதமர் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

Anonymous said...

//வால்பையன் said...

//ஆளும் அரசியல் வாதியோடு கைகோர்த்து அநியாயம் செய்யும் அதிகாரிக்கு என்ன என்ன கிடைக்கும்?
பதில்: பிரமோஷன். //

குடும்பத்தாருக்கு காண்ட்ராக்ட்//

ஆட்சி மாற்றம் நிகழும் போது விசாரணைக்கமிஷ்ன்


வாங்கிய கமிஷனை கணக்கு பண்ண கமிஷன்

Anonymous said...

//வால்பையன் said...

//வள்ளுவர் பெயர், காந்தி பெயர், அண்ணா பெயர், காமராஜ் பெயர் ஆகியவற்றைக் கெடுத்தது யார்?
பதில்: வள்ளுவர் பெயர் ஒன்றும் கெட்டதாகக் கூறவியலாது. மற்றவர்கள் பெயரை கெடுக்க அவரவர் கட்சி ஆட்களே போதும்.//

இன்னும் வருபவர்களும் கெடுப்பார்கள்!

வள்ளுவர் பெயரையும் கெடுக்கிறார்கள்!
அவர் இந்த மதத்தை சேர்ந்தவர் என்று கேவலப்படுத்துவதை விடவா?

அவர் மதத்தை முன்னிறித்தியா குறள் எழுதினார்./

ஏற்கன்வே வருண் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்!

Anonymous said...

//வால்பையன் said...

//இப்போதைய கல்வியின் மகத்தான சாதனை என்ன?//

லட்சக்கணக்கிலும் விற்பனையாவது!

(நாண்டுகிட்டு சாகணும் அரசியல்வாதிகள்)//

ஏன் பேயாய்் மாறி பாக்கியை வசூலிக்கவா?

Anonymous said...

//
எங்கள் ஊரில் ஒரு பாட்டு போட்டார்கள்
”கலைஞரிடம் கையேந்துங்கள்
அவர் இல்லையென்று சொல்வதில்லை”

மக்களை பிச்சைகாரனாகவே மாத்தி புட்டானுங்க!//

கலைஞர் கொடுத்த இலவச நிலத்தில்
வீடு கட்டி, இலவச மின்சாரம் கொண்டு கொடுத்த இலவச டீவில் சீரியல் பார்த்துக் கொண்டு ,இலவச கேஸில் இலவச அரிசியை சமைத்து
.............................
...........................

Anonymous said...

// வால்பையன் said...

//தற்போதைய தமிழகத்தில் யார் யாருக்கு எதில் கடும் போட்டி நிலவுகிறது?//

அடுத்து ஆட்சிக்கு வந்து மந்திரியாகி யார் கொள்ளையடிப்பது என்பது தான் லேட்டஸ்ட் போட்டி!//


பெரிய மராத்தான் ரேஸே நடக்குதுங்கோ!

Anonymous said...

//வால்பையன் said...

//நமது நாட்டில் அதிகமாகிக் கொண்டு வருவது எது? குறைந்து வருவது எது?//

அதிகமாவது மக்கள்தொகை!
குறைவது விழிப்புணர்வு!//

டபுள் ஓகே

இதையும் சேருங்க

Anonymous said...

// யாரோ ஒருவன் said...

///எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்று சோ அழகிரியிடம் பூங்குழலியின் திருமணத்தின்போது கூறியுள்ளார், ஏன்?
பதில்: எனக்கும் புரியவில்லை. ஒரு வேளை இருவருமாக சேர்ந்து மணிரத்தினத்தை வைத்து கீழே சொல்வது போல காமடி செய்திருப்பார்களா?
சோ: விடணும், விடணும்.
அழகிரி: எதை? எதை?
சோ: எல்லாத்தையுமே, எல்லாத்தையுமே.
அழகிரி: முதல்லே அவனை விடச்சொல்லு, நானும் விடறேன்.
குபீர் சிரிப்பு, ஒருவருக்கொருவர் கைகொடுத்து கொள்கின்றனர். இது எப்படி இருக்கு? ///

அது பொடி போடுவதைப்பற்றி, இரண்டு பேருமே பொடி போடுபவர்கள்//

அண்ணா காட்டிய வழியிலா?

Anonymous said...

// சோ அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
பதில்: ஒரு பெண், ஒரு பிள்ளை என நினைக்கிறேன். மற்றப்படி ஒன்றும் தெரியாது, தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறேன்? ஆனால் ஒன்று, அவரது பேத்தி ஸ்கூலில் அசத்துகிறாள், சோவையே ஆட்டிப் படைக்கிறாள் என கர்வத்துடன் அக்குழந்தையின் தாத்தா சோவே கூறியுள்ளார்.//

மேலதிக விபரங்களுக்கு பார்க்க

Jaya Tv Interview With Cho

Thirumbi Parkiren 09-03-09


Thirumbi Parkiren 10-03-09

Thirumbi Parkiren 11-03-09

Thirumbi Parkiren 12-03-09

Anonymous said...

//d) பி.எஸ் .என்.எல் -கலைஞர் டீவி(தினமணிச் செய்தி)க்குகொடுக்க இருக்கும் ஒரு கோடி விளம்பரம்( உருப்படாத சீரியலுக்கு)-மத்திய அரசுத்துறையையும் கெடுத்தாச்சா?

பதில்.?

dondu(#11168674346665545885) said...

@அனானி: பதில் தராது விட்டுப் போன கேள்வியை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

venki (a) baba said...

டோண்டு பதில்களுக்கு:

1) 'டோண்டு' பெயர்க்காரணம் கூறுக?

2) தேர்தல் சமயத்தில் கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு தரவியலாத நிலைக்கு நமது நாட்டில் பாதுகாப்பு போதிய அளவில் இல்லை என்று கூறலாமா?

3) IPL போட்டிக்கு வேறு நாட்டிற்க்கு மாற்றப்பட்டது, நரேந்த்ர மோடி கூறியது போல் நமது நாட்டிற்க்கு கேவலமா?

4) சோ தேர்தல் பிரச்சாரத்தில் இடுபட்டுளார் என்று துக்ளக் ஆண்டுவிழாவில் அவர் கூற கேட்டேன். அவர் எந்தெந்த கட்சிக்கு பிரச்சாரம் செய்துள்ளார்?

venki (a) baba said...

// Jaya Tv Interview With Cho

Thirumbi Parkiren 09-03-09


Thirumbi Parkiren 10-03-09

Thirumbi Parkiren 11-03-09

Thirumbi Parkiren 12-03-09 //

நன்றி

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது