சிவகுமார்:
1. என்ன ஆச்சு தமிழ் இந்துவிற்கு?
பதில்: இது சம்பந்தமாக நண்பர் எஸ்.கே. அவர்களுடன் பேசினேன். தமிழ் இந்துவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நடப்பதால் தற்போது செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை தெரிவித்தார். கூடிய சீக்கிரம் வெளி வரும் என்பதையும் தெரிவித்தார்.
2. மிகச் சிறந்த முறையில் சென்று கொண்டிருந்த போகப் போகத் தெரியும் தொடரை திடீரென நிறுத்தி விட்டார்களே?
பதில்: மேலே சொன்ன பதில்தான் இங்கும்.
3. மற்றவர்களைப் போல் இந்துக்கள் ஏன் காரசாரமாக பதிவுகள் எழுதுவதில்லை?
பதில்: எழுதாமல் இருப்பார்களா, நாம்தான் அவற்றை தேடிப் போக வேண்டும்.
4. காங்கிரசுககு ஆதரவாக பிளாக் ஆரம்பிக்கும் தொண்டர்கள் மத்தியில் எதிர்முகாமில் இவ்வாறு ஏன் இல்லை? (நல்ல காமெடி செய்வார் அந்த பதிவர்)
பதில்: எதிர் முகாம் என்று யாரை சொல்கிறீர்கள்? எந்த கட்சியை சொல்கிறீர்கள்? அதுவும் கூட்டணி கூத்துகள் ஒவ்வொரு எலெக்ஷனுக்கும் மாறும்போது நண்பர் யார், எதிரி யார்?
5. ரிபப்ளிகன் கட்சி ஆதரவு என்பது சோ-வை இமிடேட் செய்ததா அல்லது தங்களுடைய சொந்த கருத்தா?
பதில்: அது எனது சொந்தக் கருத்தே. அதுவும் அது என்னிடம் அறுபதுகளிலிருந்தே உண்டு.
6. சென்ற தேர்தலில் அடல்ஜி இம்முறை லால்ஜி - அடுத்த தேர்தலில் யாரோ?
பதில்: அது பாஜகவின் உள்விவகாரம். அவர்கள் பார்த்து கொள்வார்கள்.
7. ஐபுவன் - இந்த வார்த்தை ஜெர்மனி என்பது தெரியும். அர்த்தம் வணக்கம் என்பதா காலை வணக்கம் என்பதா?
பதில்: இது ஜெர்மன் வார்த்தை இல்லை என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
8. ப்ரோஸ். காம் வெப்-முகவரி என்ன?
பதில்: http://www.proz.com/
இதில் எனது பக்கம்: http://www.proz.com/profile/47242
9. சாமான்யர்களிடம் அடித்து பிடித்து வரி வசூல் செய்யும் வருமான வரித் துறை கந்து வட்டி ரௌடிகளை ஏன் கவனிப்பத்ல்லை?
பதில்: அவர்கள் இவர்களை கவனிப்பவர்களாக இருக்கும்.
10. மாமி நடிகையை விட அம்மா மிக அழகாகத் தெரிகிறாரே?
பதில்: பல முறை அம்மா மகள் ஜோடி சகோதரிகள் போல தோன்றுவர். சிலர் உடல்வாகு வயதாக ஆக அழகாய் பிரகாசிக்கும். அப்படித்தான் என் நண்பன் பெண் பார்த்து விட்டு வந்ததும் அவனிடம் பெண் எப்படி என கேட்டதற்கு, பெண்ணீன் அம்மா கொள்ளை அழகு எனக் கூறிவிட்டு, என்னிடம் சொடேரென பிடரியில் அடிவாங்கினான்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
11 hours ago
13 comments:
//மாமி நடிகையை விட அம்மா மிக அழகாகத் தெரிகிறாரே?//
இந்த கேள்வி, மாமி நடிகையின் அம்மாவை நேரில் பார்த்த பின்பு கேட்ட கேள்வியா இல்லை ஃபோட்டோவைப் பார்த்து கேட்ட கேள்வியா?
//என்னிடம் சொடேரென பிடரியில் அடிவாங்கினான்//
Why? அந்தம்மாவை நீங்க 'ரூட்' போட பாத்தீங்களாக்கும்?
//Why? அந்தம்மாவை நீங்க 'ரூட்' போட பாத்தீங்களாக்கும்?//
நான் எழுதியதை சரியாக படியுங்கள். நண்பன் மட்டும்தான் பெண் பார்க்க போனான், நான் கூட போகவில்லை.
அப்படியே நானும் போய், நீங்க சொன்னது போல ரூட் போட்டிருந்தால் நண்பனுக்கு பிடரியிலே ஒரு அடி மாத்திரம் விழுந்திராது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//என்னிடம் சொடேரென பிடரியில் அடிவாங்கினான். ///
நல்லவேலை சொன்னிங்க... இல்ல நானும் அடிவாங்கி இருப்பேன்
அந்த 4 வது கேள்வில ஒரு மன்னும் புரிய்லையே ! நீங்க இப்படி புரிஞ்சுக்கிட்டு பதில் கொடுத்தீங்க.
குப்புக் குட்டி.
//மற்றவர்களைப் போல் இந்துக்கள் ஏன் காரசாரமாக பதிவுகள் எழுதுவதில்லை?//
கடையில விக்கிற எல்லா மசாலாவும் இப்போ கலப்படம் தான்!
//காங்கிரசுககு ஆதரவாக பிளாக் ஆரம்பிக்கும் தொண்டர்கள் மத்தியில் எதிர்முகாமில் இவ்வாறு ஏன் இல்லை?//
சில மத எதிர்ப்பு பதிவுகளையும், ஆதரவு பதிவுகளையும் அதற்கு அவ்ந்த பின்னூட்டத்தையும் ஒரு பி.ஜெ.பி ஆதரவாளருக்கு காட்டினேன்!
பி.ஜெ.பிக்கு ஆதரவாக ப்ளாக் எழுத நினைத்தவர், இப்பொழுது யோசித்து கொண்டிருக்கிறார்!
//ரிபப்ளிகன் கட்சி ஆதரவு என்பது சோ-வை இமிடேட் செய்ததா அல்லது தங்களுடைய சொந்த கருத்தா?//
ரிபப்ளிகன் கட்சி ஆதரவு வேணுமானால் அறுபதிலிருந்து இருக்கலாம்! ஆனால் ஒரு சில விசயங்களில் ஒத்த கருத்துடயவர் என்று பிடித்து போனால் அவரது கருத்துகளும் ந்மது சொந்த கருத்துகளாகும் அபாயம் உண்டு!
//சென்ற தேர்தலில் அடல்ஜி இம்முறை லால்ஜி - அடுத்த தேர்தலில் யாரோ?//
பாவ்பாஜி கூட வரலாம். யார் கண்டா!
//சாமான்யர்களிடம் அடித்து பிடித்து வரி வசூல் செய்யும் வருமான வரித் துறை கந்து வட்டி ரௌடிகளை ஏன் கவனிப்பத்ல்லை?//
கந்து வட்டி கொடுப்பவர்களிடம் பத்து வாரத்துக்கு மேல் ஒரு கணக்கு இருக்காது!
முடிந்ததும் அட்டை கிழித்து எரியப்படும்.
பணம் பல பக்கம் சிதறி கிடப்பதால் ஒருங்கிணைப்பது தாவு தீரும் வேலை என்பதால் கூட சீண்டாமல் இருக்கலாம்!
//பெண்ணீன் அம்மா கொள்ளை அழகு எனக் கூறிவிட்டு, என்னிடம் சொடேரென பிடரியில் அடிவாங்கினான். //
அன்பா தானே!
அவருக்கு பிடித்திருப்பது தவறொன்றும் இல்லையே! அழகால் மட்டுமில்லாமல் நல்ல ட்ரெஸ்சிங் சென்சில், உபசரித்தலில் உங்களது நண்பரை கவர்ந்திருக்கலாம்.
அதுமட்டுமில்லாமல் எனக்கு தெரிந்து
”ஆண்டி” டெரர்ரிஸ்டுகள் நாட்டில் ஏராளமாக உண்டு!
நேற்று கூட தாத்தா ஆரியர்-திராவிடர் போன்ற விஷயங்களைப் பற்றி பேசி சூட்டை கிளப்பியிருக்கிறார்! அவர் அடிவருடிகளுக்கு வேண்டுமானால் அது சந்தோஷத்தைக் கொடுக்கும்! ஆனால் அவர் போய்விட்ட பிறகு அவர்களை எப்படி சந்தோஷப்படுத்தப்போகிறார்கள் தி.மு.க.வும் தி.க.வும்?
ப்ரோஸ். காம் வெப்-முகவரி என்ன?
இதை பற்றி கொஞ்சம் விளக்குங்கள்....
அப்படியே வாங்க
http://www.ensaaral.blogspot.com/
Post a Comment