பிரபாகரன் கொலையுண்டாரா, உயிருடன் இருக்கிறாரா?
இதுதான் இப்போது எல்லோர் மனதையும் ஆக்கிரமிக்கும் விஷயம். பி.இராயகரன் புலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார் என்பது பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்:
“திட்டமிட்ட சதி மூலம் புலித்தலைமையும், அவர்கள் குடும்பமும் முற்றாக சரணடைய வைத்தே அழிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் எஞ்சி இருந்ததாக நம்பப்படும் 2000 போராளிகளுக்கு கூட, இதுதான் கதி. இந்தச் சதி மூலமான சரணடைவின் பின், சித்திரவதைக் கூடங்களில் இன்னமும் சில தலைவர்கள் சிக்கி மரணிக்கின்றனர் என்பது வேதனையானது.
இந்த சதி வலையின் முன் பக்க பரிணாமத்தை நன்கு தெரிந்தவர்கள், இதை வழி நடத்தியவர்கள். சரணடைய வைத்து, இந்த துரோகத்தை முழுமையாக வழி நடத்தியவர்கள் தான், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கதை சொல்கின்றனர். உண்மையில் புலித்தலைமையை விட்டில் பூச்சியாக்கிய அரசியல், அதன் பின்னணி என்பது துரோகத்தாலானது.
இந்தச் சதி நன்கு திட்டமிட்டு திணிக்கப்பட்டது. இந்த துரோகம் வெளித்தெரியாது இருக்க, புலித் தலைவரை உயிருடன் இருப்பதாக கூறுவதன் மூலம், துரோகிகளே இன்று புலித் தலைமையாகியுள்ளது.
யார் இதை நன்கு திட்டமிட்டு சரணடைய வைத்தனரோ, அவர்கள் தாங்கள் செய்த துரோகத்தை தலைவர் இருப்பதாக கூறி இன்று மூடிமறைகின்றனர்.
தங்களைத் தாங்களே இராணுவத்திடம் ஓப்படைத்து பலியான அந்த புலி அரசியல் அடிப்படை என்ன? தனிமனித வழிபாடும், சர்வாதிகாரமும் மேலோங்கிய ஒரு அமைப்பு, இதற்கு வெளியில் சிந்திக்கவும் செயலாற்றவும் அவர்களால் முடியவில்லை. தான் சரியாக இருப்பதாகக் கருதிக்கொண்டு, தன்னைத்தானே பலி கொடுத்துள்ளது. இதைத்தான் நோர்வே சமாதான முகவர் எரிக்சூல்கெய்ம், எதையும் சிந்திக்கும் நிலையில் பிரபாகரன் இருக்கவில்லை என்கின்றார்.
இந்த சதிக்கு உதவியது, மாபியாக் குழுக்களுக்கு இருக்கக் கூடிய விசுவாசம் தான். அதைக் கைவிடும் போது, அது உள்ளிருந்தே கழுத்தறுக்கின்றது.
இன்று புலிப் போராட்டங்கள், நம்பிக்கைகள், விசுவாசங்கள் அனைத்தும் மந்தைத்தனத்தை அடிப்படையாக கொண்டது. புலித்தலைமை மக்களை வெறும் மந்தையாக பயன்படுத்தியது. இதில் துயரம் என்னவென்றால், அதே மந்தைத் தனத்தடன் புலித்தலைமை இலங்கை அரசிடம் சரணடைந்து பலியானதுதான்.
மந்தைத்தனம் தலைமை வரை புரையோடிக் கிடந்தது. இது தன்னைத்தானே பலியிட அழைத்துச் சென்றது. மூன்றாம் தர மாபியாக்கள், இலகுவாக கழுத்தறுக்க முடிந்தது. இடைக் காலத்தில் தப்பி செல்ல முற்படா வண்ணம், அவர்களுக்கு ஒரு மூன்றாம் தரப்பு பற்றிய நம்பிக்கையை ஊட்டி, அவர்களை சுற்றிவளைக்கப் பண்ணிய பின் அதுதான் இது என்று சரணடைவை வைத்து கழுத்தறுத்துள்ளனர். மக்களை முட்டாளாக்கி மந்தையாக்கிய புலியின் பின், இந்தத் துரோகம் இலகுவாக ப+சி மெழுக முடிந்துள்ளது.
மக்கள் எவ்வளவு முட்டாளாக மந்தைகளாக உள்ளனர் என்பதை பார்க்க, நக்கீரன் வெளியிட்ட மோசடிப் படத்தை புலி கொண்டாடிய விதம் நல்ல எடுத்துக்காட்டு. ஒரு நாள் கூட அந்த படம் உயிர் வாழமுடியாது போனது. பாலசிங்கத்துடன் அமர்ந்து இருந்து பிரபாகரன் உரையாடும் அந்தப் படத்தை வைத்து, நக்கீரன் அரங்கேற்றிய மோசடி அம்பலமாகின்றது. மக்களை மந்தையாக்கி, அதை நம்பவைத்து நக்கீரன் போன்ற பொறுக்கிகள் பணம் சம்பாதிக்கின்றனர். ஒரு விடுதலைப் போராட்டத்தில் பல மாபியாக்கள். இறந்தவர்களை வைத்து பிழைப்பு”.
இப்போது இந்த வெர்ஷனை கிட்டத்தட்ட முழுமையாகவே ஜூனியர் விகடனும் குமுதம் ரிப்போர்டரும் உறுதி செய்துள்ளன. பிரபாகரன் எப்படி தப்பினார், சுரங்கப்பாதை வழியாக எவ்வாறு கடலுக்கருகில் சென்று அங்கிருந்து மிக வேகப் படகுகளில் பத்திரமான இடத்துக்கு தப்பினர் என்றெல்லாம் கூறப்படுபவை, அவ்வாறு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற தோரணையில் கூறப்படுபவனாகவே தோற்றம் தருகின்றன. நக்கீரன் செய்த ஃபோட்டோஷாப் கூத்து ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டதும், அதற்கும் ஒரு சப்பைக்கட்டு வைத்திருக்கிறார்கள். இம்மாதிரி தருணங்களில் உண்மையை கண்டறிவது கடினம். இதற்கு முன்னால் பலமுறை பிரபாகரன் இறந்ததாக்க் கருதப்பட்டு பிறகு அவர் உயிருடன் வெளிப்படுவது என்ற precedents இருந்ததாலேயே இந்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. பல புலி ஆதரவாளர்களுக்கோ இது தன்னம்பிக்கை பிரச்சினையாகப் போய் விட்டது. ஆகவே பிரபாகரன் இனி இல்லை என்பதையே யோசித்து பார்க்கவும் அவர்கள் தயாராக இல்லை.
சதாம் ஹுசைன், முசோலினி, ருமானிய அதிபர் சோசெஸ்கூ, ஜெர்மனியின் Göringg, Goebbels, Von Ribbentropp ஆகியோர் இறந்தது ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் மரணத்தில் சந்தேகம் இல்லை. அதே சமயம் ஹிட்லர் இறக்கவில்லை என சில கோஷ்டிகள் ரொம்ப ஆண்டுகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தனர். மேற்கு ஜெர்மனி அரசு ஹிட்லருக்கெதிரான கைது உத்திரவை ரொம்ப நாளைக்கு நிலுவையில் வைக்கும் அளவுக்கு இந்த வதந்தி சக்தி வாய்ந்ததாக இருந்தது. இப்போது பிரபாகரன் மரணத்தில் சிறிதளவு சந்தேகம் கூட இருக்கும் வரை இந்திய அரசும் அவரது பெயரை ராஜீவ் கொலை வழக்கு குற்றப்பத்திரிகையில்ருந்து நீக்கக் கூடாது.
பிரபாகரன் உயிரோடு இன்னும் இருக்கிறார் என்று சொல்பவர்கள் அவ்வாறு சொல்வதற்கு பல காரணங்கள் உண்டு. அவை பின்வருமாறு. இன்னொரு முக்கிய விஷயம், ஒன்றுக்கு ஏற்பட்ட காரணங்களும் சிலர் விஷயத்தில் நடக்கும்.
1. மேலே ரயாகரன் கூறியது போல புலித் தலைமையை காட்டிக் கொடுத்த துரோகிகள் தாம் செய்த துரோகத்தை இவ்வாறு மறைக்க முற்படலாம். அவர்களை தப்பிக்க வைத்ததே தாங்கள்தான் என சீன் கூட காட்டுவார்கள். பின்னால் புலிததலைமை வெளியே வராமலே போனாலும் அவர்கள் தங்களுடன் பிற்பாடு தொடர்பு கொள்ளவேயில்லை எனக்கூறி, அவர்களுக்கு என்னாயிற்றோ என அவர்களும் மற்றவர்களுடன் முதலைக் கண்ணீர் வடிக்கலாம்.
2. புலிகளின் தலைமை உயிரோடு இருந்தால்தான் அவர்கள் பெயரைச் சொல்லி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் வசூல் செய்யலாம். உண்மை முழுமையாகத் தெரியும்வரை வந்த வரையில் லாபம் எனவும் செயல்படலாம்.
3. புலிகள் தப்பிவிட்டனர் என உண்மையாகவே நம்பி ஆறுதல் அடையலாம். அவர்களில் பலர் புலித்தலைமை அழிந்திருக்கலாம் என்பதை வாதத்துக்குக் கூட ஒப்புக் கொள்ள மறுக்கலாம்.
4. புலி செத்தது, புலி செத்தது என்று சொல்லி சொல்லி ஏமாற்றியதாலேயே கூட இப்போ புலி செத்தது என்பதை நம்ப மறுப்பவர்களும் இருக்கலாம்.
மத்தியில் காங்கிரஸ் - திமுக இடையே மந்திரி பதவிக்காக இழுபறிகள்:
எங்களூர் கவுன்சிலர் காங்கிரஸ்காரர். அவர் இது விஷயமா ஒரே வார்த்தைதான் சொன்னார். “இந்த திமுக காரங்களுக்கு எப்போதுமே தாங்கதான் சாப்பிடணும்னு குறி. மாநிலத்தில் மந்திரி பதவி காங்கிரசுக்குத் தர துப்பில்லை. இங்கே மட்டும் வந்திடறாங்க” என்றார் அவர். தமிழக காங்கிரசார் மூன்றாண்டுகளாக மனதில் வைத்து புழுங்கியதைத்தான் அவர் சரேலென சொன்னார். 2004 நிலைமை வேறு, இப்போது நிலைமை வேறு. அப்போது காங்கிரசுக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை. ஆகவே அக்கட்சி செய்ததையெல்லாம் பொறுத்துப் போக வேண்டியதாயிற்று. இப்போது நிலைமை தலைகீழான பிறகும் திமுக அதே மாதிரி தங்களுக்கு கேட்ட பதவிகள் கிடைக்கும் என எப்படி நம்புகிறது என்பதுதான் புரியவில்லை. வேறு ஏதேனும் உள்ளடி விவகாரங்கள் உள்ளனவோ என்பதை யாரறிவார் பராபரமே! அதையும் பார்ப்போம்.
பை தி வே, 1971-ல் இந்திரா காங்கிரசுக்கு வெறுமனே பாராளுமன்றத்தில் மட்டும் சீட்கள் ஒதுக்கி அசெம்பிளியில் ஒரு சீட்டும் தராது அழிச்சாட்டியம் செய்தார் கருணாநிதி. அப்போதைக்கு அந்த அவமானத்தை வேறுவழியின்றி இந்திரா விழுங்கினார். பிறகு 1976-ல் சர்காரியா கமிஷன், மிசா கைதுகள் என்றெல்லாம் சொல்லி சொல்லி அடித்தார். 1980-ல் கருணாநிதியே வேறு வழியின்றி “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என கெஞ்ச வேண்டியதாயிற்று. இப்போதும் சரித்திரம் லேசாகத் திரும்புகிறது என்றுதான் நினைக்கிறேன். பார்க்கலாம்.
ஆனால் ஒன்று. முக அவர்கள் இப்போதைய பிரபாகரன் விஷயத்தில் என்ன கூறுகிறார் என்பதை எங்குமே பார்க்க இயலவில்லை. யாரேனும் எங்கேனும் பார்த்திருந்தால் பின்னூட்டமாக தெரிவியுங்கோ சாமியோவ். ஓக்கே அவரோட குடும்பக் கவலை அவருக்கு. புலிகளா முக்கியம்னு சொல்லறீங்களா? சரி சரி, கண்டுக்கலை.
சோ அவர்களைப் பார்த்து சீறுபவர்களுக்கு:
இதில் சோ அவர்களை பல சேனல்கள் பேட்டி எடுக்கின்றன, அவர் கருத்துக்களையும் கேட்கின்றன, அவரும் சொல்கிறார். சீறி எழுகிறார்கள் திராவிட குஞ்சுகள். பார்ப்பன கொழுப்பு என்றெல்லாம் வார்த்தை பிரயோகங்கள் வருகின்றன. சோவை ஏன் நொந்து கொள்கிறீர்கள் பார்ப்பன துவேஷிகளே? அந்தந்த சேனல்களுக்கு எழுதுங்கள், சோவையெல்லாம் பேட்டி காணக்கூடாது என. அவர்களுக்கும் துடைத்துக் கொள்ள காகிதங்கள் கிடைத்த மாதிரி இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலக்கிய நூல்கள் விற்கின்றனவா?
-
இரண்டு வெவ்வேறு எழுத்தாளர்கள் ‘இலக்கியம் எழுதுவதனால் என்ன பயன்?’ என்றும்
‘யார் வாசிக்கிறார்கள்?’ என்றும் விரக்தியுடன் எழுதியிருப்பதை அனுப்பி ஓரிரு
நண்பர்...
23 hours ago
16 comments:
பொதுவில் உங்களது வலைப்பூவிற்கு வர விரும்புபவன் அல்ல நான்... ஆனால் சோ பற்றிய தங்களது கருத்து தர்க்கரீதியாக இல்லாமல் உள்ளது. இதனை சோ அவர்களிடமும் காண முடிகிறதே அது ஏன்...
உதாரணமாக கடந்த துக்ளக் வார இதழில் தமிழகத்தில் நிலவும் ஈழ ஆதரவு போராட்டங்களை அடக்கிவிட்டால் முக அரசு செய்யும் மற்ற தவறுகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம் என்கிறார்... அப்படியானால் அழகிரி என்ன செய்தாலும் சோ விமர்சனம் செய்ய மாட்டாரா... அவர்கள் அடிக்கப் போகும் கொள்ளையை கண்டும் காணாமல் இருப்பாரா... இது ஒரு நேர்மையான செயலா
@அனானி
//உதாரணமாக கடந்த துக்ளக் வார இதழில் தமிழகத்தில் நிலவும் ஈழ ஆதரவு போராட்டங்களை அடக்கிவிட்டால் முக அரசு செய்யும் மற்ற தவறுகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம் என்கிறார்...//
அம்மாதிரி அவர் சொன்னது போல எதுவும் நான் துக்ளக்கில் பார்க்கவில்லையே. சரியான இதழ் விவரங்கள் தரவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அருமையான பதிவு சகா..
இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம்.{முதல் வருகையிலேயே பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள் வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்}
அப்படியே, நம்ம பக்கம் கொஞ்சம் வாங்க..
மாறுபட்ட பதிவு. என் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை இறக்கி வைத்தது போல் ஒரு உணர்வு. மற்றவர்களும் உண்மையைப் புரிந்துக் கொண்டு, ஈழத்தில் வாடும் தமிழ் மக்களுக்கு உதவி எதுவும் செய்யாவிட்டாலும், அவர்களை மேலும் வருத்தி, ஏமாற்றி பயமுறுத்த வேண்டாமே.
Dear sir
please read the article fro DBS Jeyaraj ..
he is from the famous column writer in the Hindu.
http://dbsjeyaraj.com/dbsj/archives/615
This has resulted in a bizarre situation where the Tamil diaspora remains overtly calm and cool while the media in Sri Lanka and abroad are going to town with news of his death as well as obituaries .
What is worse , there seems to be division among LTTE and pro-LTTE ranks overseas about how to respond to the leader’s death. One faction wants to acknowledge it , pay homage to Prabhakaran and proceed from there.
The others want to deny it and perpetuate the myth that the LTTE leader is alive. Elaborate efforts are on to circulate doctored images of Prabhakaran and also audio cassettes. The idea is to project an impression that Prabhakaran is safe in the north-eastern jungles leading a guerilla campaign with the participation of remaining cadres.
அண்ணா... ஏற்கனவே லங்கையில தமிழா எல்லாரும் பஞ்சாமிர்தமா ஆக்கப் பட்டுண்டு இருக்கா.. இந்த நேரத்தில நீங்க வேற நங்கநல்லுார் பஞ்சாமிர்த்தம் அது இதுன்னு வயத்தெறிச்சல கொட்டிகிறேளே....
@அனானி
நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் என்பது ஒரு லேபல் அவ்வளவுதான். ஒரே பதிவில் ஒன்றுக்கு மேற்பட்டு விஷயங்கள் இருந்தால் அவை எல்லாவற்றையும் அந்த லேபலில் சேர்க்கிறேன். இதில் நீங்கள் மனம் புண்பட ஒன்றுமே இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
சோ அவர்களைப் பார்த்து சீறுபவர்களுக்கு:
இதில் சோ அவர்களை பல சேனல்கள் பேட்டி எடுக்கின்றன, அவர் கருத்துக்களையும் கேட்கின்றன, அவரும் சொல்கிறார். சீறி எழுகிறார்கள் திராவிட குஞ்சுகள். பார்ப்பன கொழுப்பு என்றெல்லாம் வார்த்தை பிரயோகங்கள் வருகின்றன. சோவை ஏன் நொந்து கொள்கிறீர்கள் பார்ப்பன துவேஷிகளே? அந்தந்த சேனல்களுக்கு எழுதுங்கள், சோவையெல்லாம் பேட்டி காணக்கூடாது என. அவர்களுக்கும் துடைத்துக் கொள்ள காகிதங்கள் கிடைத்த மாதிரி இருக்கும்.
//
சோ மற்றும் சு. சாமி தவிர திராவிட குஞ்சு ஜெகத் காஸ்பரைக்கூடத்தான் டி.வி சேனல்கள் நேற்காணல், ஒபீனியன் என்று கேட்கின்றனர்.
பழநெடுமாறன், திருமாவளவன் என்று இலங்கைத் தமிழர்கள் அல்லலில் குளிர் காயும் திராவிட இதயங்களை அவர்கள் அழைப்பதில்லை என்ற கடுப்பு தான் என்று நினைக்கிறேன்.
பிரபாகரன் மரணம் பற்றி தமிழக அரசியல் தலைவர்கள் எந்த அறிக்கையும் விடவில்லை என்பதை கவனித்தீர்களா ?
இனிமேல், எல்.டி.டி.ஈ யிடமிருந்து எந்த பணமும் வராது என்பதால் தானோ இந்த இடி போன்ற மௌனம் ?
// ஹிட்லர் இறக்கவில்லை என சில கோஷ்டிகள் ரொம்ப ஆண்டுகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தனர்//
உலகம் தட்டை என்று கூடத்தான் நம்புகிறார்கள் (Flat World Society)
நன்றி டோன்டு சார் எமர்ஜென்சி காலத்தைப் பற்றி எழுதுங்களேன்
Please call and write these "Paarppana Dweshis" as "Puduppaarppanargal". Because, these bloggers are no less poor in wealth or knowledge than their compatriots in Tamilnadu and elsewhere.
Dondu Sir,
Cho did mention in "Idhu Nalla Seithi Alla" that if DMK takes a tough stance against LTTE/extremism, then we can bear the other mistakes of the administration.
I do agree with Cho. If lives can be saved by taking a tough stance against extremism, then let's leave the corruption for now and address it as a next step. Don't see anything wrong in this approach.
Regards.
Partha.
Dondu,
The LTTE crows in Tamilnadu and outside will continue their "Prabhakaran alive" campaign and take it to Nethaji/Thevar range.
Because they do not have guts to accept that SL Govt would have killed him. Till a month back, these crows were saying in TN that Prabhakaran cannot be touched, he will do that, he will do this etc.
Indian Govt will have to concentrate on how they can get Tamils living in SL equal status with Sinhala people. Period.
Thanks
Venkataraghavan R
http://gokusal.blogspot.com/2009/05/blog-post_2179.html
Post a Comment