5/20/2009

பதிவர்கள் கவனத்துக்கு

இந்தப் பதிவில் பதிவர் ஜாக்கி சேகர் கூறுவதை இங்கே தருகிறேன்.

“நான் புகைப்படம எடுக்கும் போது என் வலைதளத்தில் ஓப்பன் செய்ய முடியவில்லை என்றும் அதில் வைரஸ் இருப்பதாகவும் அது என் தமிள் எச்டிஎம்மளை எடுத்து விட சொன்னார்கள். எடத்து விட்டேன் அப்படி ஏதாவது பிரச்சனை என்றால் dtsphotography@gmail.com என்ற எனது வலை முகவரியில் தயவு செய்து தெரிவிக்கவும்.”

இப்போது இப்பிரச்சினை பல பதிவுகளில் இருக்கிறது. கூகள் குரோமில் அவர்களது பதிவைத் திறந்தாலே வைரஸ் எச்சரிக்கை வருகிறது, ஆகவே மூட வேண்டியுள்ளது. உதாரணத்துக்கு இப்போதுதான் சுரேஷ் குமார் பதிவில் (வதந்திகள் வரும் உலகமடா) இந்த எச்சரிக்கையை கண்டேன். அதே எச்சரிக்கையை வேல் தர்மாவின் “பிரபாவின் இறந்த உடல் - சில சந்தேகங்கள்” பதிவிலும் பார்த்தேன்.

நீங்களும் ஜாக்கி சேகர் போலவே அந்த தமிள் எச்டிஎம்எல் விட்ஜட் மாதிரி ஏதேனும் போட்டிருந்தால் அதை உடனே எடுத்து விடுங்கள். ஏற்கனவேயே இருக்கும் டென்ஷனில் இதெல்லாம் தேவையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

இராகவன் நைஜிரியா said...

எனக்கு கூட நகைக் கடை என்ற பதிவை திறக்கும் போது வைரஸ் என்று காண்பிக்கின்றது.

இப்போது எனக்கும் சில பதிவுகளை திறக்கும் போது இந்த ப்ராப்ளம்தான். திறக்கவும் பயமா இருக்கு. அதனால் திறப்பதே இல்லை.

வால்பையன் said...

தகவலுக்கு நன்றி

தீப்பெட்டி said...

எனது பிளாக்கிலும் இருந்தது. NTAMIL எடுத்த பின்பும் வைரஸ் காண்பித்தது. நேற்று பிளாக் கூகிளிலிருந்து நீக்கப்பட்டது. பழைய பதிவுகளை recover பண்ண முடியுமா? தெரிந்தவர்கள் சொல்லவும்.

puduvaisiva said...

தகவலுக்கு நன்றி டோண்டு சார்

இந்த பிரச்சனையினால் நண்பர் ஜாக்கி சேகர் பதிவுக்கு பின்னோட்டம் இட முடியாமல் போனது.

குடுகுடுப்பை said...

ஆமாம் நிறைய பேரின் வலைத்தளம் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது ஸ்பைவேர் நிறுவப்பட்டுள்ளது. என்னுடைய கணினி தற்போது நிறைய ஸ்பைவேர்களோடு உள்ளது.இவைகளை படிக்க திறந்த்தால்.

dondu(#11168674346665545885) said...

same problem on opening madhavraj.blogspot.com

Regards,
Dondu N. Raghavan

minuthu minnal said...

same problem on opening madhavraj.blogspot.com

//
தீராத பக்கங்கள்
http://mathavaraj.blogspot.com/2009/05/5.html
///

i can read !!!
no problem here (UAE)

Unknown said...

ஆமாம் சார். எனக்கும் வருகிறது சில பதிவர்களின் வலையை திறக்கும்போது.அவர்கள் வலைப் பக்கமே போவதில்லை.

dondu(#11168674346665545885) said...

@மின்னுது மின்னல்
எக்ஸ்ப்ளோரரில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதில் இந்த மாதிரியெல்லாம் வார்ணிங் தரமாட்டார்கள். சொல்லாமல் கொள்ளாமல் தாக்குதல்தான்.

எனக்கு தெரிந்து கூகள் க்ரோம் மட்டுமே இம்மாதிரி எச்சரிக்கைகளை விடுக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இராகவன் நைஜிரியா said...

Firefox கூட இது மாதிரி எச்சரிக்கைகளைக் கொடுக்கின்றதுங்க.

பனையூரான் said...

வணக்கம் எனது வலைப்பதிவையும் திறக்கமுடியவில்லை.எனது வலைப்பதிவு முகவரி panaiyooran.blogspot மீண்டும் அதே பெயரில் பதிவுகலைப் பெற்றுக்கொள்ள என்னவழி?????

பட்டாம்பூச்சி said...

தகவலுக்கு நன்றி.

ALIF AHAMED said...

மின்னுது மின்னல்
எக்ஸ்ப்ளோரரில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
//

நான் பயன் படுத்துவது firefox தான்

பதிவர் பலருக்கும் இது ஏற்படுகிறது என்பது உண்மையே

நான் நினைப்பது www.ntamil.com விட்ஜட் வைத்திருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை இருப்பதாக தெரிகிறது

கூகுள் ஒரு வாரம் பார்த்து இருந்து அந்த பதிவர் அக்கொண்டையே (blogger account ) நீக்கி விடுகிறது !!!!

எனவே இந்த மாதிரி எச்சரிக்கை வந்த உடன் சம்பந்த பட்ட பதிவருக்கு தெரியபடுத்தினால் மட்டுமே அவர் அந்த விட்ஜட் நீக்கிவிட்டால் நல்லது !!!!


நன்றி !!

dondu(#11168674346665545885) said...

ntamil.com சம்பந்தப்பட்டுள்ள வலைப்பூக்களில் இப்பிரச்சினை என கேள்விப்படுகிறேன். ஆகவே அதன் லிங்க் ஏதேனும் உங்கள் மீயுரை தொடர்புகளாக இருந்தால் அதை உடனே நீக்கவும்.

இல்லாவிடில் பிளாக்கர் உங்கள் வலைப்பூவை இழுத்து மூடிவிடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல வேளை அது என்ன மாதிரி சின்ன ஆளுங்களை தாக்காதுன்னு நெனைக்குறேன்..
அப்புறம் எனக்கும் சோ வின் எழுத்துக்கள் பிடிக்கும்..

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது