மோடி நேர்காணலின் முதல் பகுதிக்கான எனது பதிவு இங்கே.
மோடி நேர்காணலின் இரண்டாம் பகுதியையும் அனுப்பிய நண்பர் சந்திரசேகரனுக்கு நன்றி. அது சம்பந்தமாக நான் இட்ட ஆங்கிலப் பதிவை இங்கே காணலாம்.
''எனது குஜராத்தில் 14% வளர்ச்சி விவசாயத் துறையில் 14%, ஆனால் அதை யாருமே அதை பார்ப்பதாகத் தெரியவில்லை'
இந்த நேர்க்காணலின் முதல் பகுதியில் மோடி அவர்கள் மத்தியில் இப்போது நடக்கும் தேர்தலில் தேசீய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றாலும் தான் என்னவோ குஜராத்திலேயே இருக்கப் போவதாக கூறினார், தன்னை பேட்டி கண்ட சாய்சுரேஷ் சிவஸ்வாமி மற்றும் நிகில் லட்சுமணிடம்.
இந்த இரண்டாவது பகுதியில் இப்போது நடக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போக்கு பற்றியும், தனது பிரதம மந்திரி அபிலாஷைகள் பற்றிய கேள்விகளுக்கான பதில்களையும் கூறுகிறார்.
இந்த நாட்டின் முன்னேற்றம் பற்றிய விவாதங்கள் பெருவணிகர்களுக்கு சாதகமாகப் போய்விட்டதாக நினைக்கிறீர்களா? சாதாரண மக்கள் தாம் புறக்கணிக்கப்படுவதாக உணர்கின்றனரா?
நல்ல கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இதற்கு நான் விடையளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனது குஜராத்தில் அம்மாநிலத்துக்கான துடிப்பு மிக்க உலகளாவிய முதலீட்டாளர்களது உச்சக்கட்ட மாநாட்டை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனவரி 13-14 தேதிகளில் நடத்துகிறேன். அதில் சுமார் 700-800 அரசு அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். அந்த மகாநாட்டுக்கு தொழிலதிபர்கள், வணிகர்கள் ஆகியோரை அழைத்து இந்த மாநிலத்தில் முதலீடு செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.
இதே மாநிலத்தில் வருடத்துக்கு ஒரு மாதம் முழுதும் விவசாய விழா ஒன்றையும் நடத்துகிறோம். மண்டை காயும் வெயிலில் ஒவ்வொரு ஆண்டும் மே ஜூன் மாதஙள் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் இந்த அப்பியாசத்தில் ஈடுபடுகின்றனர். விவசாயிகளுடன் விவாதித்து முன்னேற்றங்களுக்கு வழி செய்கின்றனர். முந்தைய பத்தியில் குறிப்பிட்ட இரு தினங்கள் நிகழ்ச்சிகளை கவனிக்கப்பட்ட அளவுக்கு இப்போது கூறப்படும் இரு மாத நிகழ்ச்சி பொது கவனத்தை ஈர்க்கவில்லையே.
இந்த மனநிலையால் என்ன ஆயிற்றென்றால், மன்மோகன் அரசு விவசாய முன்னேற்றத்தை 4 சதவிகிதம் அளவில் குறிவைத்து, 2.5%-ல் சிங்கி அடிக்கிறது. எனது மாநிலமான குஜராத்தில் அபிவிருத்தி 14%, ஆனால் யாரும் அதை கண்டு கொள்வதில்லை.
பெண் குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை தந்துள்ளேன். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் திங்கள் 13, 14 மற்றும் 15 தேதிகளில் எனது முழு அரசு அய்ந்திரம் கிராமங்களுக்கு செல்கிறது. விரும்பினால் நீங்களும் வரலாம். முதலமைச்சர், மந்திரிகள், தலைமைச் செயலர், செயலர், IAS அதிகாரிகள், ஆக எல்லோருமே இதில் ஈடுபடுகிறோம். இப்ப இந்த மாநிலத்தில் பெண் குழந்தைகள் பள்ளி சேர்க்கை 100 சதவிகிதம். இது உங்களுக்கு மக்களுக்கான வேலையாகத் தெரியவில்லையா?
செய்திகளை வணிகரீதியில் பார்ப்பவர்கள் முதலில் சொன்ன இரண்டு நாள் Vibrant Gujarat பற்றிய செய்திகளை மட்டுமே பார்க்கிறார்கள். மற்றவற்றை கோட்டை விடுகிறார்கள்.
அதே போல இங்கு சிரஞ்சீவி திட்டமும் உண்டு. குழந்தைபேற்றில் பெண்களுக்கான பாதுகாப்பு திட்டம் அது. ஏழ்மை நிலையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதெல்லாம் உங்கள் கண்களுக்கு படாது.
தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற சொலவடை ஒன்று உண்டு. எல்லோருக்கும் அது தெரியும், உங்களுக்கும்தான். இது விஷயமாகவும் அரசு முனைந்து காரியங்கள் செய்துள்ளது. கோர்ட் வேலை செய்யும் நேரம் தினமும் அரை மணி நேரம் அதிகமாக்கப்பட்டுள்ளது. கோர்ட் விடுமுறைகளில் ஏழு தினங்கள் குறைக்கப்பட்டுள்ளன.அதே கட்டமைப்புகளுடன் மாலை கோர்ட்டுகளும் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
2003-2004-ல் 45 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவற்றுடன் 65 லட்சம் புது வழக்குகள் சேர்ந்துள்ளன. ஆக மொத்தம் ஒரு கோடிக்கும் மேல் வழக்குகள் நிலுவையில். எங்களது முயற்சிகளுக்கு பிறகு நிலுவையில் இப்போது வழக்குகள் 20 லட்சம் மட்டுமே உள்ளன. 2010-ல், குஜராத்துக்கு வயது 50 நிறைந்திருக்கும், ஒரு வழக்கும் நிலுவையில் இருக்கக் கூடாது என்பதே எனது இலக்கு. அதன் பிறகு வழக்குகள் வரவர பைசல் செய்யப்படும்.
நீங்களே கூறுங்கள், சுதந்திரத்துக்கு பிறகு நீதி அளிப்பில் வேறு எங்காவது இவ்வளவு வேலைகள் நடந்துள்ளனவா?
ஆனால் வணிக வியாபாரிகளுக்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை. இப்போது கூறுங்கள், இந்த நிகழ்வுகள் ஏழைகளுக்கு ஆதரவானதா இல்லையா.
அப்படியில்லை, நாங்கள் குஜராத்தை மட்டும் குறிப்பிட்டு கேட்கவில்லை. பொதுவாகவே இந்தியாவில் முன்னேறம் என்பது வணிகர்களுக்காக மட்டுமே என்னும் தோற்றம் இருக்கிறது. அதைத்தான் நாங்கள் குறிப்பிட்டோம்.
இந்த தோற்றம் யார் கண்களிலிருந்து? அவர்கள் யார்? அவர்களது கண்களில்தான் கோளாறாக இருக்குமோ, என்னவோ. நான் உதாரணங்கள் கொடுத்துள்ளேன். அதிகபட்ச வேலைவாய்ப்பு குஜராத்தில் மட்டுமே.
8 கோடி மக்கள் தினசரி வெறும் 20 ரூபாயில் வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. அவர்களது முன்னேற்றத்துக்கான வழி என்ன?
அவர்களது வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். இந்தியர்கள் வேலைக்கு அஞ்சாதவர்கள். குஜராத்தில் இது சம்பந்தமான இயக்கத்தைத் துவக்கியுள்ளோம். அது விவசாயம், கட்டமைப்புகள் சேவை அளிப்புகள் ஆகிய எல்லா துறைகளையும் அரவணைத்து செல்கிறது. இது பேரியக்கமாக உருவாகியுள்ளது.
தேசீய கிராமப்புற வேலை உத்திரவாத திட்டம் (National Rural Employment Guarantee Scheme) தோல்வி அடைந்து விட்டதாகக் கருதுகிறீர்களா?
அது பற்றி நான் கருத்து எதுவும் சொல்லவில்லையே.
அவர்கள் வேலை தருகின்றனரே...
நல்லது, ஆனால் அதிகபட்ச வறுமை இப்போது கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து விட்டது.
இதன் காரணம் கிராமவாசிகள் நகரங்களுக்கு செல்வதால் இருக்குமா?
அதனால் இல்லை. எனது குஜராத்தில் ஜ்யோதிகிராம் யோஜனா உள்ளது. ஆகவே கிராமவாசிகள் நகரங்களுக்கு குடிபெயர்வது நின்றுள்ளது. குஜராத்தின் இந்த நிகழ்வு சுவாரசியமானது.
நகரங்களின் வசதிகள் கிராமங்களுக்கு வந்தால், கிராமவாசிகள் ஏன் நகரங்களுக்கு செல்லப் போகிறார்கள்.
இப்போது வெளியிடப்பட்டுள்ள UPA தேர்தல் அறிக்கையில், ஏழைகளுக்கு கோதுமை ஒரு கிலோ 3 ரூபாய்க்கு தரப் போவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக குஜராத்தில் ஏழைகள் கிலோ 2 ரூபாய் என்னும் விலையில் கோதுமை பெற்று வருகின்றனர்.
இதுதான் காங்கிரசின் லட்சணம். அகலப்பட்டை இணைப்பை நாடு முழுக்க தரப்போவதாக இப்போதுதன் வாக்குறுதி தரப்பட்டுள்ளது. குஜராத்திலோ ஒவ்வொரு கிராமத்திலும் அது ஏற்கனவே செயல்படுகிறது. அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் எவ்வளவு வேற்றுமைகள்!
ஐந்து ஆண்டுகளில் மன்மோகன் சிங் அரசின் சாதனை என ஒன்றுகூட இல்லை என நினைக்கிறீர்களா?
நான் அப்படிச் சொல்லவில்லை. அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றுதான் கூறுகிறேன். ஒன்றரை கோடி பேருக்கு வேலை அளிக்கப் போவதாகக் கூறினார்கள். செய்தார்களா? விலைகளை குறைக்கப் போவதாக கூறினார்கள். நடந்ததா? வெளிநாட்டு உறவுகளை சீர் அமைக்கப் போவதக சொன்னார்கள். என்ன ஆயிற்று? நேப்பாள் சமாச்சாரம் என்ன? அவர்களிடம் இக்கேள்விகளை எல்லாம் ஏன் கேட்க கூடாது? ஒரு ஜனநாயக நாட்டில் இக்கேள்விகளுக்கெல்லாம் அவர்கள் பதில் தந்தாக வேண்டும்.
அணுசக்தி ஒப்பந்தம் ஒரு சாதனை இல்லையா?
விஷயம் என்னவென்றால் இந்தியாவிடம் யுரேனியம் இருக்கிறது. அதை ஆய்வு செய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது வழக்கம். மன்மோகன் சிங் நிதி மந்திரி என்னும் ஹோதாவில் ஏன் அந்த நிதி ஒதுக்கலை முதலில் நிறுத்தினார்?
பிரதமரானதும் இந்த ஆய்வையே ஏன் அவர் நிறுத்தினார்? பிறகு அதே யுரேனியத்துக்காக வெளி நாடுகளுடன் ஏன் நம் கைகளை கட்டிப்போடும் ஒப்பந்தங்களில் ஏன் கையெழுத்திட வெண்டும்? இதுதான் கேள்வி.
இந்த ஒப்பந்தத்துக்கு பிறகுதான் உலகமே இந்தியாவை அணுசக்தி நாடாக ஒத்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தால் அல்ல, வாஜ்பேயி அமெரிக்காவை எதிர்த்து அணுசோதனைகளை நடத்தியதால்தான். அதை நாம் செய்யாதிருந்தால் நம்மை யார் அணுசக்தியாக ஒத்து கொண்டிருப்பார்கள்?
வாஜ்பேயி மட்டும் அச்சமயம் அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்திருந்தால் நாம் சந்தியில் நின்றிருப்போம். அணுசக்தி. ஆக அத்தருணத்தில் இந்தியத் தலைமை இரும்புக்கரத்துடன் செயல்பட்டதால்தான் அந்த அங்கிக்காரமும் வந்தது. கரும்பு வியாபாரம் எல்லாம் செய்து அது வரவில்லை (This happened when India's leadership showed steel. Not because of some deal).
உலகில் மிகப்பெரிய எண்ணிக்கையில் இந்திய இளைஞர்கள் உள்ளனர். இதன் பயன்பாட்டை சார்ந்து அது ஒரு போனசாகவோ டைம்பாம் ஆகவோ உருவாகலாம்.
ஒரு காலத்தில் ஜனத்தொகை ஒரு பிரச்சினையாக கருதப்பட்டது. இப்போது மாறியுள்ள உலகச் சூழ்நிலையில் அதுவே நமது செல்வமாக கருதப்படுகிறது. இதே சாதகமான நிலை சீனாவிலும் உண்டு.
ஆனால் இளைஞர்களுக்கு வேலை இல்லையென்றால், ஒரு பெரிய சமூகக் கலகம் ஏற்பட்டுவிடுமே.
இல்லை, நான் இதை ஏற்கவில்லை. இளைஞர்களிடம் திறமை உண்டு. அவர்களுக்கு தேவை வெறும் சம்பளத்துக்கு வேலை இல்லை. தொழில் வேண்டும், தமது திறமைகளை வளர்த்து கொள்ள. சீனாவில் இதற்காக 80,000 திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. இந்திய அரசோ 600 திட்டங்கள்தான் துவக்கியுள்ளது.
இதைத்தான் நான் பிரதமரை சந்தித்தபோது கேட்டேன், இங்கே என்ன நடக்கிறது என. குஜராத்தில் மட்டும் எனது அரசு 2000 திட்டங்களை துவக்கியுள்ளது. இந்த எண்ணிக்கையை இன்னும் பல நூறுகள் கணக்கில் அதிகரிக்க விரும்புவேன். பொதுத்துறை த்னியார் துறை கூட்டுறவுகளை உருவாக்கவும் ஆசைப்படுவேன்.
நமது இளைஞர்களுக்கு தேவை மதிப்புகளின் அதிகரிப்பு (value-addition), அவர்களால் அதை செய்ய முடியும், செய்கிறார்கள்.
அதே போல உங்களுக்கு வாய்ப்பு வந்தால், நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்பீர்களா?
மிகச் சிறிய மாநிலங்களின் முதலமைச்சர்களும் நாட்டின் சக்தியை பெருக்கும் கருவிகளாக உள்ளனர். நானும் அதில் ஓர் அங்கம்.
பிரதம் மந்திரியாகும் ஆசை துளிக்கூட உங்களுக்கு இல்லை என கூறுவீர்களா
நான் செய்ய வேண்டிய வேலை ஒன்று உண்டு. ஆசை என ஒன்றும் இல்லை. நான் எதாகவோ ஆக பிறக்கவில்லை, எதையோ செய்யத்தான் பிறந்தேன்.
யாராகவோ ஆக வேண்டும் என்றெல்லாம் சிறுவனாக இருந்தபோது கூட ஆசைபடவில்லை, இப்போதும் இல்லை, எப்போதுமே இருக்காது.
நான் ஏதாவது நல்லது செய்யும் கனவு காண்கிறேன். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும். ஒரு வேலையின் அங்கம் நான், ஆசையின் பகுதி அல்ல.
ஆசை என்னை வழிநடத்தவில்லை, வேலைதான் நடாத்துகிறது.
வேறு என்னவெல்லாம் நரேந்திர மோடியை வழிநடத்துகின்றன?
இந்திய அன்னை மேல் நான் கொண்டுள்ள பக்தியே. அதுவே எனக்கு போதுமானது.
இந்தியா தற்சமயம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
நமது ஜனத்தொகை நூறு கோடிகளை தாண்டி விட்டது. அதை வைத்து நாம் 21ஆம் நூற்றாண்டை நமதாக்கிக் கொள்ளும் வாய்ப்பு வந்திருக்கிறது. மக்களின் சக்திகளை தூண்டி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இயலும். இந்த வாய்ப்பை நழுவவிடலாகாது.
இந்த தேர்தலில் ஏதேனும் போக்குகளை (trends) காண்கிறீர்களா அல்லது எல்லா தேர்தல்களை போலவும் இப்போதும் தனிமனித தாக்குதல்கள் போன்ற போங்குகளையா?
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. 1952, 1957, 1962 தேர்தல்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. சிலவற்றில் சில மனிதர்களும், சிலவற்றில் ஊடகங்களும் இன்னும் மற்றவற்றில் பிரச்சினைகளும் பிரதானமாக இருந்தன. இம்மாதிரியான பெரிய நிகழ்வில் ஒவ்வொரு முறையும் இவ்வாறு மாறுதல்கள் நேர்வது சகஜமே. .
நீங்கள் தெரிவு செய்ய இயன்றால் இந்த தேர்தலின் பிரதான விஷயமாக எது இருக்க வேண்டும் என விரும்புவீர்கள்?
நமக்கு தேவை பலம் வாய்ந்த அரசு, அதை நடத்த வலிமையுடன் ஆட்சி செய்யும் தலைவர். பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசு. இதெல்லாம் தேசீய ஜனநாயக கூட்டணியை தலைமை ஏற்று நடத்தும் அத்வானிஜியிடம் நான் காண்கிறேன்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் தனிப்போக்கு உண்டு என கூறினீர்கள். இத்தேர்தலில் உங்கள் இளம் தலைவர் வருண் காந்தி அதை மாற்றிவிட்டாரே.
தேர்தல் முடிவுகள் வரட்டும், பொறுங்கள்.
இசுலாமியர் பற்றி வருண் காந்தி சொன்னதுடன் ஒத்து போகிறீர்களா?
உத்தர பிரதேசத்தில் தேர்தலை பார்த்தீர்கள். அங்கு என்ன முடிவு வந்தது என்பதையும் பார்த்தீர்கள். நீங்களே நிலையை அவதானியுங்கள்.
இல்லை, நாங்கள் உங்கள் கருத்தை கேட்கிறோம்.
எனது கருத்து நாட்டுக்கு முக்கியமில்லை. நீங்களே நிலையை அவதானிக்கவும். அதுதான் நல்லது.
ஆனால் வருண் காந்திக்கு இது முதல் தேர்தல்.
ஆரம்பத்திலிருந்தே அவதானியுங்கள் ஐயா.
இந்தியாவில் நீங்கள் போற்றும் தலைவர் யார்
லால் கிருஷ்ண அத்வானி.
வேறு யாராவது?
நீங்கள் ஒரு தலைவரை கேட்டீர்கள். நான் அவர் பெயரைக் கூறிவிட்டேன்.
வேறு யாராவது?
அதற்கு என்னிடம் ஜூன் மாதம் வரவும்.
மாயாவதி?
ஜூன் மாதம்.
கட்டுப்பாட்டுடன் கூடிய கட்சி எனக் கருதப்படும் பா.ஜ.க.வில் தலைமையில் சந்துஷ்டி இல்லை, அருண் ஜேட்லி போன்றவர்கள் அதிருப்தியுடன் இருக்கிறார்கள், இதற்கெல்லாம் காரணம் என்ன?
நான் குஜராத் சம்பந்தப்பட்ட வேலைகளில் உள்ளேன். அதற்கு வெளியே என்ன நடக்கிறது என்பதில் நான் ஈடுப்படுவதில்லை.
கேள்விக்கு இது பதில் இல்லை.
இல்லையே, ப்தில் தந்துவிட்டேனே. அது உங்களுக்கு பிடிக்கவிலை என்பது வேறுவிஷயம்.
தலைமைக்கான ரோல் மாடலாக நீங்கள் யாரை கருதுகிறீர்கள்? உங்களை இன்ஸ்பைர் செய்வது யார்?
சிறுவயதிலிருந்தெ நான் ஸ்வாமி விவேகானந்தரால் கவரப்பட்டேன். அவர் மாதிரியே செயல்பட விரும்புவேன். வரம்புகளை மீறமாட்டேன்.
அத்வானி பிரதமரானால் அவருக்கு கூறவிரும்பும் அறிவுரை?
அவருக்கு எனது அறிவுரை தேவையில்லை. நாந்தான் அவரிடம் அறிவுரைகளை கேட்டு பெறவேண்டும்.
ரொம்பவுமே பணிவுதான் உங்களுக்கு.
இல்லவே இல்லை, இதுதான் எனது வாழ்வின் யதார்த்தம்.
உங்கள் மானிலத்தை சிறப்பாக ஆட்சி செய்த உங்கள் குரல் தில்லியிலும் எடுபடவேண்டாமா...
அத்வானிஜிக்கு என்னை விட அனுபவம் அதிகம். (அவர் ஏற்ற பதவிகளின் பட்டியல் தருகிறார்).
இதுதான் இந்திய அரசியலின் பிரச்சினை இல்லையா? வயதுக்கும் அனுபவத்துக்கும் அதிக முக்கியத்துவம், இளைமையும், துடிப்பும் திறமையும் புறக்கணிக்கப்படுகின்றன...
இதில் எனது அனுபவத்தை கூறுகிறேன். வேறுவிதமாக எடுத்து கொள்ளாதீர்கள். அதற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள். அதில் பயன் இருக்காது.
இதை நான் ஒரு மாணாக்கனாகக் கூறுகிறேன். இரண்டு பிரதம மந்திரிகளை ஒப்பிடுவோம். நான் ஒப்பிடப்போவது நரசிம்ம ராவ் மற்றும் ராஜீவ் காந்தி.
ராஜீவ் காந்தியிடம் இளமை, துடிப்பு, வெளி நாட்டு அனுபவம், அழகான தோற்றம், முகராசி என எல்லாமே இருந்தன. நரசிம்ம ராவோ பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வெடுத்த நிலையில் தீவிர அரசியலுக்கு திரும்ப வந்தவர், எல்லா விதங்களிலும் மாறுபட்டவர்.
ஆனால் அவர்தான் ஐந்து ஆண்டுகள் நாட்டை அதிக சிறப்பான முறையில் ஆட்சி செய்தார். அவர் மக்கள் தொடர்பிலிருந்து விலகவில்லை. நாட்டுக்கும் நல்லது நடந்தது.
காரணம் மிகவும் எளிதானது. இவ்வளவு பெரிய, பல மொழிகளை உள்ளடக்கிய நாடான இந்தியாவை ஆள மிகுந்த அனுபவசாலியே தேவை. ஆகவே அவர் இதில் வெற்றி பெற்றார்.
இந்திய சரித்திரத்தை பார்த்தால் அவர் மாதிரி இருப்பவர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால் நரசிம்ம ராவ் அரசுக்கெதிராக லஞ்ச ஊழல் புகார்கள் உண்டே.
போஃபோர்ஸை விடவா? மேலும், அவரை நான் மகான் என்றெல்லாம் சொல்லவில்லை. இவ்விருவரையும் ஒப்பிட்டால் அவர் ஜெயிக்கிறார் என்று மட்டும் கூறினேன்.
இருவரிடமுமே ப்ளஸ்களும் மைனஸ்களும் உண்டு.
ஆனால் நிகர பிளஸ் அவரிடம்தான் உண்டு. யாருமே முழுக்க முழுக்க மைனசுடன் இருக்க முடியாது. நரசிம்ம ராவ் நிகழ்வுகளில் ஆழ்ந்து, அவதானித்து செயல்பட்டார். நாகாலாந்து பிரச்சினைகளையும் சமாளித்தார். ஏனெனில் அவரிடம் அனுபவம், தொலை நோக்கு ஆகியவை இருந்தன. ஆகவே இந்த பெரிய நாட்டை அவர் சமாளிக்க முடிந்தது.
வரும் அக்டோபரில் நீங்கள் முதன் மந்திரியாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. இஹ்தனை ஆண்டுகளில் நீங்கள் இந்தியாவிலும், அதன் அரசியலிலும் கண்டுணர்ந்த முக்கிய மாறுதல்கள் என்னென்ன?
முதற்கண், வாஜ்பேயியின் ஆட்சியில்தான் கூட்டணி ஆட்சி மிக அதிக அமைதியுடன் நடைபெற்றாது. அவர் காலத்தில் பல கோரிக்கைகள் - திராவிடஸ்தான், காலிஸ்தான் போன்றவை எழுந்தன. இம்மாதிரியான எதிர்மறையான கோரிக்கைகளை இல்லாமல் செய்தார். அவற்றை நேர்மறையானதாக மாற்றி, நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு அழைத்து சென்றார். வாஜ்பேயி இந்த நாட்டுக்கு பல அரிய சேவைகள் செய்தார் என்பது எனது கருத்து.
இர்னடாவதாக, பயங்கரவாதத்தை சர்வதேச அளவில் விவாதிக்க எல்லோருமே மறுத்த காலத்தில், காஷ்மீர் மட்டும் விவாதிக்கப்பட்டது. ஒருவரும் நாம் சொல்வதை ஏற்கத் தயாராக இல்லை. நாம் இளிச்சவாயர்களாக இருந்தோம். அடல்ஜிதான் காஷ்மீர் பிரச்சினையை பயங்கரவாத பிரச்சினையாக சர்வதேச மன்ற்றங்களில் விவாதிக்க செய்தார். உலக மக்களையும் அவரால் தனது நிலைப்பாட்டிற்கு கொண்டுவர முடிந்தது.
வாஜ்பேயியை இவ்வளவு புகழ்கிறீர்களே, பிறகு அவரது ‘இந்தியா ஒளிர்கிறது’ பிரசாரம் 2004-ல் தோல்வியுற்றது?
இது பற்றி அப்போதே நிறைய விவாதித்தாயிற்று. சொல்ல வேண்டியதெல்லாம் கூறியாயிற்று. ஆகவே நாம் இந்த தேர்தல் பற்றியே பேசுவோம்.
அரசியலில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள்?
நானே இது பற்றி பேசக்கூடாது, பேசினால் தற்பெருமை போலத் தோன்றும். ஆனால் உண்மை கூறவேண்டுமென்றால், நான் அரசியல் கலப்பில்லாத முதல் மந்திரி. அலுவலகத்துக்கு காலை 9 மணிக்கு செல்கிறேன். இரவு 11 மணி வரை அங்குதன் இருக்கிறேன். தேர்தல் காலங்களில் மட்டும் நான் 30, 40 நாட்கள் கட்சி வேலையில் ஈடுபடுகிறேன். மற்ற நேரங்களில் அரசியல் கலக்காத முதலமைச்சர். இந்த வெட்டி பாலிடிக்ஸ் பண்ணுவதெல்லாம் எனக்கு பிடிக்காது..
இம்முறை லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் உங்களது விருப்பம்தான் ஜெயித்தது என பேசிக் கொள்கிறார்களே.
எங்களுடையது ஒரு கூட்டுத் தலைமை. ஜனநாயக முறைப்படி இயங்குகிறோம். சுமார் 10,000 கட்சி ஊழியர்களூடன் பேசினோம். மாநிலத்துக்கான குழு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்றது. எல்லோருடனும் பேசிய பிறகு நாங்கள் டிக்கெட்டுக்காக விண்ணப்பம் செய்த ஒவ்வொருவருடைய ப்ளஸ் மற்றும் மைனஸ் பாயிண்டுகளை அலசினோம்.
பிறகு விண்ணப்பதாரர்களுடம் மானிலத்தில் 17-உறுப்பினர் குழு பேசியது. அடிமட்ட தொண்டர்களுடனும் பேசியது. பிறகு முடிவு முதல் மந்திரிக்கு செல்லாமல் நேரே தில்லிக்கு சென்றது.
தில்லியில் உள்ள 21-உறுப்பினர் குழு மேலும் விவாதித்தது. பிறகு லிஸ்ட் எனக்கு அனுப்பப்பட்டது, நான் அதை அப்படியே ஏற்றுக் கொண்டேன். இதுதான் முழு நிகழ்வு.
ஆனால் கவனம் இப்போது நான்கு கறைபட்ட வேட்பாளர்கள் மேல்.
உதாரணம்?
ஒரு உதாரணம் திரு. ராத்தோட்.
முதற்கண், இந்திய சட்டப்படி கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. அவர்கள் கிரிமினல்கள் என்றால், எவ்வாறு போட்டி இடுகிறார்கள்? இரண்டாவதாக, அவர் ஒரு காங்கிரஸ் MLA ஆக இருந்தவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவர் பற்றி ஏதேனும் பப்ளிஷ் செய்யப்பட்டதா, இப்போது மட்டும் ஏன் அதை கிளப்புகிறீர்கள்? உங்கள் கேள்வி உங்களைத்தான் மாட்டுகிறது. என் கட்சியையல்ல.
விஷயம் இவ்வளவுதான். நிலைமை அத்தனை சீரியஸ் என்றால், ஜனநாயகம் பற்றி உங்களுக்கு நிஜமாகவே அக்கறை இருந்தால், முந்தைய முறை அவர் தேர்தலில் நின்றபோது இப்பிரச்சினையை ஏன் எழுப்பவில்லை?
இக்கேள்வியையும் நான் கேட்கவில்லை, நீங்கள்தான் கேட்டீர்கள். இப்போது அதை கேட்பது அரசியல் நோக்கமுடையது.
அவர் பதவியில் உள்ள காங்கிரஸ் MLA. பாஜகவில் சேர்ந்த பிறகுதான் அவர் தேர்தலில் போட்டியிடுகிறார் எனக்கூற இயலாது. போன ஆண்டு வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள 3,000 ஜோடிகளுக்கு திருமணம் செய்வித்தார்.
அப்போதும் நாங்கள் இது பற்றி எழுதினோமே.
அப்படியா, எனக்கு தெரியாது. அப்படி செய்திருந்தால் நன்றுதான். அவர் மீது ஏதேனும் வழக்கு இருந்தால், அதை எடுத்து காட்டவும். அதற்கு நான் பொறுப்பு. கோர்ட் அவரை விடுவித்து, இருப்பினும் நானே பொறுப்பு என்றால் நீங்கள் எனக்கு அநீதி இழைக்கிறீர்கள்.
நேர்காணலின் அடுத்த பகுதியை தவற விடாதீர்கள். அதில் அவர் கடைசியாக 2002 ஆர்ப்பாட்டங்கள், பயங்கரவாதம், இரண்டுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் ஆகியவை பற்றி பேச இருக்கிறார்.
இப்போது மீண்டும் டோண்டு ராகவன். மோடியை பல விஷயங்களில் தாம் நினைத்தது போல பேச வைக்க பல முயற்சிகளை பத்திரிகையாளர் செய்தாலும், அவர் எல்லோருக்கும் பெப்பே காட்டுகிறார். 2007-ல் மோடியின் வெற்றிக்கு பிறகு இதே மாதிரி சீண்டல் தொனியில் ராஜ்தீப் சர்தேசாய் கேட்க, அவர் மூக்கை ரவிஷங்கர் பிரசாத் என்னும் பாஜக தலைவர் நன்கு உடைத்தது இப்போது என் நினைவுக்கு வருகிறது. சர்தேசாய்க்கு முகத்தை எங்குபோய் வைத்து கொள்வது எனத் தெரியவில்லை.
நேர்காணலின் முடிவு பகுதியை நானும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
Regards,
Dondu N. Raghavan
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
11 hours ago
8 comments:
ராஜ் தீப் சர்தேசாய் மாதிரியான காங்கிரஸ் கு. ந. யை எங்குமே பார்க்க முடியாது.
அவனும், அவன் தொலைக்காட்சியில் வரும் அவனது மனைவி மற்றும் யோகேந்திர யாதவ் என்ற த.த யும். பார்த்தாலே போதும்...இந்தியா ஏன் இன்னும் கேவலமாக இருக்கிறது என்று தெரிந்துவிடும்.
நமது ஜெயமோகன் கூட இந்த ராஜ்தீப் சர்தேசாய் பற்றி சில முத்துக்கள் உதிர்த்திருக்கிறார். அவரது வலைப்பக்கத்தில் தேடினால் அது கிட்டும்.
//ராஜ் தீப் சர்தேசாய் மாதிரியான காங்கிரஸ் கு. ந. யை எங்குமே பார்க்க முடியாது.//
க.கா.அ.சங்கம் அய்யா,
அப்படி சொல்லிவிட முடியாது.ப்ரணாய் ராய் மற்றும் அவரது சிஷ்யைகளான பர்கா தத் ,மற்றும் நிதி ராஜ்தான் போன்றவர்களும் நீங்கள் சொன்ன வகையை சேர்ந்தவர்கள் தான் சமயத்தில் ராஜ்தீப் சர்தேசாய், சாகரிகா கும்பலைவிட ஒரு படி மேலே இழிவான லெவலுக்குப் போய் சாதனை செய்யக் கூடியவர்கள் தான்.
பாலா
பதிவு சூப்பர்!
மிக்க நன்றி... டோண்டு ஐய்யா.
இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
http://mathavaraj.blogspot.com/2009/04/blog-post_18.html
@சுதாகர்
எதிர் மரியாதையாக நான் இந்த உரலை சமர்ப்பிக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
I dont understand how people support a person like Modi. He might have achieved a lot for the state, still he is a MASS MURDERER. All his supporters talk of one miracle or the other in the state of Gujarat, but why nobody has anything to say about the mass murders committed by him?
@அறிவழகன்,
மாஸ் மர்டரர் என்றால் என்ன ?
தமிழகத்தின் பெருவாரியான மக்களை வறுமை கோட்டிற்குக் கீழேயே வைக்க உதவிய ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் கருணாநிதி மற்றும் மூன்றாவது பெரிய பணக்காரி செயலலிதா போன்றோர் தான் உண்மையான மாஸ் மர்டரர்கள்.
சும்மா சும்மா மோடியை மாஸுமர்டரர், நீரோ, போன்ற அடைமொழிகளால் வசைபாடுவது செக்குலர் செம்மல்களின் பகுதி நேர வேலையாகிவிட்டது. அதற்கு அவர்களுக்கு கணிசமான சம்பளமும் கிடைக்கிறது என்கிறார்கள்.
//
ll his supporters talk of one miracle or the other in the state of Gujarat, but why nobody has anything to say about the mass murders committed by him?
//
Why don't you prove at least one case against Modi ?
டீஸ்டா செடல்வாத் போன்றவர்களின் பேச்சையெல்லாம் நம்புபவராக இருந்தால்...உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.
(கண்டெண்ட் டோண்டுவால் சற்றே எடிட் செய்யப்பட்டு வசைச்சொல் நீக்கப்பட்டது)
Dondu Sir,
Great. Thanks for the post. I did not know of this interview. Thanks for this one.
Another piece of information for folks - Prakash Karat and NDTV Prannoy Roy have married sisters. Prannoy Roy - father is a Bengali and his mother is English.
Arundati (Suzanne) Roy is also related Dr Prannoy Roy.
If we imagine the left oriented leanings of media and the anti-Indian articles of Arundati - we can make sense of it.
Thanks
Venkata Raghavan R
Post a Comment