5/12/2009

Good touch, bad touch - 2

முதற்கண் எனது முந்தைய Good touch, bad touch பதிவுக்காக வந்த பல பின்னூட்டங்களில் ஒன்றை கீழே தருகிறேன்.

சிந்தா மணி has left a new comment on your post "Good touch, bad touch":
டோண்டு சார் தங்களதுஇந்த பதிவு விகடன் வந்து உள்ளது http://youthful.vikatan.com/youth/index.asp
Posted by சிந்தா மணி to Dondus dos and donts at May 12, 2009 9:15 AM


ஆனால் இப்பதிவு அது பற்றியல்ல.

எனது இந்த Good touch, bad touch பதிவுக்கு இந்த நிமிடம் வரை (12.05.2009, காலை 09.27) 53 பின்னூட்டங்கள் வந்துள்ளன. அவற்றுள் ஒன்றிரண்டு மட்டுமே அனானி பின்னூட்டங்கள். இம்மாதிரியான spontaneous வரவேற்பு பிடித்திருந்தாலும் பின்னூட்டங்களை பார்த்து சற்றே ஏமாற்றமாக இருந்தது. முக்கால்வாசி பின்னூட்டங்கள் வெறுமனே “அசத்தல்/பிரமாதம்/நானும் அங்கு வந்தது போலவே இருந்தது” என்ற ரேஞ்சில்தான் அமைந்தன. நான் எதிர்பார்த்த விவாதங்கள் வராததுதான் எனது ஏமாற்றத்துக்கு காரணம்.

சரி நானே மேலும் மேலும் விவாதங்களை ஆரம்பித்து விடுகிறேன்.

அன்று டாக்டர் ஷாலினி பேசும்போது ஒரு சமயம் நான் இவ்வாறு கூறினேன், “எவ்வளவு சிறிய வயது குழந்தையாக இருந்தாலும், அதன் பாலுறுப்புகளை தொட்டால் அவ்ற்றுக்கு உணர்ச்சி உண்டாகும், அது குழந்தைக்கும் பிடித்து போகும். அதுதான் இந்த குழந்தைகள் பாலியல் வன்முறையில் மிகப்பெரிய அபாயம்”. நான் மேலே கூறாமல் இம்ப்ளை செய்தது என்னவென்றால், ஆகவே குழந்தையின் அன்னை இது பற்றி பேசும்போது இந்த ஆஸ்பெக்டையும் நினைவில் வைத்து பிரச்சினையை அணுக வேண்டும். தான் சிறுமியாக இருந்தபோது இது சம்பந்தமான தனது மனநிலையையும் மனதில் வைக்க வேண்டும்.

இன்னொன்றும் கூறுவேன். குழந்தைகளிடம் பாலியல் விஷமம் செய்யும் எல்லோரும் பார்ப்பதற்கு நார்மலாகத்தான் இருப்பார்கள். மற்றப்படி மிகவும் நல்லவர்களாகவும், பல விஷயங்களை கற்றறிந்தவ்ர்களாகவும் இருப்பார்கள். குழந்தைகள் விஷயத்தில் கூட அவர்களைப் பொருத்தவரை அது ஒரு பாலியல் கொடுக்கல் வாங்கலே. அதாவது குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி, அவர்களுக்கும் மகிழ்ச்சி. அவ்வாறானவர்களை கண்டறிவது மிகவும் துர்லபம். குடும்பத்தினருக்கு நெருங்கியவர்களாகவே இருப்பார்கள், தக்க தருணங்களில் அரிய உதவிகளையும் செய்வார்கள். மேலும், சம்பந்தப்பட்ட குழந்தைகளும் அவர்களை விரும்புவதால் கமுக்கமாக இருந்துவிடும்.

இப்போது ஷாலினி அவர்கள் குறிப்பிட்ட இன்னொன்றையும் கூறுவேன். அதாவது Good touch, bad touch என்று தான் வகைப்படுத்தாததை பார்வையாளர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தார். எதுவுமே ஒரேயடியாக நல்லதோ கெடுதலோ எனக் கூறிவிட்டு, சில சமயங்களில் இம்மாதிரி பாலியல் சீண்டல்களே குழந்தைக்கு செக்ஸ் கல்வியாக அமைந்து விடுகிறது எனக் கூறிவிட்டு அதை மேலே விவரிக்காமல் விட்டுவிட்டார். அந்த ஆஸ்பெக்டை இங்கு மேலும் பேசுவது திசைதிருப்பலாக ஆகிவிடும், ஆகவே வெறுமனே தொட்டுவிட்டதோடு நிறுத்தி கொண்டார் என்பது எனது கருத்து. தவறாக இருந்தால் அதை திருத்தி கொள்கிறேன். ஷாலினிதான் கூற வேண்டும். ட்ரைபல்ஸ்களிடம் இந்த பிரச்சினை இல்லையெனவும் எல்லாவற்றையும் சரியான காலத்தில் யதார்த்தமாகவே குழந்தைகள் கற்று கொள்கின்றனர் என்பதையும் அவர் சுருக்கமாக கூறி விட்டுவிட்டார்.

ஆக, இது ஒரு இடியாப்ப சிக்கல்தான், டாக்டர் ருத்ரன் குறிப்பிட்டது போல.

Sex abuse நடந்தால் போலீசில் சொல்வதே முறை என்பதில் ஷாலினி தெளிவாகவே இருந்தார். (அது எப்போதுமே சாத்தியம் இல்லை என்பதை நான் கூற விரும்பினாலும் சந்தர்ப்பம் அமையவில்லை. உதாரணத்துக்கு பெண்ணின் தந்தை அவ்வாறு செய்ய, போலீசில் சொன்னால் அவன் சிறை செல்ல நேரிடும், குடும்பத்தை வறுமை மற்றும் கெட்ட பெயரிலிருந்து காப்பாற்றுவது யார்? இப்பதிவை ஷாலினியோ ருத்ரனோ படித்தால் பதிலளிப்பார்கள் என நினைக்கிறேன்). வாசகர்களும் இது சம்பந்தமாக தத்தம் கருத்தைக் கூறலாம். அதனால்தான் பாலியல் தொந்திரவு செய்வது குடும்பத்துக்கு பெரியவரான தாத்தாவாகவோ, மாமாவாகவோ அமைந்து விட்டால், பெற்றோர்கள் பல முறை அவற்றை தெரிந்து கொள்ளக்கூட விரும்புவதில்லை. எல்லாமே பூசி மொழுகப்பட்டுவிடுகிறது. குடும்பத்தை சார்ந்த ஒருவர் இது சம்பந்தமாக சிறை செல்ல நேர்ந்தாலும் மொத்த குடும்பமே தலைகுனிய நேரிடும். இம்மாதிரி தருணங்களில் அறியாமையே தேவலை என ஆகிவிடும்.

மதன் அவர்கள் ஒருமுறை எழுதினார். எல்லா குடும்பங்களிலும் இம்மாத்ரியான skeletons in the cupboard உண்டு. அவற்றை வெளியாருக்கு தெரியாமல் வைக்க அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் பாடுபடுகின்றனர். பல குடும்பங்களில் வயது முதிர்ந்த பாட்டிகள் தமது மனத்துள் போட்டு அமுக்கியிருக்கும் ரகசியங்கள் வெளியே தெரிந்தால், அக்குடும்பமே ஆட்டம் கண்டுவிடும். இந்த ஆஸ்பெக்டையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவேதான் எல்லாவற்றையும் கேஸ் பை கேஸ் பார்க்க வேண்டும் என டாக்டர் ருத்ரன் கூறியதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும்.

டாக்டர் ஷாலினி, டாக்டர் ருத்ரன், மற்றும் சகபதிவர்கள் இது சம்பந்தமாக மேலும் பின்னூட்டுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

நல்ல பதிவு....நீங்கள் முன் வைத்துள்ள விஷயம் யோசனைக்குறியதே...பதிவுக்கு நன்றி

Anonymous said...

காலத்திற்கேற்ற சரியான பதிவு எனென்றால், தற்போதே சுழலில் பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பில் காட்டும் அக்கறறையை அவர்களுடைய மனநிலையை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவது இல்லை. ஒவ்வொரு தனிமனித பிரச்சனைகள் ஒன்றுகூடி சமுதாய பிரச்சனைகளாக உருமாறுகிறது. இது போல பிரச்சனயை சந்திக்கும் குழந்தைகளின் மனநிலை உருக்குலைந்து தன்னம்பிக்கை இழந்து பெரும் துன்பத்திற்கு உள்ளாகின்றனர்.
ஒரு செடி வளையாமல் மரம் ஆவதற்கு சிறிதுகாலம் அதன் அருகில் ஒரு குச்சியை நட்டு வைப்போம், அதுபோல் குழந்தைகள் பிற்காலத்தில் நல்ல முறையில் வளர காலத்திற்கேற்ற சரியான ஆலோசைனைகள் அவர்களுக்கு தேவை.

வால்பையன் said...

எனக்கு இது பற்றி பெரிதாக அனுபவம் இல்லாததால் விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை!

நீங்கள் பிராக்டிகல் அப்ரோச்சில் இருப்பது தெரிகிறது! ஆனால் எல்லா பெற்றோர்களும் அப்படி இருப்பதில்லையே! தனது குழந்தை என்ன செய்கிறது என கூட தெரியாத பெற்றோர்கள் தான் இங்கே நிறைய,
பின் எங்கிருந்து அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க போகிறார்கள்!

என்னை பொறுத்தவரை குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இருக்கும் இடைவெளி குறைந்தாலே ஏகப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்பது எனது எண்ணம்.

Anonymous said...

Dondu Sir, can you post a translation of this article. What is your view on this article ?

ITS OWN GREATEST ENEMY
- The degradation of the Indian National Congress
- by Ramachandra Guha

http://telegraphindia.com/1090509/jsp/opinion/story_10792431.jsp

thanks
Suresh

BalajiS said...

அன்புள்ள டோண்டு சார்,
தங்கள் இட்ட இந்த பதிவிற்கு மிகவும் நன்றி.
இது பற்றி நன் மிகவும் விரிவாக விவாதிக்க விரும்புகிறேன்.

௧.
குழந்தைகளின் ஆடை .
பெரும்பான்மையான பள்ளிகள் மாணவர்களின் யூனிபார்ம் -ஆடைகள்
அவர்களின் கணுக்கால் வரை அணியும்படி வலியுறுத்த வேண்டும்.


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நண்பர்களை பற்றி நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

௨. ஆசிரியர்கள்
கோ-education பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள்-மாணவிகள் இடையே உள்ள interaction பற்றி எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

many parents follow cinema,cricket,serials keenly than following their children.
If they observe/watch them, it would give them an insight into their mind.

Will come back with more later.

Anonymous said...

// என்னை பொறுத்தவரை குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இருக்கும் இடைவெளி குறைந்தாலே ஏகப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்பது எனது எண்ணம். //

பெரும்பாலான குழந்தைகளுக்கு தொலைக்காட்சிகளே தாய்தந்தையுமாக இருந்து அனைத்தையும் கற்றுத்தருகிறது. எனென்றால் கல்விநேரம் தவிர மீதி நேரம் அவர்கள் தொலைக்காட்சி முன்பே உள்ளனர்.நான் அறிந்தவரை இப்பொழுது உள்ள குழந்தைகள் 2 வயது முதலே நெடுந்தொடர்களை காணுகின்றன.

m said...

Nice post and the organization of such a meeting itself is a great step forward in our society:

In my opinion, the preventive measures should start much early - at the marriage of potential parents itself. Short courses to couples who are about to be married that can prepare them mentally to the life together and also courses to expecting couples as to how to approach parenting is a must (since most grownups in our society are harboring distorted ideas about sex and related issues and lack the maturity to handle such things).

In a society such as ours where we pride ourself with extensive relationships we maintain, the biggest challenge is how to integrate our values of family along with safety for our children.

Most of the time I have seen when a child does not feel comfortable with someone, the mothers usually urge the child to be friendly telling, "ohh, this uncle/aunt is very nice one" and so on... the elders should try to respect the privacy and feelings of the children even if it is a 6 months old baby!

From your post, I also felt that not much solutions had been discussed during the meeting on how to effectivley tackle this problem, but being the first one, it's ok... may be all the parents will take interest in this issue and carry it on further!

அரவிந்தன் said...

டோண்டு அவர்களே!!!

10 வயது பெண் குழந்தை இருக்கும் வீட்டில், குடும்பத்தலைவர் மேல்சட்டை போடாமல் வீட்டில் இருக்கலாமா இது குழந்தையின் மனதில் என்ன மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தும்.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது