மின்னஞ்சல் மூலமாக எனக்கு இன்று வந்த நல்முத்துக்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
தத்துவம் எண் 1001:
வாழ்க்கை என்பது பனைமரம் போல; ஏறினா நுங்கு, விழுந்தா சங்கு!
தத்துவம் எண் 1002:
வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயம்தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும் எடுத்துக்காட்டு. நமீதா எவ்ளோ பெரிய நடிகை, ஆனா அவங்க பாப்புலர் ஆனதுக்கு அவங்களோட சின்ன சின்ன டிரெஸ்தான் காரணம் என்பதை நினைவில் கொள்க.
தத்துவம் எண் 1003:
பயம்தான் தோல்விக்கு முக்கியக் காரணம். அதனாலே இனிமே கண்ணாடியை பாக்காதீங்க.
தத்துவம் எண் 1004:
வாழ்க்கை என்பது ரயில் மாதிரி. முதல் இரண்டு பெஞ்ச் வி.ஐ.பி.; நடுவில் ரெண்டு பெஞ்ச் ஜெனெரல்; கடைசி ரெண்டு பெஞ்ச் ஸ்லீப்பர்.
தத்துவம் எண் 1005:
ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள், பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்.
தத்துவம் எண் 1006:
வெற்றியைத் தேடி அலைந்தபோது “வீண்முயற்சி” என்றவர்கள், வெற்றியை அடைந்ததும் “விடாமுயற்சி” என்றர்கள்.
தத்துவம் எண் 1007:
நீ செய்யும் தவறுகூட புனிதம் ஆகும், அதை நீ ஒப்புக் கொள்ளும்போது.
மொக்கை எண் 2001:
3GAPA6 அப்படீன்னா என்ன? தெரியல்லியா இது கூட? ஐயே, மூஞ்சியைப் பாரு.
மொக்கை எண் 2002:
வாடிக்கையாளர்: இந்த டிவியின் விலை என்ன 10,000 ரூபாயா? அப்படி என்னய்யா ஸ்பெஷல் அதுல?
சேல்ஸ்மென்: டிவியில விஜய் படம் வந்தா, அதுவா சேனல் மாறிடும்.
மொக்கை எண் 2003:
எங்க ஊர்ல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு. ஒரு ஊருக்கு அவர் போனபோது பெனட்றில் கொடுத்தாங்க, இன்னொரு ஊரிலேயோ களைக்கோடின் தந்தாங்களாம். ஏன்னாக்க, கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிரப்பு.
மொக்கை எண் 2004:
பிரும்மச்சாரியின் தினசரி பிரார்த்தனை என்னவென்றால், “கடவுளே எனக்குன்னு ஒண்ணும் வேண்டாம், என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் ஃபிகர் மருமகளா வரட்டும்”.
மொக்கை எண் 2005:
ஒரு பாம்பு வந்து உங்களை கடிச்சா என்ன பண்ணுவீங்க?
கண்டிப்பா அதை சாரி கேக்கச் சொல்லுவேன்.
மொக்கை எண் 2006:
ANGRY எப்போ இனிப்பா மாறும்? J-ஐ சேர்த்துக் கொண்டால்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்துமதத்தின் அடிப்படை சாதியா?
-
சாதியை எதிர்க்கவேண்டும் என்று நாராயணகுரு சொல்லவில்லை, சாதியைப் பற்றி எண்ணவே
கூடாது என்றுதான் சொன்னார். ஏனென்றால் இந்திய மனம் சாதிதவிர எதைப்பற்றியுமே
சிந்தி...
10 minutes ago
11 comments:
இந்தப்பதிவு ரொம்ப அவசியம் :(-
முடியல
nee podurathellaam mogga thaane! athula nompa naalaikkappuram????
vekkamaa illa?
யாம் படித்த பதிவுகளிலே இப்பதிவு போல் மொக்கை / அறுவையானதை எங்கும் காணோம்..
உமது பெயரை..."டோண்டு ராகவன்" என்பதற்கு பதிலாக "மகா மொக்கை ராகவன்" என்று திருத்திக்கொள்ளவும்..
தத்துவம் 1002 , ஆகா, ஓகோ, பேஷ்,பேஷ்,
நல்லாருக்கு மொக்கைகள்
Idhu Special "mokkai" nu vena solli irukkalam..Aana Romaba naal apparam nu sonnadhu over...Yellame ippadi thane iruku..Krish
mudiyala... sir ennala mudiyala....
டிவியில விஜய் படம் வந்தா, அதுவா சேனல் மாறிடும்.///////////
இந்த டிவி எங்கு கிடைக்கும்...
nallaave irukku
நல்லாருக்கு மொக்கைகள்
Post a Comment