இது சம்பந்தமாக மதிமாறன் அவர்கள் இட்ட இப்பதிவை முதலில் பார்ப்போம்.
வர்க்கப் பாசம், ஜாதி பாசத்தைவிட பெரிதா?-ஜாதி பாசம், வர்க்கப் பாசத்தைவிட பெரிதா?
-க. தமிழரசன்
தன் சொந்த ஜாதிக்குள் உள்ள பணக்காரருக்கும் ஏழைக்கும் பிரச்சினை வரும்போது, ஜாதி பாசத்தை வர்க்க பாசம் மிஞ்சிவிடுகிறது. சரவணா ஸ்டோரில் வேலை பார்க்கும் நாடார் தொழிலாளிக்கு நாடார் முதலாளியால் பிரச்சினை வரும்போது ஜாதி சங்கம் முதலாளிக்குத்தான் சார்பாக நடந்து கொள்ளும்.
ஜெயேந்திரன் என்கிற பணக்காரன், ஏழையான சங்கரராமன் என்கிற பார்ப்பனரை கொலை செய்தபோது, பிராமணர் சங்கம் ஜெயேந்திரனுக்குதான் துணை நின்றது. சங்கரராமன் குடும்பத்தின் மீது பார்ப்பனர்கள் வெறுப்படைந்தனர். ஜாதி பாசத்தை வர்க்கப் பாசம் வென்றது.
ஒரு வேளை இப்படி இருந்திருந்தால்…. சங்கரராமன் என்கிற பார்ப்பனரை கொலை செய்தது, ஜெயேந்திரனுக்கு பதில் பங்காரு அடிகள் என்று வைததுக் கொள்ளுங்கள்… இந்நேரம் பங்காரை தூக்கில் ஏற்றி இருப்பார்கள் பார்ப்பனர்கள். வர்க்கம், ஜாதி மாறி இருக்கும்போது….. வர்க்க பாசத்தை ஜாதி பாசம் வெல்லும்.
தனிமனிதர்களை கடவுளாக வழபடுகிற வழக்கம் உள்ள பார்ப்பனர்கள், பங்காரு போன்றவர்களை கடவுளாக அல்ல சாமியாராகவே ஒத்துக் கொள்வதில்லை. பங்காரு போன்ற ‘தெய்வங்களிடம்’ ரொம்ப தெளிவாக பகுத்தறிவாளனைப் போல் நடந்து கொள்வார்கள். ஆனால் ஜெயேந்திரனிடம்….?
கொலை பண்ணினாலும் நம்பளவா நம்பளவாதான்.
சட்டம், கடமை, ஒழக்கம், நீதி, நேர்மை, ஜனநாயகம், தரம், தகுதி என்று தங்களின் ஆயுதங்களுக்கு பல புனைப் பெயர்கள் வைத்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள். பொதுவான பார்ப்பன நலன் பாதிக்கப்படும்போது இவைகளை ஒவ்வொன்றாக எடுத்து நாகாஸ்திரமாக வீசுவார்கள். அப்போது பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற, எந்த கிருஷ்ண பரமாத்மாவும் வந்து, தன் காலால் தேர் சக்கரத்தை அழுத்த மாட்டான்.
குறிப்பு:
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உணர்வாளர்கள் பொங்கி எழுந்தபோது…. ‘விடுதலைப் புலி ஆதரவாளர்கள்’ என்று கட்டம் கட்டி ஜெயிலுக்கு அனுப்பிய பார்ப்பன பத்தரிகைகள், இப்போது ஜெயலலிதாவின் ஈழ ஆதரவு அறிக்கைக்கு பிறகு அடக்கி வாசிக்கிறார்கள் பாருங்கள்….. அதுதான் பார்ப்பன பாசம்.
அதுபோல், ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதைப் பார்த்து வராத கோபம்…. இப்போது இந்த பதிலை பார்த்தவுடன் பொங்கி எழுவார்கள் பாருங்கள்… அதுதான் ‘பிராமின்ஸ் ஒன்லி’. அதுவேதான் ஜாதி பாசம்.
இப்போது டோண்டு ராகவன். சங்கராச்சாரியார் பார்ப்பனரே, சங்கரரமனும் பார்ப்பனரே, சரிதான். ஆனால் முன்னவரை கைது செய்த ஜெயலலிதா யார்? சௌகரியமாக மறந்து விட்டார் கட்டுரை ஆசிரியர். அதெல்லாம் இருக்கட்டும், நான் அப்பதிவில் நேற்று இட்ட இந்த பின்னூட்டம் இது வரை மட்டுறுத்தப்படவில்லை, அதையும் பார்த்து விடுவோமே:
டோண்டு ராகவன் (05:12:24) : உங்கள் கருத்து மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.
கீழ்வெண்மணியில் தலித்து விவசாயக் கூலிகளை பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடு எரித்து கொன்றபோது, அந்த நிகழ்ச்சி வெறும் கூலித்தகராறு எனவும், கம்யூனிஸ்டுகள் துர்போதனையால்தான் இவ்வாறு அமைந்து விட்டது என சவசவ அறிக்கை விட்ட கன்னட பலீஜா நாயுடு பிரிவைச் சேர்ந்த ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் அதே ஜாதி பாசம்தானே இருந்தது?
நான் கேட்கிறேன், தலித்துகளை எரித்த அப்பண்ணையார் பார்ப்பனாயிருந்தாலும் பெரியார் அதே சவசவ அறிக்கையைத்தான் விட்டிருப்பாரா?
இதுவரை எனது பின்னூட்டத்தை மட்டுறுத்தாத பதிவர் உண்மையிலேயே பெரியாரியவாதிதான், பேஷ். எப்படி என்கிறீர்களா? பகுத்தறிவு பகலவன் என அழைக்கப்பட்ட பெரியார் அவர்களே தனது சீடர்கள் தான் சொன்னதை அப்படியே கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னவர்தானே.
அது பற்றி மேலே அறிய நான் இட்ட நன்றி தமிழ் ஓவியா மற்றும் விடுதலை! என்னும் பதிவை பார்க்கவும்.
இல்லாவிட்டால், மதிமாறன் அவர்களது பதிவில் பெரியார் அவர்களின் ஜாதிப் பாசம் பற்றி நான் இட்டிருந்த இப்பின்னூட்டம் இதுவரை மட்டுறுத்தப்படாமல் இருக்கும் காரணம் வேறு என்னவாக இருக்கும்?
அன்புடன்,
டோண்டு ராகவ்ன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
11 hours ago
12 comments:
விடுங்க டோண்டு,
சூரியனை பார்த்து நாய் கொல்லைக்குதுன்ன்னு விடுங்க.
இவனுங்களுக்கு எல்லாம் அரிப்பெடுத்தா சொரிய இந்த தலைப்பை எடுப்பானுங்க.
லூஸ்ல விடுங்க.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA
இது சாதி வெறி பிடித்தவர்களுக்கு மட்டும்,
எந்த நாய் எந்த சாதியில பொறக்குதோ அந்த நாய்க்கு அந்த சாதி மேல பற்று இருக்குது, ஒருவேளை மனுசனா பொறந்து பாருங்க சாதி தேவையில்லாம போகலாம்!,
சாதி ஒழிப்பு என்ற பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடிக்க உதவும் punching bag தான் பார்ப்பானர்கள்.
இதில் இவர்கள் குத்தினால் அதில் (EVM) அவர்கள் (பொதுசனம்) குத்துவர்கள்.
http://www.keetru.com/kuthiraiveeran/june06/selvam.php
இந்த சுட்டியில் உள்ள கட்டுரையை அன்பர்கள் ஒருமுறை படிக்க வேண்டும்
//சங்கராச்சாரியார் பார்ப்பனரே, சங்கரரமனும் பார்ப்பனரே, சரிதான். ஆனால் முன்னவரை கைது செய்த ஜெயலலிதா யார்?//
முன்னவா இரெண்டு பேரும் அத்வைத்திகள், பின்னவா(ஜெயலலிதா)பழுத்த சங்காழி அதாவது வைணவா. சிரீரங்கத்துக் காக்கை கதை தெரியுமோல்லியோ ?
//கன்னட பலீஜா நாயுடு பிரிவைச் சேர்ந்த ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் //
நாயுடு - நாயக்கர் இது இரெண்டும் ஒரே ஜாதின்னு சாதி சான்றிதழ் கொடுக்கிற எங்க ஊரு தாசில்தாருக்குக் கூடத்தெறியாது. இது ஒரு புது செய்தி.
அன்புடன் காஞ்சி பிலிம்ஸ்
அடேடே வாருங்கள் ஷிவா என்னும் காஞ்சி ஃபிலிம்ஸ். பார்த்து ரொம்ப நாளாச்சுதே. இன்னமும் ஃபிரான்ஸில்தான் இருக்கிறீர்களா? குழந்தைகள் நலமா?
நாயுடுவும் நாயக்கரும் ஒரே ஜாதியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாயுடுவும், நாயுடுவும் பற்றி என்ன கூறுவீர்கள்? எது எப்படியானாலும் கீழ் வெண்மணி விஷயத்தில் மிராசுதார் பார்ப்பனராக இருந்தால் பெரியார் எம்மாதிரி ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார்?
(பைதி வே ஷிவா, மன்னிக்கவும் நீங்களே உங்களுடைய உண்மைப் பெயரை மதிமாறன் பதிவில் வெளியிட்டு விட்டதால், நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு உங்களது மின்னஞ்சல் மூலம் தெரிந்த இப்பெயரை இங்கு வெளியிடுவதில் எந்த ரகசியத்தையும் மீறுவதாக நினைக்கவில்லை).
இன்னொரு விஷயம், மதிமாறன் எனது பின்னூட்டத்தை இன்னும் வெளியிடவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அண்ணா... நெறய பாத்தாச்சு... அவாள இருந்தாலும், இல்லை முற்போக்குன்னு பேசற இவாள இருந்தாலும், பணம் மட்டுமே பாதாள வரை பாயறது.. அவாளுக்கும் பணக்காரதான் பெரிசு.. இவாளுக்கும் அவாள்ட்ட இருக்கற பணக்காரதான் பெருசு.. ரொம்ப வெறுத்துப் போச்சுண்ணா... பெரிசா எல்லாரும் வாய்க் கிழீய பேசுவா...
@மகிழ்னன்
தலித்துகள் உயிருடன் கொளுத்தப்பட்டது என்ன கொடுமையான நிகழ்ச்சி? நீங்கள் சுட்டிய உரலிலிருந்து தெரிவது என்னவென்றால், நான் எனது இப்பதிவில் கூறியதை அது ஊர்ஜிதப்படுத்துகிறது என்பதே.
@காஞ்சி பிலிம்ஸ்
பெரியார் அவர்கள் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவரே. நாயக்கர் என்பது சில நாயுடுகள் தங்களுக்கு வைத்து கொண்ட பட்டப்பெயர் அவ்வளவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஈ.வெ.ரா. நாயுடுதான். கோனார்கள் தங்களை பிள்ளை என்று அழைத்துக் கொளவதைப் போல இவரு நாயக்கர் என்று தனக்குத்தானே அழைத்துக் கொண்டது.
இவரு ஜெயேந்திரன்! அவரு பங்காரு அடிகள்!மதி மாறன் அவர்களின் உயர்ந்த பண்பு
இதிலேயே தெரிகிறதே? அடிகள் அவ்வளவு உயர்ந்தவரா, ஒரு பகுத்தறிவாளரால் இப்படி
போற்றப் படுவதற்கு? அவரது பூர்வீகம் கொஞ்சம் அறியலாமா?
ஹிட்டுகள் நாலு லட்சம் என்ன நாலு
கோடியையே எட்டட்டுமே? வாழ்த்துக்கள்!!
கேள்விகள்
முடிந்து போன தேர்தல் பற்றிய உங்கள் சமீப கணிப்பு என்ன?
தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஒரு புதுக் கூட்டணி உருவாக சான்ஸ்
இருக்கிறதா?
1947ல் உருவான ஜன நாயகங்களில் ஏன் பாகிஸ்தான், மையன்மார் என்ற பர்மா,ஸ்ரீலங்கா சரியாக வளர்ச்சி பெறவில்லை?ஜன நாயகம் அவர்கள் மேல் திணிக்கப் பட்டதென்பதாலா? அல்லது நல்ல வழிகாட்டும் தலைவர்கள் இல்லாததாலா?
//
விடுங்க டோண்டு,
சூரியனை பார்த்து நாய் கொல்லைக்குதுன்ன்னு விடுங்க.
இவனுங்களுக்கு எல்லாம் அரிப்பெடுத்தா சொரிய இந்த தலைப்பை எடுப்பானுங்க.
லூஸ்ல விடுங்க.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA
//
பிரச்சனையே நாய்கள் அதிகமானதால் ரோட்டில் நடமாடமுடியவில்லை என்பது தான்.
Azhagiri burnt three Tamilians alive at Madurai in Dinakaran office. Can we dig into their Caste and make it in public?
What happened to that issue now? Kangalum Panithu, Idayam Inikutho?
Post a Comment