5/14/2009

49-O என்னும் கேலிக்கூத்தான சட்டப் பிரிவு

பதிவர் இஸ்மாயிலின் இப்பதிவை காப்பி பேஸ்ட் செய்து இங்கு தயக்கமின்றி போடுவதன் காரணங்கள்:
1. அவர் இதற்கு தனது இப்பதிவிலேயே ஒட்டுமொத்த ஒப்புதல் தந்து விட்டார். (அவருக்கு தொலைபேசினால் அவர் எடுக்கவில்லை என்பது இங்கு போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிறேன்).:)))))
2. இக்கருத்து எல்லோரிடமும் பரவுவது மிக முக்கியம்.

என்ன, இதை தமிழ்நாட்டு தேர்தல்களுக்கு முன்னாலேயே பார்க்காமல் விட்டு விட்டேன், ஏனெனில் 49-O சட்டத்தை நான் முதலிலிருந்தே பெரிதாக நினைக்கவில்லை. ஆகவேதான் கண்டு கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்.

இப்போதுதான் தேர்தல் முடிந்து விட்டதே என்ற ஆயாசம் தோன்றினாலும், better late than never மற்றும் எப்படியும் தேர்தல்கள் வந்து கொண்டேதானே இருக்கப் போகின்றன. பதிவு மட்டுமின்றி பின்னூட்டங்களையும் சேர்த்துள்ளேன். இப்போது ஓவர் டு இஸ்மாயில்.

49-O !!!
அன்பின் சகோதர, சகோதரிகளே,

இது 49-O என்று ஏகத்துக்கும் பிரபலமாக பேசப்பட்ட ஒன்றை பற்றியது. தேர்தலுக்கு பிறகு சிரிப்பாய் சிரிக்க போகும் நமது எதிர்காலத்தை பற்றியது. இந்த ஒன்றுக்கும் உதவாத 49-O ல ஓட்டு போட்டு யாருக்குமே உதவாக்கரையா போறது எப்படி என்று எல்லோருக்கும் விளக்கலாம் என்று இதை பதிந்தேன். 49-O ல ஓட்டு போடுறது என்பது எரியற கொள்ளிக்கட்டையால தலை செரியறது, சொந்த செலவில சூனியம் வைத்து கொள்வது, சும்மா இருக்கிற சனியனை பிடித்து பனியனுக்குள் விடுவது போன்ற அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்வதற்கு சமம்.

எப்படி 49-O வழியாக ஆப்பு வாங்குவது? ச்சீ வாக்களிப்பது ?


49-O ஓட்டு போட்ட மறு கணமே நீங்கள் அந்த பகுதியில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளுக்கும் வேண்டாத நபராக ஆகிவிடுவீர்கள். 49-O வை ரகசியமாக பதிய இயலாது. பிறகு எந்த ஒரு விஷயத்திற்கும் உள்ளூரில் எந்த அரசியல்வாதியின் உதவியையும் எதற்கும் பெற முடியாது. நீங்கள் தான் வாக்கு சாவடியில் பகிரங்கமாக எவனும் சரியில்லை என சொல்லி விட்டீர்களோ ! அவர்களிடம் ஏதாவது உதவிக்கு போனால் என்ன மசுருக்கு இங்கே வந்தே? என கேட்பார்கள். அதுக்கு அனைத்து துவாரங்களையும் பொத்திக் கொண்டு சும்மா வீட்டில் இருக்கலாம்.

உண்மையில் 49-O வில் பதிவது ஓட்டாக கருதப்படாது. வெறும் பதிவு தான் அது. உங்களின் வாக்கை 49-O வாக பதிந்து விட்டால் பிறகு உங்களின் பெயரை பயன்படுத்தி யாரும் கள்ள ஓட்டு போட இயலாது. அதற்கு தான் 49-O ஏற்பாடு. இது எந்த வகையிலும் தற்போதைய கேடுகெட்ட அரசியலை சுத்தப்படுத்த உதவாது.

இந்த 49-O ய வச்சி மெத்த படிச்ச மூஞ்சுறுகள் Cyber Bullying பண்ணதான் லாயக்கு. 49-0 வால ஒரு மசுரும் புடுங்க முடியாது. உதாரணமாக 100 (நூறு) வாக்காளர் உள்ள ஒரு தொகுதியில் 9 (ஒன்பது) வேட்பாளர்கள் போட்டியிட்டு அந்த தொகுதியில் உள்ள 90 (தொன்னூறு) வாக்காளர்களும் 49-O வாக பதிந்தாலும் 9 வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் அவரது வாக்கு மற்றும் கூடுதலாக அவரது சின்ன வீட்டின் வாக்கு இரண்டையும் பெற்று 1 (ஒரு) ஓட்டு வித்தியாசத்தில் மற்ற அனைவரையும் வெற்றி பெற்றவராக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டு விடுவார். வேட்பாளரும் ஒரு வாக்காளர் தான். அவருக்கும் வாக்கு உண்டு. 98 பேரின் எதிர்ப்பையும் மீறி அந்த வேட்பாளர் 100 பேரின் பிரதிநிதியாக பாராளுமன்றம் செல்வார். இது தான் நமது தற்போதைய தேர்தல் நிலைமை. நம்மால் ஒன்றும் பண்ண இயலாது. இந்த கொடுமையிலிருந்து நம்மையே காப்பற்றி கொள்ள இயலாத போது சத்தியம் alias நியாயம் alias தர்மத்தை எப்படி காப்பற்ற இயலும். உண்மையில் இது கலிகாலம் தான்.

மேல் விவரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/49-O

இதற்காகவாவது இந்த பதிவை எல்லா பதிவர்களின் பதிவிலும் காப்பி & பேஸ்ட் பண்ணினால்
தப்பே இல்லை. நாலு பேருக்கு இது விளங்கனும்ன, எதுவும் தப்பே இல்லை. எதுவும் தப்பே இல்லை. எதுவும் தப்பே இல்லை. வேற என்னத்தை சொல்ல? கையலாகாத நிலையை நினைத்து வெறுப்பாக வருகிறது.

குறிப்பு - இதை ஆராய்வதற்கு தூண்டுதலாக இருந்தது சுரேஷ் குமார் எழுதிய 49-O'வும்..!! கிராமங்களில் 49-O'வும்..!! இதற்கு பிறகு தான் தேர்தல் வேலைக்காக அந்த அலுவலர்களுடன் இணைந்து கணணிகளை சரி செய்யும் போது கேள்விகளால் அவர்களை குடைந்தெடுத்து இந்த விபரங்களை அறிந்து கொண்டேன்.


இதற்கு தீர்வு - 49-O விற்கு ஆதரவாக மின்னணு வாக்கு இயந்திரத்தில் பட்டன் வைக்கும் போது 49-O வை அனைத்து தொகுதியிலும் போட்டியிடும் பொது வேட்பாளராக வைக்க சட்டம் இயற்றப்பட வேண்டும். இது எம்.பி கள் ஓட்டு போட்டு தான் சட்டமாக வரணுமாம். அவர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வார்களா என்ன?

with care and love,

Muhammad Ismail .H, PHD,
POSTED BY MUHAMMAD ISMAIL .H, PHD, AT 5:09:00 AM
LABELS: 49-O
REACTIONS:
3 COMMENTS:

சுரேஷ் குமார் said...
உங்கள் இடுகையில் குறிப்பிட்டுள்ள "http://en.wikipedia.org/wiki/49-O" என்ற தளத்தை இப்போது நானும் கண்டேன்..
அதில் நான்காவது (4th) தலைப்பில் (Disqualification hoax) எழுதி இருப்பது, என் இடுகையில் நீங்கள் தவறு என சுட்டிக்காட்டியுள்ள கருத்தானது /(வரிகள்) உண்மையில் சரி என்பதுபோலவே உள்ளதாய் நான் உணர்கிறேன்..

அந்த வரிகள்..
( Disqualification hoax
A hoax has been circulating which claims that if the '49-O' votes more than those of the winning candidate, then that poll will be canceled and will have to be re-polled. Furthermore, it claims that the contestants will be banned and they cannot contest the re-polling for their life time.)

நன்றி Muhammad Ismail .H, PHD..

12 MAY, 2009 10:15 AM
ஷண்முகப்ரியன் said...
இன்றுதான் நானே இந்த 49-0 வின் தாத்பரியங்களைப் புரிந்து கொண்டேன்.நன்றி இஸ்மாயில் சார்.

12 MAY, 2009 4:38 PM
Muhammad Ismail .H, PHD, said...
@ அன்பின் சுரேஷ் குமார்,

உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்? திறந்த பீர் பாட்டிலின் மூடியை முகர்ந்தது போல் எனக்கு தலை சுற்றுகிறது :-)). 49-O வால் தகுதி நீக்கம் (Disqualification) செய்ய இயலும் என மின்னஞ்சல் வழியாக பரப்புரை செய்யப்பட்ட தகவல் பொய்யானது. அதாவது ஆங்கிலத்தில் இதற்கு பெயர் Hoax மற்றும் தகவல்களின் மூலத்தை சரிவர ஆராயாமல் அதை அனைவருக்கும் அனுப்புவது Cyber Bullying.

இந்த 49-O வில் பதியப்படும் வாக்குகள் வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அவரை இந்த வாக்குகளை காரணம் காட்டி பாராளுமன்ற உறுப்பினர் ஆவதிலிருந்து தடுக்க முடியும் என நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். 49-O வில் பதிவது வாக்கே அல்ல. உங்களின் வாக்கை யாரும் உபயோகம் செய்யாமால் தடுப்பதற்கான ஒரு ஏற்பாடு தான் அது. இது பற்றி எழுத்தாளர் ஞானி கூறுவதை இந்த காணொளியில் பாருங்கள்.

இதன் படி பார்த்தால் இந்த 49-O வில் பதிந்த வாக்குகளின் எண்ணிக்கை அதிகமானால் நாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க-லாம் !, பிறகு அவரை தகுதி நீக்கம் செய்ய-லாம் !, மறு தேர்தல் நடத்த-லாம்!. எல்லாம் வெறும் 'லாம்' கள் தான். வேறு லா(ப)ம் இல்லை. முன்னமே இதிலுள்ள நடைமுறைச்சிக்கலை மிக அழகாக கிராமத்து நடையில் பதிவிட்ட உங்களுக்கு நான் மேலும் விளக்கவேண்டியது இல்லை.
-----------

அன்பின் டைரக்டர் ஷண்முகப்பிரியன்,

உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. இந்த பதிவை எழுதும் முன் நானும் அந்த 49-O ஒர் அருமையான சட்டம் எனக் கருதிக்கொண்டிருந்தேன். நல்லா குளோசப் ஷாட்டுல போய் பார்த்ததும் தான் தெரிந்தது அதுக்கு வாக்களிக்கும் நம்மை குளோஸ் பண்ணி அப்புல அனுப்பி வைக்கிறதுக்கான சட்டம் என !!!.

இதை நான் ஆராயக்காரணம் நம்ம சகோதரர் சுரேஷ் குமாரின் அந்த 49-O'வும்..!! கிராமங்களில் 49-O'வும்..!! தான். அந்த பதிவை படித்துவிட்டு தேர்தல் அதிகாரிகளிடம் கேட்ட போது தான் 49-O பற்றி நன்றாக விளங்கியது. தேர்தல் முடியட்டும். இறைவன் நாடினால் இன்னும் களத்தில் இறங்கி முழு விபரமும் சேகரித்து பதிகின்றேன். மேலும் அவர்களுக்கே இது பற்றி முழுமையாக தற்போது தெரியவில்லை. நான் அவர்களை ரொம்ப குடைந்தபோது அந்த பயிற்சி குறுந்தகடை கையில் கொடுத்து விட்டார்கள். அதிலுள்ள ஒரு பகுதியை தான் யூ ட்யூப்பில் தரவேற்றம் செய்தேன்.

மேலும் இந்த சட்டம் நாம் 'சத்ய யுகத்தில்' இருந்தால் நல்ல பயனை தரும். அப்ப ரொம்ப நல்லவங்க இருந்தார்கள். ஆனால் இந்த கலியுகத்தில் போய் இதை வைத்துக்கொண்டு நாம் என்ன பண்ணமுடியும் ? இதை நமது தேவைக்கேற்ப மாற்றுவது தான் புத்திசாலித்தனம். இல்லையென்றால் நம்மை ஆள்வது போலியான ஜனநாயகம் என்னும் உண்மையான பணநாயகம் !!!. தீர்வும் நான் பதிவில் கூறியதுதான்.
with care and love,
Muhammad Ismail .H, PHD,
12 MAY, 2009 9:59 PM


இப்போது மீண்டும் டோண்டு ராகவன். மிக நல்ல பதிவை எனது வலைப்பூவிலும் போட முடிந்ததற்காக இஸ்மாயில் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

21 comments:

கோவி.கண்ணன் said...

டோண்டு சார்,

வியாழன் கேள்வி அல்ல, உடனே பதில் வேண்டும்.

49-ஓ ஒரு தொகுதியில் மற்ற வேட்பாளர்களை விட நிறைய வாக்குகள் பெற்றால் யாரை தேர்ந்தெடுப்பாங்க ?

dondu(#11168674346665545885) said...

@கோவி கண்ணன்
ரொம்ப முன்சாக்கிரதைதான் உங்களுக்கு. :))))

உங்க கேள்விக்கு இஸ்மாயிலே பதிலளிச்சுட்டாரே.

“49-0 வால ஒரு மசுரும் புடுங்க முடியாது. உதாரணமாக 100 (நூறு) வாக்காளர் உள்ள ஒரு தொகுதியில் 9 (ஒன்பது) வேட்பாளர்கள் போட்டியிட்டு அந்த தொகுதியில் உள்ள 90 (தொன்னூறு) வாக்காளர்களும் 49-O வாக பதிந்தாலும் 9 வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் அவரது வாக்கு மற்றும் கூடுதலாக அவரது சின்ன வீட்டின் வாக்கு இரண்டையும் பெற்று 1 (ஒரு) ஓட்டு வித்தியாசத்தில் மற்ற அனைவரையும் வெற்றி பெற்றவராக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டு விடுவார். வேட்பாளரும் ஒரு வாக்காளர் தான். அவருக்கும் வாக்கு உண்டு. 98 பேரின் எதிர்ப்பையும் மீறி அந்த வேட்பாளர் 100 பேரின் பிரதிநிதியாக பாராளுமன்றம் செல்வார். இது தான் நமது தற்போதைய தேர்தல் நிலைமை. நம்மால் ஒன்றும் பண்ண இயலாது”.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் said...

//இது தான் நமது தற்போதைய தேர்தல் நிலைமை. நம்மால் ஒன்றும் பண்ண இயலாது//

அப்ப நம்மால் செய்ய முடிந்தது சொ.செ.சூ ன்னு சொல்லுங்க !

:)

Unknown said...

என்ன கொடும சார் இது...!!!

அப்போ ஏதாவது ஒரு வியாதிய தேர்ந்தெடுத்தே ஆகனுமின்னு சொல்லுறீங்க....!!!!

சி. சரவணகார்த்திகேயன் said...

http://www.writercsk.com/2009/04/blog-post_17.html

வஜ்ரா said...

http://realitycheck.wordpress.com/2009/04/26/no-candidate/

க.கா.அ.சங்கம் said...

இந்த முறை தான் இப்படி 49 ஓ போடுங்கள் என்று காட்டு கத்து கத்தியிருக்கிறார்கள்.

எனக்கு ஒரு சந்தேகம்.

இப்படி 49 ஓ போடு என்று கூப்பாடு போடுவதினால் வாக்காளர்கள் வாக்களிப்பில் நம்பிக்கை இழக்க வைக்கிறார்கள்.
பின்னர் சர்சுகளும் மசூதிகளும் நம்பிக்கையாளர்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளனர்.

இது ஒருவித கான்ஸ்பிரஸி போல் தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

கிரி said...

//இந்த 49-O ய வச்சி மெத்த படிச்ச மூஞ்சுறுகள் Cyber Bullying பண்ணதான் லாயக்கு. 49-0 வால ஒரு மசுரும் புடுங்க முடியாது//

இதில் உங்களுக்கு ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம் அது உங்கள் விருப்பம்..அதற்காக இதை போல மட்டமாக விமர்சனம் செய்வதை ஏற்று கொள்ள முடியவில்லை.

கூற வந்ததை நினைத்ததை நாகரீகமான முறையில் கூறினால் விருப்பம் இல்லாதவர்கள் கூட கவனமெடுத்து கேட்பார்கள் என்பது என் கருத்து.

dondu(#11168674346665545885) said...

@கிரி
நீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகள் எனதல்ல. நான் முழுவதுமாக காப்பி பேஸ்ட் செய்த பதிவின் வரிகள் அவை. அவ்வாறு செய்யப்படும் பதிவை நான் திருத்தலாகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//ஒரு மசுரும் புடுங்க முடியாது// நீங்க உங்க நன்பர்கள் எல்லாருமே ஏன் இப்படி அசிங்கமா எழுதுகிறீர்களோ தெரியலை . வயதாயிட்டாலே இப்படி ஆயிடுமா என்னா ? உண்மை சுடுறதோ ! அதனால தான் பின்னூட்டம் வெளியாகிறதில்லையோ.

கெட்ட வார்த்தை களஞ்சியமாக
அசிங்க அசிங்கமா பேசுகிற/எழுதுகிற நாகரீகத்தை இழந்த தொடை நடுங்கிகளான பெரியவர்களை வெளுக்க தமிழ் நாட்டில் ஆட்களே இல்லையா ?

மணிகண்டன் said...

டோண்டு சார்,

49 O ஆதரிக்கரவங்க சொல்ல முயற்சிக்கறது இது தான்.

60 சதவீத வாக்களிப்புன்னா மிச்சம் உள்ள 40 சதவீத மக்கள் ஏன் வாக்களிக்களைன்னு தெரியாது. சோம்பேறித்தனம், ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை, ஒரு கட்சிக்கு வாக்கு செலுத்தினா வேற யாருக்கோ போய்விடும் என்ற பயம்.

மற்றொரு வகை - அவர்களின் தொகுதியில் உள்ள எல்லா கட்சிகளும் தகுதி இல்லாத வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதால்.

இவர்கள் தங்களது நிலையை எடுத்து கூறவே 49 O

இதனால் கட்சியின் வேட்பாளர் தேர்வில் மாற்றம் ஏற்படுத்தமுடியும் என்று ஞானியை போன்றவர்கள் நம்புகிறார்கள். இந்த சட்டத்தை விழிப்புணர்வு சார்ந்த ஒரு பொருளாக பார்க்கின்றனர்.

கட்சிகள் எல்லாம் இதை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.

அதை தவிர, சோம்பேறி மக்கள் இதை ஒரு விளையாட்டு பொருளாக பார்க்கவும் வாய்ப்பு இருக்கிறது. நேற்று புதுக்கோட்டையில் அவர்கள் தொகுதியை திருச்சியோடு
சேர்த்ததால் 49 O பயன்படுத்த முயற்சி செய்து இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் வேலை, கணவன், மனைவி தேர்ந்தெடுக்கும் போது நாம் இருப்பதில் எது சிறந்ததோ அதை தான் தேர்ந்தெடுக்கிறோம். (பெரும்பாலனவர்கள்). அதையே தான் இதிலும் செய்ய வேண்டும்.

விவசாய துறை வளர்ச்சி / மாநிலத்தின் வளர்ச்சி குறித்து கவலை கொண்டவர்கள் ஓர் முதல்வருக்கு வாக்களிக்கலாம். மதக்கலவரம், அதில் நடந்த கொலைகள் பற்றி கவலை கொண்டவர்கள் அவருக்கு எதிராக வாக்களிக்கலாம்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

என்னடா இந்த 49-0 என்று முழித்துக்கொண்டிருந்தேன். ஏதோ இப்போ தெளிவாச்சு.

பொரியாளன் said...

தேவை இல்லாமல் ஆண்களுக்கு ஏன் முலைக்காம்புகள் உள்ளன ? அப்படி இருக்கிறதென்றால் நாமும் ஒரு காலத்தில் குழந்தைக்கு பாலூட்டினோமா ? அல்லது ஒரு உடலில் இருந்து இரு உயிர்கள் பிரிந்து ஆண் என்றும் பெண் என்றும் உருவானதா ? ஒரு செல் உயிரி அமீபாவையும் இதனையும் எவ்வாறு இணைத்துபார்க்கலாம்?

வால்பையன் said...

ஓட்டு வாங்கிய பிறகு தொகுதி பக்கமே வர மாட்டிங்கிறானுங்க!

இவனுங்க உதவி செய்யுறானுங்களா?

அப்படி என்ன அரசு ஊழியர்கள் செய்ய முடியாத!, அரசியல்வியாதிகள் செய்ய கூடிய உதவி?

இதனால தான் நிறைய பேரு ஓட்டு போட வர மாட்டிங்கிறானுங்க!

வஜ்ரா said...

இந்த 49 ஓ சட்டப்பிரிவை ஆதரித்து அதற்கு வாக்களிப்போர் கொஞ்சம் மறை கழன்றவர்கள் என்று தான் நினைக்கிறேன்.

ஜனநாயகத்தில் நமக்கு இருக்கும் ஒரே உரிமை வாக்களிப்பது. அதையும் வாக்களிக்க மாட்டேன் என்று நிராகரிக்கச் சொல்கிறார்கள் இந்த அறிவு சீவிகள். ஏன் ?

அப்பத்தானே, அதிகாரம் மக்களுக்குப் போகாமல் ஒரு குழு தேர்ந்தெடுக்கும் சில அறிவு சீவிகளுக்குள் அது இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட சிலரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு Oligarchy யைக் கொண்டுவர முடியும்.
அதை வைத்து தாங்களுக்குத் தேவையான பதவிகள், விருதுகள் வாங்கிக் கொண்டு தானும் ஒரு அறிவாளி என்று பரைசாற்றிக்கொள்ள முடியும்.

ஜனநாயகத்தில் எதிரிகள் தான் வாக்களிக்கும் உரிமையை 49 ஓ பிரிவின் படி நீங்கள் நிராகரிக்கலாம் என்று கன்னியமாகச் சொல்கிறார்கள்.

அதை உணரத்தெரிந்தவர்கள் முதிர்ந்தவர்கள்.


ஒரு குழந்தை எப்பொழுது பெரியவனாகிறது தெரியுமா ?

உடல் வளர்ச்சியினால் மட்டும் அல்ல.

தன் செயல்களுக்குத் தானே பொறுப்பு என்ற உண்மையைக் உணர்ந்து செயல்படும் போது தான்.

நொள்ளை சொல்லிவிட்டு வாக்களிக்காமல் இருப்பது அல்லது 49 ஓ பிரிவின் படி வாக்கை ரத்து செய்து கொள்வது எல்லாம் நம் செயல்களுக்கு நாம் பொறுப்பு வகிக்காமல் பிறர் மேல் பழி போட்டுவிட்டு ஒதுங்கும் சிறு பிள்ளைத்தனமான காரியம் தான்.

வாழ்க்கையில் வேலை, கணவன், மனைவி தேர்ந்தெடுக்கும் போது நாம் இருப்பதில் எது சிறந்ததோ அதை தான் தேர்ந்தெடுக்கிறோம். (பெரும்பாலனவர்கள்). அதையே தான் இதிலும் செய்ய வேண்டும்.
சரியாகச் சொன்னீர்.

இருப்பதில் எது சிறந்ததோ அதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். எனக்கு வேலையே வேண்டாம், கல்யாணமே வேண்டாம் என்றா சொல்கிறீர்கள் ?

ஆனால் ஒரு விசயம். கல்யாணம் போல் நீங்கள் வோட்டு போடும் வேட்பாளர் உங்களை வாழ்க்கை முழுவதும் ஆழப்போவதில்லை.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் வாக்கை நீங்கள் மறு பரிசீலணை செய்ய முடியும்.

கிரி said...

//@கிரி
நீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகள் எனதல்ல. நான் முழுவதுமாக காப்பி பேஸ்ட் செய்த பதிவின் வரிகள் அவை. அவ்வாறு செய்யப்படும் பதிவை நான் திருத்தலாகாது//

சார் நான் உங்களை கூறவில்லை. இந்த பதிவு எழுதியவரையே கூறுகிறேன்..

(நீங்கள் தான் முதலிலேயே குறிப்பிட்டு விட்டீர்களே)

m said...

in my humble opinion...It would be nice when people who find faults can also come up with an alternative solutions... somewhere a begining has to be there...it need not be perfect and ultimate... but a begining.... I would have appreciated this copy/paste post as well as the original post if the tone has been postive and constructive!

Yuvan said...

Hello Dondu Sir,

I have read Gnani's article about 49 O. In his article, he admits that 49 O is of no use now, but when exercised and with the help of communities and the prestigious Courts of India(Supreme/High), we can first give the right signals to the candidates and their parties that we(the people) do not like the representative. Even after that, the candidate with the As mentioned by Gnani, we can go to the court and use the RTI to find out the 49 O counts and file a PIL stating that the candidate(s) are not fit to represent us. This could be the baby steps we should be taking in have a clean and fair people's representatives.

To Dondu Sir and all other blogger s' out there , please be rightly informed that the Election Commission of India(ECI) has proposed various reform plans to the various governments. Please have a look at "http://eci.nic.in/PROPOSED_ELECTORAL_REFORMS.pdf" for the proposed reforms by ECI.

These proposals were done by T.S.Krishnamurthy,then ECom. of India on July 30, 2004.

Excerpts from that;
//NEGATIVE / NEUTRAL VOTING
The Commission has received proposals from a very large number of individuals and organizations
that there should be a provision enabling a voter to reject all the candidates in the constituency
if he does not find them suitable. In the voting using the conventional ballot paper and ballot
boxes, an elector can drop the ballot paper without marking his vote against any of the candidates,
if he chooses so. However, in the voting using the Electronic Voting Machines, such a facility is not
available to the voter. Although, Rule 49 O of the Conduct of Election Rules, 1961 provides that
an elector may refuse to vote after he has been identified and necessary entries made in the
Register of Electors and the marked copy of the electoral roll, the secrecy of voting is not protected
here inasmuch as the polling officials and the polling agents in the polling station get to know
about the decision of such a voter.
The Commission recommends that the law should be amended to specifically provide for
negative / neutral voting. For this purpose, Rules 22 and 49B of the Conduct of Election
Rules, 1961 may be suitably amended adding a proviso that in the ballot paper and the
particulars on the ballot unit, in the column relating to names of candidates, after the
entry relating to the last candidate, there shall be a column “None of the above”, to
enable a voter to reject all the candidates, if he chooses so. Such a proposal was earlier
made by the Commission in 2001 (vide letter dated 10.12.2001).
(A petition by the People’s Union for Civil Liberties seeking such a provision filed at the time of the
recent general elections is pending before the Hon’ble Supreme Court)//

Not to our surprise, all the politicians and the governments formed are sitting pretty on this and hatching their dreams. They are not going to let this amendment come into existence.

So instead of ridiculing the ECI and democracy who don't the highly learned people like you and Mr. Ismail take these things up and guide youngsters like us, in seeing this come a reality !!!!

Anonymous said...

//ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் வாக்கை நீங்கள் மறு பரிசீலணை செய்ய முடியும்.//

அங்க தானே பிரச்சனையே....

Muhammad Ismail .H, PHD., said...

@ அன்பின் ராகவன் சார்,

இதை மறுபதிவு செய்து பலரின் கவனத்திற்கு இதை கொண்டு சென்றமைக்கு மிக்க நன்றி. எங்களது கொள்கையே Copying is Right தான்.

உண்மையில் இங்கே யாரும் படைப்பாளி கிடையாது. இறைவன் தான் அனைத்தையும் படைத்தான். மற்ற அனைவரும் யூசர் தான். உதாரணமாக களிமண்ணில்

ஒரு சிலையை படைத்துவிட்டு தானொரு படைப்பாளி எனக்கூறுபவரிடம் அந்த சிலைக்கு ஆதாரமான களிமண்ணை படைத்துக்காட்டு என்றால் தெரியும் அவரது

படைப்பு திறமை !!! ஆகவே யார் எனது எந்த பதிவை காப்பி பேஸ்ட் செய்தாலும் மகிழ்ச்சியே. அதில் எனக்கு சுட்டி தராவிட்டாலும் கவலை இல்லை. அந்த

பதிவில் நான் செய்த வினைக்கான நன்மை - தீமையானது சித்ரகுப்த ஏடு > ஜீவ புத்தகம் > லவ்ஹீஃல் மக்பூஃல் என்றழைக்கப்படும் இறைவனது பாதுகாக்கப்பட்ட

ஏட்டில் எழுதப்பட்டுவிடும். மற்றவர்களைப்போல் கூகுளின் blogspot - லுள்ள hyper link - ஐப்பற்றி எனக்கு கவலை இல்லை. பூமியே அழியும் போது

கூகுளின் செர்வரும் சேர்ந்து தான் அழியும். ஆதலால் தகவல்களை பூமிக்கு வெளியே பாதுகாப்பது தான் பெஸ்ட். :-)))


நான் ஒரு இரவுப்பறவை. அதுவும் அன்று காலை 06:00 மணிக்கு தான் +2 ரிசல்ட்டுக்காக இங்கே நெட்வொர்க் அமைப்பை மாற்றி வைத்துவிட்டு

படுத்தேன். உங்களின் அழைப்பு 07:07 க்கு வந்துள்ளது. ஆகவே தான் பதிலளிக்க இயலவில்லை. காரணம் அது தான். வேறென்றும் இல்லை.


பிறகு இந்த 'மசுரு' வார்த்தையை உபயோகிக்க காரணம் நம்ம சக 'சளக், புளக்கர்கள்' தான். இந்த மேசை செய்தியாளர்கள் ஏதாவது ஒரு செய்தி

கிடைத்தால் அதை அவர்களது 'மேல் மாடியை' உபயோகப்படுத்தாமல் வெறும் Ctl+C & Ctl+V தான். உடனே அதை பதிவாக்கி விட்டு தான் மறுவேலை.

அது பற்றி சம்பந்தபட்ட இடத்தில் எல்லாம் விசாரிப்பது கிடையாது. கேட்டால் அதெற்க்கெல்லாம் அவர்களுக்கு நேரம் கிடையாதாம். அப்ப என்ன 'மசுருக்கு' இந்த

Cyber Bullying பண்ணணுமாம். இதுக்கு இவர்கள் தேவையே இல்லை. ஒரு MP3 ஆடியோ ப்ளேயர் அப்படியே அதில் அடுத்தவர் பேசியதை வாந்தி

எடுக்கும். அதனால் மற்றவர்கள் படும் பாட்டை பற்றி இந்த 'சளக், புளக்கர்கள்'களுக்கு என்ன கவலை. 'சளக், புளக்கர்கள்' என்றால் எந்த ஒரு

விஷயத்தையும் முழுதாக அறியாமல், ஆனால் முழுதாக தெரிந்தது போல கையையும், காலையும் அதில் விட்டு ஆட்டி 'சளக், புளக்' என சப்தம் ஏற்படுத்தி

ஆனந்தம் அடைபவர்கள். பெயர் காரணம் சரியா? பிறகு அந்த 'மசுரு' வார்த்தையை நான் திருப்பிக்கொள்வதாக உத்தேசம் இல்லை. இனிமேல் எந்த மேல் மாடி

காலியான 'சளக், புளக்கர்கள்' எங்கே புளாக்கினாலும் அங்கு சென்று இந்த அர்ச்சனை இலவசமாக வழங்கப்படும் என்பதை எங்க கம்பேனி விளம்பரத்துக்காக

இங்கே அறிவிக்கின்றேன். இதை இனிமேல் பட்டாம் பூச்சி, கரப்பான் பூச்சி பட்டம் போல வழங்க விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

----------------------0000000000000-------------------------

@ அன்பின் சரவணகார்த்திகேயன் சி.,

அடடா, என்ன அருமையாக சும்மா, பிச்சு பிச்சு எழுதி இருக்கார் பாருங்க. அதுவும் எனக்கு சரியாக 23 நாளுக்கு முன்னால் பாயிண்ட் பை பாயிண்ட்ஆ 49-

O வை சும்மா ரவுண்டு கட்டி அடிச்சு இருக்கார். ஆனால் எழுத்தாளாரே உங்க பதிவு 'குடத்தில் இட்ட விளக்காக இவ்வளவு நாள் தெரியாம போச்சே ! இனி மேல்

நல்லா மார்க்கெட்டிங் பண்ணுங்க. அப்பதான் உங்கள் கருத்து 'குன்றில் மேல் இட்ட விளக்காக' அனைவருக்கும் வெளிச்சம் தரும். மார்க்கெட்டிங் மிக முக்கியம்

அமைச்சரே !

----------------------0000000000000-------------------------

@ அன்பின் வஜ்ரா,

அந்த தளத்தில் அழகா படம் போட்டு பாடம் நடத்திட்டங்க. அங்கன சொல்ற மாதிரி ஆட்டத்தை ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியது தான். அதற்கு வரி

கொடா இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டியது தான். வரி (பணம்) இருந்தால் தானே அரசாங்கம் செயல்படும். ஆதியில் மனிதர்கள் தனித்தனி கூட்டமாக வசிக்க

ஆரம்பித்த போது தான் இந்த அரசாங்கம் அமைப்பு இல்லை. அவர்கள் ஒரு பெருங்கூட்டமாக வாழ ஆரம்பித்த போது தான் இந்த அரசாங்கம், சட்டம், வரி

எல்லாம் தோற்றுவிக்கப்பட்டது. நம் கையே நமக்குதவி என வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான். நாங்க அப்பவே ஆரம்பித்து விட்டோம். அது இங்கே

இருக்கு பாருங்க http://www.iibc.in/itws/

----------------------0000000000000-------------------------

@ அன்பின் க.கா.அ.சங்கம்,

உண்மைதான். அந்த அப்பாவிகள் இந்த ரௌடிக்கூட்டத்திடம் அடி வாங்கி சாகட்டும் என இவர்கள் திட்டம் போல. இங்கேயும் குல்லா அணிந்த முல்லாக்கள்

இப்படி பேசியதாக அறிந்தேன். ஆனால் அந்த துலுக்க பயலுகளுக்கு நான் தரும் இடம் உதிர்ந்த 'மசுருக்கு' கொடுக்கும் மரியாதைக்கு கீழே தான்.

----------------------0000000000000-------------------------

@ அன்பின் கிரி,

உங்களின் தற்போதைய பதிவு ' இலங்கை போரில் உலகநாடுகள் தலையிட "CNN" வாக்கெடுப்பில் பங்கு கொள்ளுங்கள் ' ஒரு அருமையான ஒரு 'சளக்,

புளக்' தான். கை கொடுங்க. முதல் பட்டத்தை நீங்கள் தான் வாங்குகிறீர்கள். காரணம் நீங்கள் குறிப்பிட்ட படி அந்த தளம் முடக்கப்படவில்லை. இன்னும்

இயக்கத்தில் தான் உள்ளது. அதில் நானே IP change & Cookies Clear செய்து 10 ஓட்டு போட்டேன். அதுக்கு மேல கடுப்பா ஆகிட்டேன். இப்ப Yes

77% & No 23%. இதே வேலையை ஒரு சிங்கள நாதாரி செய்ய எவ்வளவு நேரம் ஆகும். இதையெல்லாம் நம்பி எப்படி ??? எனக்கு ஓண்ணியும் பிரியல :

-)))) இதற்கு பதிலாக அந்த இலங்கையிலிருந்து உயிர் பிழைத்து ஓடோடி நம் நாடு வரும் அந்த மனிதர்களுக்கு கிடைக்கும் கேவலமான வரவேற்பை பற்றி

எழுதலாம். அவர்களுக்கு இங்கே தரப்படும் 'சிவப்பு கம்பள வரவேற்பை' பற்றி புளாக்கலாம். ஓ அது உங்களால் முடியாதே ! நீங்க தான் மேசை செய்தியாளர்

ஆயிற்றே. எங்களைப் போன்ற களப்பணியாளர்கள் இல்லையே. அதுவும் இங்கே உள்ள அரசாங்கம் உங்கள் வரிப்பணத்தில் தானே இயங்குகிறது. அப்ப என்ன

பண்ணலாம் ? சகோதர பாசம் 'புளாக்குல' மட்டும் தானா? அவ்வ்வ்வ்


கிரி பதிவின் சுட்டி - http://www.giriblog.com/2009/05/cnn.html

----------------------0000000000000-------------------------

@ அன்பின் ராகவன் சார்,

// @கிரி
நீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகள் எனதல்ல. நான் முழுவதுமாக காப்பி பேஸ்ட் செய்த பதிவின் வரிகள் அவை. அவ்வாறு செய்யப்படும் பதிவை நான்

திருத்தலாகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன் //


உங்களிடம் எனக்கு பிடித்ததோ இந்த 'நேர் நிலை' தான். மற்றவர்களிடம் நீங்கள் எப்படியோ. என்னிடத்தில் இது வரை நீங்கள் ஒரு நேர்மையாளராகவே

நடந்துள்ளீர்கள். நான் உங்களிடம். ' நீங்கள் ஒரு பிராமணனா அல்லது பார்ப்பானா?' என்று கேள்வி கேட்டதற்கு நீங்கள் சோ கூறியபடி பார்த்தால் நான்

பிராமணன் இல்லை என பதில் தந்தீர்கள். இதை மற்றவர்களிடம் கிஞ்சித்தும் எதிர்பார்க்க இயலாது. அவர்களிடம் கேட்டால் வெண்டையை விளக்கெண்ணயில்

வதக்கியது போல ஒரு வழ, வழ , கொழ, கொழ பதில் தான் வரும். Hats off you. இதை யாரும் ஜல்ரா என்று கிண்டலடித்தாலும் எனக்கு கவலை

இல்லை. அவர்களுக்கு நான் தரும் பதில் 'மசுரு' ஒண்ணு போச்சு.

----------------------0000000000000-------------------------

@ அன்பின் அனானி,

// //ஒரு மசுரும் புடுங்க முடியாது// நீங்க உங்க நன்பர்கள் எல்லாருமே ஏன் இப்படி அசிங்கமா எழுதுகிறீர்களோ தெரியலை . வயதாயிட்டாலே இப்படி

ஆயிடுமா என்னா ? உண்மை சுடுறதோ ! அதனால தான் பின்னூட்டம் வெளியாகிறதில்லையோ.

கெட்ட வார்த்தை களஞ்சியமாக
அசிங்க அசிங்கமா பேசுகிற/எழுதுகிற நாகரீகத்தை இழந்த தொடை நடுங்கிகளான பெரியவர்களை வெளுக்க தமிழ் நாட்டில் ஆட்களே இல்லையா ? //

யார் தொடை நடுங்கி. எனது ப்ரோபைலில் என் முழு முகவரியுடன் உள்ள ID card , செல்லிடபேசி எண் என முழு அடையாளத்துடன் இயங்கும் நானா?

அல்லது கமெண்ட் போடக்கூட அனானியாக முக்காடு போட்டு வரும் நீங்களா? யார் தொடை நடுங்கி என மக்கள் புரிந்து கொள்வார்கள். நல்லா வாய் கிழிய

பேசுறாங்கடா !!!

----------------------0000000000000-------------------------

@ அன்பின் மணிகண்டன்,

உங்களின் கருத்துக்கு நன்றி. ஆனால் இந்த 49-O வால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. இன்னும் சொல்லப்போனால் 'கொக்கு தலையில் வெண்ணை

வைத்து, அது வெயிலில் உருகி கொக்கின் கண்ணை மறைத்தவுடன் அதை பிடிக்கலாம்' என்பது எவ்வளவு முட்டாள் தனமே அது இதற்க்கும் பொருந்தும். மேலும்

விளக்கம் வேண்டுமா?


----------------------0000000000000-------------------------


@ அன்பின் மதுவதனன் மௌ,

// என்னடா இந்த 49-0 என்று முழித்துக்கொண்டிருந்தேன். ஏதோ இப்போ தெளிவாச்சு //

அதுக்குதான் இவ்வளவு சிரமப்பட்டு, களத்தில் இறங்கி தகவல்களை சரிபார்த்து ஒரு பதிவாக போட்டேன். அதை ராகவன் சாரும் அவரது தளத்தில் மறு பதிவு

செய்தார். இறைவன் நாடினால் இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வோம்.


----------------------0000000000000-------------------------


@ அன்பின் பொரியாளன்,

// தேவை இல்லாமல் ஆண்களுக்கு ஏன் முலைக்காம்புகள் உள்ளன ? அப்படி இருக்கிறதென்றால் நாமும் ஒரு காலத்தில் குழந்தைக்கு பாலூட்டினோமா ?

அல்லது ஒரு உடலில் இருந்து இரு உயிர்கள் பிரிந்து ஆண் என்றும் பெண் என்றும் உருவானதா ? ஒரு செல் உயிரி அமீபாவையும் இதனையும் எவ்வாறு

இணைத்துபார்க்கலாம்? //

இது எனக்கானது அல்ல. ஸோ ஓவர் டு ராகவன் சார். ஆனால் இது நல்ல லாஜிக்கான கேள்வி. ராகவன் சாரின் பதிலுக்காக நானும் வெயிட்டிங்.


----------------------0000000000000-------------------------

@ அன்பின் வால்பையன்,

// ஓட்டு வாங்கிய பிறகு தொகுதி பக்கமே வர மாட்டிங்கிறானுங்க! இவனுங்க உதவி செய்யுறானுங்களா? அப்படி என்ன அரசு ஊழியர்கள் செய்ய முடியாத!,

அரசியல்வியாதிகள் செய்ய கூடிய உதவி? இதனால தான் நிறைய பேரு ஓட்டு போட வர மாட்டிங்கிறானுங்க! //


உங்களின் ஷேர் மார்க்கெட் & காமாடிட்டி தொழிலுக்கு வேண்டுமானால் 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின்' தயவு தேவைப்படாமல் இருக்கலாம்.

ஆனால் மற்றவர்களின் நிலை அப்படி இல்லையே. ஒரு சில வேலைகளுக்கு அவரின் லெட்டர் பேடும், அதில் அவரின் கையொப்பமும் மிக அவசியம். இல்லைன

ஏன் தேர்தல் வைத்து அவரை தேர்ந்தெடுக்க வேண்டும் ? எந்த எழவுமே தேவையில்லையே.


----------------------0000000000000-------------------------

@ அன்பின் வஜ்ரா,

அட, மறுபடியும் ஒரு நீண்ட நெடிய விளக்கம். என் நண்பர் கூறியதும் இதே தான். அவரது ஊரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் வசிக்கும் தனி நபர் 49-O

ல் தான் வாக்கை பதிந்தாராம். அவரது வீட்டருகே சின்ன குழந்தைகள் கூட விளையாட செல்லாதாம். அவருக்கு யாரிடமும் எந்த தொடர்பும் கிடையாதாம்.

அவருக்கு வேண்டுமானல் இது பொருந்தி வராலாம். நமக்கு ?

----------------------0000000000000-------------------------

@ அன்பின் கிரி,

// @கிரி
நீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகள் எனதல்ல. நான் முழுவதுமாக காப்பி பேஸ்ட் செய்த பதிவின் வரிகள் அவை. அவ்வாறு செய்யப்படும் பதிவை நான்

திருத்தலாகாது//

சார் நான் உங்களை கூறவில்லை. இந்த பதிவு எழுதியவரையே கூறுகிறேன்..

(நீங்கள் தான் முதலிலேயே குறிப்பிட்டு விட்டீர்களே) //


நீங்கள் தான் தமிழ் கூறும் நல்லுலகின் பதிவர்களில் முதன் முதலில் எங்களது 'சளக், புளக்கர்' பட்டம் பெறும் நபர். சந்தோஷமா ?

----------------------0000000000000-------------------------

@ அன்பின் Ela,

// in my humble opinion...It would be nice when people who find faults can also come up with an alternative

solutions... somewhere a begining has to be there...it need not be perfect and ultimate... but a begining.... I

would have appreciated this copy/paste post as well as the original post if the tone has been postive and

constructive!//


இந்த காரமான 'மசுரு' வார்த்தையை நான் உபயோகப்படுத்தவில்லை என்றால் இதன் வீச்சு இந்த அளவு இருக்காது. நாங்கள் ஒன்றும் அனைத்தையும் குற்றம்

சொல்லி பிழைப்பை நடத்துபவர்கள் அல்ல. இதற்கெல்லாம் இது போல அறுவை சிகிச்சை தான் நல்ல பலனை தரும்.

----------------------0000000000000-------------------------

@ அன்பின் Yuvan Kumarakam,


இதெல்லாம் நான் முன்னர் சொன்ன 'கொக்கு தலையில் வெண்ணை வைத்து, அது வெயிலில் உருகி கொக்கின் கண்ணை மறைத்தவுடன் அதை பிடிக்கலாம்'

சமாச்சாரம் தான். நீங்கள் கூறியபடி 2004 -ல் T.S.Krishnamurthy, ECom. அவர்களால் தரப்பட்ட பரிந்துரையை இது வரையில் கிடப்பில் போட்டவர்கள்

சாமன்ய மக்களின் கேள்விக்கா பதில் தரப் போகிறார்கள்?

----------------------0000000000000-------------------------

@ அன்பின் அனானி,

// //ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் வாக்கை நீங்கள் மறு பரிசீலணை செய்ய முடியும்.//

அங்க தானே பிரச்சனையே.... //


சொல்லவந்த விஷயத்தை க.க.போ. ஐ லைக் இட் வெரிமச். :-)))


----------------------0000000000000-------------------------


உஸ்ஸ்ஸ்ஸ், அப்பாடா, இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நான் தனித்தனியாக பதில் அளித்து விட்டேன். உண்மையில் அனைவருக்கும் பதில் தருவது

தான் சரியான ஜனநாயக முறை. அதிலும் இந்த இருவழி பேச்சு (Dialoge) முறையானது புனித பகவத்கீதை துவங்கி புனித குர் ஆன் வரை இறைவனால்

கையாளப்பட்ட நடைமுறை. அனைத்து வேதங்களிலும் மனிதன் கேள்வி கேட்க இறைவன் பதில் அளித்து இருப்பான். இது நாங்கள் கண்ட உண்மை. இதை

கையாண்டதற்காக நான் இறைவன் என உங்களிடம் உரிமை கோரவில்லை. நான் ஆசபாசங்கள், தேவைகள் உள்ள உங்களைப் போன்றே பசி, தூக்கம், வலி

அனைத்தும் உள்ள சாதாரண மனிதப் பிறவிதான். எனக்கும் சிலவற்றில் பலம், சிலவற்றில் பலகீனம் உண்டு. எனக்கு இந்த ஒரு வழிப் பேச்சு (Monologe)

எப்போதும் பிடிக்காத ஒன்று. அதில் கருத்து பகிரல் எல்லாம் கிடையாது. எல்லாம் கருத்து திணிப்பு தான். ஆதலால் தான் அனைத்து வேதங்களையும் நான்

விரும்பி படித்தாலும் எந்த பிரசங்க கூட்டத்திற்கும் செல்வது இல்லை. காரணம் உங்களுக்கே புரியும். இறைவன் நாடினால் பிறகு தொடர்வோம். அதுவரை

வணக்கம்.

குறிப்பு - நான் பின்னூட்டம் போட்டலே நம்ம உண்மைத்தமிழனின் பதிவை விட பெரிதாக வருகிறது. அப்ப பதிவே இட்டால் !!! உங்களை அந்த ஆண்டவன்

தான் காப்பற்ற வேண்டும். ராகவன் சார், உங்கள் மீது நம்பிக்கை உண்டு. ஆனாலும் சொல்ல வேண்டியது என கடமை. இதில் ஒரு எழுத்தை கூட மாற்ற

வேண்டாம். அப்படியை வெளியிடவும்.with care & love,

Muhammad Ismail .H, PHD,
www.gnuismail.blogspot.com
IP Address Is: 59.99.64.129
via BSNL KMB ROUTER
TIME : 09:19 PM IST
DATE : 15 May 2009.

கிரி said...

//காரணம் நீங்கள் குறிப்பிட்ட படி அந்த தளம் முடக்கப்படவில்லை. இன்னும்
இயக்கத்தில் தான் உள்ளது//

நான் எந்த இடத்திலையும் தளம் முடக்கப்பட்டதாக கூறவில்லை. பதிவை முதலில் ஒழுங்காக படியுங்கள், நீங்கள் பின்னூட்ட பெட்டியை தான் தளம் என்று கருதினால் பிரச்சனை என்னிடத்தில் இல்லை.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது