5/09/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் 09.05.2009

அவளோட புருஷன் அதை எப்படி எடுத்துப்பான்?
த்ரீ ரோசஸ் தேயிலை விளம்பரம் ஒன்று இவ்வாறு செல்கிறது. கணவன் கண்ணாடி முன்னால் நின்று ஷேவ் செய்து கொண்டிருக்க, அவன் மனைவி அவன் பின்னால் நிற்கிறாள். அவள் ஆதங்கத்துடன் சொல்கிறாள், “திவ்யாவோட புருஷன் அவளை இரண்டாம் ஹனிமூனுக்கு அழைச்சிண்டு போறாராம்”, “அதுக்கென்ன இப்போ” என கணவன் தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்ட வண்ணம் அசட்டையாக கேட்கிறான். “இல்லே, நீங்க அழச்சிண்டு போக மாட்டீங்களா” என இவள் ஆவலுடன் கேட்க, அவள் கணவன் சீரியசாகவே பதிலளிக்கிறான், “போகலாம், ஆனா அவ புருஷன் இதை எப்படி எடுத்துப்பானோன்னு தெரியல்லியே” என்கிறான். மனைவி முகத்தில் முதலில் திகைப்பு, பிறகு மெதுவாக அவளுக்கு கணவன் சொல்லுவது புரிய ஆரம்பிக்கிறது.

இதுக்குமேலே அவள் துடைப்பக்கட்டையை எடுத்தாளா அல்லது அப்பளக்குழவியை தேடுகிறாளா என்றெல்லாம் காட்டாமல் “ஹனிமூன் செல்வதற்கு சம்மதிக்க வைக்க த்ரீ ரோசஸ்” என்ற விளம்பர வாசகத்தை கூறுகிறார்கள். ஆக த்ரீ ரோசஸை பாவித்தால் அடுத்தவன் மனைவியை தள்ளிக்கிட்டு ஹனிமூன் செல்லலாமோ? யாராவது சொல்லுங்கப்பு!

எரிவாயு சிலிண்டர் விவகாரம் (இற்றைப்படுத்தப்பட்டது):
இதுக்கு முன்னாலே போட்ட நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் பதிவில் சிலிண்டர்களுக்கான டோக்கன்களில் தனி சேனலில் வியாபாரம் நடக்கும் என எனது அச்சத்தைத் தெரிவித்திருந்தேன். அந்தளவுக்கு நிலைமை மோசம் இல்லையென்று இப்போது புரிந்துள்ளது. எங்களுக்கு கொடுக்கப்பட்ட டோக்கன் எண்களை எங்களது கனெக்‌ஷன் தகவல்களில் பதித்து இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னால் எங்கள் வீட்டுக்கு சிலிண்டர் வந்தபோது அவர்கள் ஸ்லிப்பில் நாங்கள் தரவேண்டிய டோக்கன் எண் குறிக்கப்பட்டிருந்தது, நாங்கள் கொடுத்த டோக்கன் எண் அதனுடன் ஒத்து போகிறதா என்பதைப் பார்த்துத்தான் சிலிண்டரையே உள்ளே கொண்டு வருகிறார்கள். ஆக டோக்கன் வியாபாரம் செய்யவியலாது. இருப்பினும் டோக்கன் அதிகம் செலவாகாத பயனர் சும்மா சிலிண்டரை புக் செய்து வாங்கிக் கொண்டு சிலிண்டரை அதிக விலை தருபவர்களிடம் தள்ளிவிட்டு, அவரிடமிருந்து காலி சிலிண்டரை பெற இயலும். என்ன, சிலிண்டர் கொண்டுவரும் பையன்கள் முன் போல அலட்சியமாக இதில் ஈடுபடவியலாது. இருப்பினும் ஏற்ப்பாட்டில் இன்னமும் இந்த ஓட்டை உள்ளது. சிலிண்டருக்கும் ஏதேனும் நம்பர் இருந்து அடுத்த முறை காலி சிலிண்டரை எடுத்து செல்லும்போது எண்களை ஒப்பிட்டு பார்த்தால், ஒரு வேளை இந்தக் குறைபாடும் நீக்கப்படலாம்.

எது எப்படியானாலும், இவையெல்லாம் வேண்டாத தலைவலிகள். சப்சிடியை எடுத்துவிடுவதே மிக எளிய வழி. செய்வார்களா அல்லது vested interest குழுக்கள் தடுப்பார்களா?

யாருக்கு ஓட்டுபோடுவது?
திமுக, காங்கிரஸ் ஆகிய இரண்டும் தோற்கடிக்கப்பட வேண்டிய கட்சிகள். தேதிமுகவிற்கு போடும் ஓட்டுக்கள் திமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரித்து, திமுகவின் வெற்றிக்கே வழிவகுக்கும். ஆகவே தேதிமுக கட்சியையும் தவிர்க்க வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை கன்னியாகுமரி போன்ற பாஜக வெற்றி பெறக்கூடிய ஓரிரு தொகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் அதற்கு ஓட்டுப் போடுவது சிறப்புடையதல்ல. ஆக, அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதே இத்தேர்தலுக்கு நல்லது என்ற சோவின் கருத்துகளுடன் நான் முழுமையாக ஒப்புகிறேன்.

13.05.2009 துக்ளக் இதழின் கேள்வி பதில்களிலிருந்து:
கே: எல்.டி.டி.ஈ. தீவிரவாத இயக்கமே. அதன் தலைவர் பிரபாகரன் குற்றவாளியே என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளாரே?
ப: கரெக்ட், காங்கிரஸ் கட்சி இலங்கைப் பிரச்சினையில் எடுத்து வருகிற நிலை, மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது.

கே: பாஜகவின் தீவிர ஆதரவாளரான தாங்கள், தமிழ் நாட்டில் அதற்கு ஆதரவாக எழுதாமல், அதிமுகவிற்கு ஆதரவாக எழுதி வருவது முரண்பாடாக இல்லையா?
ப: ஒரு முரண்பாடுமில்லை. அகில இந்திய அளவில் பாஜக கணிசமான வெற்றிகளைப் பெற்று, அதன் தலைமியில் மத்திய அரசு அமைய வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். தமிழகத்தில் பாஜக ஓட்டுப் பிளவு செய்து, காங்கிரஸ் திமுக கூட்டணிக்கே உதவும் என்பது இன்றைய தேர்தல் நிலை. ஆகவே தமிழகத்தில் காங்கிரஸ் திமுக அணியைத் தோற்கடிக்க, அதிமுகவுக்கு வாக்களிப்பதே நல்லது என்பதும், அது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட உதவும் என்பதும் என் கருத்து.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

குப்பன்.யாஹூ said...

தேயிலை த்ரீ ரோசெஸ் விளம்பரம் பற்றி நானே ஒரு பதிவு இட வேண்டும் என்று இருந்தேன்.

இந்த மாதிரியான சமூக கேடான விளம்பரங்களை எப்படி அனுமதிக்கிறார்கள் எந்ரு தெரிய வில்லை.

பெருமபாலான விளம்பரங்கள் இப்படித்தான், அடுத்த பெண்ணை எப்படி நம்மை பார்க்க செய்வது, என்ன உடை, என்ன பைக், என்ன மொபைல் வைத்து இருந்தால் பெண்கள் நம்மை விரும்புவார்கள் என்ற நிலையிலேயே இருக்கின்றன. அதேபோல குழந்தைகளிடம் ஒப்பீடுகள், தன் பய்யன் வகுப்பில் முதல் மாணவன், விளையாட்டில் முதல்வன் என்றே போகின்றன விளம்பரங்கள்.


தொலைக்காட்சி தணிக்கை துறை என்ற ஒன்று செயல் படுகிறதா என்றே சந்தேகம்.

Krishnan said...

டோண்டு சார் மாதவன் வித்யா பாலன் விளம்பரத்தை பார்த்தீர்களா ?

Anonymous said...

//தொலைக்காட்சி தணிக்கை துறை என்ற ஒன்று செயல் படுகிறதா என்றே சந்தேகம்.//

Hindustan UnileverLtd(*)Lux)
Cartoon Network (2/2008)
Ad is in a cartoon format, the contents, portrayal and background audio is of adult content.
Ad telecast on the said channel is watched by children, which is likely to create a negative impact on the young minds.
April 2008
Chapter II.
As the TVC was aired on Cartoon Network, a channel watched by children, the TVC was considered offensive to generally accepted standards of public decency.
TVC withdrawnhttp://www.ascionline.org/feedback/CCC_decisions/april_september_08_compilation.pdf

வால்பையன் said...

//த்ரீ ரோசஸை பாவித்தால் அடுத்தவன் மனைவியை தள்ளிக்கிட்டு ஹனிமூன் செல்லலாமோ? //

புதிய தகவலா இருக்கே!
யாராவது சொல்லுங்கப்பு!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது