5/27/2009

தோழர் அ. வரதராஜப்பெருமாள் அவர்களுடனான நேர்காணல்

முதலில் ஆங்கிலத்தில் வந்த இந்த நேர்க்காணலின் தமிழாக்கம் புகலியின் இந்த உரலில் வந்தது. விஷயம் முக்கியமானதாக எனக்கு பட்டது. ஆகவே இது இன்னும் பரவலாக அறியப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் புகலி ஆசிரியர் குழுவிடம் இதை எனது வலைப்பூவிலும் பதிவிட அனுமதி கேட்டிருந்தேன். அவர்களிடமிருந்து சற்று முன்னால் எனக்கு அந்த அனுமதி கீழே காணப்படும் மின்னஞ்சல் மூலம் கிடைத்தது.

from editors
to raghtransint@gmail.com
date Wed, May 27, 2009 at 5:54 PM
mailed-by puhali.com
5:54 PM (9 minutes ago)
தொடர்பு கொண்டமைக்கு நன்றி. எமது இணைப்பை வழங்கி பதிவிடுங்கள்.
புகலி


அவர்களுக்கு என் நன்றி. எனது கமெண்டுகள் பின்னால் வரும்.

முன்னால் வடக்கு கிழக்கு மாகான முதலமைச்சராக இருந்தவரும், EPRLF இன் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், தற்போது இந்தியாவில் வசித்து வருபவருமான தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவர்களுடனான நேர்காணலின் தமிழ் வடிவம்

கேள்வி: பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நீங்கள் நம்பிவிட்டீர்களா?
வ.பெ: நிச்சயமாக. அது குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை. எல்லோரும் பார்க்கக்கூடியதாக புகைப்படங்கள் இருக்கின்றன. அடுத்து, கருணா அந்த இடத்திற்குச் சென்று பிரபாகரனுடைய உடலை அடையாளம் காட்டி இருக்கின்றார்.

கேள்வி: கருணா ஒரு காலத்தில் பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவராக இருந்தாரா?
வ.பெ: 2004ம் ஆண்டுவரையும் அவர் விடுதலைப்புலிகளுக்கு 2வது தளபதியாக இருந்தவர். அத்துடன் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று பொய் சொல்லவேண்டிய எந்தக் காரணமும் இலங்கை அரசுக்கு இல்லை என்பதையும் சொல்ல விரும்புகிறேன்.

கேள்வி: இது உண்மை என்றால், விடுதலைப் புலிகள் இன்று அநாதையாகிவிட்டார்கள் என்று நீங்கள் சொல்வீர்களா?
வ.பெ: இன்னும் 500 தொடக்கம் 600 வரையிலான விடுதலைப்புலிகளில் எஞ்சியவர்கள் கிழக்கு மாகாணத்திலும் வடக்கின் வன்னிக் காடுகளிலும் உலாவிக்கொண்டிருக்கின்றபோதும், விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் முடிந்துவிட்டார்கள்.

கேள்வி: அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றதா?
வ.பெ: சில ஆயுதங்கள் இருக்கின்றன.

கேள்வி: அவர்களுக்கு ஏதாவது தலைமை இருக்கின்றதா?
வ.பெ: அவர்களுக்கு அப்படி யாரும் இல்லை. எனவே இவர்கள் சில காலத்திற்கு ஆயுதக் குழுக்களாக இயங்குவார்கள். அதற்கு மேல்செல்லமுடியாது. ஏனெனில் அவர்கள் தங்கள் ஆயுதங்களைப் பராமரித்துக் கொள்ள எப்படி முடியும்?

கேள்வி: இந்த நிலையில் இலங்கைத் தமிழருக்கு யார் தலைமை கொடுப்பார்கள்?
வ.பெ: இலங்கைத் தமிழ் மக்களிற்கு இவ்வளவு காலமும் விடுதலைப்புலிகள் தலைமை கொடுத்தார்கள் என்ற தப்பபிப்பிராயத்திற்கு நாங்கள் இடம் கொடுக்கக்கூடாது. உண்மையில் விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு. அது தமிழ்த் தலைமைகளைக் கொன்றொழித்தது. இது 1986இல் ரெலோ சிறீ சபாரட்ணத்தின் படுகொலையில் இருந்து தொடங்கியது. தொடர்ந்து அமிர்தலிங்கம் (தவிகூ), பத்மநாபா (ஈபிஆர்எல்எவ்), நீலன் திருச்செல்வம் (தவிகூ), கேதீஸ்வரன் (ஈபிஆர்எல்எவ்) போன்றோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
1986ம் ஆண்டு தொடக்கம் விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புகளில் இருந்த தலைவர்களும் போராளிகளுமாக 10 000 க்கும் மேற்பட்டவர்கள் விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் எந்தவொரு அறிவுஜீவிகளின் அபிப்பிராயத்தையும் நசுக்கியே வந்தனர். விடுதலைப்புலிகள் தமிழ் மக்களிடையே திகிலைப் பரப்பினார்கள். அதாவது, எங்கு வாழுகின்ற தமிழ் மக்களாக இருந்தாலும் அவர்கள் மனத்தில் அச்சத்தைச் செலுத்தி இருந்தார்கள்.

கேள்வி: ஆனால் பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் கிடைத்த மக்கள் ஆதரவை, குறிப்பாக புகலிடத் தமிழர்கள் மத்தியில் கிடைத்த ஆதரவை, அதற்கான அடிப்படையை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?
வ.பெ: நல்லது. நீங்கள் தமிழ் சமூகம் அப்படி இருக்கின்றதென்று கருதினால், அவர்கள் இந்த விடயங்களைத் தர்க்கரீதியாகவோ பகுத்தறிந்தோ பார்த்திருக்கவில்லை. தீவிரமான உணர்ச்சிப் பெருக்கினாலும் சிங்கள எதிர்ப்பு உணர்வினாலுமே அவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்தார்கள்.
புலம்பெயர் தமிழர்களை எடுத்துக் கொண்டால், இவர்கள் இலங்கைத் தமிழ் மக்களிடம் இருந்து தொலைந்து போன மக்கள். அவர்களுடைய சொந்த நலன்களும் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. தாங்கள் வசிக்கும் நாடுகளில் அவர்கள் தங்கியிருப்பதற்கு அவர்களுக்கு அகதி அந்தஸ்த்து தேவை. அது இலங்கையில் நடைபெறும் முடிவுறாத யுத்தத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த யுத்தம் அவர்களை நாட்டுக்குத் திரும்ப முடியாதிருப்பதை உறுதி செய்கின்றது.

கேள்வி: இனிமேல் இலங்கையில் என்ன நடக்கும்?
வ.பெ: தமிழர்கள் ஜனநாயகப் பாதையில் முன்னேறிச் செல்வதற்கான முக்கியமான தடங்கல் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட்ட விடுதலைப்புலிகளின் படுகொலையுடன் அகற்றப்பட்டுவிட்டது. ஜனநாயகத்தை விரும்பும் தலைமைகள் இப்போது அங்கு சென்று தங்கள் மக்கள் மத்தியில் எந்த இடையூறும் இன்றி பணிபுரியக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.

கேள்வி: ஆனால் இலங்கை அரசாங்கத்தின் குறிக்கோள் என்ன? விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தில் அவர்கள் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லவா?
வ.பெ: இலங்கை அரசின் குறிக்கோளும் அவர்களின் மனித உரிமை மீறல்களும் சந்தேகத்திற்கிடமில்லாமல் முக்கியமானவைதான். ஆனால் முதன்மையான விடயம் தமிழர்களின் பிரச்சினை. இன்றுவரை தமிழர் பிரச்சினையானது பிரிவினை என்ற பதாகையின் கீழ் விடுதலைப்புலிகளினால் திசைதிருப்பப்பட்டிருந்தது.
பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு பிரிவினை அல்லது தனியாகப் போதல், அதாவது ஈழம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்பது தெரியும். ஆனால் அவர்கள் எல்லோரும், விடுதலைப்புலிகள் போராடி சிங்களத் தலைமைகளிடம் இருந்து தங்களுடைய கோரிக்கைகளைப் பிடுங்கித் தருவார்கள் என்று நினைத்தார்கள். எப்படி இருப்பினும் விடுதலைப்புலிகளால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இன்னும் விளக்கமாகச் சொன்னால், தமிழ்த்தலைமைகளை படுகொலை செய்ததன் மூலம் எந்தத் தமிழத் தலைமை உருவாவதையும் தடைசெய்தது. விடுதலைப்புலிகளுடன் அணிசேராத எந்தவொரு அமைப்பபையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.

கேள்வி: ஈழம் சாத்தியமற்றது என்று சொல்கின்றீர்களா?
வ.பெ: தனியே பிரிந்து போவதற்கான போராட்டம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் மறைந்து விட்டது. விடுதலைப்புலிகள் ரெலோ அமைப்பை 1986இல் தாக்கி அழித்தபோது பிரிவினைக்கான இயக்கம் அகால மரணத்தைத் தழுவியது.

கேள்வி: ஆனால் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு தடவை ஈழத்திற்கான கோரிக்கை எழமாட்டாதா?
வ.பெ: விஷயம் என்னவென்றால், தமிழ்மக்கள் ஒரு சுயாட்சி முறையை அனுபவிக்கின்ற ஒரு அரசியல் சூழலை சிங்களத் தலைமைகள் உருவாக்காமல் இருந்தால் தமிழ் மக்களுடைய போராட்டம் தொடரும்.

கேள்வி: இனி வரும் காலங்களில் தமிழர்களின் போராட்டம் வன்முறை சார்ந்து இருக்குமா அல்லது ஒரு அகிம்சைப் போராட்டமாக இருக்குமா?
வ.பெ: எதிர்காலத்தில் அநேகமாக வன்முறை சாராத அகிம்சைப் போராட்டமாகத்தான் இருக்கும். நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் எற்கனவே வன்முறை சார் போராட்த்தின் அனுபவங்களைக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை சிங்கள மக்கள் புரிந்து கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் அறவழியிலான போராட்டம் மட்டுமே வழிவகுக்கும்.

கேள்வி: 1990ம் ஆண்டு தொடக்கம் 1998ம் ஆண்டு வரை நீங்கள் முதலமைச்சராக இருந்திருக்கின்றீர்கள்? தமிழ்ப்பகுதிகளுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயத்தில் உங்கள் அனுபவம் எப்படியானது?
வ.பெ: அந்த நேரத்தில் பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்தார். ஜனாதிபதி ஜயவர்த்தனா பதவியில் இருந்த காலத்தில், 13வது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது. அது அதிகாரப் பகிர்வு தொடர்பான செயன்முறையைத் தடுத்தது. இந்த 13வது திருத்தச் சட்டம் நிறைய போதாமைகளைக் கொண்டுள்ளது. அதில் அதிகாரங்களுக்கான பற்றாக்குறை உள்ளது. அது ஒரு நல்ல சட்டமல்ல. அதில் தவறான அர்த்தப்படுத்தல்களுக்கு நிறைய இடம் இருக்கின்றது. அதேவேளை இது 1987இன் இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கும் அதிகாரப் பகிர்விற்கும் எதிராக இருந்தது. அந்த நேரம் அதிகாரப் பரவலாக்கத்தை அமுல்படுத்துவதற்கு எந்தச் சிங்களத் தலைமையும் அக்கறை காட்டவில்லை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் முதலமைச்சர்கள் இயங்கியது போன்று நிலைமை அந்தக் காலப் பகுதியில் எனக்கு அங்கு இருக்கவில்லை. எல்லா அதிகாரங்களையும் கொண்ட முதலமைச்சராக நான் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிகாரப் பகிர்வுக்காக போராடுகின்ற முதலமைச்சராகத்தான் நான் இருந்தேன்.
எப்படி இருப்பினும் நேர்மையாகச் செயற்படும் ஒரு ஜனாதிபதி இருந்தால், அவரால் 13வது திருத்தச் சட்டத்தை அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தக் கூடிய விதத்தில் அர்த்தப்படுத்த முடியும். ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலத்தில் ஒரு புதிய அதிகாரப் பகிர்வுப் பொதி முன்வைக்கும் நோக்கம் இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒரு கூட்டாட்சி அமைப்புமுறையை ஏற்றுக் கொண்டிருந்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் 13வது திருத்தச் சட்டத்தை அதிகாரப் பகிர்வினைக் கொண்டு வருவதற்குப் பாவிக்க முடியும். உண்மையில், ஒரு தீர்வுப்பொதிக்கான சாத்தியத்தைக் காணுமாறு விஞ்ஞான தொழில்நுட்பத்துறை அமைச்சர் திஸ்ஸவிதாரண அவர்கள் தலைமையில் ஒரு சர்வகட்சிகள் குழு ஒன்று ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டது.

கேள்வி: ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அதிகாரப்பகிர்வை அமுல்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
வ.பெ: நிச்சயமாக. எதுவும் இன்னும் முற்றுப் பெறவில்லை.

கேள்வி: இதில் இந்திய அரசாங்கம் என்ன மாதிரியான அனுகூலமான பாத்திரத்தை வகிக்க முடியும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள?
வ.பெ: இப்போது இலங்கை-இந்திய அரசுகளிற்கிடையில் நல்ல உறவொன்று இருக்கின்றது. இரண்டு அரசுகளும் தமிழ், சிங்கள, முஸ்லிம் தலைமைகளுடன் பேசி ஒரு ஒழுங்குக்கு வரவேண்டும். தமிழ்நாட்டுத் தலைமைகளும் இதில் கணிசமான பங்களிப்பை வழங்கும்படி பார்க்க வேண்டும.;

கேள்வி: பிரபாகரனின் மரணத்திற்குப் பின்னாக இப்போதிருக்கும் இந்தச் சூழலில், தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய பாதைகள் திறந்துவிடப்பட்டிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
வ.பெ: ஓம். வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப்புலிகள் தங்களுடைய வன்செயல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும்வரை அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுதல் சாத்தியமற்றது என்று இன்றுவரை சிங்களத் தலைமைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சாக்குப் போக்கு இப்போது இல்லாமற் போய்விட்டது.
தனிப்பட்ட முறையில் நான் உணர்வது என்னவென்றால் சிங்களத் தலைமைகளுக்கும் தமிழ்நாட்டுத் தலைமைகளுக்கும் இடையில் ஒருவிதமான நம்பிக்கை வெகுவிரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும். அது நிச்சயமாக இலங்கைத் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும்.

கேள்வி: விடுதலைப்புலிகளை அழிப்பதென்னும் பிரமாண்டமான ஒரு கடமையை எவ்வாறு மகிந்த ராஜபக்ச செய்து முடித்தார்? அவருக்கு முன்பிருந்தவர்கள் எல்லோரும் இந்த முயற்சியில் தோல்வியடைந்த பொழுது? நீங்கள் இது குறித்து என்ன கூறுகிறீர்கள்?
வ.பெ: ஜனாதிபதி ராஜபக்சவிற்கு விடுதலைப்புலிகளை அழிப்தென்பதே ஒரே குறிக்கோளாக இருந்தது. அவருக்கு முதல் இருந்த ஜனாதிபதி சந்திரிக்காவும் உண்மையிலேயே தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்றும் சமாதானம் நிலவவேண்டும் என்றும் விரும்பிச் செயற்பட்டவர். ஆனால் அவர் பல்வேறு பிரச்சினைகளால் சூழப்பட்டிருந்தார்.
இன்னும் ஒரு விடயம், விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை.

கேள்வி: ஆனால் இந்திய அரசு இன்று இலங்கைத் தமிழர்களுக்கு முன்பிருக்கும் மனித அவலங்கள் பற்றிக் கவலை கொள்கின்றதா?
வ.பெ: இந்திய அரசாங்கம் இலங்கைத் தமிழருக்கு மனிதாபிமான அடிப்படையிலான சகல உதவிகளையும் வழங்குவதைச் சாத்தியப்படுத்துகின்றது. இந்த அலுவல் இந்தியாவினால் மட்டுமல்ல முழு சர்வதேச சமூகத்தினாலும் முன்னெடுக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த தமிழர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதிலும் அவர்களை மீள்குடியேற்றுவதில் பெருந்தன்மையாக இருக்கவேண்டும.;
கேள்வி: பிரபாகரனின் மரணத்துக்குப் பின்னர் இலங்கையில் பயங்கரவாதச் செயல்கள் ஊடுருவும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
வ.பெ: அது நீண்ட காலத்திற்கு இல்லை. இலங்கை அரசு கண்டிப்பாக இருந்தால் அப்படியான செயல்கள் நீண்ட காலத்திற்கு தொடர முடியாது.

கேள்வி: உங்களுக்கு பிரபாகரனை நீண்ட காலமாகத் தெரியும். நீங்கள் அவரை எப்படி விவரிப்பீர்கள்?
வ.பெ: அவர் உலகின் மிகப் பெரிய ஈவிரக்கமற்ற பயங்கரவாதத் தலைவர்களில் ஒருவர். அதேநேரம் அவர் அரசியல் ரீதியாக கோழைத்தனமுடையவர்.

கேள்வி: தயவுசெய்து எப்படி என்று சொல்லுங்கள்?
வ.பெ: அவர் எந்த ஒரு அரசியல்ரீதியான போட்டியையோ அல்லது விமர்சனங்களையோ எதிர்கொள்ளமுடியாதவராய் இருந்தார்.

கேள்வி: இன்று முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியின் 18வது ஆண்டு நினைவு தினம். அவர் பிரபாகரனின் கட்டளைப்படி 21.05.1991 இல் படுகொலை செய்யப்பட்டார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். இப்போது பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட்டிருக்கின்றதென்று நீங்கள் சொல்வீர்களா?
வ.பெ: ஓம் நிச்சயமாக. ராஜீவ் காந்தி பத்மநாபா கேதீஸ்வரன் மற்றும் பிரபாகரனினால் படுகொலை செய்யப்பட்ட ஏனையோர்களின் நண்பர்களுக்கும் குடும்பங்களுக்கும் கடவுள் தீர்பு வழங்கி இருக்கிறார்.
நான் இன்று ராஜீவ் காந்தியுடனான என்னுடைய பழைய நினைவுகள் எல்லாவற்றையும் மீட்டுப் பார்க்கிறேன். ஏனெனில் அவர் இலங்கையுடனான உறவில் அக்கறையாக இருந்த அதேவேளை இலங்கைத் தமிழர்களின் அரசியல் ரீதியான நன்மைகளைக் கொண்டு வரவும் தனிப்பட்ட முறையில் தன்னை அர்ப்பணித்திருந்தார். இலங்கை, இந்திய மக்களுக்கு இவ்வளவு துன்னப்தைக் கொண்டு வந்த பிரபாகரனின் அழிவை இன்று ராஜீவ்காந்தி இருந்து பாரத்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

கேள்வி: இலங்கைத் தமிழர்கள் முன்னே உள்ள பணி என்ன?
வ.பெ: அவர்கள் அதிகாரப் பகிர்வைக் கொண்டு வருவதற்கான ஒரு இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துப் போராடக்கூடிய தலைமைகளை இப்போது கண்டடைய வேண்டும்.
[ஆங்கில மூலம்
மொழிபெயர்ப்பு: லக்ஷ்மி]

மீண்டும் டோண்டு ராகவன். எல்லாம் நடக்கிறபடி நடந்திருந்தால் 1987-ல் வந்த ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இன்னேரம் நன்கு வேலை செய்ய ஆரம்பித்திருக்கும் என்னும் ஆதங்கத்தை என்னால் அடக்க இயலவில்லை. இதை கெடுக்க பிரேமதாசாவுடன் சேர்ந்து புலிகள் போட்ட ஆட்டம் மறக்கக் கூடியதா என்ன? எல்லாம் ஒரு தனி மனிதனின் ஈகோவுக்காக பலி கொடுக்கப்பட்டது என்பதில் எனக்கு ஒரு ஐயமுமில்லை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

17 comments:

M Arunachalam said...

Who is crying hoarse "for" LTTE & the killing of the gang's leader? Only its touts in TN and those who can hide behind the anonymity provided by the world wide web.

Probably some of them have been on the "payroll" of LTTE; so it is understandable that they are feeling the pinch of the "drying up" of their main source of revenue. "Nakkeeran", Vaigo & Nedumaran are all examples of this.

As Varadaraja Perumal says, probably even the ex-patraite SL Tamils WANT THE EALAM WAR TO CONTINUE for their selfish interest of 'protecting' their refugee status in the country of their refuge.

Ultimately, it is the poor & down-trodden SL Tamil, who can't move out of the place for whatever reason, ended up as the "protector" of LTTE cadres and Prabakaran and not the other way around, by being used as "human shields". DEFINITELY NOW THEY WILL BE RELIEVED AFTER THE KILLING OF PRABAKARAN.

I firmly believe India & the International community didn't want to interfere with SL Govt. till their ascending army fully finished their job of decimating the Tamil terrorists. After all, which country will not want to see a world with at least one terrorist outfit less?

Now that the terrorists have been almost fully flushed out, India & other nations should work jointly with SL Govt. to aid, rehabilitate, repair & devolve power to SL Tamils in that order. The quicker it is done, the better it is for the peace to continue in South Asia.

Also, there is another interview in rediff.com from an author of two books on Sri Lanka, who has listed out the four important reasons which paved the way for Prabakaran to dig a grave for himself.

Pl see the same here:

http://news.rediff.com/slide-show/2009/may/26/slide-show-1-interview-with-lanka-expert-narayan-swamy.htm

கிருஷ்ண மூர்த்தி S said...

முதலாவதாக,இங்கே தமிழ்நாட்டில் இருந்து கொண்டு நீங்களோ, நானோ என்ன நினைத்தாலும், அது பிரச்சினையைத் தீர்க்க உதவப் போவதில்லை.

இலங்கையின் சிங்கள அரசியல் கட்சிகளை விட, புத்த பிக்குகள் ஒரு சுமுகமான தீர்வு வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

அதே போல, அங்கே உள்ள தமிழ் மக்களுக்கும், இந்த முப்பதாண்டு காலமாக சுமுகமான தீர்வென்பதே கிடையாது, தமிழ் ஈழம் ஒன்று தான் வழி என்ற புலிகளின் போதனையின்தாக்கத்தில் இருந்து வெளிவரச் செய்ய, தலைமை தாங்கி நடத்த, சரியான நபர்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.

காயங்கள் ஆற நாளாகும். காலாவதியாகிப் போன ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைப் பற்றி இப்போது பேசுவதில் பயனில்லை. காலம் ஒன்றே, பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வலிமையான கருவி என்பதைத் தவிர, வேறெதுவும் சிந்திக்கத் தோன்றவில்லை.

mathi - india said...

//தனி மனிதனின் ஈகோவுக்காக //

சரிதான் , அவர்கள் அழிந்தபின் தலைமை ஏற்க யாருமே இல்லாமல் எல்லா தமிழ் தலைவர்களையும் அல்லவா கொன்றார்கள்?

வஜ்ரா said...

பிரபாகரனை EXECUTION style ல் இலங்கை ராணுவம் போட்டுத்தள்ளியிருக்கவேண்டும் என்பது என் யூகம்.

execution style என்பது. பிடிபட்ட எதிரியை கைகள் பின்னால் கட்டி மண்டியிடச்செய்து, தலையை கீழ் நோக்கிப் பார்க்கவைத்து, பின் மண்டையில் point blank ரேஞ்சில் சுடுவது.

பிரபாகரன் தலையும் அப்படித்தான் இருந்தது.

சீரா said...

அஹிம்சை வீரர் நீலன் திருச்செல்வம் மறைவு பற்றி வருந்தி பதிவு போட்டபின்னால், என்னுடைய பதிவே தமிழ்மண நிர்வாகத்தால் நீக்கப்பட்டிருக்கிறது.

மக்களுக்காக உழைத்த மாவீரனின் மரணம்- உலகத் தலைவர்கள் அனுதாபம்"தேசிய தலைவன்" வழி தொண்டர்கள்..

dondu(#11168674346665545885) said...

@சீரா
நான் இப்பதிவில் செய்தது போல நீங்களும் நீங்கள் செய்த நகலெடுப்புக்கு அனுமதி பெற்றிருந்து அதையும் உங்கள் பதிவில் குறிப்பிட்டிருந்தால் தமிழ்மண நிர்வாகம் அவ்வாறு செய்திருக்காது என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சீரா said...

நகலெடுப்புக்கு அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. அவை public domainஇல் உள்ளன. கோபி அன்னன், ஐகே குஜ்ரால் கூறியவை public domain விஷயங்கள். யார் வேண்டுமானாலும் அவற்றை மறு பிரசுரம் செய்யலாம். இதற்கு கோபி அன்னனிடமும் ஐகே குஜ்ராலிடமும் சென்று அனுமதி வாங்க வேண்டுமா?

இரண்டாவது, தட்ஸ்டமிலிருந்தும், இன்னும் பல செய்தித்தளங்களிடமிருந்தும் ஆயிரக்கணக்கான செய்திகளை அப்படியே மேற்கோள் காட்டி பதிவிடுகிறார்கள். அவை அனைத்தும் நீக்கப்பட்டனவா?

நீங்கள் தமிழ்மணம் சார்பாக சொல்லும் காரணங்கள் சரி என்று தோன்றவில்லை.

Anonymous said...

//மீண்டும் டோண்டு ராகவன். எல்லாம் நடக்கிறபடி நடந்திருந்தால் 1987-ல் வந்த ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இன்னேரம் நன்கு வேலை செய்ய ஆரம்பித்திருக்கும் என்னும் ஆதங்கத்தை என்னால் அடக்க இயலவில்லை. இதை கெடுக்க பிரேமதாசாவுடன் சேர்ந்து புலிகள் போட்ட ஆட்டம் மறக்கக் கூடியதா என்ன? எல்லாம் ஒரு தனி மனிதனின் ஈகோவுக்காக பலி கொடுக்கப்பட்டது என்பதில் எனக்கு ஒரு ஐயமுமில்லை.//

எமக்கு என்ன தேவையென்பதை ஈழத்தமிழர்களாகிய நாம் தான் தீர்மானிக்க முடியும். இந்தியா அல்ல. தாம் எடுத்த முடிவை எம்மீது திணிக்க எவர்க்கும் உரிமையில்லை. மிகக் கேவலமாக இருக்கிறது உங்கள் ஆதங்கம்.

வருணன்

Anonymous said...

//
எமக்கு என்ன தேவையென்பதை ஈழத்தமிழர்களாகிய நாம் தான் தீர்மானிக்க முடியும். இந்தியா அல்ல. தாம் எடுத்த முடிவை எம்மீது திணிக்க எவர்க்கும் உரிமையில்லை. மிகக் கேவலமாக இருக்கிறது உங்கள் ஆதங்கம்.

வருணன்
//

உமக்குத்தேவை சர்வாதிகாரி என்பதை நீங்களோ/உம் தாய் தந்தையரோ தீர்மானித்தீர்களா ?

யாரும் உம் மீது அவர்கள் முடிவைத் திணிக்கவில்லை. சுயமாக முடிவெடுக்கும் நிலையில் இலங்கை வாழ் தமிழர்கள் இல்லை என்கிற நிதர்சனத்தை உணர்ந்தால் இப்படியெல்லாம் உளர மாட்டீர்கள்.

Anonymous said...

இந்த மாதம் பதினேழாம் திகதி புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் அவரது சகாக்களான அரசியல் பொறுப்பாளர் பா. நடேசன், சூசை, புலித்தேவன், இளந்திரயன் உற்பட சகல முதல்மட்ட மற்றும் இரண்டாம் மட்டத் தலைவர்களும் இலங்கையின் இராணுவத்தினரால் கொல்லப்பட்டு புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் காணாமல்போயிருக்க பிரபாகரனின் மகன் சால்ஸ் அன்டனியும் கொல்லப்பட்டிருந்தார்.

இதில் பிரபாகரன் கொல்லப்பட்டதை இதுவரை காலமும் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் கே.பி எனப்படும் கே.பத்மநாதன் மறுத்திருந்தாலும் அவர் நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கையூடாகவும் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியூடாகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்தார்.

இந்த அறிவித்தலைத்தான் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். காரணம் அது வெளியானவுடன் புலிகளுக்காக சர்வதேசத்தில் செயற்பட்டவர்கள் பலரின் சுத்துமாத்துக்கள் வெளியில் வரும் என்பதற்காக. அதற்கமையவே தற்போது புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையை இந்தியாவிலிருந்து கொண்டு இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்தேசங்களில் கஸ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் விதவிதமாக ஆண்டனுபவிக்கும் வை.கோ என்கிற வை.கோபாலசாமியும் பழநெடுமாறனும் நம்பவேண்டாம்! என அறிவித்ததன் மூலம் புலிகள் இயக்கத்திற்காக செயற்பட்டவர்களுக்குள் குத்துவெட்டுக்கள் ஆரம்பமாகியுள்ளது.

வை.கோ மற்றும் பழநெடுமாறனின் அறிக்கைகளுக்கும் கே.பி மீதான சாடல்களுக்கும் பச்சைக் கொடி காட்டியவர்களாக புலம்பெயர் தேசங்களிலும் புலிகளின் பணக்கலக்சன்களுக்கு பொறுப்பாக இருந்தவர்களும் களத்தில் நிற்கப் போகின்றார்கள்.

Anonymous said...

காரணம் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தியாவது உயிருடன் இருந்தால்தான் இவர்களின் டாம்பீகமான வாழ்கை உயிருடன் இருக்கும் இல்லாவிட்டால் பழைய தொழிலுக்கு இவர்கள் அணைவரும் திரும்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்படும்.

திரு.வை.கோ மற்றும் ஐயா பழநெடுமாறன் இருவரின் மேற்பார்வையிலும் இந்தியாவில் பல புலிகளின் வியாபார நிறுவனங்கள் உண்டு. அவைகள் உழைக்கும் இலாபத்தில் ஒரு சல்லிக் காசும் நிச்சயம் எந்த இலங்கைத் தமிழனுக்கும் சென்றடையப் போவதில்லை. அல்லது அதில் கிடைக்கும் இலாபத்தில் ஒரு சிறு பகுதியையேனும் மண்டபம் முகாமில் கஸ்டப்படும் இலங்கை அகதிகளுக்கோ அல்லது இலங்கையில் குற்றுயிர்களாகவும் நடைப்பிணங்களாகவும் அங்கவீனர்களாவும் விதவைகளாகவும் மிஞ்சிய எச்சங்களுக்கு நிச்சயம் வழங்கப்போவதில்லை.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பனியில் உறைந்து உழைத்த காசை அவர்களின் எந்த இரத்த உறவுகளோ அல்லது அவர்களின் சொந்த தமிழினமோ சாப்பிடாமல் அனாதைகளாக அகதிகளாவிருக்க சாப்பாட்டிற்காக கையேந்திய வண்ணமிருக்க எவனோ ஒருவன் பல கோடிகளையும் மில்லியன்களையும் திண்டு ஏப்பம் விடுகிறான்.

அது மட்டுமல்லாது அவர்களின் இன்றைய தேவை புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக கூறுவதன் மூலம் இறந்த புலிகளின் தலைவருக்கு அதன் ஆதரவாளர்களால் வழங்கப்படுகின்ற இறுதி மரியாதை வழங்கப்படாவிடினும் பரவாயில்லை தங்களிடம் புலிகள் அமைப்பால் நிருவகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சொத்துக்களையும் அதன் கணக்குவழக்குகளையும் யாரும் கேட்டுவிடாமல் பாதுகாப்பதற்காகவேயாகும்.

Anonymous said...

எனவே இவைகளின் இந்த எண்ணத்தின்மீது மண்ணை அள்ளித்தூவும் வண்ணம் புலிகளின் சர்வதேசப் பேச்சாளரின் அறிக்கையும் பேட்டியும் அமைந்துள்ளதால் அதனை எதிர்த்து தங்களின் பிணம் தின்னும் புத்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு இலங்கைத் தமிழ் மக்களோ அல்லது அவர்களின் உரிமைகளோ பற்றியெந்தக் கவலையும் இல்லை அவர்களின் கவலையெல்லாம் அந்த பணப்பெட்டியின் மீதுதான்.

எனவே தற்போது சூட்டோடு சூடாக பிரபாகரன் கொல்லப்பட்ட உண்மை புலிகளினால் வெளியிடப்படுவதை இவர்கள் விரும்பவில்லை. எனவே இவர்கள் இந்தச் செய்தியைச் சொன்ன கே.பியையே துரோகி என்று கூறுவதன் மூலம் இவர்கள் ஒரு உண்மையை உலகிற்குச் சொல்கிறார்கள் அது பிரபாகரன் உயிருடன் இல்லை என்ற செய்தியாகும். பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் புலிகளின் சர்வதேச அமைப்பில் இவ்வாறான அதிகாரப் போட்டிகளும் உள்வீட்டுக் குத்துவெட்டுக்களும் நிச்சயம் நிகழமாட்டாது.

இந்த முற்பது வருடகால போராட்ட காலத்தில் சுளைசுளையாகத் தின்ட தீனிப்பண்டாரம்கள் உண்மையில் புலிகளின் அமைப்புமீது அக்கரை கொண்டவர்களாகயிருந்திருந்தால் ஏன் புலிகளின் தலைவரை வேண்டாம்! இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்ட முதல்நிலைத் தளபதிகள் சால்ஸ் அன்டனி அரசியல்துரைப் பொறுப்பாளர் நடேசன், புலித்தேவன் சூசை, பானு போன்றோர்களின் உடலங்களையாவது மரியாதையாக எங்களிடம் ஒப்படையுங்கள் இல்லையென்றால் தமிழ் மக்களிடம் ஒப்படையுங்கள் அல்லது மரியாதையாகவாவது தகணம் செய்யுங்கள் என்று கேட்டு ஒரு போராட்டத்தையோ வேண்டாம் ஒரு அறிக்கையையாவது ஏன் விட முடியவில்லை? காரணம் தங்களையும் தங்களின் சொத்துக்களையும் பாதுகாக்க அவர்கள் நினைக்கிறார்கள்.

சரி அவர்கள்தான் விட வில்லை! அவர்களின் புண்ணியத்தில் பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரிக்கும் இருபத்தி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் விட்டார்களா? அல்லது புலிகளின் புலம்பெயர் தேசத்து பொறுப்பாளர்கள் விட்டார்களா? இல்லை அப்பாடா கதை முடிந்தது பணமெல்லாம் இனி நமக்குத்தான் வேறு ஒரு நாட்டுக்குச் சென்று சந்தோசமாக வாழ்வோம் என தற்போது பெட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் புலிகளால் அனைத்தையும் இழந்துவிட்டு அகதிமுகாம்களில் அனாதைகளாகவும், அங்கவீனர்களாகவும், விதவைகளாகவும் வாழும் எம் மக்களின் நிலையன்ன? அவர்களுக்கு இந்தப் பணம்கள் எவ்வாறு உதவப்போகின்றன அவற்றை யார் வெற்றுக்கொடுக்கப்போகின்றார்கள்.

கேட்டால் “நாங்களும் அதைதான் செய்ய முயற்சிக்கிறோம் சிங்கள அரசு அனுமதிக்கவில்லை” என்று நொண்டிச் சாட்டுச் சொல்லிவிட்டு எஸ்கேப்பாக போகிறார்கள். அதற்கான திட்டங்கள் ரெடியாகியுள்ளதாகவும் தற்போது பல பிரிவுகளாக இவர்கள் பிரிந்து நின்று செயற்படுவதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.

தற்போது புலம்பெயர் தேசங்களில் அனுஸ்டிக்கப்படுகின்ற துக்கதினங்கள் முடிவுற்றதும் இது தொடர்பான குத்துவெட்டுக்கள் பையப்பைய ஆரம்பமாகும்.

தனித் தமிழீழம் என்ற மாயையை காட்டி இயக்கத்தின் பணத்தில் வயிருவளர்த்த டிவிக்காரர்களும் ரெடியோகாரர்களும் மற்றும் புதினம், சங்கதி, தமிழ்நெற், விம்பங்கள், ஸ்கைத் தமிழ் நியூஸ் உட்பட அனைத்தும் இனி மூடுவிழாக்காணப் போகின்றன.

தற்போது இதுவரை புலிகளின் உண்மையான ஆதரவாளர்களாகவிருந்த சாதாரணமக்களின் கவனமும் மற்றும் புலிகளின் வசூல்மன்னர்கள் அரசியல் ராஜதந்திரிகளின் கவனமும் தேனி, நெருப்பு, விழிப்பு, அதிரடி, தாயகம்,இலங்கைநெற், மகாவலி, உண்மைகள், டெலோ நியூஸ் என போராட்ட காலத்தில் புலிகளின் துப்பாக்கிகளுக்கு பயப்படாமல் உண்மைகளை புட்டுப் புட்டுவைத்த இணையங்களின் மீது திரும்பியிருக்கின்றது. சாதாரணமக்கள் இவர்கள் சொல்வதுதான் சரியோ! எனச் சிந்திக்கும் நோக்கிலும் சர்வதேச புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் எங்கே எங்களை மோப்பம் பிடித்து மக்களிடம் தங்களின் சுத்து மாத்துக்களை காட்டிக் கொடுத்துவிடுவார்களோ எனப் படிக்கின்றனர்.

இந்த நிலையினால் புலிகளின் ஊடகங்கள் இனி அநாதரவாக நிற்கப்போகின்றன. எனவே அங்கேயும் அவர்களின் வயிற்றில் அடிவிழவுள்ளதால் உழைத்துப் சாப்பிடுவது என்ற வேண்டாதவேலைக்கு தலைவரின் மறைவு இவர்களைக் கொண்டு சென்றுள்ளது.

எனவே எப்படியாவது கட்டியிழுத்து தலைவரின் உயிரை சில காலங்களுக்குப் பாதுகாத்தால் நாங்களாவது இன்னும் சில நாட்களுக்கு உழைக்காமல் சாப்பிடலாம் என நினைக்கும் புலம்பெயர் புலியுறவுகள் தங்களுக்குள் தாங்கள் அடித்துக் கொண்டு தங்களின் கற்னைக் கதைகளை முன்னெடுத்து துரோகிப் பட்டங்களை தங்களுக்குள் வழங்கி எப்படியாவது புலம்பெயர்மக்களின் ஆதரவுகிடைத்தால் வயிற்றைக் காப்பாற்றலாம் என முயற்சிக்கப் போகிறார்கள்.

Anonymous said...

இதனால் அவர்களுக்குள் நடந்த குத்துக்கரணங்கள் விரைவில் அவர்களின் வாயால் வெளிவரப் போகின்றன. தற்போதே அது அரம்பித்துவிட்டது தமிழ்நெட் அரசியல் போராட்ட எனக் கூற, சர் வதேசப் பேச்சாளர் அமைதியான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் எனக் கூற, வை.கோ மற்றும் பழநெடுமாறன் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்று கூற புலிகளின் ஆதரவாளர்கள் மென்டல்களாக வீதிகளில் அலைகிறார்கள்.

இனி கருணா துரோகி, டக்ளஸ் துரோகி, அனந்தசங்கரி ஐயா துரோகி, தேனி துரோகி என்ற சொற்பதங்கள் மறைந்து கே.பி துரோகி, பழ.நெடுமாறன் துரோகி, வை.கோ துரோகி என அவர்களின் உண்மை முகங்கள் வெளிச்சத்துக்கு அவர்களாலேயே கொண்டுவரப்படவுள்ளது.

கொத்துக்குண்டுகள் வெடிப்பது போல துரோகிப்பட்டமும் அவர்களுக்குள் பல்கிப்பெருகி வெடிக்கப் போகின்றன. தமிழர்களை எவரெவர் எப்படியெல்லாம் ஏமாற்றினார்கள் என்பதை அவர்களே அவர்களின் கைகளால் புனைப்பெயர்களில் தேனியிலும் சூத்திரத்திலும் இலங்கைநெட்டிலும் விழிப்பிலும் எழுதப்போகின்றார்கள் கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் கூத்தை.

எனவே புலிகளின் அடுத்த போராட்டம் ஜனாநாயக வழியிலான போராட்டமாகவோ! அல்லது அரசியல் போராட்டமாகவோ! அல்லது அமைதி வழியிலான உரிமைப் போராட்டமாகவோ அமையப்போவதில்லை. அவர்களின் போராட்டம் நிச்சயம் இயக்கத்துக்குள் குத்துவெட்டும் துரோகிப் பட்டமுமாகவே அமையப்போகிறது.

காரணம் ஜனநாயக வழியில் போராட பிரபாகனோ அல்லது அவர்களின் தலைவர்ளோ இவர்களுக்கு கற்றுக் கொடுக்க வில்லை. அது புலிகளின் அமைப்புக்குத் தெரிந்திருந்தால் நிச்சயம் அவர்கள் தங்களின் போராட்டத்தை ஜனநாயமானதாக நடத்தி வெற்றிபெற்றிருப்பர்.

அரசியல் போராட்டம் என்பது இவர்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கப் போகின்றது அரசியல் போராட்டம் செய்வதானால் இலங்கையில் வடக்கிலோ கிழக்கிலோ அல்லது எங்கோ ஒரு மூலையில் இவர்கள் அரசியல் ரீதியாக மக்கள்முன் நின்று வெற்றிபெற வேண்டும்.

இவர்கள் அரசியல் களத்தில் புலிகளின் பெயரைச் சொல்லிக் குதித்தால் ஏற்கனவே பிள்ளையைப் பிடித்து பலிகொடுத்தவர்கள் மீண்டும் களத்துக்கு வருகிறார்கள் என அம்மா அந்த கொல்லைப்புறத்தில் உள்ளதை எடுப்பாள். விதவை எனது கணவனை களப்பழி கொடுத்தவர்கள் புலம்பெயர் தேசத்தில் சொகுசாய் வாழ்ந்துவிட்டு இப்போது மீண்டும் என் பிள்ளையை பழியாக்க வருகிறார்கள் எனக்கொதிப்பாள். இப்படி இவர்கள் இலங்கையில் எந்த இடத்திலும் அரசியல் நடத்த முடியாமல் போகும்.

அமைதியான போராட்டமெனக் கிளம்பினால் அப்படியானால் ஏன் எங்கள் பிள்ளைகளை சகோதரர்களை மாவீரராக்கினீர்கள் என்று மாவீரர் குடும்பங்கள் கொந்தளிக்கும். அங்கவீனர்களான தாய்களும் தங்கைகளும் தந்தைகளும் குழந்தைகளும் கல்லையெடுத்து வீசும்.

எனவே இவர்கள் செய்யப்போகும் ஒரே வேலை புலம்பெயர் தேசங்களின் கொள்கையற்ற குழுக்களாக பிரிந்து தங்களுக்குள் அவரவர் செய்தவற்றை​​ வெளிவிட்டு புலிகளின் உண்மைமுகம் இலங்கையில் வெளிப்பட்டதுபோல இந்த கலக்சன் காரர்களின் உண்மையான முகத்தை மக்களுக்கு தோலுரித்துக் காட்டப்போவதாகும்.

எனவே இனி துரோகிப்பட்டம் வானில் பறக்கப்போகிறது எங்கள் தலைவரென எல்லோரும் பிரபாகரனின் படத்தை மாட்டி அதை பணமாக மாற்ற முயற்சிக்கப் போகிறார்கள் புலம்பெயர் தேசத்தில் தூக்கத்திலிருந்து கொண்டு புலிகள் செய்த அக்கிரமங்களை ஆதரித்த ஆதரவாளர்களும் தூக்கத்திலிருந்து விழித்து நிஜவுலகைக் கண்டு வியக்கப் போகிறார்கள் இவர்கள் அநாதரவாக நிற்கும் தமிழ் சமூகத்தில் இணைந்து கொண்டு தங்களின் பங்களிப்பை தமிழ் மக்களின் விடிவுக்காச் செய்வார்களா என்பதுதான் இன்றைய எங்களின் கேள்வி.

பங்களிப்பு என்பது மீண்டும் ஒரு அந்தயிந்த போராட்டம் என்று சொல்லி இன்னும் முற்பது வருடத்தின் பின் இன்னும் எழுபதுனாயிரம் மக்கள் இறந்தபின் ஞானம் பிறப்பதாகயில்லாமல், நிதானமான ஜனநாயக நீரோட்டத்துடன் அமைந்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் இவர்கள் ஒதுங்கிக் கொள்வார்களானால் அவற்றைச் சரியாகச் செய்ய சில சமூகப் பைத்தியங்கள் காத்திருக்கின்றன.

இனிப் “விடுதலைப் புலிகள்” “விடுதலைப் போர்” என்ற சொற்கள் நிச்சயமாக பத்திரிகை வானொலி இணையத்தளங்கள் தொலைக்காட்சி புத்தகங்களைத் தவிர வேறு எங்கும் உயிர் வாழப் போவதில்லை என்பது திண்ணம். ஒருவேளை​ காசியானந்தனின் கவிதைகளில் உயிர் வாழலாம்.

“ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது”

ஆக்கம்

கிழக்கான் ஆதம்.

Anonymous said...

இப்போதெல்லாம் "பொத்திக்கொண்டு", "மூடிக்கொண்டு" என்றெல்லாம் பதிவுகள் எழுதுமளவு நாகரிக வளர்ச்சி பெற்றுள்ளார்கள் திராவிடக்குஞ்சுகள். நான் எதற்கு........பின் அவர்கள் தரத்திற்கு இறங்கி வரவேண்டும், எழவு சொன்னாலும் புரிது தொலையாது.

Anonymous said...

யாரு என்னவிதமான போராட்டம் பண்ணினாலும், எத்தனை குட்டிக் கரணம் போட்டாலும், சிங்கள இனமும், புத்தபிக்குகளும் ஓருபோதும் தமிழை, தமிழ் உணர்வுகளை ஏற்கப் போவதில்லை.. பல வருசம் ஆனாத்தான் அவர்களுக்கும் புரியும்.. நாமும் நாகரீகம் பெற முடியும்....ம்ம்ம்...அது வரை விதிய நொந்தக்க வேண்டியதுதான்...

சு.செந்தில் குமரன் said...

அனானிமஸ் ..முதலில் நீங்கள் உங்கள் பெயரோடு வாருங்கள்.வரதராஜப் பெருமாள் , கரூணா போன்ற பொய்யர்கள்...இவர்கள் சொல்லும் பொய்யைக் கர்ணம் போட்டு உண்மையாக்க முயலும் நபர்கள் , வாய்ப்புக் கிடைத்தால் தாங்கள் என்ன செய்வர்களோ அதை மற்றவர்கள் மீது போட்டு வாங்கும் எம்.அருணாச்சலம் போன்றவர்களை எண்ணிக் கலங்க வேண்டாம்.என்னைப் போன்ற மன சாட்சியுடன் எழுதுபவர்கள் உங்களுக்குத் துணை இருப்போம் . www.susenthilkumaran.blogspot.com

சு.செந்தில் குமரன் said...

என்ன அனானிமஸ்களே ..குழப்பமாக இருக்கிறதா? உண்மை தெரியாமல் பிதற்றிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்கள் தெரிந்து கொள்ளவும் அங்கு நிறைய விசயம் உண்டு.

உலகத்தின் அனைத்துக் கொடுமைகளையும் அந்த இனம் அனுபவித்த பிறகு தன்னை இந்த சூழ் நிலையில் காக்க ஒரு சர்வாதிகாரியால்தான் முடிவு என்று அவர்கள் தீர்மானித்ததை இங்கு ஏஸி அறைகளில் அமர்ந்தபடி குறை சொல்வது கொடுங்கோன்மை!

என்ன செய்ய....? வஞ்சகமும் துரோகமும் ஜெயித்ததால் இன்று போராளிகளை விமர்சித்துப் பேசுவோரின் கருத்துக்கள் எல்லாம் நியாயமாகத் தோன்ற ஆரம்பித்து விட்டது.

புலிக‌ளால் கொல்ல‌ப் ப‌ட்டவ‌ர்க‌ளின் ல‌ட்ச‌ண‌ங்க‌ளைப் ப‌ற்றி இன்றைய‌ குமுத‌ம் ரிப்போர்ட்ட‌ரின் யுத்த‌ம் ச‌ர‌ணம் வ‌ரை எத‌த‌னை பேர் விரிவாக‌ எழுதினாலும்
ஒன்றுமே தெரியாதவர்களிடம் ஒன்றுமே தெரியாதவர்கள் பேசுவது போல நடிப்பவர்களிடம் பேசிப் பயன் இல்லை.

இது போன்ற குழப்பசிகாமணிகளின் பேச்சைப் பெரிதாக எண்ணி கருணாவை உயிரோடு விட்டதன் பலனைதான் இன்று ஈழம் அனுபவிக்கிறது.

லண்டனிலும் அமெரிக்காவிலும் ஓஹோ என்று வாழ்ந்திருக்க வேண்டிய பிள்ளையைப் போர்க்களத்துக்கு கொண்டு வந்து இழந்த ஒரு தியாக வீரனை 'ஈகோ' பிடித்தவர் எனறு எல்லாம் வருணிப்பவர்க்ளின் குடுமபத்தாருக்கு ஒரு வேண்டுகோள்.!

சீக்கிரம் மன நல மருத்துவரிடம் அனுப்பி வைக்கா விட்டால் அப்புறம் உங்களுக்குதான் ரொம்பக் கஷ்டம்.!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது