5/09/2009

அரசியல் தலைவர்கள், தினகரன் போன்ற பத்திரிகைகள் சொல்லித் தரும் பாடங்கள் - Prefer being cynical to being a sucker

இது ஒரு மீள்பதிவு. அவ்வாறு செய்ய என்னை இன்ஸ்பைர் செய்தது ஆசிட் தியாகு அவர்கள் தினகரன் ஊழியர்கள் எரிப்பு வழக்கில் வெளிவராத உண்மைகள் பற்றி இட்ட பதிவுதான்.

இப்போது பழைய பதிவை அப்படியே பார்ப்போம், பிறகு நான் மேலும் சேர்க்கைகளுடன் வருகிறேன். ஓவர் டு பதிவு:

முதலில் தினகரன் விஷயத்தை கவனிப்போம். இன்று விற்பனைக்கு வந்த துக்ளக் 28.05.2008 தேதியிட்ட துக்ளக்கில் 13-ஆம் பக்கத்தில் இவ்வாறு வந்துள்ளது. அது "நொந்து போன 'தினகரன்' ஊழியர்கள்" என்னும் தலைப்பில் தரப்பட்டுள்ளது:

"கடந்த ஆண்டு மே 9-ஆம் தேதிதான் மதுரை தினகரன் அலுவலகம் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டு மூன்று அப்பாவி ஊழியர்கள் பலியானார்கள். அப்போது மதுரைக்கு வந்த கலாநிதி மாறன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முன்பாக, 'இதை நாங்கள் கடைசி வரை சும்மா விடப்போவதில்லை' என்று உத்திரவாதம் அளித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மட்டுமில்லாது, தினகரன் ஊழியர்கள் அவ்வளவு பேருமே நம்பிக்கை பெற்றனர். ஆனால் பிற்பாடு காட்சிகள் மாறின; வீராவேச வசனங்களும் அடங்கிப் போயின.

இந்த ஆண்டு அதே மே மாதம் 9-ஆம் தேதி - மூன்று அப்பாவிகளும் அனியாயமாக கருகிப் போன முதலாம் ஆண்டு நினைவு தினம். கடந்த ஆண்டு இதே தினத்தில் சன் டி.வி.யிலும், தமிழ் முரசு நாளிதழிலும் 'அழகிரியின் ஆட்கள்தான் இதைச் செய்தனர்' என்று கூறப்பட்டது.

'தினகரனில் என்ன செய்தி வரும்; தங்கள் ஊழியர்களின் நினைவாக என்ன செய்யப் போகிறார்கள் என்ற ஆர்வத்தோடு, வழக்கமாக படிக்காத வாசகர்கள் கூட அன்றைய தினகரனை வாங்கிப் பார்க்கிறார்கள். முதல் பக்கத்தில் 'அழகிரி விடுதலை' என்ற செய்தி, தா. கிருட்டினன் கொலை வழக்கில் விடுதலையான அழகிரியின் கலர் படத்துடன் வெளியாகியது. தங்களிடம் பணிபுரிந்த ஒரே காரணத்திற்காக உயிரை விட்ட அப்பாவி ஊழியர்கள் நினைவு அஞ்சலி, நாளிதழின் எந்த மூலையிலும் இல்லை.

தினகரனின் பிற ஊழியர்கள் நொந்து நூலாகிப் போனார்கள். 'அவர்களே சிறிய அளவிலாவது ஒரு அஞ்சலி விளம்பரம் போடுவார்கள் என்று நினைத்துத்தான் நாங்கள் சும்மா இருந்து விட்டோம். அவர்கள் போடப் போவதில்லை என்று தெரிந்திருந்தால், நாங்களாவது ஆளுக்கு ஐம்பதோ நூறோ போட்டு சொந்தமாக ஒரு அஞ்சலி விளம்பரம் போட்டிருப்போம்' என்று அவர்கள் புலம்பித் தவித்துப் போனார்கள். பாவம்...

பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மட்டும், பறிபோன தங்கள் பிள்ளைகளின் நினைவாக சொந்தப் பணத்தைப் போட்டு ஒரு விளம்பரம் கொடுத்திருந்தனர். தினகரனில் அல்ல, தினமலரில்".

இதில் தினகரன் சொல்லித் தரும் பாடம் என்ன?

இறந்து போன மூவரில் இருவர் கணினி வல்லுனர்கள், ஒருவர் பாதுகாப்புக்கு பொறுப்பானவர். அவர்கள் வெளியே நடந்த கலவரத்தை கவனியாது தங்கள் வேலையில் மூழ்கியிருந்ததாக அப்போது படித்த ஞாபகம். அதனால் தங்கள் இன்னுயிரையே இழந்தனர். யார் வந்து அவரது குடும்பத்தாரின் நட்டங்களை ஈடு செய்யப் போகிறார்கள்? ஆகவே நான் புரிந்து கொண்ட பாடம் இதுதான். ஒரேயடியாக கடமையில் மூழ்கிவிடாதீர்கள். சுற்றுப் புறத்தையும் கவனியுங்கள். மற்றவர்கள் ஓடிப் போனதை அவ்வாறு செய்திருந்தால் கவனித்திருக்கலாம். அம்மாதிரி அசாதாராண சூழ்நிலை வந்தால் உடனே தப்பி ஓடுங்கள். கணினியாவது மயிராவது. கணினி எரிந்து போனால் நிர்வாகம் இன்னொன்றை வாங்கித் தந்தேயாக வேண்டும். ஆகவே முதற்கண் வெளியே ஓடிவிடுங்கள். என்ன புடலங்காய் பாதுகாப்பு, சுய பாதுகாப்பை விட அது முக்கியமில்லை. உயிர்தான் முக்கியம். அவ்வாறு செய்யாவிட்டால் எந்த முதலாளியின் சொத்தை பாதுகாக்க நினைத்தீர்களோ, அவரே உங்களை சௌகரியமாக மறப்பார். இதுதான் தினகரன் சொல்லித் தரும் பாடம். இது எல்லா நிறுவனங்களுக்குமே பொருந்தும். தியாகிகளாக முயற்சிக்காதீர்கள், ஏமாளிகள்தான் ஆவீர்கள்.

எனக்கு தெரிந்த ஒரு பென்ஷனர் கோபால கிருஷ்ண கோகலேயின் சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தன் மனைவியின் நகைகள் அத்தனையும் தானமாகத் தந்து பிறகு சந்தியில் நின்றார். விஷயம் கேள்விப்பட்ட பலர் அவரை ஏமாளி என்று சொல்லியே டரியல் ஆக்கினர். ஆகவே தலைவர்கள் உளறுவதையெல்லாம் நம்பி கைப்பணத்தை செலவழிக்காதீர்கள். என்றுதான் பாடம் கூறப்படுகிறது. தலைவர் கூறினார் என்பதற்காக தமிழில் எம்.ஏ. பாஸ் செய்து விட்டு இப்போது பியூன் வேலைக்கும் வழியில்லாமல் நிற்கும் பலரை தெரியும். தலைவர் பசங்களோ கான்வெண்டில்தான் படிப்பார்கள். அதை எடுத்து கூறினால் அவர்தம் தொண்டர்களுக்கு கோபம் வரும். தலைவர் மேல் தவறே இல்லை, தான் நல்ல தந்தை என்பதை காட்டி விடுகிறார்; தொண்டர்களுக்குத்தான் அது புரிவதில்லை. ஆகவே தவறு தொண்டர்களதுதான்.

Prefer being cynical to being a sucker!!!

மீண்டும் டோண்டு ராகவன். என்ன புதிதாக கூறலாம்? இன்னொரு ஆண்டு போயிற்று? குற்றவாளி யார்? இது வரை சி.பி.ஐ. சாதித்தது என்ன?

ஆசிட் தியாகு அவரது மேலே சுட்டப்பட்ட பதிவிலிருந்து சில வரிகளை நான் இங்கும் பதிக்கிறேன். ஏனெனில் இன்னும் பலர் இக்கேள்விகளை கேட்க வேண்டும்.

“தினகரன் எரிப்பு வழக்கின் சிபிஐ விசாரணை என்ன ஆனது? அது குறித்து எந்த பத்திரிகையும் வாய்திறக்காதது ஏன் என்பதுதான் நம் கேள்வி?மதுரையில் பலியான ஒருவரின் நெருங்கிய உறவினர் தினகரனில் இப்போது செய்தி ஆசிரியராக இருக்கிறார். அவரது மனசாட்சியாவது இதை பொறுக்குமா? தினமலரில் இருந்து கூட்டத்தை தினகரனுக்கு கூட்டிப்போய் தலைக்கு இவ்வளவு என மாறனிடம் பெற்றது மட்டுமின்றி மாதம் லட்சகணக்கில் சம்பளமும், இலங்கை தமிழர்கள் பற்றி செய்தி வரக்கூடாது என்பதற்காக இலங்கை தூதர் அம்சாவின் கொள்கை பரப்புகளை வெளியிடும் தினகரன் பொறுப்பாசிரியருக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?கலாநதி மாறன் தரப்பில் பலியானர்களுக்கு பல லட்சம் கொடுக்கப்பட்டது. பல லட்சம் கொடுத்தால் போதுமா?

குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை? கிடைத்தது. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் அடித்து கொன்று விட்டு இந்தா பணத்தை வச்சுக்கோ என்று சொலலிவிடலாமா"?

அன்புடன்,
டோண்டு ராகவன்

31 comments:

வால்பையன் said...

நெத்தியடி
எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க
ஆட்டோ வந்தாலும் வரும்

வால்பையன்

கூடுதுறை said...

ஆடிக்காத்தில் அம்மியே பறக்குதாம். இதில் உங்களுக்கு ஆட்டோ வராது.

நீங்கள் எழுதிய முதலாளிகள் பா.ஜ.க
பக்கம் சாய்வது போல் தெரிகிறதே...

Samuthra Senthil said...

நன்றாக சொன்னீர்கள் டோண்டு சார். நானும் அந்த நிறுனவத்தில் வேலைபார்த்து, தினகரன் நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டவன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தினகரனில் இப்போது சம்பள உயர்வு தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறதாம். சன் நிர்வாகம் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை சம்பளம் உயர்த்தப்படவில்லை. பழைய தினகரனில் வேலை பார்த்தவர்களின் கதி இன்னும் அதோ கதி. நான் அங்கிருந்து விலகி வேறு நிறுவனத்தில் சேர்ந்து விட்டேன். ஆனால் அனுபவம் மிக்க பலர் வேறு வழியின்றி அவர்கள் கொடுக்கும் இரண்டாயிரம், மூன்றாயிரம் ரூபாயை சம்பளமாக பெற்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி தாங்கள் விரிவாக பதிவு வெளியிடுவதாய் இருந்தால் நான் தகவல்களை தர தயாராக இருக்கிறேன். மிக்க நன்றி!

dondu(#11168674346665545885) said...

//நீங்கள் எழுதிய முதலாளிகள் பா.ஜ.க
பக்கம் சாய்வது போல் தெரிகிறதே...//

யாரைக் கூறுகிறீர்கள்? கலாநிதி மாறனையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சரியா சொன்னீங்க.

பாடங்கள் என்னவோ காலத்துக்கும் இருக்கு. பய புள்ளைங்க படிக்கத்தான் மாட்டேங்கிறாங்க.

dondu(#11168674346665545885) said...

//பழைய தினகரனில் வேலை பார்த்தவர்களின் கதி இன்னும் அதோ கதி. நான் அங்கிருந்து விலகி வேறு நிறுவனத்தில் சேர்ந்து விட்டேன். ஆனால் அனுபவம் மிக்க பலர் வேறு வழியின்றி அவர்கள் கொடுக்கும் இரண்டாயிரம், மூன்றாயிரம் ரூபாயை சம்பளமாக பெற்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.//

நீங்கள் சரியான சமயத்தில் பாடம் கற்று கொண்டு வெளியேறி விட்டீர்கள். அது முடியாதவர்கள் அன்பே சிவம் படத்தில் குறிப்பிடப்படும் ரூபாய் 905-க்கு வேலை செய்து கஷ்டப்படுகின்றனர்.

அவர்வர் தத்தம் நிலையை உயர்த்திக் கொள்ள பாடுபட வேண்டும் என நான் கூற வருவதை இது மேலும் வலுவாக்குகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//அன்பே சிவம் படத்தில் குறிப்பிடப்படும் ரூபாய் 905-க்கு வேலை செய்து கஷ்டப்படுகின்றனர்.//

சார் அது 910

வால்பையன்

Samuthra Senthil said...

//நீங்கள் சரியான சமயத்தில் பாடம் கற்று கொண்டு வெளியேறி விட்டீர்கள். அது முடியாதவர்கள் அன்பே சிவம் படத்தில் குறிப்பிடப்படும் ரூபாய் 905-க்கு வேலை செய்து கஷ்டப்படுகின்றனர்.
//

எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் வாயப்பு கிடைக்கும் என்று சொல்ல முடியாது அல்லவா? வாய்ப்பு கிடைக்காதவர்கள் வேறு வழியின்றி அங்கு தவிக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். என்னைப் போல பலர் வேறு நிறுவனங்களில் நல்லபடியாக வந்து செட்டிலாகி விட்டார்கள். அவர்களை நம்பி வேலை செய்யும் ஊழியர்களுக்காவவது சம்பளம் உயர்த்தலாம் அல்லவா? சன் நிர்வாகம் தினகரனை வாங்கி மூன்று ஆண்டுகளை கடந்து விட்டத‌ே!

Anonymous said...

சினிமா நிருபரின் கருத்தை நான் ஆ‌மோதிக்கிறேன். நம்பிக்கை துரோகம் செய்யும் சன் நிர்வாகத்துக்கு எனது கண்டனங்கள். மற்ற வாசகர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்யுங்கள்.

Athisha said...

// தலைவர் கூறினார் என்பதற்காக தமிழில் எம்.ஏ. பாஸ் செய்து விட்டு இப்போது பியூன் வேலைக்கும் வழியில்லாமல் நிற்கும் பலரை தெரியும். தலைவர் பசங்களோ கான்வெண்டில்தான் படிப்பார்கள். அதை எடுத்து கூறினால் அவர்தம் தொண்டர்களுக்கு கோபம் வரும்.//

டோண்டு சார் தலைவர் உபதேசம் ஊருக்குதான் அவருக்கில்ல , இந்த தலைவர் மட்டுமில்ல எல்லா தலைவர்களோட பசங்களும் கான்வென்ட்லதான் படிக்குது ,

Athisha said...

சன் நிர்வாகத்துக்கு எனது கண்டனங்கள்.

enRenRum-anbudan.BALA said...

நீங்கள் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை, அனைவரும் புரிந்து செயல்படுவது நலம் பயக்கும் !

dondu(#11168674346665545885) said...

உங்களுக்கு 100 ஆயுசு பாலா அவர்களே. இப்பதிவை எழுதும்போது உங்களைத்தான் நினைத்து கொண்டேன்.

பல பதிவர்கள் தமிழ் தமிழ் என பம்மாத்துகள் செய்து ஊராருக்கு மட்டும் தமிழ்க்கல்வியை உபதேசிக்கும் தலைவர்களை விதந்தோத நீங்கள் மட்டும் உங்கள் குழந்தைகளின் நலனுக்கு ஏற்ப ஆங்கில வழிக் கல்வியையே அளிக்கப் போவதாகவும், அவர்களுக்கு தமிழை தனியே கற்றுத்தரப் போவதாகவும் அழுத்தம் திருத்தமாக கூறினீர்கள். உங்களுக்கு உபதேசம் செய்ய அரசியல் வியாதிகளுக்கு ஒரு உரிமையும் இல்லை என சட்டமாகக் கூறினீர்கள். உங்களைப் போன்றவர்கள்தான் நாட்டுக்கு தேவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//கணினியாவது மயிராவது//

Miga mosamaana vaarthaigal. dondu avargale, neengala ippadi?

//தமிழில் எம்.ஏ. பாஸ் செய்து விட்டு இப்போது பியூன் வேலைக்கும் வழியில்லாமல் நிற்கும் பலரை தெரியும்//

thamizil padippathai kevalappaduththa muyalum thavaraana karuththu. katrathu thamiz padam paarungal.

komanakrishnan

Anonymous said...

நெத்தியடி டோண்டு ராகவன் sir !

Welldone. keep-it-up.
Kindly maintain 'Neutral' yardstick...அருமையா எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்

பதிவுகளை வாசிக்க மட்டுமே செய்யும்
Sathappan

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

தா. கிருஷ்ணன் கொலை வழக்கில் இருந்து மு க அழகிரி விடுதலை ஆனதை பற்றி எந்த ஊடகமும் விரிவான செய்தி வெளியிடவில்லை . போலீஸ் சாட்சியில் எண்பதுக்கு எழுபத்தொன்பது பேர் பல்ட்டி அடித்தனர் ! போலீஸ் க்கு கோர்ட்டு தெரிவித்த கண்டனத்தை கூட எந்த பத்திரிக்கையும் வெளியிடவில்லை . எல்லா பத்திரிக்கைகளும் அவரின் விடுதலையை மட்டுமே முகப்பு செய்தியாக வெளியிட்டன . தா கிருஷ்ணன் தன்னை தானே வெட்டி தற்கொலை செய்து கொண்டார் என்று கோர்ட்டில் சொல்லததுதான் பாக்கி . ஒரு வேலை சொன்னாலும் சொல்லி இருப்பார்கள் !
திரு பழ கருப்பையா ஒருவர் தான் தைரியமாக ஜெயா டிவியில் தெளிவாக இதனை பற்றி தெளிவாக கருத்தினை எடுத்து உரைத்தார் .(போன ஞாயிற்று கிழமை நேருக்கு நேர் நிகழ்ச்சியில் )

உபத்யயா அவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டார்கள் பார்த்தீர்களா ?
அன்புடன்
பாஸ்கர்

Anonymous said...

ஏதாவது செய்து ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம்னு சுப்ரமணியசுவாமி களத்துல இறங்கிளாலும், இந்த சோ வந்து குறுக்கால பூந்து கெடுக்கிற மாதிரி செய்யுறாருன்னு, சாமியே அவரோட நெருங்கின வட்டாரத்துல புலம்புறாராம். என்னா மேட்டர்னு உள்ள நுழைஞ்சு விசாரிச்சா நிறைய பின்னணி எல்லாம் வெளிய வருதுப்பா! கலைஞர் உடம்பு சரியில்லாம ஆஸ்பிட்டல்ல இருந்துட்டு வீட்டுக்கு திரும்பின ஒடனே நம்ப சோ போய் பார்த்து நலம் விசாரிச்சாரில்ல? அதுல ஏதோ விஷயம் இருக்காம். சருக்கமா சொல்றதுன்னா, சுப்ரமணிய சுவாமிய சமாதானம் செய்யப் போற தூதர் வேலைய அவருகிட்ட கொடுத்திருக்காங்களாம். இந்த ஆட்சிக்கு எந்த டேமேஜும் இல்லாம செய்யுறதுக்கான முயற்சியில ஒரு டீமே இறங்கி வேலை பார்க்குது. அதுல அந்த பத்திரிக்கையாளருக்கு ஒரு ரோல் இருக்குன்னும் விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்குறாங்க.

- குமுதம். காம்.


இதுதான் சோ வின் லட்சணம். அப்படி இப்படி எழுதி திமுகவிற்கு எதிரான மனநிலையை தூண்டி விட்டுவிட்டு இப்போது இப்படி பண்ணுகிறார்.அப்புறம் நான் நடுநிலைமை வகிக்கவில்லை, நியாத்தின் பக்கம் எனப் பசப்புவார்.

dondu(#11168674346665545885) said...

//அதுல ஏதோ விஷயம் இருக்காம். சருக்கமா சொல்றதுன்னா, சுப்ரமணிய சுவாமிய சமாதானம் செய்யப் போற தூதர் வேலைய அவருகிட்ட கொடுத்திருக்காங்களாம். இந்த ஆட்சிக்கு எந்த டேமேஜும் இல்லாம செய்யுறதுக்கான முயற்சியில ஒரு டீமே இறங்கி வேலை பார்க்குது. அதுல அந்த பத்திரிக்கையாளருக்கு ஒரு ரோல் இருக்குன்னும் விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்குறாங்க.//

இம்மாதிரி மேட்டர்களை கூறுவதை ராம் செய்திகள் என்பார்கள். அதாவது, அவர் வந்தாராம், போனாராம், இப்படிச் செய்தாராம் என்று ராம் என்னும் விகுதியுடன் எழுதுவது.

அப்படியே சோ போனதில் ஏதேனும் உள்நோக்கம் இருந்தால் (நான் அப்படி நினைக்கவில்லை, ஏனெனில் தனிப்பட்ட முறையில் சோவும் கலைஞரும் நண்பர்களே) அது திமுக மற்றும் பிஜேபி கூட்டணி அமைப்பது குறித்ததாகவே இருக்கும்.

இப்போது the ball is in the court of Sonia Gandhi and Jayalalitha.

அன்புடன்,
நாரதன் டோண்டு ராகவன் :)))

Anonymous said...

டோண்டு சார் உங்களின் இந்த கருத்துக்கு பாராட்டுக்கள்.ஆனால் அங்கு மட்டுமில்லை. உழைப்பவரின் உழைப்பை சுரண்டி உல்லாசபிரியில் வாழும் "வல்லமையாளார்கள்" இந்தியாபூரா ஏராளம்.
பொதுவாக காலமாற்றங்கள் ஒரு வட்டப் பாதையில் சுழன்று நிகழ்ச்சிகள் மீண்டும் நடத்திக் காட்டும் என வரலாற்று ஆர்வலர்கள் சொல்லுவார்கள்.
கச்சா எண்ணெய் பேரல் 200 டாலரை தாண்டும் போது இந்த அநீதிகளை உடைத்து எறிய மீண்டும் உழைக்கும் மக்கள் (சொற்ப சம்பளத்திற்கு வேலைபார்ப்போர்)மத்தியில் ஒரு பிரளயம் ஏற்படும் போல் உள்ளதே.இதற்கு காரனம் விலைவாசியின் அதிகமான உயர்வு என ஒரு கருத்து ஊடங்களில் உலா வருகிறதே.

Thamizh_Thendral said...

டோண்டு ராகவன் அவர்களுக்கு,

எனது நண்பர் ஒருவர் பரிந்துரைத்ததால் உங்கள் வலைப்பூ பற்றி இன்று தெரிந்து கொண்டேன். இந்தப் பதிவில் komanakrishnan கூறியது போல் சில வார்த்தைகளைத் நீங்கள் தவிர்த்திருக்கலாம்.

தமிழ் எம்.ஏ பற்றிய உங்கள் கருத்து சரியானதுதான் என்பது என் கருத்தும். தமிழ் மட்டும் படிப்பவர்களுக்கு எந்த நல்ல வேலைக்கான உத்தரவாதமும் இல்லை என்கின்ற போது அதை வெறுமே ஓட்டுக்காக கட்டி அழுவது சரியில்லை. உங்கள் மற்றப் பதிவுகளையும் படித்து முடிந்தவரை பின்னூட்டமிடுகிறேன்.

அன்புடன்,

முரளி.

dondu(#11168674346665545885) said...

//இந்தப் பதிவில் komanakrishnan கூறியது போல் சில வார்த்தைகளைத் நீங்கள் தவிர்த்திருக்கலாம்.//

உயிரா கணினியா என்று வரும்போது ப்ரையாரிட்டி தெரிய வேண்டும். அதை அவதானிக்காததால் இரண்டு உயிர்கள் போயின. நிர்வாகமா வந்து உயிரை திரும்பத் தரப்போகிறது?

அந்த வார்த்தைகளை தெரிந்தே உபயோகித்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆசிட்தியாகு said...

எனது பதிவை பார்க்கவும்.http://acidthiyagu.blogspot.com/

dondu(#11168674346665545885) said...

@காவைசசிகுமார்
இப்பதிவைலேயே உங்கள் பதிவுக்கு ஹைப்பர் லிங் ஆரம்பத்திலேயே தந்துள்ளேனே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

மக்கள் டி.வியில் டாக்டர் அன்புமணி ராமதாஸை மருத்துவர் அன்புமணி ராமதாசு என்று தான் விளிக்கிறார்கள்.

ஆனால், அவரது 3 மகள்களுக்கும் தூய்மையான தமிழ் பெயர்களான சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என்று வைத்திருக்கிறார்...இதிலிருந்தே தெரியவில்லையா...தமிழ் தமிழ் என்று முழங்கும் அரசியல்வாதிகள் எப்பேற்பட்டவர்கள் என்று.

செல்வமுரளி said...

ஆயிரம்தான் எழுத தோன்றினாலும் என்ன எழுதுவதென்று தெரியவில்லை.

மிக வருத்ததுடன்

Anonymous said...

நமஸ்காரம்னா.. மூணு பேரு மூணு பேருன்னு நீங்க சொல்லச் சொல்ல நேக்கு சில வருசத்துக்கு முன்ன அநியாயமா செத்துப் போன அந்த மூணு சின்னப் பொண்ணுங்க ஞாபகம் வர்றது.. அவாள பத்தியும் ஒரு செய்தி சேத்துப் போட்ருக்ககூடாதோ.. ஏன் ஒண்ணும் பிரச்சன இல்ல..

dondu(#11168674346665545885) said...

@அனானி
வாங்கோன்னா, நீங்க சொல்லறதும் கொடுமைதான், ஆனாக்க அதுலே கேஸ் நடந்து முடிஞ்சி 3 பேருக்கு தூக்குதண்டனையும் அறிவிச்சிருக்காங்களே. இங்கே குற்றவாளிகள்ணு யாரையுமே பிடிச்சதா தெரியல்லியே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவிஷா said...

எனது நெருங்கிய உறவினர் சுமார் பத்து வருடங்கள் வேலை பார்த்திருக்கிறார்! அதுவும் கை மாறுவதற்கு முன்! வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் கழித்துத்தான் அவருக்கு இன்க்ரீமெண்ட் கிடைத்துருக்கிறது! ஆனால் அப்போது தினகரன் நொடித்த நிலையில் இருந்த சமயம் (கேபிகே இறந்த பின்பு அவர் மகனால் சரியாக நடத்த முடியவில்லையாதலால் தினகரனை விற்றுவிட்டார்கள்)!

Pro-DMK பத்திரிக்கையாதலால் ஆட்சி மாறும்வரை "அங்கே" என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது!

Unknown said...

Poor employees...for Marans family problem,for their greed for power and wealth the employees have been killed.

they joined back to DMK
To earn more money
To start more channels
To produce Endhiran

Always Looting the people!!!!

they are in all industries bcoz of the black money+Govt Support+Minister post just to benefit for Sun Group
Sun Network(used the ministry to expand it)
FM(used the ministry to expand it)
Newspaper(people died due to their fight)
Dish TV's
Cable("killed" cable operators who didnt do as they said)
Movies-Endhiran(joined back in DMK to produce mega budget movies looting peoples money)
also heard they gonna expand their already cement industries of their father
Aircel deal made crores of rs(Using minister post)
Vodafone(Again crores of rs using ministry)
Real estates and hiked the prices(using the ministry post)
Jet flights(again using the ministry)

Dhayanidhi Maran ministry run only for these!!!! making thousands of crores for his family
and the fight? bcoz he didnt share the money to Karunanidhi and stalin/azhagiri

Now he back to DMK by settling crores of rs...and to take up projects like Endhiran so he doesnt need to spend even a paisa from already looted thousands of crore...and can use the peoples money...

and forgot about the 3 deaths :( ....the employees spirit wont leave them til they r destroyed

பழமைபேசி said...

வளர்ந்த நாடுகளுக்கும் நம்மூருக்கும் ஒரு நூற்றாண்டு கால இடைவெளி இருக்குங்க ஐயா! அதைக் குறைக்க யாரும் விடுறது இல்லை. தனிமனித ஒழுக்கம் கட்டாயத் தேவை. அது ஆன்மீகம் அல்லது கடுமையான தலைவன்... இந்த ரெண்டுல எதோ ஒன்னாலதான் முடியும். ரெண்டுக்குமே ஊர்ல வறட்சி!!!

Anonymous said...

//நீங்க சொல்லறதும் கொடுமைதான், ஆனாக்க அதுலே கேஸ் நடந்து முடிஞ்சி 3 பேருக்கு தூக்குதண்டனையும் அறிவிச்சிருக்காங்களே//
அடடா.. என்ன ஒரு டோண்டு நீதி. விதுர நீதி போல... தண்டன கொடுத்துட்டா மறந்துடலாமா..அப்ப ராஜீவ் கேசுலயும் அப்படியா...?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது